Wednesday, March 30, 2016

தமிழ்நாட்டில் தொடரும் விஜயநகர் (நாயக்கர்) ஆட்சி??தமிழ்நாட்டுத் தேர்தலைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும்  விஜயநகர (நாயக்கர்) ஆட்சி தொடர்கிறது போன்றதொரு உணர்வே உலகத்தமிழர்களுக்கு ஏற்படுகிறது.

நடைபெறும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றியடைந்தால் துணை முதல்வர் பதவி கூட ஒரு தமிழனுக்குக் கிடையாது என்று அறிவித்திருக்கிறார். வருங்கால முதல்வரும், எதிர்காலத் "தமிழினத்தலைவருமாகிய" மாண்புமிகு விஜயகாந் அவர்களின் மைத்துனர் சுதீஷ்.  இதில் கொடுமை என்னவென்றால், யார் தமிழ்நாட்டையும், தமிழர்களையும்  ஆள்வது என்பதைத்  தீர்மானிப்பது எதிர்காலத் "தமிழினத்தலைவர்" கூட இல்லை, அவரது மைத்துனர் தான் தீர்மானிக்கிறார்.  

எட்டுக்கோடித் தமிழர்களில் ஒருவனுக்குக் கூட முதலமைச்சராகும் தகுதி கிடையாதா??? "விதியே , விதியே தமிழச்சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?"

பிந்திய செய்திகளின் படி கோவில்பட்டி: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை முதலமைச்சராக செயல்படுவார் என்று தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் கூறியுள்ளார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற பிரசார கூட்டம் கோவில்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முதல்வர் -விஜயகாந்த்
துணை.முதல்வர் ; வைகோ
நிதி; ஜி.ராமகிருஷ்ணன்
கல்வி; திருமாவளவன்
உள்ளாட்சி; முத்துராசன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நன்றி: Thatstamil.com

“when Tamils in Andhra are quiet, why do you, a Telugu speaker, have leadership ambition? Eat and stay quiet”.
நன்றி: http://swarajyamag.com

Monday, March 28, 2016

மலேசியத் தமிழர் குரல் - "தமிழர் மாநிலத்தை ஆள சீமானுக்கு எல்லாத்தகுதிகளும் உண்டு"


கருணாநிதியின் திமு க, போல ஜெயலலிதாவின் அ தி முக போல, அல்லாமல் தமிழர் உணர்வோடு தமிழர் மாநிலத்தை ஆள சீமானைத்தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை என துணிந்து கூறலாம். 8 கோடி தமிழர்களையும் மீதமுள்ள 2 கோடி இதர மாநல வந்தேறிகளை அரசியல் மற்றும் மனித உணர்வோடு பழகும் பண்பும் நாகரிகமும் உயர்ந்த பேராண்மை மிகுத்த போராளியாக சீமானை மலேசியத் தமிழர்கள் பார்க்கிறோம்.

தமிழர் மாநில தமிழர்களும் ஒத்துக்கொள்ள வேண்டும். மறுப்பவன் தமிழனாக இருக்க முடியாது. தமிழ் இன வெற்றிக்காக …அவரிடம் பல சண்டைகள் பல போராட்டங்கள்… தமிழர் தேசிய சிந்தனை மிகு கேள்விகள்.. உலக நடப்பில் தமிழ் இனம். தமிழக அரசியல், அரசு நிதர்சன உண்மைகளை பேசும் துணிச்சலும் வெறியும் அவரிடம் பார்க்க முடிந்தது. 2012 டில் மலேசியாவில் நடந்த தமிழர் பணிப்படை அரங்கத்தில் அவரின் தமிழர் இன உரிமை ,தமிழ் ஈழம் , தமிழ் மொழி இந்தியாவின் தமிழர் மாநலத்தின் தமிழர் ஏமாளித்தனம்.
ஏக்கம் போன்ற அரசியல் தந்திரங்களை புரிந்த ஒரு மாவீரனாக திகழும் பாங்கு மற்றும் நாம் தமிழர் இயக்கத்தை மிகக்ககட்டு கோப்பாக வழி நடத்தும் திறமைகள் அவர் ஒரு சிறந்த அரசியல் அரசு நிர்வாக திறமைகளை கொண்டுள்ளார் என்பது நமது கண்கூடு.

தமிழக அரசியலில் இதற்கு முன் இருந்த தமிழ்த் தலைவர்கள் எல்லாமே தி மு க ,,அ தி முக மாறி மாறி அரசியலில் வாட்டம் கண்டு தமிழர் இனத்துக்கு பலூன் ஊதியவர்கள்தான். கடந்த தேர்தலில் ஏன் போட்டியிட மாட்டீர்கள் என்ற கேள்விக்கு ” நாம இன்னும் தயாரகவில்லை” என்ற பதில் எங்களுக்கு சினத்தை தந்தது.. மேலும் துருவி துருவி கேட்டபோது ” நாம என்ன நாடாளுமன்றத்திலும் சட்ட சபையிலும் கிழிக்கவா போறோம்” என்றார். அது அன்றைய சூழல் அந்த ஜெயலலிதாவே இருக்கட்டும் என்றவர் இன்று நிமிர்ந்து இருக்கிறார் என்றால் அவரில் குருதி கொந்தளிப்பை உணர்த்து பாராட்டுகிறோம்.

