Monday, January 9, 2017

தமிழச்சி சசிகலா முதல்வராவதைத் தடுக்க பார்ப்பன/வடுக ஊடகங்கள் சதி?


தமிழ்மண்ணில் பல நூற்றாண்டுகளாக தொடரும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் வடுகர்களின் (விஜயநகர – நாயக்கர்) ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய ஒரே காரணத்துக்காகவே தமிழுணர்வுள்ள உண்மையான தமிழ்நாட்டுத் தமிழர்களும், உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ்ப்பெண்ணாகிய சசிகலா நடராஜன் அவர்கள் முதலமைச்சராவதை வரவேற்க வேண்டும்.

தமிழ்மண்ணில் 14ஆம் நூற்றாண்டில் தொடங்கிய வடுகர்/தெலுங்கர் ஆட்சி, குமாரகம்பண்ணன் தொடக்கம் கருணாநிதி வரை இன்றும் தொடர்கிறது. இருபத்தோராவது நூற்றாண்டிலாவது தமிழ் மண்ணில் மீண்டும் தமிழர்களைத் தமிழர்களே ஆளும் நிலை ஏற்படுமா என்பது உலகத்தமிழர்களின் கனவாகும். பார்ப்பன ஊடகங்களும், கன்னட/தெலுங்கு வடுகர்களின் வழித்தோன்றல்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் இணையத்தளங்களும் வேண்டுமென்றே, தமிழ்நாட்டில் மீண்டும் தமிழர் ஆட்சி ஏற்படுவதைத் தடுக்க, அதிலும் குறிப்பாக, தமிழ்ப்பெண் சசிகலா நடராஜன் முதலமைச்சராவதை தடுக்க திட்டமிட்டு இயங்குகிறார்களோ என்று தான் தமிழ்நாட்டு ஊடகங்களை உன்னிப்பாகப் படிக்கும் என்னைப் போன்ற உலகத் தமிழர்களுக்கு எண்ணத் தோன்றுகிறது.

பிரச்சனை என்னவென்றால் தமிழ்நாட்டில் வன்னியர்கள், நாடார்கள், தேவர்கள், கவுண்டர்கள், பறையர்கள்(தலித்துகள்) போன்ற சாதிக்குழுவினர் உள்ளனரே தவிர தமிழர்கள் கிடையாது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழினவுணர்வையும் தமிழ்ப்பற்றையும் திராவிடமும், பெரியாரியமும் எப்பொழுதோ அழித்து  விட்டன. சாதியை ஒழிப்பதாகப் புறப்பட்ட பெரியாரியமும், திராவிடமும் தமிழர்களை மேலும் சாதியடிப்படையில் பிரித்து, தமிழன் என்ற அடையாளத்தை விட, அவரவர் சாதி அடையாளத்தைப் பெரிதாக நினைக்கும் சாதியுணர்வுள்ளவர்களாக தமிழ்நாட்டுத் தமிழர்களை மாற்றி விட்டன. எடுத்துக்காட்டாக, பெரியாரியத்தினதும், திராவிடத்தினதும் தாக்கத்தால் பாதிக்கப்படாததால், ஈழத்தமிழர்களால் தமது சாதி வேறுபாடுகளை மறந்து தமிழர்களாக ஒன்றுபட முடியும். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களால் அது முடியாது. வன்னியர் முதல்வராவது கவுண்டருக்குப் பிடிக்காது. கவுண்டர் முதல்வராவதை நாடார்கள் விரும்ப மாட்டார்கள். தேவர்கள் முதல்வராவதை பறையர்களால் தாங்க முடியாது. ஒரு பாப்பாத்தி ஆண்டாலும் பரவாயில்லை, தேவர்கள் மட்டும் அவர்களை ஆளக் கூடாது. தீபாவின் காலில் விழுந்து தமக்குத் தலைமை தாங்குமாறு அழைக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். இது தான் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்ற பம்மாத்து தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம். 
-"வேலைக்காரிக்கு" யாரும் பூக்கொடுப்பதில்லை.-
ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் தமிழர்கள் கிடையாது.  தமிழ்பேசும் வெவ்வேறு சாதிப்பிரிவினர் மட்டுமே உள்ளனர். அதனால் தான் தெலுங்கு விஜயகாந்த், மராட்டி ரஜனிகாந்த், குஷ்பு மட்டுமன்றி நேற்றுவரை முகவரியே இல்லாமலிருந்த, கன்னடவாடையுடன் தமிழ் பேசும் தீபா கூட தமிழ்நாட்டின் முதலமைச்சராகலாம் ஆனால் முன்னாள் முதல்வரின் நிழலாக முப்பத்துமூன்று ஆண்டுகள் வாழ்ந்து அரசியலைக் கரைத்துக் குடித்த சசிகலா நடராஜன் முதலமைச்சராவதை மட்டும் தமிழ்நாட்டுச் சாதிவெறியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  ஏதோ சசிகலா அவர்கள் மட்டும் தான் ஊழல் புரிந்ததாக, சிலர் புதிதாக கண்டு பிடித்தது போல், இணையத்தளங்களில் வசைபாடுவதைப் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது.  ஒரு ஊழல்ராணி இறந்தவுடன் அவர் ஒன்றும் தெரியாத பாப்பாவாக, மகாத்மாவாக மாறி விட்டது போலவும், ஜெயலலிதாவின் மீதுள்ள  வழக்குகள் எல்லாம் உண்மையல்ல எல்லாவற்றுக்கும் சசிகலா தான் பொறுப்பு என்பது போல் சிலர் கதை விடுவது வெறும் அபத்தம். ஒரு சிலர் என்னடாவென்றால் சசிகலா நடராஜன் அவர்கள் ஜெயலிதாவின் வேலைக்காரியாம். அதனால் அவருக்கு முதலமைச்சராக தகுதி கிடையாதாம். வேலைக்காரியை எவரும் வெளியே கூட்டிக்கொண்டு போய் தனக்கு இணையாக இருக்கையில் அமர்த்தி, பூ கொடுப்பதில்லை, மாலை மாற்றுவதில்லை. மகாமகத்தில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் குளிப்பாட்டுவதுமில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது வாழ்நாளில், முப்பத்துமூன்று வருடங்களாக, தனக்குப் பின்னர், சசிகலா அவர்கள் தான் தனது அரசியலுக்கும், சொத்துக்களுக்கும் உரிமையானவர் என்பதை தனது செயல்களின் மூலம் அனைவருக்கும் தெளிவாகக் காட்டியுள்ளார் என்பது தான் உண்மை. 

