Saturday, April 30, 2016

“தமிழ்நாட்டில் உண்மையான தமிழ்த் தலைவர்களே கிடையாது?”


“தமிழினத் தலைவர்” கூட உண்மையிலேயே தமிழர் இல்லை என்கிறது 'The Pioneer' இணைய இதழிலுள்ள NO REAL TAMIL-SPEAKING LEADERS IN TN! என்ற கட்டுரை. பல ஈழத்தமிழர்களுக்கு இது நிச்சயமாக அதிர்ச்சியைக் கொடுக்கும், ஏனென்றால் பலருக்கும் (நான் உட்பட) இந்த உண்மை தெரியாது. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்தகுடி' என்று  பீற்றிக் கொள்ளும் தமிழர்களுக்கு, இதை விடக் கொடுமை வேறேதுமிருக்க முடியாது. விஜயநகர மன்னர்களினதும் நாயக்கர்களினதும் ஆட்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முடிந்த பின்னரும் கூட, தமிழ்நாட்டில் மட்டும் அது இன்றும் தொடர்வதற்குக் காரணம் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் வீரமும், விவேகமும் இல்லையா அல்லது வெறும் இளிச்சவாய்த்தனமா என்பதைத் தான் என்னைப் போன்ற உலகத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.  

அப்பாவித் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலைமையுடன் ஒப்பிடும் போது, ஈழத்தமிழர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லைப் போல் தெரிகிறது. குறைந்த பட்சம் எங்களின் தலைவர்கள் எல்லோருமே தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கையுள்ள, அப்பழுக்கற்ற தமிழர்கள்.

தெலுங்கர்களிடமும், கன்னடர்களிடமும், தமது சொந்த மண்ணின் அரசியலையும். வட இந்தியர்களிடம் பொருளாதாரத்தையும், மலையாளிகளிடம் தமது  சொந்த தாய்த்தமிழ் மாநிலத்தின் வர்த்தகபலத்தையும் இழந்து விட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்கின்ற தமிழ்நாட்டுத் தமிழர்களால் எத்தனை ஆண்டுகளானாலும் எழுந்திருக்கவே முடியாது என்பது பெரியாருக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால் தான்  ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு உதவுமாறு கோரிய ஈழத் தமிழர்களின் தலைவர் தந்தை செல்வாவிடம் , “ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது” என்று  நாற்பது வருடங்களுக்கு முன்பே அவர் கூறியதற்கு காரணமாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

பெரியார் கட்டிவிட்ட 'திராவிடன்' என்ற கோவணத்தை எந்த மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டதால் ஆயிரமாயிரமாண்டுகளாக நமது முன்னோர்கள் கட்டிக்காத்த தமிழன் என்ற அடையாளத்தையும், உரிமைகளையும் மட்டுமன்றி தமது சொந்த மண்ணில் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து நிற்கின்றனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். ஐம்பதாண்டு காலமாக திராவிடம் என்ற பெயரில் மாற்று மொழிவழி, இனவழித் தோன்றல்கள் செய்த அட்டூழியங்களினதும், அவர்களின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்தினதும் காரணமாக அவர்கள் மீது ‘நாம் தமிழர்’ போன்ற தமிழுணர்வுள்ள தமிழர்களின் கோபம் திரும்பியுள்ளது நியாயமானதாகத் தான் படுகிறது. 

தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர்கள் மீண்டும் தமிழர்களாக எழ முடியும். ஆனால் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்களும், தமிழ் நாட்டை தமிழர்கள் தான்ஆள வேண்டுமென்ற வெறும் சாதாரண அடிப்படைக் கருத்தையே திரித்துப் பூச்சாண்டி காட்டித்,  தமிழின ஒற்றுமையை வலியுறுத்துகிறவர்களைப் பழிவாங்கவும், அவர்களை இழிவு படுத்தவும்,  அவர்களுக்கெதிராக பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுமே தமிழ் இணையவுலகில் அதிகமாக உள்ளனர். அவர்களையும், அத்தகைய இணையத் தளங்களையும் உலகெங்கும் பரந்து வாழும், தமிழுணர்வுள்ள தமிழர்களாகிய உலகத் தமிழர்கள் ஆதரிக்கலாமா என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைத் தான் 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்றார்கள் எமது முன்னோர்கள்.


Sunday, April 24, 2016

கலைஞர் கருணாநிதிக்கு தான் அந்த 'தில்' இருக்கிறது!மேலைநாட்டு அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடனேயே அரசியலிலிருந்து அவர்களே  ஓய்வெடுத்துக் கொள்வார்கள் அல்லது அந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அல்லது அவர்களின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் ஆரம்பித்து தலைமைப்பதவியை வேறு யாராவது கைப்பற்றிக் கொள்வார்கள்.

பிரிட்டனின் ஆனானப்பட்ட இரும்புப் பெண்மணி - மாகரட் தட்சரோ - அல்லது கனடாவின் அரசியலமைப்பையே மாற்றி அமைத்த பியர ரூடோ கூட அதற்கு விதி விலக்கல்ல. வெறும் 65 வயதிலேயே தட்சரின்  பிரதமர் பதவியை, அவரது கட்சியினரே  பறித்துக் கொண்டு  விட்டார்கள். மேலைநாடுகளில் அதற்குக் கூறும் காரணம் என்னவென்றால் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் மனிதர்களின் மூளை, முறையாக இயங்க மறுப்பது மட்டுமன்றி, வயதான காலத்தில் ஓய்வெடுக்க வேண்டிய வயதில்  அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவது அவர்களின் உடல் நலத்துக்குக் கேடு என்பது தான்.

ஆனால் தமிழ்நாடு போன்ற சாதி, மொழி, பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டுமன்றி  கோடிக்கணக்கானோருக்கு சுத்தமான குடிநீர் வசதிகளும், கழிப்பறை வசதிகளும் கூட இல்லாத ஒரு மாநிலத்தில்,    நடக்கக் கூட முடியாமல் தள்ளுவண்டியில் அமர்ந்திருக்கிற  93 வயதான முதியவர்  ஒருவர் தமிழ்நாடு போன்ற, பிரச்சனைகளும் குழப்பங்களும் நிறைந்த ஒரு மாநிலத்துக்கு, அதுவும் இருபத்தோராம் நூற்றாண்டில் முதலமைச்சராக வரத் துடிப்பதற்கு உண்மையிலேயே அவருக்குத்  'தில்' இருக்க வேண்டும். அதிலும் கவலை நிறைந்த, வேடிக்கை என்னவென்றால்  உண்மையிலேயே அவர் மீண்டும் முதலமைச்சராவது  கூட தமிழ்நாட்டில் சாத்தியம் என்பது தான்.

இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களிலோ அல்லது வேறு நாடுகளிலோ நடக்க முடியாத பல அபத்தங்கள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது  தமிழ்நாட்டை உன்னிப்பாக அவதானிக்கும்  உலகத் தமிழர்களுக்குத் தெரியும்.