சீமான் என்ற சாதாரண மனுஷன் அரசியல் மன்னராக வேண்டும். தன்னை திராவிடன் வட்டத்தில் இருந்து வெளிப்பட்டு “தமிழேண்டா” என்கிற சீமான் திமிர் தமிழர்கள் மத்தியில் பிடிப்பை தந்துள்ளது. வந்தேறிகள் அராஜகமான ஜெயலலிதாவையும் , தெலுங்கு மாயாவிகளான கருணாநிதியையும், விஜயகாந்தையும் வைக்கோவின் அரசியல் சேட்டைகளுக்கு கருப்பு சாட்டையடி தரும் சீமானைப்போன்ற போராளி அரசியல் தமிழனை இனி நாம் தமிழர் மாநிலத்தில் பெற முடியாது. இதுதான் நேரம் பாவித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே ! இல்லையேல் உங்கள் தமிழன் உணர்வை கொல்லுங்கள்.

உலகத் தமிழ்த்தலைவர் தமிழின தலைவர் பிரபாகரன் பாசறையில் வளர்ந்த சீமானை இந்த தமிழ் இனம் தமிழர் மாநிலத்தின் தலைமை பீடத்தில் தூக்கி நிறுத்த வேண்டும். இதுதான் காலம். இதுதான் கடமை இதுதான் உரிமை என்று தமிழர்கள் தன் மண்ணின் உரிமத்துக்கு வீர வாக்களிப்பு தந்து நாம் தமிழர், நமது தமிழர் என்ற அரசியல் ஆக்கிரமிப்பை அடைய ஒவ்வொரு தமிழ் தாய்த் தமிழனும் தன் தாய் மீது உறுதி மொழி எடுக்க வேண்டும்.

உலகத்தில் தமிழர் தேசியம் மலர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் விரும்புகின்றான் ஆனால் அது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் குழப்பம். இனி குழம்பிக்கிடக்க தேவை இல்லை. நீங்கள் எந்த தமிழர் இயக்கதிலாவது இருந்து விட்டு போங்கள்… ஆனால் தமிழர் தேசியம் என்ற ஒரு உடையில் ஒரு கொடையில் இணைவோம். நாம் தமிழர், தமிழர் களம் , தமிழர் குரல்,பாட்டாளிகள் கட்சி, தமிழர் வணிகர்கள் , சிறுத்தைகள் ,புலிகள் யாராக இருந்தால் என்ன அவன் தமிழனா தமிழர் தேசியத்தில் ஒரு தேசிய இனமாக வாருங்கள். ஏன் இன்னும் அழுத்தம் வேண்டும் என்றால் “தமிழர் தேசிய சாதியம்”என்ற புதிய பரிணாம வளர்ச்சிக்கு உங்கள் மூளை அபிவிருத்தியை தமிழன் மரபணுவோடு சேருங்கள்.

தமிழர்களை பரித்தாளுகின்ற தி மு க ,,,அ தி மு க …தே மு க …இவர்களின் அதிகாரிகளை பாருங்கள் ..உங்களுக்கு இன்னுமா புத்தி வரவில்லை. சீமான் என்ற ஒரு தமிழன் இவர்களோடு நின்று போராட துணிந்து விட்டார்…. உங்களுக்கு இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா அந்த எழாம் அறிவு எட்டலையா?

மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லாப்புகழும் தரும் என்று 2500 ஆண்டுகளுக்கு வள்ளுவன் எழுதியதை இந்த தேர்தல் பயன் படுத்தி  நமது சீமானை வெற்றி பெற்ற தமிழனாக உயர்த்தி காட்டுங்கள் என்று மலேசியத் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு அன்பு வேண்டுகோளை முன் வைக்கிறோம். தமிழ் ஈழமும் தமிழர் மண்ணும் மலையாக மக்களின் சத்தியும் உலகத் தமிழர் மீட்சியும் உங்கள் இதயங்களை இறுகிபிடிக்க புற முதுகை காட்டாமல் நெஞ்சுயர்த்தி வீர தாயின் மார்பில் பால் புசித்த புலியாக இனமான சுதந்திரத்தை தட்டி எடுக்க சங்கே முழங்கு பாடுவோம்.

மாற்றானிடம் மண்ணையும் மணலையும் சொத்தையும் சுகத்தையும் இனி பறி கொடுக்க தேவை இல்லை …இனத்தை விற்று வீதிக்கு போகும் நிலை இனி வேண்டாம். சாதியும் சமயமும் உன்னை விடாது விரட்டும் அது பல்லாண்டு பல்லவி நீ வாழும் காலம் உன் குல சாம்ராஜ்யம் அதை இனமான உணர்வோடு மீட்டு எடு . சீமானுக்காக தமிழர்களாக எழுவோம். நாம் தமிழர் அரசு அமைப்போம் … வணக்கம் நன்றி

ம. அ . பொன் ரங்கன்
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
தமிழர் குரல் /தமிழர் தேசியம் மலேசியா

நன்றி: http://www.semparuthi.com/

Saturday, March 26, 2016

கலைஞர் கருணாநிதி Vs. செந்தமிழன் சீமான் - யார் உண்மையான பகுத்தறிவுவாதி??


கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிடும்போது தான் உண்மையிலேயே பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் செந்தமிழன் சீமான்.

தமிழர்கள்  தமது உள்நாட்டு, வெளிநாட்டு எதிரிகளை எல்லாம் வெற்றி கொண்டு, கங்கை முதல் கடாரம் வரை வென்று தமிழர்களின் புலிக்கொடியை நாட்டிய வீர வரலாற்றின் வெற்றிச் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையாரை வணங்கி, வீரத்தமிழன்  ராஜராஜசோழனின் காலடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியதன் மூலம் ராஜ ராஜ சோழனையும், தமிழர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றிக் கட்டிக் காக்க வேண்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயிலையும் பற்றி தமிழர்களின் எதிரிகளால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட மூடநம்பிக்கையை முறியடித்திருக்கிறார் செந்தமிழன் சீமான்.

