Monday, July 18, 2016

யாழ்ப்பாணத்தில் சிங்கள- தமிழ் மாணவர் மோதல்- தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரில் வழமைக்கு மாறாக சிங்கள ஆதிக்கம்.


அனுராதபுரத்தை சிங்களவர்கள் எவ்வாறு தமது கலாச்சாரத் தலைநகராகக் கொள்கிறார்களோ அது போன்றே யாழ்ப்பாணத்தை ஈழத்தமிழர்கள் தமது கலாச்சாரத் தலைநகராக, தமது மொழி, கலை, பண்பாடுகள் பாதுகாக்கப்படும், தனித்துவமான இடமாக மட்டுமன்றி, அது அவ்வாறே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதையும் விரும்புகிறார்கள். தமிழர்களால் கட்டியெழுப்பப்பட்டு, இலங்கையின் வரலாற்றின் ஆரம்பகாலம் தொட்டு தமிழர்கள் வாழ்ந்த, தமிழ்மன்னர்கள் ஆண்ட அனுராதபுரத்தை தமது கலாச்சாரத் தலைநகராக்கிக் கொண்ட சிங்களவர்கள், தமிழர் தொடர்பான சின்னங்களை அகற்றி, சிங்களமயப்படுத்தி, வரலாற்றைத் திரித்து  முற்று முழுதாகச் சிங்களமயமாக்கியதுடன், புத்த விகாரைகளுக்கு அண்மையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக, சுவாமி விவேகானந்தரால்  வணங்கப்பெற்ற அனுராதபுரம் கதிரேசன் கோயிலைக் கூட, பெளத்த புனிதநகர் திட்டத்தின் கீழ் அங்கிருந்து முற்றாக அகற்றினார்கள். 

ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக, உலகில் இறுதித் தமிழரசின் அரசபீடமாக விளங்கிய யாழ்ப்பாணத்தில்  தமிழுக்கும், தமிழ்க் கலை, பண்பாடு, கலாச்சாரங்களுக்கும் அந்நியர்களால் போட்டி ஏற்படுவதை தமிழர்கள் விரும்புவதில்லை, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் ஆலோசனையை அல்லது அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமல் வெளியார் தமது மொழி, கலை, கலாச்சாரங்களை யாழ்ப்பாணத்தில் புகுத்துவது , யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களுக்குக் கூட, திட்டமிட்ட சிங்கள ஆதிக்கத்தினாலும், குடியேற்றங்களினாலும்  தமது மொழி, கலை, பண்பாடுகள் யாழ்ப்பாணத்திலும் அழிக்கப்பட்டு விடுமோ என்ற ஆதங்கம் ஏற்படுகிறது என்பது தான் உண்மை. யாழ்ப்பாணத்தமிழர்கள் எந்த நாட்டில், எத்தனை தலைமுறைகள் வாழ்ந்தாலும் யாழ்ப்பாணத்தில் தமது ஊர்களை, தமது முன்னோர்கள் வாழ்ந்த இடங்களை மட்டுமாவது மறக்காமல் குறிப்பிடுவதைக் காணலாம். இந்த வழக்கம் மலேசியாவில் பல தலைமுறைகளாக வாழும் மலேசிய ஈழத்தமிழர்களிடம் கூட உண்டு.
சிங்கள மேளம் 
திராவிட, பெரியாரியச் சதியினால் தமது மொழி, இன உணர்வை இழந்து, வெறும் சாதியடிப்படையில் கூறு போடப்பட்டு, தமிழ்நாட்டில் தமிழரல்லாதோரின் நலன்களைக் காப்பதற்காக, அவர்களின் அரசியல் பொருளாதார ஆதிக்கத்தை உறுதிப்படுத்த, உருவாக்கப்பட்ட திராவிடத்தாலும், தமிழர்களின் சொந்தமண்ணில் கூட தமிழ்மொழி பண்பாட்டைக் காப்பது பற்றிப் பேசுவதே பாசிசம் என்று உளறும், ‘முற்போக்கு’ என்று தம்மை அழைத்துக் கொள்ளுகிற திராவிட எச்சங்களாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் பலரால், யாழ்ப்பாணத்தமிழர்களின் இந்த தமிழுணர்வைப் புரிந்து கொள்ள முடியாது. வேடிக்கை என்னவென்றால், அது போதாதென்று தமிழ்நாட்டில் தமிழர்களைப் பிளவுபடுத்த வஹாபிகள் கூட, 'முற்போக்கும்', 'மனிதநேயமும்' பேசிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ்மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சாதியடிப்படையில் தமிழர்களுடன் மோதிக் கொள்கிறார்கள். ஆனால் இலங்கையில் தமிழ்மாணவர்கள் தமது மொழியைப், பண்பாட்டை தமது சொந்தமண்ணில் பாதுகாத்துக் கொள்ள சிங்களவர்களுடன் மோதிக் கொள்கிறார்கள். 