உதாரணமாக தமிழ்நாட்டில் மட்டும் தான், தமிழ்நாட்டுக்கு ஆடிப்பாடி, பஞ்சம் பிழைக்க வருகிறவர்கள் கூட, ஒரு சில ஆண்டுகளின் பின்னர் தமிழர்களை ஆளுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க  முடியும் என்பது  மட்டுமன்றி உண்மையாகவே தமிழ்நாட்டுத் தமிழர்களை ஆளவும் முடியும். . அவர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்களே தம்மை ஆளுமாறு வருந்தி அழைப்பார்கள். ரஜனிகாந்த், விஜயகாந்த், குஸ்பு போன்ற பலர் அதற்கு எடுத்துக் காட்டாக உள்ளனர். சொந்த மண்ணிலேயே அந்நியர்களுக்குச் சேவகம் செய்வதில் பெரிய மனத்திருப்தியும், மகிழ்ச்சியும்  அடைபவர்கள், அதைப் பெருமையாக நினைப்பவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அதே வேளையில் இன்னொரு  தமிழன் அவர்களை ஆளுவதற்கு  அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால்  ஒரு அந்நியன் தம்மை ஆளலாம், தனது சாதி தவிர்ந்த இன்னொரு சாதிக்காரத் தமிழன் தமிழ்நாட்டை ஆள விடக் கூடாது என்ற சாதி வெறி தான் அதற்குக் காரணம், இவ்வாறு  எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இந்த இழிநிலைக்கு பெரியாரியமும், திராவிடமும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழன் என்ற தமிழுணர்வை மழுங்கடித்து, திராவிடன் என்ற கோவணத்தைக் கட்டி விட்டு,  தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்து  அவர்களின் சாதியுணர்வைத் தூண்டி விட்டது தான் காரணமென வாதாடலாம். ஆனால் கலைஞர் கருணாநிதியின் தன்னம்பிக்கையையும், தமிழர்களின் இளிச்சவாய்த்தன்மையை அவர் எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளார் என்பதையும்  வியந்து பாராட்டுவது தான் என்னுடைய இந்தப் பதிவின் நோக்கமாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக கலைஞர் கருணாநிதி அவர்கள், சட்டசபை உறுப்பினராக இருந்தும் கூட, சட்டசபைக்கே போகவில்லையாம். ஐந்து வருடங்களாகச்  சட்ட சபைக்குப் போக முடியாமல் தள்ளுவண்டியில் காலத்தைத் தள்ளும் ஒரு முதியவர், முதல்வராகி எப்படி சட்டசபைக்கு ஒழுங்காகப் போய் தனது கடமையைச் செய்வார். ஓய்வெடுக்க வேண்டிய இந்த வயதில் அவரை இவ்வாறு  துன்புறுத்துவது எவ்வளவு பாவம் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லைப் போல் தெரிகிறது.
அளவுகடந்த புத்திரபாசம் தான் காரணமா?  
என்னதான் இருந்தாலும் உலகில் குறிப்பாக மேலைநாடுகளில் எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத ஒரு விடயத்தை, அதாவது 93 வயதில் தள்ளுவண்டியில் அமர்ந்தவாறே, குழப்பங்களும், தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகளும் நிறைந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்துக்கு மீண்டும், மீண்டும் முதலமைச்சராக வர முயல்வதற்கு, எதையுமே சிந்திக்காமல் வாக்களிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்தின் மீது அவருக்குள்ள அளவு கடந்த நம்பிக்கை தான் காரணமென சிலர் கூறினாலும் கூட, கலைஞர் கருணாநிதி அவர்களின் "தில்' ஐ யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.

Tuesday, April 19, 2016

இந்தியா - இலங்கையுடன் போர் தொடுத்தாலே தவிர கச்சதீவை 'மீட்க' முடியாது!பன்னாட்டுச் சட்டங்களின் படி இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவை மீட்கப் போவதாகக் கூறுவது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. கச்சதீவை மீட்க இந்தியா இலங்கை மீது போர் தொடுத்து மீட்டுக் கொண்டாலே தவிர, இலங்கைக்குச் சொந்தமான எந்த நிலப்பரப்பையும் எவரும் "மீட்கவும்" முடியாது. சொந்தம் கொண்டாடவும் முடியாது என்பது தான் உண்மை.

கச்சதீவு  இலங்கையின் வடமாகாண அரசுக்கு (ஈழத்தமிழர்களுக்கு) அதாவது இலங்கைக்குத் தான் சொந்தமானது என்பதில் ஈழத்தமிழர்களுக்கு எந்த ஐயமும் கிடையாது ஆனால், இந்த விடயத்தில் ஈழத்தமிழர்களின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை போன்றது. கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானதென வாதாடினால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்பதே பல இலங்கைத் தமிழர்களின் கவலையாகும். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலை.

தமிழ்நாடு இன்று தனிநாடாக இருந்தால், எமது உரிமையை தமிழ்நாட்டுக்கு விட்டுக் கொடுப்பதால் ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென நம்பலாம், ஆனால் தமிழ்நாடு தனிநாடல்ல. அங்கு , தமிழையும், தமிழர்களையும்  எதிர்க்கும் தமிழரல்லாத ஆளும் வர்க்க (வந்தேறிகளின்) த்தினரின்  ஆதிக்கம் மிகவும் அதிகம்.  கச்சதீவு யாழ்ப்பாண அரசின் ஆளுமையின் கீழிருந்த ஈழத்தமிழர்களின் சொத்து, அதை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை, எமது தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு விளக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமை என்பது எனது கருத்தாகும்

கச்சதீவு இலங்கைக்கு அல்லது இந்தியாவுக்குச் சொந்தமானதா என்று விவாதிப்பதை விட, ஈழத்தமிழர்களின் விடயத்தில் இலங்கை, இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தையும், இந்தியாவுக்குக் கொடுத்த உறுதிமொழிகளையும் மீறும் போது, இந்தியாவும் இலங்கையுடன்  கச்சதீவு சம்பந்தமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறினால் என்ன, என்று இந்தியர்கள் வாதாடினால் அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது மட்டுமல்ல, அது  “கச்சதீவு இராமநாதபுரம் ஜமீன்தாருக்குச் சொந்தமானது” என்ற  நொண்டி வாதத்தை விட வலுவானதும் கூட.

உதாரணமாக ஈழத்தமிழர்களின் உரிமைகள் சம்பந்தமான விடயத்தில் இந்தியாவுக்கு அளித்த எந்த உறுதிமொழிகளையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. அதை விட இருநாடுகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தமாகிய இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் படி: சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தத்தையும் இலங்கை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்தியாவை கலந்தாலோசிக்காமல் இந்தியஇலங்கை ஒப்பந்ததுக்கெதிராக வடக்கு கிழக்கு இணைப்பை இலங்கையின் இலங்கையின்  உச்சநீதிமன்றத்தின் ஒத்துழைப்புடன்  நீக்கி விட்டது. ஆனால் அதைப்பற்றி இந்திய அரசு மூச்சுக் கூட விடவில்லை. இதற்காகத் தானே ராஜீவ் காந்தியும் உயிரைத் தியாகம் செய்தார் என்கிறார்கள் சில இந்தியர்கள்.

அதனால் இலங்கை ஒப்பந்தங்களை மீறும் போது, இந்தியாவும் கச்சதீவு ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டால் என்ன என்ற கேள்வியை இந்தியர்கள் கேட்டால், அல்லது அதை வலியுறுத்தினால் அது நியாயமானதே தவிர கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்று வாதாடுவதல்ல. முடிந்தால் இலங்கையுடன் போரிட்டு, அல்லது தாஜா பண்ணி கச்சதீவை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாலும்,  அதைப்பற்றி ஈழத்தமிழர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
க‌ச்ச‌தீவு இல‌ங்கைக்கு அதாவது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கே சொந்த‌மான‌து:

"The Indian government was not fully convinced of the Ramnad  Zamindar's rights over the island and in fact showed little interest in retaining the island under its control."இலங்கையின் கடலெல்லைக்குள் இருக்கும் தீவுக்கூட்டங்களில் ஒன்றாகிய கச்சதீவு இன்று பலரும் பேசப்படும் விடயமாக உருவெடுத்துள்ளது. இந்தியர்கள் ;பலரும் கச்சதீவை இந்தியா இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது போலவும் அல்லது இந்தியாவின் நிர்வாகத்தின் கீழிருந்த தீவை இந்திராகாந்தி இலங்கைக்கு தாராள மனப்பான்மையுடன் பரிசளித்து விட்டார் என்பது போலவும் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் 1974 ஒப்பந்தத்துக்கு முன்பாகவே கச்சதீவு இலங்கையின் ஆளுமையின் கீழ், யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் நிர்வாகத்தின் கீழ் தானிருந்தது என்பது தான் உண்மை.

கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானதென்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இராமநாதபுரம் சமிந்தாரி சம்பந்தமான ஆதாரங்களை இலங்கை ஒரு போதும் ஏற்றுக் கொண்டதுமில்லை, சர்வதேச நீதிமன்றங்களில் வாதாடக் கூடியளவுக்கு அவை வலுவான ஆதாரங்களுமல்ல.

இன்று, நாம் ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிலும், சிங்களவர்களிலும் எங்களுக்குள்ள வெறுப்பால், கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்ற கருத்தை மறுக்காமல், ஏற்றுக் கொண்டால், நாளை வடமாகாண அரசும், வடமாகாண ஈழத்தமிழ் மீனவர்களும் கூட, கச்சதீவைச் சொந்தம் கொண்டாட முடியாமல். ஈழத்தமிழர்களை வெறுக்கும் இந்திய தேசியவாதிகளுடன் சர்வதேச நீதிமன்றங்களில் வாதாட வேண்டிய நிலையேற்படலாம். தமிழ்நாட்டில் தமிழுணர்வென்பது அருகி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அது முற்றாகக் காணமால் போய்விடும். தமிழ்நாட்டில்  தமிழ்த்தேசியத்தை, தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களை வெறுக்கிறவர்களும், எதிர்க்கிறவர்களுமே அதிகம். திராவிடமும், பெரியாரிசமும், தமிழ்நாட்டை ஆளப்பிறந்த, தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்களும்  தமிழ்த்தேசியத்துக்கு குழிபறித்து விட்டு, அப்படியே போட்டுப் புதைக்கக் காத்திருக்கின்றனர்.
Flag of Jaffna Kingdom
இந்த நிலையில் தமிழ்நாட்டின் இந்தியர்கள், எதிர்காலத்தில் கச்சதீவு விடயத்தில் ஈழத்தமிழர்களுடன் கருணையுடன் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கச்சதீவு விடயத்தில் விட்டுக் கொடுப்பது தவறானதொன்றாகும். சிங்களவர்களின் மீது எங்களுக்கு என்ன கோபதாபமிருந்தாலும், இலங்கை எங்களின் தாய்நாடு, இலங்கைக்குச் சொந்தமான ஒரு தீவை இன்னொரு நாடு சொந்தம் கொண்டாடும் போது, அதைக் கண்டும் காணாதது போலிருப்பது நாம் எமது மண்ணுக்குச்  செய்யும் துரோகமாகும்.


யாழ்ப்பாண அரசும் அதன் தீவுகளும்: 


தமிழ்நாட்டில் தமிழர்கள் தமது அரசையும் ஆட்சியையும் இழந்து வந்தேறி தெலுங்கர்களுக்கும், மராத்தியருக்கும், துலுக்கர்களுக்கும் கைகட்டிச் சேவகம் செய்து கொண்டிருந்த போதுயாழ்ப்பாணத் தமிழ் அரசு மட்டும் தான் இறைமையுள்ள தமிழ் அரசாக நிலைத்திருந்தது. தமிழ்நாட்டில் அந்த நிலை தான் இன்றும் தொடர்கிறது.

ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண இராச்சியத்தைப்  போர்க்களத்தில் போத்துக்கேயரிடம் இழக்க முன்னர், அதன் செல்வச் செழிப்பையும், கடல்வளத்தையும், முத்துக்குளிப்பினால்  ஈட்டிய செல்வங்களையும், யாழ்ப்பாண அரசின் கடல்படையின் ஆளுமைக்கு  பாக்குநீரிணை முழுவதும் உட்பட்டிருந்தையும், யாழ்ப்பாண அரசர்களின் அதிகாரம்  புத்தளம், குதிரைமலைக்கு அப்பால், தென்னிலங்கையில் குருணைக்கல் (குருநாகல்) தொடக்கம், சிவனொளிபாதமலை வரை பரவியிருந்தது என்பதையும், அரபு முஸ்லீம்களால் புனித தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆதாம் மலை அல்லது சிவனொளிபாதமலையைத் தரிசிக்க இலங்கைக்கு வந்த அரேபிய யாத்திரீகர் இபின்பத்தூத்தா Ibn Battuta தெளிவாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

அர‌பு யாத்திரிக‌ர் இபின் பத்தூத்தா தில்லியின் முக‌ம்ம‌து பின் துக்ள‌க்கின் பிர‌த‌ம் நீதிய‌ர‌ச‌ர் (ஹாதி) ஆக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர், க‌ள்ளிக்கோட்டை அர‌ச‌னின் அவையில் சேவை செய்த‌ பின்ன‌ர் இல‌ங்கையிலுள்ள‌ சிவ‌னொளிபாத‌மலை அல்லது Adam's Peak க்கு யாத்திரை சென்ற‌ போது 1344 இல் யாழ்ப்பாண‌த்தில் யாழ்ப்பாண‌ அர‌ச‌ன் மார்த்தாண்ட‌ சிங்க‌ன் பரராச‌சேக‌ர‌னின் விருந்தின‌ராக‌த் தங்கியிருந்தார்.
அது மட்டுமன்றி போத்துக்கேய, டச்சுப் பாதிரிமார்களின் குறிப்புகளிலும் யாழ்ப்பாண இராச்சியம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் முடங்கி விடவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பாக்குநீரிணையிலுள்ள பல பெரிய/சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாக விளங்கியதாகக் குறிப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண அரசர்களுக்குச் சேதுகாவலர் எனப்பட்டம் சூட்டப்பட்டமைக்குக் காரணம் இராமநாதபுரம் சமஸ்தான் சமீன்தார்களுக்கு முன்பாலவே  சேது அல்லது இராமர் அணையைக் காக்கும் கடமை இராமேஸ்வரத்தில் உறையும் இராமேச்சரநாதரால் (சிவன்) தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண அரசர்கள் நம்பியதால் தான். யாழ்ப்பாண அரசர்கள் மட்டுமன்றி பல சிங்கள அரசர்கள் கூட இராமேஸ்வரம் சிவாலயத்துக்கு திருப்பணி செய்துள்ளார்கள். இராமேஸ்வரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும், இலங்கைக்குமுள்ள தொடர்பு தொன்று தொட்டது. ராமேஸ்வரம் கோயிலின் கருவறையைக் கருங்கல்லால் கட்டி திருப்பணி செய்தவன் யாழ்ப்பாண அரசன் பரராசசசேகரன் (குணவீரசிங்கம்)  (1410- 1440 A.D).

அதனால்சில நூற்றாண்டுகளின் முன்னர், யாழ்ப்பாண அரசர்களின்  பாக்குநீரிணை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை தெளிவாகிறது. யாழ்ப்பாண அரசர்களின் ஆட்சியின் கீழிருந்த எல்லாத் தீவுகளும் போத்துக்கேயர்களிடம், டச்சுக்காரர்கள், பின்னர் ஆங்கிலேயர்களிடம்  கைமாறியதேயன்றி இராமநாதபுரம் அரசர்களிடம் அல்ல. இராமநாதபுரம் சிற்றரசர்களோ அல்லது அவர்களின் வழி வந்த சமிந்தாரிகளோ போத்துக்கேயரிடம், ஒல்லாந்தர்களிடம் அல்லது ஆங்கிலேயர்களிடம்  போரிட்டு யாழ்ப்பாண அரசின் கீழிருந்த எந்த தீவையும் கைப்பற்றியதாக  வரலாறு கிடையாது. இராமநாதபுரம் சமிந்தாரிகள் கடற்படை எதையும் வைத்திருக்கவுமில்லை.

போத்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாண அரசும் அதன் தீவுகளும் 1655 இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியிடம் கைமாறியதற்கும் அதன் பின்னர் பிரித்தானியர்களின் ஆளுமையிலிருந்து கச்சதீவு இலங்கையின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்ததமைக்கான ஆவணங்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் இன்றும் உண்டு.