மாமன்னன் ராஜராஜ சோழன் சிங்களவர்களை வென்று சிங்களாந்தகன் என்று பெயர் சூட்டிக் கொண்டது போலவே,  கேரளாவை வென்றதன் அடையாளமாக கேரளாந்தகன் என்று பட்டமும் உண்டு. அதன் அடையாளமாக தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் முதல் நுழைவாயிலுக்கு கேரளாந்தகன் திருவாயில் என்று பெயர் சூட்டப்பட்டது.  இராஜராஜனின் பல்வேறு சிறப்புப் பெயர்களுள் கேரளஅந்தகன் என்பதும் ஒன்று. அந்தகன் என்றால் எமன் என்றும் பொருள். கேரளத்தை  வென்றதால் கேரளாந்தகன் என்று அழைக்கப்பட்டான்.

வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து தமிழர்களின் எதிரிகளையெல்லாம் அழித்த ராஜ ராஜ சோழனும், ராஜேந்திர சோழனும்,  தமது வெற்றியை, கேரளாந்தகன் திருவாயிலினூடாக  நுழைந்து, தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தான் கொண்டாடியிருப்பார்கள். அவ்வாறே தமிழர்களுக்கும் -திராவிடர்களுக்குமிடையிலான தனது  முதல் போரை செந்தமிழன்  சீமான் அவர்கள் தஞ்சைத் தமிழ்மண்ணில், மாமன்னன் ராசராசன் காலடியில் தொடங்கியது தமிழர்கள் அனைவருக்குமே தமிழுணர்வையும், மானத்தையும்  ஊட்டும் செயலாகும்.
கேரளாந்தகன் திருவாயில் 
தமிழர்களின் பெருமைமிகு வரலாற்றின் மீது பொறாமை கொண்ட சிலரால், தஞ்சைப் பெரிய கோயிலில் சாபமிருப்பதாகவும், கேரளாந்தகன் திருவாயில் வழியாக கோயிலுக்குப் போகும் அரசியல்வாதிகளுக்கும், பிரமுகர்களுக்கும் கேடு வந்து விடுமென்ற மூடநம்பிக்கை திட்டமிட்டுப் பரப்பப்பட்டு விட்டது. அரசியல்வாதிகளும், வெளிநாட்டுத் தலைவர்களும் தஞ்சைப் பெரிய கோயிலையும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டால் பெரிய கோயிலும், தமிழர்களின் வரலாறும் இந்தியா முழுவதும் மட்டுமன்றி, உலகம் முழுவதும் பரவி விடுமென்று கருதிய சிலரின் சதியாகக் கூட அது  இருக்கலாம். என்னவோ முட்டாள் தமிழர்கள்  கண், காது மூக்கு எல்லாம் வைத்து அந்த மூடநம்பிக்கைக்கு உயிரூட்டி விட்டனர். மக்களின் ஆதரவேயற்ற ஒரு அரசியல்வாதி, தனது ஆட்சியின் கடைசிக்காலத்தில் பெரியகோயிலுக்குப் போய் வந்ததும் ஆட்சியை இழந்தால், அல்லது தனது நாட்டில் சிறுபான்மை  மக்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்ட தலைவர், பெரிய கோயிலுக்குப் போய்த் திரும்பியதும் அதிகாரத்தை இழந்தால், 'காகமிருக்கப் பனம்பழம் விழுந்த கதை போல' அதையும், இதையும் இணைத்து பல மூடநம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.

ஆனால் பெரிய கோயிலுக்கு "நான்" என்ற அகந்தையுடன் வருகின்ற ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும்  தான் அதிகாரத்தை இழப்பார் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று கர்ணபரம்பரை நம்பிக்கை இருப்பதாக கூறப்படுகிறது. அதன் கருத்து என்னவென்றால், சைவ சித்தாந்தத்தின் அடிப்படையே 'நான்' என்ற ஆணவத்தை அழிப்பது, அதாவது சிவனுக்கு முன்னால் ஆணவத்தை இழப்பது தான். அது  தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு மட்டுமன்றி, உலகிலுள்ள  சைவ ஆலயங்கள் அனைத்துக்கும் பொருந்தும்.  ஆகவே 'நான்' என்ற அகந்தையுடன் தஞ்சைப் பெருவுடையாரைத் தரிசிக்க வருகின்ற அரசியல்வாதிகளினதும்,  ஆட்சியாளர்களினதும்  மகுடம் தான் பறிபோகுமெனலாமே தவிர, தமிழர்களைத் தட்டியெழுப்பி, தமிழர்களையும், தமிழ்மண்ணையும், தமிழ்மானத்தையும் காக்கும் போருக்கு, முதலில் ராஜராஜ சோழனின் ஆசியைப் பெறச் சென்ற செந்தமிழன் சீமான் வெற்றியடைய  ராசராசசோழன் மட்டுமன்றி எமது  தமிழ் முன்னோர்கள் அனைவரதும் ஆசியும் வாழ்த்துக்களும் அவருக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பகுத்தறிவுவாதியும் , பெரியாரின் பிரதம சீடர்களில் ஒருவருமாகிய கலைஞர் கருணாநிதி, அந்த மூடநம்பிக்கைக்குப் பயந்து போய்,  தஞ்சைப் பெரிய கோயிலில் 2010 இல் நடைபெற்ற ஆயிரமாண்டு விழாவுக்கும், அதற்கு முன்புமொருமுறையும்,  கேரளாந்தகன் திருவாயில் வழியாக நுழையாமல், பக்கத்திலுள்ள சிவகங்கைப் பூங்கா வாயில் வழியாக நுழைந்தததாக செய்திகள் வந்தது தான் நினைவுக்கு வருகிறது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும்  பெரியாரின் தொண்டன் என்றும் கூறிக் கொள்ளும் கலைஞர் கருணாநிதியை விட, பெரியாரைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் செந்தமிழன் சீமான் தான் ஒரு பகுத்தறிவுவாதி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
மஞ்சள் துண்டுடன் கலைஞர் 