தமது சொந்த மண்ணிலேயே அந்நியர்களின் திட்டமிட்ட குடியேற்றங்களாலும், அந்திய இராணுவ ஆதிக்கத்தாலும் தமது முன்னோர்கள் கட்டிக்காத்த மொழி, கலாச்சாரம் என்பன தமது சொந்த மண்ணிலேயே அழிந்து விடுமோ என யாழ்ப்பாணத் தமிழர்களின் மனதிலுள்ள அச்சவுணர்வின் அடிப்படையிலேயே நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதலைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
                                              
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் விழாக்களில் வழமையாக தமிழர்களின் பண்பாட்டு இசைவடிவமாகக் கருதப்படும் தவில், நாகசுவரம் மட்டுமே இசைக்கப்பட்டு குத்து விளக்கேற்றப்பட்டு நிகழ்ச்சிகள் தொடங்கப்படும். ஆனால் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடனத்தை நடாத்த முற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது. இம்முறை  சிங்கள மாணவர்களின் வற்புறுத்தல் காரணமாக, சிங்களவர்களின் கலாச்சார நடனமாகக் கருதப்படும் கண்டிய நடனமும் ஆடப்பட வேண்டுமென வழக்கத்துக்கு மாறாகப் புகுத்தப்பட்டது.   யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள இராணுவத்தின் தூண்டுதலும், சிங்கள மாணவர்களுக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பும் இந்தப் பிரச்சனை பெரிதாக உருவாகக் காரணமாகக் கூறப்படுகிறது.

தென்பகுதியில் இருந்து வந்த சிங்களவர்கள்  மாணவர்களா?
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் தமிழ் - சிங்கள மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தை எவரும் ஒரு சாதாரண விடயமாகக் கருதிவிடக் கூடாது. ஏனெனில் அந்த சம்பவமானது தென்பகுதியில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களை மீண்டும் தாக்கி அழித்து, அவர்களின் சொத்துக்களை கபளீகரம் செய்து, அங்கிருந்து அவர்களை துரத்துவதற்கான சதித்திட்டமாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் - சிங்கள மாணவர்களின் மோதல் சம்பவம் அமைந்துள்ளது என்று அனுமானிப்பதில் தவறவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் நடந்த புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் முன்கூட்டியே நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டிருந்தது.இந்நிலையில் அதிரடியாக கண்டி நடனம் புகுத்தப்பட்டது எனில், இது ஒரு சதித்திட்டம் என்பதை எவரும் மறுக்க முடியாது.மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நிரலில் கண்டி நடனம் இல்லாதபோதும் அதனை உள் நுழைத்தவர்கள் யார்?கண்டி நடனத்தில் பங்குபற்ற வந்தவர்கள் எங்கிருந்து வந்தனர்? 
இவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? இந்த ஏற்பாடுகளை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு சரியான விடையைக் கண்டறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். உரிய விசாரணை இல்லாமல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இயங்குமாக இருந்தால் அதன் விளைவு தமிழ் மாணவர்களுக்கு மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிறுத்திட்டமான உண்மை.எனவே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டி நடனத்தை அரங்கேற்ற முற்பட்டவர்கள் இனங்காணப்படாதவரை; கண்டி நடனத்தில் பங்கேற்றவர்களை கைது செய்து பொலிஸார் விசாரிக்காதவரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்துவது மகாகடினம் என்பது தவிர்க்க முடியாத உண்மை.அதேசமயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவத்தின் பின்னணியாக அமைந்த கண்டி நடனம் சடுதியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக ஒருபோதும் இருக்க முடியாது. ஆக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் அதிகூடிய எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் இருப்பர். இச்சந்தர்ப்பத்தில் நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக கண்டி நடனத்தை நுழைத்தால் தமிழ் மாணவர்கள் குழப்பம் அடைவர்.
இக்குழப்பத்தை சாட்டாகக் கொண்டு தமிழ் மாணவர்களை தாக்க முடியும் என்பதுடன் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களை தாக்கினால் அதனை தமக்கு சாதகமாக்கி தென்பகுதியில் ஒரு பெரும் இனக்கலவரத்தை ஏற்படுத்தலாம் என்பது யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலின் நோக்கம் என்ற உண்மை உணரப்படக்கூடியது.எது எவ்வாறாயினும் யுத்தம் முடிந்த கையோடு சிங்கள மாணவர்களை பெரும் எண்ணிக்கையோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுமதித்தமைக்குள் தென்னிலங்கை சூழ்ச்சியுடன் செயற்பட்டது உண்மை என்றால்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ் - சிங்கள மாணவர்களிடையேயான முரண்பாடுகள் தொடரவே செய்யும். ஆனால் பல்கலைக்கழகத்தை மீள இயக்குவதற்கு முன்னதாக தென்பகுதியில் இருந்து யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வந்தவர்கள் அனைவரும் மாணவர்களா? அல்லது மாய மான்களா? என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும்.
நன்றி: Tamilwin 
 யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Sunday, July 17, 2016