காலனித்துவ ஆட்சியாளர்களின் உத்தியோக பூர்வ கடிதப் பரிமாறல்கள், கடல்நிலை வரைபடங்கள், கச்சதீவு சம்பந்தமாக ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டவாக்கங்கள் என்பன கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆதாரங்கள் நவம்பர் 30,2011 இலங்கைப் பாராளுமன்றத்தில்கச்சதீவு சம்பந்தமான விவாதத்தின் போது Parliamentary Question No.1522/11No.1522/11 க்குப் பதிலளிக்கும் போது  N இலங்கைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
.

History of Ceylon: Presented... to the King of Portugal, in 1685. 

அத்துடன் இந்தியா தனக்குச் சொந்தமான ஒரு தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததா என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவாக இலங்கை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு பொருள் எங்களுக்கு முழுமையாகச் சொந்தமானது என்பது நிரூபிக்கப்படும் வரை, உறுதிப்படுத்தும் வரை, நாங்கள் அந்தப் பொருளை யாருக்கும் விட்டுக் கொடுக்கவோ அல்லது பரிசளிக்கவோ முடியாது. அதனால் இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது, அதாவது ‘Ceded” என்ற வார்த்தைக்கே இடமில்லை, ஏனென்றால் கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானதல்ல.


க‌ச்ச‌தீவும் நெடுந்தீவு ம‌க்க‌ளும்:


நெடுந்தீவு இலங்கைக்கு சொந்தமான பாக்குநீரிணையிலுள்ள ஏழு பெரிய
தீவுகளில் நிலப்பரப்பில் பெரியது. யாழ்ப்பாண அரசின் ஆட்சியில் நெடுந்தீவு முக்கிய தீவுகளில் ஒன்றாக இருந்தது 1543 இல் யாழ்ப்பாண அரசன் முதல்முறையாக  போத்துக்கேயக் கப்பலைத் தாக்கி அதிலுள்ள பொருட்களைக் கைப்பற்றி, போத்துக்கேயருடன் பகையைத் தொடங்கியது நெடுந்தீவில் தான். அது மட்டுமன்றி யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்திலிருந்தே கச்சதீவு இலங்கையின் குறிப்பாக நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரின் (கலெக்டர்) நிவாகத்தின் கீழ் தான் இருந்ததேயல்லாமல் இராமநாதபுரம் கலெக்டரின் நிர்வாகத்தின் கீழ் அல்ல.


கச்சதீவிலுள்ள அந்தோனியார் கோயிலின் நிர்வாகமும் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயரினதும் (Jaffna Diocese), நெடுந்தீவு மறைமாவட்ட பிரிவின் கீழ் தான் 1974 க்கு முன்பே இருந்து வருகிறது.

கச்சதீவுக்கு மிகவும் அண்மையிலுள்ள இலங்கைக்குச் சொந்தமான தீவாகிய நெடுந்தீவு முற்காலத்தில் பால்தீவு, பசுத்தீவு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. தொன்று தொட்டு, இலங்கை சுதந்திரமடைந்த பின்பும், இந்தியாவும் இலங்கையும் குடிவரவு –குடியகல்வுச் சட்டங்களை கடுமையாக நடைமுறைப் படுத்தும் வரை, நெடுந்தீவு மக்கள் தமது முன்னோர்களின் வழக்கப்படி இராமேஸ்வரம் கோயிலுக்கு பூவும், பாலும் படகுமூலம் அனுப்பி விட்டபின்பே உணவுண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.

1974 இல் கச்சதீவு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட முன்னரும் கச்சதீவைச் சுற்றியுள்ள கடல்வலயத்தில் மீனவர்கள் (இந்திய மீனவர்களாக இருந்தாலும் கூட) இலங்கைக் கடல்படை தான் அவர்களை மீட்கச் சென்றதேயல்லாமல், இந்தியக் கடல்படை அல்ல.  கச்சதீவில் இந்தியாவுக்கும் பங்கு இருந்திருந்தால்,1974க்கு முன்னரே  கச்சதீவின் நிர்வாகத்தில் இந்தியாவும் தனது பங்கை அல்லது ஆளுமையை ஏன் வலியுறுத்தவில்லை?

கச்ச்சதீவை இராமநாதபுரம் சமிந்தாருக்குச் சொந்தமாக்குவதற்காகக் கூறப்படும் “ஆதாரங்கள்” அல்லது கதைகள் போலவே, நெடுந்தீவு மக்களிடமும் கச்சதீவு அவர்களுக்குச் சொந்தமானதாக காட்டும் பாரம்பரிய கதைகளும், ஆதாரங்களும் உண்டு. உதாரணமாக, இலங்கையில் வேளாளர்களின் குடியேற்றத்தைக் குறிப்பிடும், யாழ்ப்பாண அரசின் வரலாற்றைப் பேசும் யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படும் திருநெல்வேலியிலிருந்து குடியேறிய வேளாளன் இருமரபுந்தூய தனிநாயக முதலியின் வழிவந்தவர்களாகிய நெடுந்தீவு உடையார்களில் ஓருவர் தனது மகளுக்குக் கச்சதீவைச் சீதனமாகக் கொடுத்தாராம். அங்கு மீன் பிடிக்கும்  மீனவர்கள் நெடுந்தீவு உடையாருக்கு வரி செலுத்தியதாகக் கூறுகிறார்கள்.


சிறிமா - இந்திரா ஒப்பந்தம்:


க‌ச்ச‌தீவு இல‌ங்கைக்கு இந்தியாவால் விட்டுக்கொடுக்க‌ப்ப‌ட்ட அல்ல‌து இந்தியாவால் பரிச‌ளிக்க‌‌ப்பட்டதீவு அல்ல‌. 1960ம் ஆண்டின் பிற்ப‌குதியில்க‌ச்ச‌தீவை ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ சொந்த‌ம் கொண்டாடுவ‌த‌ற்கு ப‌ல‌மான‌ ஆதார‌ங்க‌ளில்லை என்ப‌தையுண‌ர்ந்த‌ இந்தியா, க‌ச்ச‌தீவை இந்தியாவும் இல‌ங்கையும் ச‌ம‌ப‌ங்காக‌த் துண்டாடுவ‌தைப் (a proposal for a “condominium” பற்றிப் பேசியது.

ஆனால் இல‌ங்கை அந்த‌ப்பேச்சையே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய‌ வெளியுற‌வு அமைச்ச‌ருக்கும், இல‌ங்கைத் தூத‌ருக்கும் 1968 இல் ந‌ட‌ந்த‌ பேச்சுவார்த்தையில் இர‌ண்டு நாடுக‌ளின் க‌ரைக‌ளிலிருந்தும் நேர்க்கோட்டில் க‌ச்ச‌தீவைப் பிரிக்கும் பேச்சை எடுத்த‌து இந்தியா. அதற்கும் இலங்கை சம்மதிக்காததால், பேச்சு வார்த்தை இலங்கையின் கடல் எல்லையைத் தீர்மானிக்கும் விதமாகத் திசை திரும்பியது.

இல‌ங்கையின் க‌ட‌ல்எல்லையை மிகவும் சுருக்கி இலங்கைக்கு மிகவும் அண்மையில் உருவாக்குவதற்கு இந்தியா முயன்றது ஆனால் இலங்கையோ எதற்கும் மசியவில்லை. ஏனென்றால் கச்சதீவு இலங்கைக்குத் தான் சொந்தம் என்பதில் இலங்கைக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது.

க‌ச்ச‌தீவு ச‌ம்ப‌ந்த‌மாக‌ தொட‌ர்ந்த‌ பேச்சுவார்த்தைக‌ளில் இந்தியாவுக்குக் கச்சதீவில் உள்ள கவனத்தை விட கச்சதீவைச் சுற்றியுள்ள மீன்வளம் நிறைந்த கடலடித்தள மேடைகளைத் தன்வசப்படுத்தும் நோக்கத்துடன் கச்சதீவை பணயமாக (bargain chip)  ஆகப் பாவிப்பது தான் நோக்கம் என்பதை இலங்கை இலகுவில் புரிந்து கொண்டது.