தமிழ்நாட்டில் தமிழரல்லாத திராவிடர்களின் அரசியல், பொருளாதார, நிலவுடைமை ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டவும், அவர்களின் அரசியல் தலைமையைத் தொடரவும், தமது நலன்களை  உறுதிப்படுத்தவும், தமிழர்கள் அனைவரும் தமிழர் என்ற அடையாளத்துடன் ஒன்றுபடுவதைத் தடுக்கவும், தமிழரல்லாத திராவிடத் தலைமைகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட   திராவிடக் கொள்கையையும், தமிழர்களின் பாரம்பரிய மதங்களாகிய சிவனியத்தையும் மாலியத்தையும் மட்டும் எதிர்க்கும் பெரியாரிய பம்மாத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும்   செந்தமிழன் சீமானும், நாம்தமிழர் கட்சியினரும் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்ப்பதில், பெரியாரின் பிரதம சீடர்களில் ஒருவராகிய முத்துவேலர் கருணாநிதியை விடவும் உண்மையான பகுத்தறிவுவாதிகள் என்பதை தஞ்சாவூரில் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மாமன்னன் ராஜராஜசோழனுக்கெதிராக திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்களும், அவனது புகழைச் சீரழிக்கும் வகையிலான கட்டுரைகளும், கட்டுக்கதைகளும் திட்டமிட்டுக் (குறிப்பாக திராவிட, பெரியாரிஸ்டுகளால்) பல்லாண்டு காலமாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அதை நானும் பலமுறை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன். அதன் நோக்கமும் பின்னணியும் என்னவென்றால், யாரைப் பற்றித் தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்களோ, எந்த மாமன்னனை உலகிலுள்ள வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் புகழ்கிறார்களோ, எந்த மாமன்னன் முழு இந்தியாவிலும் முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே தனது கடற்படையை அனுப்பி பல நாடுகளை வென்றானோ அவன் தமிழனாக இருக்கிறான், அவனை நினைத்து தமிழர்கள் பெருமைப்படுகிறார்கள். அவனைச் சிறுமைப்படுத்துவதன் மூலம், தமிழர்களை வரலாறற்ற இனமாக, அதிலும் கன்னடப் பெரியாரின் பின்னர் தான் தமிழர் என்ற இனமும், அவனது மண்ணுமிருப்பதே மற்றவர்களுக்குத் தெரியும் என்பது போன்ற உணர்வை, சினிமா மோகத்தாலும், திராவிட மூளைச்சலவையாலும் சிந்திக்கத் திறனற்று சீரழிந்து கிடக்கும் பெரும்பான்மைத் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அது ஒன்று தான் தமிழ்நாட்டில் தமிழரல்லாதோரின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்தை தொடர்ந்து உறுதிப்படுத்தும், அதாவது,  அதற்கு  தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தமிழுணர்வற்றவர்களாக, தமிழரல்லாதோரின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அந்த நோக்கத்தின் விளைவாக ராஜ ராஜ சோழனுக்கெதிராகவும்,  அவனது நினைவுச் சின்னமாக,  தமிழர்களின்  வீரத்தின், ஆற்றலின், தமிழர்களின் புலிக்கொடி கங்கை முதல் கடாரம் வரை பறந்த தமிழ்ப் பொற்காலத்தை தமிழர்களுக்கு இன்றும் நினைவூட்டும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கெதிராகவும்,  மூடநம்பிக்கை நிறைந்த கட்டுக்கதைகளை பரப்பி விட்டனர் தமிழ்நாட்டிலே தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களின் நலன்களுக்கெதிராக இயங்கும் தமிழர்களின் எதிரிகள்.

தமிழர்கள் ராஜராஜ சோழனைப் பெருமையாக நினைத்தால், அவன் கட்டிய கோயிலுக்குச் சென்றால்  எவ்வளவு சீரும் சிறப்பாக வாழ்ந்த தமிழினம் இன்று நாடற்று, நாதியற்று, சொந்த மண்ணிலேயே தமிழரல்லாதோர் எம்மை ஆளவிட்டு, அவர்களின் கீழ் கைகட்டி வாய்புதைத்து நிற்கின்றோமே என்ற உண்மையைச் சிந்திக்கும் தன்மை ஏற்பட்டு விடுமென பயப்பட்டவர்களால், நான் என்ற அகந்தையுடன் கோயிலுக்குச் சென்று சிவனை வழிபடக் கூடாதென்ற, சைவத்தின் அடிப்படைப் போதனை திரிக்கப்பட்டு மூடநம்பிக்கையாக உருவாக்கப்பட்டு விட்டது,  முதல் நாளிலேயே அந்த மூடநம்பிக்கையை முறியடித்த செந்தமிழன் சீமானை எப்படிப் பாராட்டினாலும் தகும்.நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு.

Saturday, March 19, 2016

தமிழ்த்தேசியத்தை வெறியோடு எதிர்ப்பவர்கள் ஈழவிடுதலையை முழுமனதோடு ஆதரித்திருப்பார்களா?