அன்புள்ள தம்பி சீமான் அவர்களுக்கு.. (மலேசியாவிலிருந்து ஒரு மடல்)

அன்புள்ள நாம் தலைவர் தம்பி சீமான் அவர்களுக்கு வணக்கம்.
நாம் தமிழர் தோல்விக்கு இடமே இல்லை. தமிழர்கள் மனதில் தமிழனாக தொடக்கி உள்ளீர். தமிழன் கீற்றாக அது சீறி பாயும். மனதும் உதிரமும் அதில் தினம் கொதிக்கும்.   
இலங்கை தமிழீழம் , ஆண்டு முடித்த முன்னோடி தலைவர்களை தீண்டாமலும், இருக்கும் மூத்த தமிழர்களை ஏசாமலும், பேசாமலும் தமிழர் மாநில அரசியல் பயணம் செய்து இருந்தால் வெற்றி கிட்டி இருக்கும். 
பழமையை தெரியா, புரியா முழிக்கும் பாமர மக்களிடம் உன் கொந்தளிப்பு தமிழ் விளங்கவில்லை. நிழல் அமைச்சரவை அமைத்து மாற்றம் என்பதை புதுமையா புரட்டி போட்டு இருக்கலாம். 
உலகம் பார்த்து மிரளும் விவாசய திட்டங்கள் நம் தமிழர் மக்களை பிரமிக்கவில்லை. 4 கோடி வாக்காளர்களில் 5 லட்சம் நாம் தமிழரிடம் உள்ளது மகிழ்ச்சியான தொடக்க விழா. மீதமுள்ள தமிழன் அந்த இதரவன் கூட்டத்தில் கும்மி அடிக்கிறான். 
அடுத்த தேர்தலுக்கு நாம் தமிழர் மேல கண் வைக்க எது தரணும்? தமிழா தமிழனா. தமிழன் அரசியல் ஜனநாயக உரிமை விளங்காத தமிழனுக்கு எதுதான் வேண்டும்? ஒரு வேளை சிலரின் ச…வுக்கு மணியடித்தால் மண்டை சரக்கு மூளை சர்வ சாதகமாகுமா ? 
பணமில்லை, வீடு இல்லை, காடு இல்லை என்ற பிச்சை பாத்திர பரிதாபங்கள் உன்னை வறுமையாக்கி அரசியல் கிருமிகள் கொன்று விடும். உன் தெளிவுக்கு காத்து நிற்க கொடுக்க ஒண்ணுமில்லாதவன்  வருவான், அது நியாய வாதிகளின் பண்பு. அன்பு. 
இங்கே வணிக அரசியல் நடத்த தெரியணும். நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தலைமையக கட்டிடம் ஒரு தொலைகாட்சி ஊடகம் ரோட்டில் நிற்க படிக்க ஒரு பத்திரிக்கை வேண்டும். 
இன்று வாக்குகளை எண்ணிய கணிணி ஏமாற்றி விட வித்தை வெளியாகி உள்ளது. தோற்ற எல்லா கட்சிகளும் கோஷமிட்டு மாற்று தேர்தலுக்கு வழி காண வேண்டும் RSS RAW மோடி பிராமண பாசம், இதுத்துவா அரசியல் மோசடிகள் எல்லாம் தமிழனை தாக்கி உள்ளது.தீர்வுதான் என்ன ? சீமானை விட்டால் வேற வழி இல்லை தமிழனுக்கு …ஆனால் மெழுகு வர்த்திக்கு நீ ஆயிரம் வியாக்கணம் வைக்கலாம். தமிழன் சைமன் சீமானானது மெழுகு வர்த்திக்கு இந்துக்கள் என்ன புரிதல் செய்வர். அது ஒரு திணிப்பாக்கத்தான் . திணறுவார் .. “அரசு தந்த சின்னம் என்பதில்” மக்கள் உடன்பாடு ஊனமாகாது. 