இந்த‌ நிலையில் இர‌ண்டுநாடுக‌ளும் ஏற்றுக் கொள்ளும் வ‌கையிலான‌ தீர்வுக்கு அமைவதாக இல‌ங்கையும்ஒப்புக்கொண்ட‌து, அதாவ‌து க‌ச்ச‌தீவின் மேற்குப்ப‌குதியில் க‌ட‌ல் எல்லையைச்சிறிய அளவு குறைப்ப‌தாக‌வும் ஆனால் இந்தியா கேட்பது போல் 1/2 மைல்அள‌வுக்கெல்லாம் குறைக்க‌ முடியாதென்ற‌து இலங்கை.

 பின்னர் அதன்தொடர்ச்சியாக இந்திய‌ப்பிர‌த‌ம‌ர் இந்திரா காந்தியுட‌ன் இல‌ங்கைப் பிர‌த‌ம‌ர் சிறிமாப‌ண்டார‌நாய‌க்கா மேற்கொண்ட‌ பேச்சுவார்த்தையில், கச்சதீவிலிருந்து 1/2மைலுக்கு இலங்கையின் க‌ட‌ல் எல்லையை வெறும் ம‌ண‌ல் திட்டுக‌ள் கொண்ட‌ஆழ‌ம் குறைந்த‌ க‌ட‌லில், குறைத்துக் கொள்வ‌தை ஏற்க‌முடியாது ஏனென்றால்அப்ப‌டியான‌ குறுகிய‌ க‌ட‌லில் இல‌ங்கைக் க‌ட‌ல்ப‌டையால் இயங்குவது முடியாதுஎன்பதைக் காரணம் காட்டி அதற்கு மறுப்புத் தெரிவித்தார்  இலங்கைப் பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா.

இல‌ங்கையின் ம‌றுப்புக்க‌ளை இந்திராகாந்தி அப்படியே ஏற்றுக்கொண்டால் அர‌சிய‌ல் ரீதியாக‌ அவ‌ருக்குப் பாதிப்புஏற்ப‌டலாமென்பதைஎன்ப‌தை உண‌ர்ந்த‌ இல‌ங்கைப் பிர‌த‌ம‌ர் க‌ச்ச‌தீவைத் துண்டாட‌வோஅல்ல‌துமுழுமையாக  இந்தியா சொந்த‌ம் கொண்டாடவோ இல‌ங்கை ஒருபோதும் ச‌ம்ம‌திக்காது, ஆனால் இலங்கையின் கடல் எல்லையைக் கச்சதீவிலிருந்து இரண்டு மைல்கள் குறைப்பதற்குத் தான் ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.

ஆனால் தனது ஆலோச‌க‌ர்க‌ளைக் க‌ல‌ந்தாலோசிக்காம‌லே, இல‌ங்கையின்
க‌ட‌ல்எல்லையை க‌ச்ச‌தீவிலிருந்து ஒரு மைலாக‌ ம‌ட்டும் குறைத்துக் கொள்ளுமாறுகூறினார் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி.

இல‌ங்கையின் க‌ட‌ல் எல்லைக்குள் உள்ள க‌ச்ச‌தீவை வெறும் இராம‌நாத‌புர‌ம்ச‌மிந்தாரின் ஆதார‌ங்க‌ளை வைத்து இல‌ங்கையிட‌மிருந்து ப‌றித்தெடுக்கமுடியாதென்ப‌தை உண‌ர்ந்த‌ இந்தியா, க‌ச்ச‌தீவை ப‌ண‌ய‌மாக‌ (Bargain chip) ஆக வைத்து இலங்கையிடமிருந்து 80 சதுர கிலோ மீற்றர் கடல் எல்லையைப் பாக்குநீரிணையில் பிடுங்கிக் கொண்டது.

.இது பின்ன‌ர் 40ச‌துர‌ கிலோ மீற்ற‌ர்க‌ட‌ல் எல்லையாக‌க் குறைக்க‌ப்ப‌ட்ட‌து. இந்தியாவின் நோக்க‌ம் க‌ச்ச‌தீவ‌ல்ல‌,ஆனால் இல‌ங்கையின் க‌டல் எல்லையில் 40கிலோ மீற்ற‌ரைக் குறைப்ப‌த‌ன்மூல‌ம் இறால், மீன் ம‌ற்றும் க‌ட‌ல்வ‌ள‌ம், பெற்றோலிய‌ம் நிறைந்த‌ க‌ட‌ல்ப‌குதியை இல‌ங்கையிட‌மிருந்து கைப்ப‌ற்றுவ‌து தான்.

த‌மிழ்நாட்டின் அர‌சிய‌லுக்குக‌ச்ச‌தீவு ஒரு த‌ன்மான‌ப்பிரச்ச‌னையாக‌ இருந்தாலும் கூட‌ இந்தியாவின் நோக்க‌ம்எல்லாம் பாக்குநீரிணைப்ப‌குதியிலுள்ள‌ கனிமங்களையும்  பெற்றோலிய‌ம்ப‌டிவுக‌ளையும் முத‌லில் எடுத்துக் கொள்வ‌து தானே தவிர இல‌ங்கையின் க‌ட‌ல் எல்லைக்குள் இருக்கும் க‌ச்ச‌தீவை இல‌ங்கையிட‌மிருந்து பெற்றுக் கொள்வ‌த‌ல்ல‌.

இன்று இல‌ங்கைத்தீவின் ஆட்சி சிங்க‌ள‌வர்க‌ளின் கைக‌ளில் இருந்தாலும் கூடவர‌லாற்றுக் கால‌ம் தொட‌க்க‌ம் யாழ்ப்பாண‌க் குடாநாட்டில் தொட‌ங்கி இல‌ங்கைக்க‌ட‌ல் எல்லை வ‌ரை அத்த‌னை தீவுக‌ளும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுடைய‌து.யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ர்க‌ள் தீவுக‌ள் அனைத்திலும் த‌ம‌து ஆளுமையைக்கொண்டிருந்த‌ன‌ர் என்ப‌து போத்துக்கேய‌ர், ஒல்லாந்த‌ர், ஆங்கிலேயர்க‌ளின்ஆவ‌ண‌ங்க‌ளிலிருந்து ம‌ட்டும‌ல்ல‌, நெடுந்தீவு போன்ற‌ க‌ச்ச‌தீவுக்கு அண்மித்த தீவுக‌ளில் வாழ்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளும், த‌மிழ் மீன‌வ‌ர்க‌ளின‌தும் க‌தைக‌ளிலும், வரலாற்றிலும் காணக்கூடியதாக உள்ளது.  அன்று தொட்டு இன்றுவரை கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பது தெளிவாகப் புலனாகிறது.

 பாக்குநீரிணையிலுள்ள தீவுக‌ளாகிய‌ நெடுந்தீவும்,அனைலைதீவும், ந‌யினாதீவும், பாலைதீவும், இர‌ணைதீவும், க‌ற்க‌ட‌ல்தீவும், எழுவைதீவும், மண்டைதீவும், புங்குடுதீவும், எப்படி ஈழத்தமிழர்களுடையதோ அவ்வாறே கச்சதீவும் ஈழத்தமிழர்களுக்கும் இலங்கைக்கும் சொந்தமானது.இராம‌நாத‌புர‌ ச‌மிந்தாரி "ஆதார‌ங்களைப்" பார்ப்போம்:


1605 இல் ராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி அர‌சு உருவாக்க‌ப்ப‌ட முன்பே க‌ச்ச‌தீவு ட‌ச்சுகிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியின் கைகளுக்கு மாறி இல‌ங்கையின் ஆளுமைக்குட்ப‌ட்ட‌தாக‌ இருந்த‌து என்ப‌த‌ற்கு ஆவ‌ண‌ங்க‌ள் உண்டு.