திரு. வைகோ அவர்கள் தமிழ்த்தேசியத்துக்கெதிராக வெறி கொண்டு பேசிய பேச்சைப் (காணொளி) பார்க்கும்  எந்த ஈழத்தமிழனதும் எண்ணத்தில் முதலில் தோன்றும் கேள்வி என்னவென்றால், தமிழ்த்தேசியத்தின் மீது இவ்வளவு வெறுப்புக் கொண்டு ஆவேசத்துடன் எதிர்ப்பதுடன், திராவிடர்கள் அனைவரும் தமது வேறுபாடுகளை மறந்து தமிழ்த்தேசியத்தைப் பொது எதிரியாகக் கருதி; தமிழ்மண்ணிலேயே தமிழ்த்தேசியத்தைக் காலூன்ற விடாமல், நசுக்கி, அதை வளர விடாது தடுக்க ஒன்றுபட வேண்டுமென்று அறைகூவல் விடுத்து, தமிழ்நாட்டிலேயே தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் எந்த 'திராவிடனும்' உண்மையான முழுனமதுடன் தமிழீழ விடுதலைக்கும் , ஈழத்தமிழர்களுக்கும், "புலிகளின் தாகம்  தமிழீழ  தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் போராடிய விடுதலைப் புலிகளுக்கும் உண்மையாக இருந்திருப்பார்களா?  ஈழவிடுதலைப் போராட்டத்தை முழுமனதுடன் ஆதரித்திருப்பார்களா? என்பது தான்.

ஈழத்தமிழர்களின் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும், விடுதலைப் போராளிகளின் ஆயுதமேந்திய போராட்டத்துக்கும்  மட்டுமன்றி, பிரபாகரனின் தியாகத்துக்கு உந்துகோலாக இருந்ததும்,  பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமதின்னுயிரைத் தமிழுக்காக காவு கொடுத்ததற்கும் அடிப்படை தமிழ்த்தேசியம் தானே தவிர திராவிட தேசியம் அல்ல. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்த்தேசியத்தின் அடையாளச் சின்னமே தவிர, திராவிடத் தேசியத்தின் அடையாளச் சின்னமல்ல.  பிரபாகரனை ஆதரித்துக்  கொண்டு தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பது எப்படியானதென்றால், பெரியாரை ஆதரித்துக் கொண்டு, திராவிடக் கொள்கைகளை எதிர்ப்பது போன்றது.

 ICON OF TAMIL NATIONALISM 
மேதகு பிரபாகரன் தலமையில் நடந்த  ஈழத் தமிழர்களின் ஆயுதவழிப்போராட்டதுக்கு மட்டுமன்றி தந்தை செல்வா தலைமையில் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் முப்பத்தைந்தாண்டு காலமாக நடந்த அறவழிப் போராட்டத்துக்கும், வட்டுக்கோட்டை தமிழீழப் பிரகடனத்துக்கும் அடிப்படை தமிழ்த்தேசியம் தான். அந்த தமிழ்த்தேசியத்தை வெறியோடு எதிர்க்கும் எந்த திராவிடனிஸ்ராவும், பெரியாரிஸ்டும்,  (தமிழரல்லாத)  திராவிடர்களும்   உதட்டளவில் ஆதரவு தெரிவித்திருப்பார்களே தவிர உளமார, உணர்ச்சிபூர்வமாக ஆதரித்திருக்க மாட்டார்கள், ஆதரித்திருக்கவும் முடியாது  என்ற எண்ணம் மேலேயுள்ள காணொளியில், திரு. வைகோ அவர்கள் தமிழ்த்தேசியத்துக்கெதிராக போர்முரசு கொட்டுவதைப்  பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் திராவிடர்கள் எவருமே தமிழ்த்தேசியத்தின் அடிப்படையில் உருவாகிய ஈழவிடுதலைப் போராட்டத்தை  முழுமனதுடன் ஆதரித்திருக்க  மாட்டார்கள், அவர்கள் உதட்டளவில் ஆதரித்தற்கு,  வேறு பல  அரசியல் சுயநலங்கள் காரணமாக இருந்திருக்கலாம் . இலங்கையில் இன்றும் உள்ளது தமிழ்த்தேசியம் தானே தவிர, வந்தேறிகளை எல்லாம் தமிழர்களை ஆள வைக்கும் திராவிட தேசியம் அல்ல. தமிழ்தேசிய முன்னணியின் தலைவர் சம்பந்தனும்,  வடமாகாண முதலமைச்சர் விக்கினேசுவரனும், ஏனைய ஈழத் தமிழர்களின் தலைவர்கள் அனைவருமே தமிழ்த் தேசிய வாதிகளே தவிர பெரியாரிஸ்டுகளோ அல்லது திராவிடம் பேசுபவர்களோ அல்ல. ஆகவே தமிழ்த்தேசியத்தை பொது எதிரியாக நினைக்கும் திராவிடர்களுக்கு, தமிழ்த்தேசியம் பேசும், தமிழ்த்தேசியத்துக்காகப் போராடும் ஈழத் தமிழர்கள் எல்லாம் பொது எதிரிகள் என்றல்லவா கருத்துப் படுகிறது.  இதுவும் தமிழர்களைப் பிரித்தாளும் செயல் அல்லவா?

