Saturday, November 4, 2017

‘பெரியார்’ ராமசாமி நாயக்கர் பழந்தமிழிலக்கியங்களை தீயிலிடுமாறு மக்களை தூண்டினார்.


உலகில் தமிழர்களை விட மிகக்குறைந்த வரலாறும் பாரம்பரியமும் கொண்ட இனங்கள் கூட தமது இல்லாத வரலாற்றுக்கே பூ, பொட்டெல்லாம் வைத்து பெரிதாக, அழகாக காட்டுகின்றனர், ஆனால் நீண்ட பெரும் பாரம்பரியம் கொண்ட தமிழர்கள் தமது வரலாற்றைப் பாதுகாக்கவில்லை, எழுதி வைக்கவில்லை, அது மட்டுமன்றி தாம் படையெடுத்து சென்று, வென்ற நிலங்களில் கூட தமிழர்களைக் குடியேற்றாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டனர். ஆகவே தமிழர்களின் வரலாற்றை, பெருமையை, பழக்கவழக்கங்களை, மாண்பைக் கூட பண்டைய தமிழிலக்கியங்களிலிருந்து அறிய வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம். எவ்வளவோ பழம்பெரும் நூல்கள் பார்ப்பனர்களால் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னரும்,
வடுகராட்சியில் தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் ஆதரவின்மையாலும் அழிக்கப்பட்டு விட்டன. இது போதாதென்று பெரியார் என்றழைக்கப்படும் ராமசாமிநாயக்கரும், இக்கால சாதி, சமூக வேறுபாடுகளைக் காரணம் காட்டி  தமிழிலக்கியங்களை எரிக்குமாறு மக்களைத் தூண்டினார் என்கிறது கீழேயுள்ள நூல். எந்த நாட்டிலும் புரட்சியாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் அந்த மக்களின் வரலாற்றை, பழமையான இலக்கியங்களை அழிக்குமாறு மக்களை தூண்டவில்லை. ஆகவே ராமசாமிநாயக்கரின் நோக்கம் எதுவாகவிருக்கும்?
எனது Twitter பதிவு  சில பெரியாரியர்களுக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஊட்டியிருக்கிறது. எனக்கும் இதைப்பற்றி மேலுமறிய ஆவலுண்டானது. பெரியாரின் தமிழிலக்கிய எதிர்ப்பு பற்றி தமிழ்மண்ணின் எல்லைக்காவலர் ம.பொ.சிவஞானம் அவர்கள் ஏற்கனவே தனது 'இலக்கிய எதிரிகள்' என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

.வெ.ரா. தற்போதைக்கு ராமாயணத்தை மட்டுமே எதிர்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் எனப்படும் எல்லா நூற்களுக்குமே அவர் எதிரிதான்.முன்னொரு சமயம் சேக்கிழார் இயற்றிய சைவ சமயக் காப்பியமான பெரிய புராணத்தை எதிர்த்தார்; தீயிலிட்டுக் கொளுத்தவும் தேதி நிச்சயித்தார். பின்னொரு காலத்தில் சிலப்பதிகாரத்தைத் தமிழாகக் கழகத்தார் போற்றுகின்றார்கள் என்பதற்காக .வெ.ரா. வாயில் வந்தபடி தூற்றினார். இதற்கெல்லாம் முன்பு பெண்கள் அடிமைப் பட்டதற்கே திருக்குறள்தான் காரணம் என்று அவர் நூல் எழுதியதும் உண்டு. ஆம், சுருங்கச் சொன்னால், .வெ.ரா. இலக்கியங்களின் எதிரி - கடவுள் நெறியின் எதிரி, ஒருவார்த்தையில் சொன்னால் நாட்டில் நடை முறையிலிருக்கும் நல்லதற்கெல்லாம் எதிரி!தமிழ்மண்ணின் எல்லைகாத்த சிலம்புச்செல்வர் மாபொசி அவர்கள் எழுதிய ‘இலக்கியத்தின் எதிரிகள்’ என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 

ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் .வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.
பெரியார் .வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் திறமையைக் குறை கூற முடியாது. இலக்கியத்துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் .வெ.ராவுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவருக்கு நல்லெண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பயனற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமான கருத்து.
ஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத .வெ.ராவுக்கு அவற்றைப்பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்பமுடியும்?
ஆயினும், இலக்கியத் துறையில் எல்லாம் உணர்ந்தவர் போல அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், 'ஆராய்ச்சி' என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவதும் .வெ.ரா-வுக்குத் தொழிலாகிவிட்டது. வேறு வேறு துறைகளில் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் வரவேற்பவர்கள் கூட இலக்கியத் துறையில் அவருடைய போக்கை எற்றுக் கொள்வதில்லை.
இப்போது .வெ.ரா., கம்பராமாயணத்தையும் அதில் கடவுளாக வர்ணிக்கப்படும் ராமனையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப்புறப்பட்டிருக்கிறார். முன்னொரு முறையும் அவர் கம்பராமாயன எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், கண்டனக் கணைகள் உடலைத் துளைத்ததால் அப்போதைக்கு எதிர்ப்பைக் கைவிட்டு விட்டார். இப்போது அரசியல் துறையில் அவருடைய வட்டாரத்திற்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு விட்டது. பொருளாதாரத் துறையோ அவருக்குப் புரியாத விஷயம். பூர்ஷூவாக்களின் நண்பரான அவருக்கு அது பிடிக்காத விஷயமுமாகும். சமூக சீர்திருத்தத் துறையிலும் அவருடைய 'சரக்குகளு'க்கு மார்க்கெட் இல்லை. ஆகவே, இடைக்கால இயக்கமாக கம்பராமாயண எதிர்ப்பு நாடகத்தை நடத்தப் புறப்பட்டிருக்கிறார். அதற்கு ஆரம்ப ஒத்திகையாக ராமன் சிலைகளை உடைக்கப் போகிறாராம்.
சிலப்பதிகாரத்துள் கதாநாயகியான கண்ணகிதேவி மனித வடிவந்தாங்கி மாநாய்க்கனுக்கு மகளாய்ப் பிறந்தவள்தான். ஆயினும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெண்ணுலகத்திற்குப் பெருமை தேடிய காரணத்தால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டாள்.
"அயோத்தி வேந்தன் தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாக ராமாயணம் கூறுகின்றதே, இது அடுக்குமா? பெண்ணுலகம் அங்கீகரிக்குமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறார் .வெ.ரா. வடமொழியில் ராமாயணம் எழுதிய வால்மீகியும் சரி; அந்தக் காப்பியத்தின் கட்டுக் கோப்புக் குலையாமல் தமிழில் எழுதிய கம்பரும் சரி; தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை "மணந்து வாழ்ந்த" சம்பவத்தைச் சிறப்பித்துக் கூறவில்லை, உண்மையில், அது நிகழ்ந்த சம்பவமும் அல்ல; கவிஞன் வால்மீகியின் கற்பனைச் செய்தியே. அதைக் கம்பனும் அப்படியே ஒலி பரப்பி யிருக்கிறான். இதை மெய்யென்று நம்பிய .வெ.ரா வின் அறிவுக்கு எனது அனுதாபம் உரித்தாகுக!
வரலாற்றுச் சம்பவங்களும், கவிஞனின் கற்பனைகளும் கலந்துதான் காப்பியம் உருவாகின்றது. ராமாயணக் காப்பியம் மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. காப்பியத்தில் வரும் செய்திகளை யெல்லாம் உண்மைச் சம்பவங்களாக நம்பிவிடுவது அப்பாவித்தனம். காப்பியப் புலவன் நடந்த சம்பவங்களை மட்டுமே கூறும் சரித்திர ஆசிரியன் அல்லன். நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, நடக்க வேண்டும் என்று தாம் விரும்பும் நல்ல எண்ணங்களையும் அவற்றோடு இணைத்து விடும் லட்சியவாதி,
.வெ.ரா. தற்போதைக்கு ராமாயணத்தை மட்டுமே எதிர்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் எனப்படும் எல்லா நூற்களுக்குமே அவர் எதிரிதான்.முன்னொரு சமயம் சேக்கிழார் இயற்றிய சைவ சமயக் காப்பியமான பெரிய புராணத்தை எதிர்த்தார்; தீயிலிட்டுக் கொளுத்தவும் தேதி நிச்சயித்தார். பின்னொரு கலத்தில் சிலப்பதிகாரத்தைத் தமிழாகக் கழகத்தார் போற்றுகின்றார்கள் என்பதற்காக .வெ.ரா. வாயில் வந்தபடி தூற்றினார். இதற்கெல்லாம் முன்பு பெண்கள் அடிமைப் பட்டதற்கே திருக்குறள்தான் காரணம் என்று அவர் நூல் எழுதியதும் உண்டு. ஆம், சுருங்கச் சொன்னால், .வெ.ரா. இலக்கியங்களின் எதிரி - கடவுள் நெறியின் எதிரி, ஒருவார்த்தையில் சொன்னால் நாட்டில் நடை முறையிலிருக்கும் நல்லதற்கெல்லாம் எதிரி!
பழைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்துமே வரலாற்று நிகழ்ச்சிகளென்று நாங்கள் நம்பி விடுவதில்லை. அதுபோல, இலக்கியத்தில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே கற்பனை என்றும் நாங்கள் எண்ணுவதில்லை. வரலாற்றுச் செய்திகளும், கவிஞனின் கற்பனைகளும் கலந்ததுதான் காப்பியம் என்பது தமிழரசுக் கழகத்தாரின் திடமான கருத்து. இந்தக் கண்ணோட்டத்துடந்தான் நாங்கள் கம்பராமாயணத்தைக் காண்கிறோம்.
கம்பர், பல தெய்வங்கள் உண்டென்று நம்புவோருக்கு எதிராக ஒரே தெய்வக் கொள்கையை வற்புறுத்தி இருக்கின்றார்.

4 comments:

சேட்டைக் காரன் said...

ஈ.வெ.ரா.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற புத்தகத்தைப் படித்தால் அவர் திருவள்ளுவரையும் கம்பரையும் எவ்வாறு கொச்சைப்படுத்தினார் என்பதைத் தரவுகளுடன் தெரிந்து கொள்ளலாம். உண்மையில் பெரியார் தமிழருக்கோ, தமிழ் மொழிக்கோ என்ன தொண்டு ஆற்றினார் என்பது இன்றளவில் விவாதத்துக்குரியதே!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறப்பாக அலசி ஆராயப்பட்ட பதிவு

rebecca maryah said...

திரு.வியாசன் அவர்களே. நான் தங்களுடைய இணையத்தில் உள்ள சில கட்டுரைகளை வினவில் பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும்

viyasan said...

@rebecca,

நீங்கள் தாரளமாக பதிவு செய்யலாம். :-)