த‌லைம‌ன்னார் ம‌ட்டும‌ல்ல‌ பாக்குநீரிணையில் இருந்த‌ தீவுக‌ள், யாழ்ப்பாண‌த்திலிருந்து நெடுந்தீவுக்கும் அப்பால், யாழ்ப்பாண‌ அர‌சின் கீழ் 1212தொட‌க்க‌ம் 1624 வ‌ரை இருந்த‌ன‌. 1624 இல் போத்துக்கேய‌ரிட‌ம் ஈழத்தமிழர்கள்போரிட்டுத்  தோற்ற‌தால் யாழ்ப்பாண‌ இராச்சிய‌ம் முழுவ‌தும் போத்துக்கேயரிட‌ம்போன‌து. இல‌ங்கைத் த‌மிழ‌ர‌ச‌ன் ச‌ங்கிலி குமார‌னிடம், போத்துக்கேய‌ருக்குஅடங்காதே, போரைத்தொடு,  நானும் உத‌விக்கு மேலும்  படையனுப்புகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு ப‌டையனுப்பாம‌ல் ம‌துரையை ஆண்ட சொக்க‌நாத‌நாய‌க்க‌ர் ஏமாற்றிய‌தால் தான் போத்துக்கேய‌ரின் கைக‌ளில்யாழ்ப்பாண‌ அர‌சு வீழ்ந்த‌து, அத‌னால் தான் இன்றும் "வ‌யிற்றுவ‌லியைந‌ம்பினாலும் வ‌ட‌க்க‌த்தையானை ந‌ம்பாதே" என்னும் ப‌ழ‌மொழி இல‌ங்கையில்வ‌ழ‌க்கிலுள்ள‌து. அப்ப‌டி அக்கால‌த்தில் வ‌லுவிழ‌ந்திருந்த‌ ம‌துரை நாய‌க்க‌ர்க‌ள்அல்ல‌து இராம‌நாத‌புர‌ம் அர‌ச‌ர்க‌ள், யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ர்க‌ள் போத்துக்கேய‌ர்க‌ளிட‌ம்இழ‌ந்த‌ தீவுக‌ளை,  அதிலும் த‌லைமன்னார் வ‌ரை கைப்ப‌ற்றியிருப்பார்க‌ள்அல்ல‌து ஆண்டிருப்பார்க‌ள் என்ப‌து ந‌ம்பமுடியாத‌வொன்று.

கொற‌னேச‌ன் (Achillea GoldenYarrow) மலர்கள் ராமேஸ்வ‌ர‌த்தில்வீற்றிருக்கும் ம‌ல‌ர் வ‌ள‌ர் காதலி அம்மையை நிச்ச‌ய‌மாக‌  அல‌ங்க‌ரித்திருக்க‌லாம்ஆனால் அது நிச்ச‌ய‌மாக‌ க‌ச்ச‌தீவிலிருந்து வ‌ர‌வில்லை. அது நெடுந்தீவும‌க்க‌ளால‌ அனுப்ப‌ப‌ட்டிருக்க‌லாம்,  ஏனென்றால் அவ‌ர்க‌ளிட‌ம் ராமேஸ்வரம் கோயிலுக்குப் பூக்கள் அனுப்பும் வ‌ழ‌க்க‌ம் இருந்த‌து. மனிதர்களே வாழாத குடிக்க‌ச் சொட்டுத் த‌ண்ணீர் கூட‌ இல்லாத‌ க‌ச்ச‌தீவில், வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கு உகந்த, ஈரலிப்பான நிலமும், அதிகளவு பராமரிப்பும் தேவைப்ப‌டும் கொறனேச‌ன்ம‌ல‌ர்க‌ள் ம‌ல‌ர்ந்த‌ன‌ என்ப‌து ந‌ம்ப முடியா‌தது. க‌ச்ச‌தீவின் துளைக‌ள் நிறைந்த‌சுண்ண‌க்க‌ல், அல்ல‌து முருகைக்க‌ற்க‌ள் ம‌ழைநீரைச் சேமித்து வைக்கும்த‌ன்மைய‌ற்ற‌ன‌. இந்தபற்றை அல்லது செடி வளர ஈரலிப்பான நிலம் தேவை.

எந்தக்க‌ண‌க்குப்பிள்ளை நினைத்தாலும், வ‌ருமான‌ம் வ‌ருகிற‌தோ இல்லையோகண‌க்குக் காட்டுவ‌த‌ற்காக‌ எத்த‌னை க‌ண‌க்குக‌ளையும் திற‌க்க‌லாம்.

இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்தில் இத‌ற்கான‌ ப‌தில‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து, த‌மிழ்நாட்டில்ஆதார‌மாக‌க் காட்டப்ப‌டும் ச‌மிந்தாரி ஆதார‌ங்க‌ளை அப்ப‌டியே ஏற்றுக் கொள்ள‌முடியாது ஏனென்றால் ச‌மிந்தார்க‌ள் தமதிட்டத்துக்கு கூடுத‌ல் நில‌ங்க‌ளுக்குஉரிமை கொண்டாடுத‌ல் வ‌ழ‌க்க‌மான‌ ஒன்று.

யாழ்ப்பாண‌ அர‌சைக் கைப்ப‌ற்றிய‌வுட‌னேயே அதைச் சுற்றிய‌ தீவுக‌ளும்போத்துக்கேய‌ரின் கைக‌ளுக்குப் போய், அதிலிருந்து ட‌ச்சுக்கார‌ர்க‌ளிட‌ம் மாறிக‌டைசியாக‌ கிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியின் கைக‌ளில் போய்விட்டன‌, அப்ப‌டியிருக்க‌எத‌ற்காக‌ ஒன்றுக்குமே உத‌வாத‌ க‌ச்ச‌தீவை சேதுப‌தியிட‌மிருந்து கிழ‌க்கிந்திய‌க்க‌ம்ப‌னி குத்த‌கைக்கு எடுக்க‌ வேண்டும், நம்பமுடியாத புதிராக‌ இருக்கிற‌தே?

இந்த‌"ஆதார‌ம்" பார்க்க‌ வேண்டிய‌தொன்று. மிகச்சிறிய, ஒன்றுக்கும் உத‌வாத‌, தண்ணீரற்ற காடாகிய கச்ச்சதீவையும் வானம் பார்த்த பூமியாகிய இராமநாதபுரம் ச‌மீனையும்,proclamationஇல் பிரித்தானிய மாகாராணி குறிப்பிட்டிருப்பாரா என்ப‌து  ஆராய்ந்து பார்க்கவேண்டிய‌ விடயம். ம‌காராணியால்இராமநாதபுரம் சமீனுக்கு உரிமையானது  எனக் குறிப்பிட்ட பின்னரும் எதற்காக கச்சதீவின் நிர்வாகம் பிரிட்டிஸ் காலத்திலும் இலங்கையின் நிர்வாக அலகின்  கீழ் இருந்த‌து. அது மகாராணியின் proclamation ஐ அவமதிக்கும் செயல், அக்கால பிரிட்டிஸ் நிர்வாகம் அப்படியானதவறைச் செய்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது.

பீரிஸ் என்ற‌ உத‌வி நில‌ அள‌வையாள‌ர் க‌ச்ச‌தீவை இல‌ங்கையின்ஆளுமைக்க‌ப்பால் ப‌ட்ட‌தாக‌க் காட்டிய பின்னரும் , 1966 இல் கூட கச்சதீவு இலங்கையின் நிர்வாகஅமைப்பில் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரின் கீழ் இருந்தது என்?