தமிழ்த்தேசியத்தை இந்துத்துவாவுடன் இணைத்துத் தமிழர்களைத் தமிழர்களாக ஒன்றுபட விடாமல் தடுக்க பல தமிழரல்லாத திராவிடர்களும், பெரியாரிஸ்டுகளும், அவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்களும் முயல்வதை நாம் இணையத் தளங்களில் காணலாம். ஆனால் உண்மையில் தமிழ்த் தேசியத்துக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் ஏதாவது இணக்கப்பாடிருந்திருந்தால் , தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், ஈழத்தமிழர்களுக்கும்  இந்துத்துவா சக்திகள் ஆதரவளித்திருக்க வேண்டுமல்லவா. ஆனால் அதற்கு மாறாக, தமிழ்நாட்டுப் பார்ப்பன ஊடகங்களும், இந்துத்துவா சக்திகளும் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிராக இயங்கினர்,  அத்துடன் திட்டமிட்டு எதிர்ப் பிரச்சாரங்கள் செய்தது மட்டுமன்றி,   எந்தளவுக்கு சிங்களவர்களுக்கும், இலங்கை அரசுக்கும் உதவினர் என்பதை வேண்டுமென்றே மறந்தவர்கள் மட்டும் தான் இந்துத்துவாவுக்கும், தமிழ்த்தேசியத்துக்கும் முடிச்சுப் போட்டு பூச்சாண்டி காட்ட முயல்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதளவுக்கு உலகத்தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. பஞ்சம் பிழைக்க  வந்த நடிகர், நடிகைகளை எல்லாம் தமிழினத் தலைவர்களாக்கி, தம்மை ஆளும் உரிமையையும் கொடுத்து அழகு பார்க்கத் துடிக்கும்,  தமிழ்நாட்டுத் தமிழர்களால் கூட அதை நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும்.

நீண்ட நெடும் வரலாறு கொண்ட தமிழினத்தின் தமிழ்மண்ணாகிய தமிழ்நாட்டை, அதன் வீரமிகு வரலாற்றை எல்லாம் மறைத்து. கன்னடப் பெரியாரின் பின்னர் தான் தமிழினமே தோன்றியது என்பது போல 'பெரியார் பூமி' என்று கூறும் அபத்தத்தை எந்த தமிழ்நாட்டுத் தமிழனும் கண்டிப்பதாகத் தெரியவில்லை.  பெரியாரின் காலத்தில் அல்லது பெரியாருக்குப் பின்னர் தோன்றியதல்ல இந்த தமிழினமும் அவர்களின் தமிழ்மண்ணும் என்பதை 'திராவிடர்களுக்கு' யாராவது விளக்க வேண்டும்.
Monday, March 14, 2016

தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் தெலுங்கர்களே தவிர தமிழர்கள் அல்ல?


தமிழ்நாட்டில் 39% தமிழர்கள் 41% தெலுங்கர்கள் என்கிறது தெலுங்கு வாணி,

தெலுங்கு வாணி என்ற பெயரில் இயங்கும் தெலுங்கர்களின் இயக்கம் தமிழ்நாட்டில் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் வெறும் 39.5%  எனவும், பெரும்பான்மையினர், அதாவது 41% வீதமானோர் தெலுங்கர்கள் எனவும் கூறுகிறது. அவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக இருந்தும் பலர் இன்று தெலுங்கை எழுத வாசிக்கத் தெரியாமல் உள்ளனர் எனவும் தமிழ்நாட்டில் அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும், அவர்களின் தெலுங்குத்துவத்தையும்(Teluguness ),   மொழியையும் பாதுகாக்க, தமிழ்நாட்டில் 100 கிராமங்களில் தெலுங்கை கற்பிக்கவும், வளர்க்கவும் கிராமத்துக்குப் பத்து லட்சம் ரூபாய்  அளவில் நிதி தேவைப்படுகிறது. அதைக் கொடுத்து அந்தப் பணியை நிறைவேற்ற தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களினதும் உதவியை நாடுகின்றனர்.

சிறுதுளி பெருவெள்ளம், ஆகவே சிறியளவிலான  நிதியுதவிகளையும் தெலுங்கு வாணி ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தெலுங்கர்களுக்கு அவர்களின் தெலுங்கு மொழியை கற்பித்து தமிழ்நாட்டில் தெலுங்குத்துவத்தை வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் வேலூர், கிருஸ்ணகிரி,காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் போன்ற  பல மாவட்டங்களிலுள்ள   120 கிராமங்களில் தெலுங்கு வாணி இயக்கம் நடத்திய தெலுங்கு வகுப்புகளால் 5000 க்குமதிகமானோர் தெலுங்கைக் கற்றுக் கொண்டனர்.  அத்துடன் அவர்களின் சிறப்பான கற்பிக்கும் முறையின் மூலம்,  தமிழ்நாடு  முழுவதும் ஒரு கிராமத்துக்கு 10 லட்ச ரூபாய் செலவில்  நூறு கிராமங்களில் 'தெலுங்கு தரங்கட்டுலு' நடத்தவும்,  தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் தெலுங்கு நூலகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பத்து வருடங்களில் பத்தாயிரம் தெலுங்கு எழுதப், பேசக்  கூடிய கிராமங்களை  தமிழ்நாட்டில் (ஆந்திராவில் அல்ல) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது தெலுங்கு வாணி எனும் வடுகர் இயக்கம். அதற்கு தெலுங்கு அபிமானிகளை அவர்களுக்கு உதவுமாறு அழைக்கின்றனர்.

தமிழ்நாடும் தமிழர்களின் கைகளை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. இப்படியே போனால் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகப் பாக்குநீரிணையில் குதிக்க வேண்டியது தான்


Wednesday, March 9, 2016

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நாதியற்றுச் சாகும் ஈழத்தமிழர்கள்!