ஊழல்ராணி என்று தெரிந்திருந்தும் ஜெயலலிதாவை முதலமைச்சராக்கியவர்கள் இன்று சசிகலா முதல்வராவதை தடுக்க முயல்வதைப் பார்க்கும் போது ஒரு பார்ப்பாத்தி தமிழர்களை ஆளலாம் ஆனால் ஒரு தமிழச்சி தமிழ்நாட்டை ஆள விடக் கூடாது என்ற வெறியுடன் திட்டமிட்டு சதி செய்வதாகத் தான், சில ஊடங்கள் சசிகலா நடராஜன் அவர்கள் மீது கக்கும் நஞ்சைப் பார்க்கும் போது எண்ணத் தோன்றுகிறது. அயல் மாநிலங்களிலிருந்து தமிழர் மண்ணுக்கு ஆடிப்பாடிப், பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகள் கூட தமிழர்களையும், தமிழ்நாட்டையும் ஆள ஆசைப்படும் போது தமிழச்சி என்ற தகுதியொன்றே தமிழ்நாட்டை ஆளுவதற்கு  சசிகலா நடராஜன் அவர்களுக்குப் போதுமானது.

தமிழரல்லாதோரினதும், தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பிரித்தாள நினைப்போரினதும் சதித் திட்டங்களைத் தகர்த்தெறிந்து, சசிகலா நடராஜன் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராகி, தமிழ்மண்ணில் மீண்டும் உண்மையான தமிழர்களின் ஆட்சியை நிறுவி, சாதி வேறுபாடுகளை மறந்து தமிழர்கள் அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்த உலகத்தமிழர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

7 comments:

மணியன் said...

ஓ.பன்னீர்செல்வம் தமிழர் இல்லையா? அவரை இறக்கிவிட்டு இன்னொருவரை ஏற்க வேண்டிய அவசியம் என்ன?

மணியன் said...

பன்னீர்செல்வம் தமிழர் இல்லையா? தமிழரே இல்லை என்று சொல்லிவிட்டு திருமதி சசிகலாவை மட்டும் தமிழச்சி என சொல்லுவது முரண்பாடு.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


அருமையான பதிவு

Sundhar said...

அருமை

06780373147425792777 said...

சொல்லப் போனால் ஓ. பன்னீர்செல்வமே பச்சைத் தமிழர் ஆவார்

viyasan said...

@மணியம்,

நான் எங்கே ஐயா திரு. பன்னீர்செல்வம் தமிழரல்ல என்று கூறினேன். பன்னீர்செல்வமோ அல்லது சசிகலாவோ, யாராக இருந்தாலும் தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவேண்டுமென்பது தான் எனது கருத்தாகும். திரு. பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்வதற்கு எதிர்ப்பு இல்லாமைக்குக் காரணம், அவரது தலைமையில் இலகுவாக அதிமுகவை உடைத்து விடலாம் என்பதாகக் கூட இருக்கலாம். சசிகலா நடராஜன் அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரங்களை முன்னெடுத்து, கொல்லைப்புற வழியாக மீண்டும் ஒரு பார்ப்பனப் பெண்ணை தமிழ்நாட்டு அரசியலில் நுழைத்து , ஆட்சியையும் கடத்திக் கொண்டு போய், மீண்டும் தமிழர்கள் எல்லாம் வரிசையாக அந்தப் பெண்ணின் காலில் விழும் அலங்கோலத்தை எங்களை (உலகத்தமிழர்கள்) பார்க்க வைத்து விடுவார்களோ என்ற ஆதங்கத்தை தான் நான் இங்கே வெளிப்படுத்துகிறேன்.

kanniappanp said...

பார்ப்பனரல்லாத தமிழன் தமிழனை ஆள்வதே சிறந்தது. அவர் ஆளுமையும் மக்களுக்கு நன்மை செய்பவராக இருந்தால் சாலச்சிறந்தது. திராவிடம் பேசி தமிழுணர்வை தங்கள் வியாபாரத்துக்கு மட்டும் பயன்படுத்தி துரோகம் செய்யும் கயவர்களை துரத்த வேண்டும்.

== அறவாணன்