இங்கே தான் உதைக்கிற‌து, க‌ச்ச‌தீவு இராம‌நாத‌புர‌ம் ச‌மீனுக்குசொந்த‌மான‌தென்றால் எத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் 1767 இல் ஒப்ப‌ந்த‌த்தில்கைச்சாத்திட்டார்க‌ள் நான் ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌து போல், யாழ்ப்பாண‌ அர‌சின்வீழ்ச்சியின் பின்ன‌ர் யாழ்ப்பாண‌த்தைச் சுற்றியுள்ள‌ தீவுக‌ள் அனைத்தும்யாழ்ப்பாண‌க்குடா நாட்டிலிருந்து க‌ச்ச‌தீவு வ‌ரை போத்துக்கேயரின் கைக‌ளுக்குமாறி டச்சு கிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியிட‌ம் போய் விட்டன‌.

டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏறபடுத்திய பின்பே இராமநாதபுரத்திலுள்ளவர்கள் கச்சதீவுக்குச் செல்ல அனுமதி பெறப்பட்டதென்றால் உண்மையில் கச்சதீவு இராமநாதபுறம் சமீனுக்குச் சொந்தமானதாக இருக்க முடியாது.  அது டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமானது  என்பது தெளிவாகிறது.  கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானதென நிரூபிப்பதற்கான வரலாற்று ஆவணங்கள் அதாவது 1655 இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி போத்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாண அரசைப் பெற்றுக் கொண்ட ஆவணங்கள் உட்பட இலங்கையின் ஆவணக் காப்பகத்தில் உண்டு. அப்படியிருக்க இராமநாதபுரம் சமீன் இலங்கைக்குத்த் தெரியாமல், அடுத்தவன் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது போல, தங்களுக்குள் குத்தகைக்கு கொடுத்ததும்,  வாடகை வாங்கியதும், தமது கணக்குப் புத்தகங்களில் குறித்துக் கொண்டதும் கச்சதீவில் அவர்களின் உரிமையை நிரூபிக்காது.
.

Sunday, April 3, 2016

ராஜராஜ சோழன் தமிழனா, தெலுங்கனா? - தமிழர் வரலாற்றைத் திரிக்கும் வடுகர்கள்.


ராஜ ராஜ சோழன் மட்டுமல்ல போதிதர்மனும்   தெலுங்கன் தான், என்று தமிழர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு,  தமிழர்களின் வரலாற்றையும், யாரைத் தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்களோ அவர்களை எல்லாம் கொச்சைப் படுத்துவோம் அல்லது வரலாற்றைத் திரித்து, அவர்களையும் தெலுங்கராக்கவோம் என்று இணையத்தளங்களில் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன தமிழ்நாட்டில் நாயக்கர்கள் விட்டுச் சென்ற  வடுக எச்சங்கள் பல. அவர்களுக்கு இணையாக பெரியாரியத்தாலும், திராவிடத்தாலும் மூளைச் சலவை செய்யப்பட்ட சில தமிழர்களும் பகுத்தறிவு என்ற பெயரிலும், அல்லது தமக்கும், சில வடுகர்களுக்குமிடையிலான தனிப்பட்ட நட்புக்காகவும், தமிழர்களின் வரலாற்றுத் திரிப்புக்குத் துணை போகின்றனர்.

முருகன் தமிழர் கடவுள் என்பதையும், அவன் தமிழர்களின் முன்னோர்களில் ஒருவன் என்ற தமிழர்களின் நம்பிக்கையையும்  கேலி செய்யும் யுவகிருஷ்ணாக்களும் , ராஜராஜ சோழனைப் பற்றி எதுவுமே தெரியாமல் தப்புத்தப்பாக உளறி வசைபாடும் மதிmoronன்களும் ஏன்,  அவ்வளவு வெறியோடு  தமிழ்த்தேசியத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தமிழர்களுக்குத் தெரியாதென்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் வேடிக்கை. வே. மதிமாறனின் உளறல்களைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டும்!


வடுகர்கள் தமிழர்களின் வரலாற்று எதிரிகள். 


சங்கப் பாடல்களிலேயே,  தமிழர்களின் வடுகர் எதிர்ப்பு தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை எமது முன்னோர்கள் எந்தளவுக்கு வடுகர்களை எதிர்த்தனர் என்பதைக் காட்டுகின்றன. "தென் பரதவர் மிடல் சாய, வட வடுகர் வாள் ஓட்டிய... ," என்கிறது புறநானூறு.  தமிழ் மண்ணின் மேல் முதன்முதலாகப்படையெடுக்கத் துணிந்த வட இந்திய (மகதநாட்டுமோரிய) அரசன் பிந்துசாரன் (கி.மு.301-273),தமிழர்களை எதிர்க்க வடுகர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு வந்தான் என்கிறார் தமிழர் வரலாறு என்ற கட்டுரையில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர். அதாவது கி.மு  3ஆம் நூற்றாண்டிலேயே வடுகர்கள் தமிழர்களுக்கு எதிரிகளாக இருந்தனர்.

"வடுகரையும் கோசரையும் புறங்காணின்மோரியர் தாமே புறங்காட்டுவர் என்பதை அறிந்தசோழன் இளஞ்சேட் சென்னி, தன் நாட்டைக்காக்கும் கடமையை யுணர்ந்து, முன்பு "வளங்கெழுகோசர் விளங்குபடை நூறி" (அகம்.205), பின்புகொண்கானஞ் சென்று பாழியரணை யழித்து ஒரேயடியாக மோரியரைத் தமிழகத்தினின்று துரத்திச்"செருப்பாழி யெறிந்த" என்னும் விருஅடைமொழியும் பெற்றான். இதனை,

"எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி
குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டி"
(அகம்.375)

என்பதனால் அறியலாம். அவன்"வடவடுகர் வாளோட்டிய" (புறம்.378) செயல்சற்றுப் பிந்தினதா யிருக்கலாம். வடவடுகர்கலிங்க நாட்டுத் தெலுங்கர்". (மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்).  சங்கம் பாடல்கள் குல்லைக் கண்ணி வடுகர்" (குறுந். 11 : 5), "கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்", "வானிணப் புகவின் வடுகர்", "முரண்மிகு வடுகர்", "தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்", "வம்ப வடுகர் பைந்தலை சவட்டி" என்று தான் தெலுங்கர்களைக் குறிக்கின்றன.

ராஜராஜ சோழனைப் பெற்றெடுத்தவள் பச்சைத் தமிழச்சியே!


தமிழர் என்ற போர்வையில் ராஜராஜ சோழன் மீது வசை பாடுகின்ற, அந்த தமிழ் மாமன்னனை வில்லனாக்குவதையே குறியாகக் கொண்ட  சிலர் கூறுவதென்னவென்றால், ராஜராஜ சோழன் தான் முதலில் தெலுங்கர்களுக்குப் பெண்கொடுத்தானாம், ஆதியில் சேர சோழ பாண்டிய மன்னர்கள்  வேற்றினத்தாருடன்  திருமண உறவு கொள்ளவில்லையாம் . ஆனால் அது உண்மையல்ல. வங்காளத்திலிருந்து கள்ளத்தோணியில் வந்த விஜயனுக்கும் அவனது தோழர்களுக்கும், ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்பே, பெண் கொடுத்தவன்  மதுரைப் பாண்டியன் என்பதை இலங்கையின் மகாவம்சம் விரிவாகக் கூறுகிறது. அதற்காக சிங்களவர்கள் எல்லாம் தமிழர்களே என்று எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அடி விழும்.
click to enlarge
அக்கால அரச குடும்பங்களில் எதிரிகளின் இனத்திலும் திருமண உறவுகளை வைத்துக் கொள்வது தமது நாட்டையும் ஆட்சியையும் விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும் தானே தவிர, அதனால் அவர்களின் இனமோ, மொழியோ மாறுவதில்லை, அது உலகில் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது மட்டுமன்றி, பல நாட்டு அரச குடும்பங்களில் அது வழக்கமாகவே இருந்து வந்தது. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவின் சார் நிக்கொலசின் தாயார் டென்மார்க் இளவரசி, அதேபோல் ஜேர்மன்  சக்கரவர்த்தி வில்லியத்தின் தாயார் ஆங்கில இளவரசி, பிரித்தானியாவின் இரண்டாம் ஜோர்ஜ் அரசனின் தாயார் டேனிஸ் இளவரசி. ஆனால்  எந்த வரலாற்றாசிரியரும்   ரஷ்யாவின் சார் நிக்கொலசையும்  இரண்டாம் ஜோர்ஜையும் டேனிஸ்காரர்கள்  எனவும், ஜேர்மனியின் Kaiser வில்லியத்தை ஆங்கிலேயர் என்றும் கூறுவதில்லை. ஆனால் ராஜராஜ சோழனின் பாட்டி,   வைதும்பர்  குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், என்பதால்  தெலுங்கன் என்று திரிப்பது, வரலாற்று ஆராய்ச்சிக்கே அபத்தம், அதிலும் ஒரு பெரியாரியப் பேயன் என்னவென்றால்,  ஒருபடி மேலே போய். ராஜராஜ சோழனின் தாய்   வானவன் மாதேவியையும் தெலுங்கச்சி என்று  தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளான். அது  வெறும் முட்டாள்தனம் மட்டுமல்ல கோணங்கித்தனமுமாகும்.