தமிழ்நாட்டிலும் ஒரு முள்ளிவாய்க்கால்?  
- முள்வேலிக்குப் பின்னால் ஈழத்தமிழர்கள்- 
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில் கேட்பதற்கு நாதியற்று தன்னுயிரை ஈழத்தமிழர் ஒருவர் மாய்த்துக் கொண்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இலங்கையில் சிங்கள அரசே முகாம்களை அகற்றி, புலிகள் இயக்கத்தில் அங்கத்தவர்களாக இருந்த தமிழர்களைக் கூட சுதந்திரமாக வாழ அனுமதிக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஈழத்தமிழர்கள் இன்றும் அகதி முகாம்களை விட்டு, சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலையில் வாழ்கின்றனர். அதிலும் ஒரு ஈழத்தமிழன் தன்னைத் தானே இவ்வளவு அவலமான முறையில் மாய்த்துக்  கொள்ளும் அளவுக்கு ஒரு அரச அதிகாரி, அதுவும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கெதிராக  நடந்து கொண்டது, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களுக்குஅதிர்ச்சி தரும் விடயம் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் தமிழர்களின் உண்மையான நிலையையும், அவர்களின் கையாலாகாத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. கேரளாவுக்கோ, ஆந்திராவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, பங்களாதேசுக்கோ போகாமல், இந்தியாவுக்கு, அதிலும் தமிழ்நாட்டுக்குப் புகலிடம் தேடி ஈழத்தமிழர்கள் போனதன் காரணம், அங்கு தமிழர்கள், அவர்களின் சகோதரர்கள் வாழ்கிறார்கள் என்ற நினைப்பில் தான்.  இலங்கையின் வரலாறு முழுவதிலும், பஞ்சம் பிழைக்க இலங்கைக்கு வந்த இந்தியர்களுக்கு  வாழ்வளித்த ஈழநாட்டு மக்கள் இன்று நாதியற்று இப்படிச் சாகும் நிலை ஏற்பட்டது கவலைக்குரியது மட்டுமன்றி, ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் சிந்திக்க வேண்டியதொன்றும் கூட.


அந்தச் சம்பவத்தைப் பற்றிய ஒரு ஈழத்தமிழனின் குமுறலை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.