இன்று உலகில் சமயமும் மதமும் அரசியலுக்கு ஊது கோல். அது அடக்கும் அல்லது ஊதியும் விடலாம். சமூகவியல் சித்தனையில் பொதுச்சின்னம் நமது அடுத்த புரட்சியில் இருக்கட்டும். அல்லது அடிப்படை “தமிழன்” சாம்ராஜ்யம் தந்த சிவனுக்கு போவோம். வள்ளுவன் . அகத்தியன் , இப்படித்தமிழன் அடையாளங்கள் 5000 ஆண்டுகளைத் தாண்டிப்போவோம். தேடி எடுப்போம்.
நாம் தமிழர் நல்லதொரு அரசியல் அடையாள நகர்வு. தாய் தமிழன் குருதியில் குத்தும் உணர்வில் தமிழன் உடன் படுவான் …உலகின் இன உணர்வில் மரபணு உயர்வில் முந்தி நிற்பவன் தமிழன். 
அவன் ஏன் இப்படி இன உரிமைக்கு போராட வேண்டும்? 50 ஆண்டுகளாக திராவிட இந்துத்துவா கல்வி போதனையில் கோட்டை விட்டு, இப்போ புதிய இனப் புரட்சி பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பது போல மரம் ஏறத்தான் செய்யும். இனிய இளஞர் கூட்டம் நம் இன மான உணர்வில் கலந்துள்ள விவேகம் உன் திறமையின் வெளிப்பாடு. பெருமையாக உள்ளது. அந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் பல கோடியாக மிளிரும் நாள் ஒரு புதிய தமிழன் பிரளயம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது உலகம் கண்ட அரசியல் ஆதாரம்,கோபத்தின் அனல் வெளிப்பாடு பதவிக்கு பிறகு வர வேண்டும். அது தலைமைத்துவம். அதற்கு முன் வருவது நிறைவேறாத கோபம் அது விஷமம்.அதுவே அரசியல் சத்ருவாகும். 
சினிமாவை கையில் ஏந்துங்கள். அது இன்னும் 5 ஆண்டுகளுக்கு அரசு அரசியல் சாணக்கியம் பேசும். உரமிடுங்கள். தமிழன் அரசியல் கொடூரங்களை கொட்டித்தீருங்கள். தமிழனை உருமாற்றம் செய்யுங்கள். தியட்டர் வேண்டாம். பட்டி தொட்டிகளில் பள்ளிக்கூடங்களில் படம் காட்டுவோம் . 
நாம் தமிழர் மாபெரும் கட்டிடத்துக்கு நிதி சேருங்கள். தமிழன் டிவி செய்வோம். தமிழன் நாளிதழ் செய்வோம். காணி நிலம் வேண்டும் என்றான் பாரதி அந்த மண் உரிமையை உலகக் தமிழனிடம் காட்டுவோம். 
நாளை நமது என்றிலாமல் இன்றே உரக்க கத்துவோம். காட்டுவோம் . தமிழர் தேசிய சிந்தனை மெல்ல உலகத் தமிழனின் அடையாளத்தை அழகாய் பதிப்போம். தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நமதென்போம் தமிழா ! நன்றி. 
நாம் தமிழர்…தமிழர் என்று ஐநாவுக்கு உரக்கச்சொல்வோம். 
தமிழவன் பொன் ரங்கன்தமிழர் தேசியம் பேரவை மலேசியாநாம் தமிழர் / தமிழர் குரல் 22/05/ 2016 கோலாலம்பூர். 
நன்றி: http://www.semparuthi.com/?p=134730