அது போதாதென்று மாமன்னன் ராஜராஜ சோழனைப் பெற்றெடுத்தவள் 'பச்சைத் தமிழச்சியா' என்று கூட ஒரு 'பகுத்தறிவு' தனது வலைப்பதிவில் கேட்டிருக்கிறது, அது கூட அதற்குத் தெரியவில்லை. அருண்மொழி வர்மனைப் பெற்றெடுத்த பச்சைத் தமிழச்சி வானவன் மாதேவி, மலையமான் அரசகுடும்பத்தில் உதித்த தமிழ் வேளிர்குலப் பெண்ணே தவிர வடுகர் (தெலுங்குப்) குலப்பெண் அல்ல. வேளிர்கள் தான் இந்நாள் வெள்ளாளர்களின் முன்னோர்கள் எனவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அதன் காரணமாகத் தான், ராஜராஜ சோழன் தனது தாயார் வானவன் மாதேவிக்கு நினைவுச் சின்னத்தை தனது பரந்த சோழப் பேரரசில் எங்கும் நிறுவாமல் வேளாளர்கள் நிறைந்து வாழ்ந்த இலங்கையில், சோழர்கள் கட்டிய தலைநகராகிய நிகரிலி சோழ வளநாட்டுப் புலனரி (பொலநறுவை)யில் கட்டினான் என்பது இலங்கையில் தொன்று தொட்டு நிலவும் கதை.

எடுப்பார் கைப்பிள்ளையாக இலகுவாக மாறிவிடும்  தமிழர்கள் ராஜராஜ சோழனைத்தாக்குவது போல், எந்த வடுகனும், தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து வடுகர்களை தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவுடைமைக்காரர்களாக்கி, தமிழர்களை அவர்களின் சொந்தமண்ணிலேயே தினக்கூலிகளாக்கிய   திருமலைநாயக்கனைத் தாக்குவதில்லை, அது ஏன் என்பதைத்  தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் ராஜ ராஜ சோழன் மட்டும் வேற்றினத்துடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. அதற்கு முன்பாகவே  மிகவும் நெருங்கிய திருமண,  குடும்ப உறவுகளை பாண்டியர்கள்,  சிங்கள அரச குடும்பத்துடன் வைத்திருந்தனர். இலங்கையின் புகழ்பெற்ற மாமன்னனாகிய முதலாம் பராக்கிரமபாகுவின் தந்தை ஒரு தமிழன்.  மானாபரணன் என்ற பாண்டிய இளவரசனுக்கும், சிங்கள அரசன் விஜயபாகுவின் தங்கைக்கும் பிறந்தவன் தான் சிங்களவர்களின் வரலாற்றிலேயே சிங்கள மாமன்னன் (சக்கரவர்த்தி) என்றழைக்கப்படும்  முதலாம் பராக்கிரமபாகு. ஒரு தமிழனுக்குப் பிறந்த பராக்கிரமபாகுவையே எந்த வரலாற்றாசிரியரும் தமிழன் என்று குறிப்பிடுவதில்லை, அவன் சிங்களவன் மட்டும் தான். இவ்வளவுக்கும் பராக்கிரமபாகுவின் பட்டத்தரசியும் தமிழ்ப்பெண் தான், அவனது அரசவையில் தமிழர்கள் அமைச்சராக இருந்தது மட்டுமன்றி, தமிழுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. என்பதை மகாவம்சம் தெளிவாகக் குறிப்பிட்டாலும் கூட, மாமன்னன் பராக்கிரமபாகுவை   எவனாவது தமிழன் என்று கூறினால், சிங்களவர்கள், அப்படிக் கூறுகிறவனை உயிரோடு எரித்தே விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும், ராஜ ராஜ சோழனின் பாட்டி வைதும்ப குலத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம் என்பதை  வைத்து ராஜராஜ சோழனைத் தெலுங்கனாக்கும் அபத்தம் நடைபெறுகிறது. அதை எதிர்ப்பார் யாருமில்லை. எந்த தமிழ்நாட்டுத் தமிழனும் அப்படிக் கூறுகிறவர்களுக்கு ஓங்கி  ஒரு குட்டுக் கூட வைப்பதில்லை.
வானவன் மாதேவி நினைவுக் கோயில்  - 
வானவன் மாதேவி ஈச்சரம் -இலங்கை 
இன்று ஆந்திரா எனக் குறிப்பிடப்படும் நிலங்கள் பலவும் தமிழர்களுடையவை, தமிழர் வாழ்ந்த, ஆண்ட நிலங்கள். ஆனால் இக்காலத்தில் தெலுங்கர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டு விட்ட அந்த நிலங்களில் இன்று அவற்றில் வடுகர்கள் வாழ்கின்ற காரணத்தால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னரும்  அங்கு வாழ்ந்த எல்லோருமே வடுகர்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் தான் இப்படியான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. "ஆந்திராவில் ஓடும் கோதைவாரி(கோதாவரி), கண்ணாறு(கருப்பாறு)(கிருஷ்ணா), வெண்ணாறு(வெள்ளையாறு),
ஊர்களான திருமலை (திருப்பதி),வேங்கடம் (வெண் கல்மலை), நெல்லூர், மடைப்பாடி(மடப்பா), கடைப்பாடி (கடப்பா), எழூறு (ஏலூரு),காக்கை நாடு (காக்கிநாடா),குன்றூர் (குர்னூல்),ஆங்கொள்ளை (ஒங்கோல்), குளப்பாக்கம் (கொலன்பக்கி) எல்லாமே தமிழர்கள் வாழ்ந்த ஊர்களின் தூய தமிழ்ப்பெயர்கள்."

எந்த விவாதத்திலும் நடுநிலையானவர்களின் கருத்துக்கள் மட்டும் தான் பேசப்படும் கருத்துக்கு வலுச் சேர்க்கும். ராஜ ராஜ சோழனை எதிர்க்கவும், வசை பாடவும், தமிழ்த்தேசியத்தைக் கொச்சைப்படுத்தவும் பெரியாரிய, திராவிடக் கருத்துக்களில் ஊறியவர்களின் கட்டுரைகளை சிலர் ஆதாரம் காட்டுவது போன்ற கோமாளித்தனம் வேறேதுமிருக்க முடியாது.  அது எப்படியானதென்றால் கலைஞர் கருணாநிதியை எதிர்க்க, அதிமுக காரர்களின்  கட்டுரைகளை ஆதாரம் காட்டுவது போன்று அபத்தம் நிறைந்தது. .