உயர் மின்அழுத்த கம்பிகள் கொண்ட இரும்பு கோபுரத்தில் ஏறி நின்று பலநூறு உறவுகள் பார்த்து நிற்கமின் கம்பியை தொட்டு எரிந்தபடியே ஈழத்து மனிதன் கீழே வந்து வீழ்ந்த அந்த காணொளியை பார்த்து பல நிமிடங்களாக என்னதென்று சொல்லி புரியவைக்க முடியாத முழு வெறுமை முழுவதுமாக இருள் கவ்விய ஒரு பெருந்துயர், விரக்தி, ஏன் என்று கேட்க யாருமே இல்லாத ஒரு இனமாக போய்விட்டோமா என்ற வெதும்பல் எல்லாமே சூழ்ந்து நிற்கிறது..மனமெங்கும்...
கேள்விப்பட்ட அனைவரது உள்ளத்திலும் இதே உணர்வுகளே தோன்றி இருக்கும் நிச்சயமாக...ஒருவிதமான கையறு நிலை...அதிலும் முகம்மண்ணை பார்க்க கிடந்த அந்த உடலை மூடிய போர்வைக்கு பக்கத்தில் தலை மாட்டில் ஒரு மெழுகுதிரி மட்டும் எரிந்தபடி கிடக்க,
அந்த உடலை சுற்றி இருந்த என் தேசத்து உறவுகளின் கண்களில் தெரிந்த ஆற்றாமை, யாருமற்ற மனிதர்கள் என்ற வெறுமை,நிராகரிப்புகளையே நாள் தோறும் பார்த்து கேட்டு வாழும் ஒரு ஏதிலி வாழ்வின் அவலம் சூழ்ந்த வலிகள் எல்லாமே ஏதேதோ செய்கிறது மனதை...
இது ஒரு வெளிப்படையான சம்பவம்..ஆனால்' இதனை போல தினமும் ஈழத்து மக்கள் தமிழகமுகாம்களில் சந்திக்கும் அதிகார அடக்குமுறைகள், வக்கிர துன்புறுத்தல்கள், நவீன அடிமைகள் போன்றதொரு வாழ்வுமுறை எல்லாமே பல கேள்விகளை முன்வைக்கிறது...
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த முகாம்களின் நிலைமை என்னவோ அவை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததுபோலவே இன்னும் இருக்கின்றது..
இந்தியாவின் வேறு மாநிலங்களில் தீபேத்திய அகதிகளுக்கோ,வங்கமொழி அகதிகளுக்கோ,இன்ன பிற அகதிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளில் பத்தில் ஒரு பங்குகூட தமிழகத்தின் அகதிமுகாம்களில் இல்லாது இருந்தே வந்துகொண்டிருக்கிறது.
வசதிகள் ஒரு புறம் இருக்க...அங்கு வாழும் ஈழத்து மக்களை மிருகங்கள் போன்றே மேய்த்து நிர்வாகம் செய்ய துடிக்கும் தமிழகத்து அதிகார வர்க்கம் மிக மோசமான துன்புறுத்தல்களை குறிப்பாக பெண்கள்மீது நடாத்தி வருகின்றது..
தட்டிக் கேட்க எழும் குரல்களை குண்டர்சட்டம்,தடா,பொடா என்று ஏதாவது ஒன்றில் அல்லது கஞ்சா கேஸில்கூட உள்ளே தள்ளி அமுக்கிவருகின்றது..இந்த அகதிமுகாமுக்கு தமிழகத்து அரசின் சார்பில் வருகை தரும் கடைநிலை ஊழியரிலிருந்து அதி உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரைக்கும் அதிகமானோர் இந்த
மக்களை நடாத்தும் முறை அதிர்ச்சி அளிக்ககூடியது...
சிம்மாசனம் ஒன்று இல்லாத குறைக்கு அவர்கள் கதிரையில் அமர்ந்திருந்து விசாரிக்கும் முறை இருபத்திஓராம் நூற்றாண்டு வெட்கக்கேடு...
ஒரு சிறு குறிப்பு ஒன்றை எழுதி அதில் கிறுக்கி ஒரு கையெழுத்து இட்டுவிட்டால் யாரையும் முகாமைவிட்டு விரட்டவும், கொடுப்பனவுகளை நிறுத்தவுமான அதிகாரம் நிரம்பி வழிபவர்களாக இந்த தமிழகத்து அதிகாரிகள் இருக்கிறார்கள்.
இதனால் அவர்களின் இழி பேச்சுகளை மிக இழிந்த செயல்களை எல்லாம் பொறுத்துபோயே ஆகவேண்டிய ஒரு இடர்பாட்டினுள் எம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
எல்லா துன்பங்களும் தங்களுடனேயே போகட்டும் தம் அடுத்த தலைமுறைதன்னும் படித்து வெளியில் வேலைக்கு போய் இந்த முகாம் வாழ்வில்
இருந்து விடுவிக்கப்படட்டும் என்றே அனைத்து பெற்றோரும் பொறுத்து இருந்தார்கள்.
சொந்த தேசத்து மண்ணின் மணமோ ஏன் அதன் நிறமோ என்னவென்றே அறியாத ஒரு இளம் ஈழத்து இளையோர் உருவாகி வந்துகொண்டிருக்கிறார்கள்..
இந்த நிலையில் அவர்களுக்கு குடியுரிமையோ அன்றி வேறு வதிவிட உரிமைகளோகூட இன்னமும் வழங்க மறுத்தபடியே தமிழகத்து நிர்வாகம் நிற்கிறது..
வதிவிட உரிமை, குடியுரிமை என்பன இன்னும் வழங்கப்படாததால் இந்த இளம் தலைமுறையினர் என்னதான் நன்றாக படித்திருந்தாலும் வேலைவாய்ப்புகளில் நிராகரிக்கப்படுகின்றனர்.
அதிகூடிய திறன் உள்ளவர்களை வேலைக்கு எடுத்தாலும்கூட அவர்களைகூட எந்தநேரமும் வதிவிடஉரிமை, குடியுரிமை இல்லாததை சாட்டாக வைத்து நிர்வாகம் வேலையில் இருந்து விரட்டக்கூடிய சாத்தியங்களே அதிகமிருக்கின்றது. அதனால் வேலை செய்பவர்கள்கூட ஒருவிதமான நவீன அலுவலக அடிமைகள் போன்றே நடாத்தப்படுகிறார்கள்.
மதுரை திருப்பரங்குன்று உச்சப்பட்டி முகாமில் நடந்தது தமிழகம் முழுதும் ஈழத்தமிழர்களை தமிழக அதிகாரிகள் வர்க்கம் நடாத்தும் முறைமைக்கு ஒரு எரியும் சான்று.
உச்சப்பட்டியில் அகதிமுகாமில் ரவீந்திரனை சாகும்படி ஏவிய அந்த அதிகாரி துரைபாண்டி என்பவர் தமிழகம் முழுதும் உள்ள அதிகாரவர்க்கத்தின் ஒரு முகம் மட்டுமே..
அநேகமான அதிகாரிகள் இவரைப் போலவே அல்லது இவரைவிட மோசமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது மிக உண்மை..
ஆட்சியில் உள்ளவர்களின் அசமந்த போக்கும், அவர்கள் ஈழத்தமிழ் அகதிகளை கணித்துகொள்ளும் பார்வையும் அதிகாரிகளிடம் வந்து சேர்கிறது. அதுவே அதிகாரிகளை ஒருவிதமான பேரரசர்கள் போல நடக்கும் திமிரை கொடுக்கிறது...
நாம் விழித்து கொள்ள இதற்கு முன்னும் பலபல நிகழ்வுகள் முகாம்களில் நடந்து வெளிச்சத்துக்கு வந்தும் உறங்கியே கிடக்கின்றோம் நாம்.
தங்கத்தட்டில் உணவூட்டப்படும் மேற்கத்திய அகதி வாழ்வினில் நாம் இருப்பதால் தமிழகத்து தென்கோடியில் எரிந்த எம் உறவு ஒன்றை பற்றி ஏதோ ஒரு வேற்று மனிதனை பற்றிய சேதியாக பார்த்து வாசித்து அடுத்த வேலைக்கு நகர்கின்றோம்.
தமிழகத்து தேர்தல் வருகின்ற மேமாதம் நடக்க இருக்கின்றது. நாம் அனைவரும் தனித்தனியாகவோ கூட்டாகவோ, குழுக்களாகவோ தமிழகத்து கட்சிகளுக்கு எழுதுவோம்.
அடுத்த ஆட்சி கட்டிலில் ஏறி சென்னை செயின் ஜோர்ஜ் கோட்டையில் கொடி ஏற்ற துடிக்கும் அனைத்து கட்சிகளையும் கோருவோம். அங்கு அகதிகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களை சக தமிழர்களாக பாரமரிக்கவும்,
அவர்கள் விரும்பினால் குடியுரிமை வழங்கவும்,அங்கு வாழும் இளைய ஈழத்தமிழர்களை கல்வி,வேலைவாய்ப்பு என்பனவற்றில் சமமாக நடாத்தவும் ( பிரத்தியேக இடஒதுக்கீடு இன்னும் சிறப்பு),
ஈழத்தமிழ் அகதிகள் மீது அதிகார துஸ்பிரயோகம் செய்யும் அதிகாரிகளை உடனேயே தண்டிப்பதற்கு உரிய ஒரு விசாரணை முறையை அமுல் நடாத்தும் படியும் கோருவோம்..
தமிழ், தமிழன் என்று மேடைக்கு மேடைக்கு முழங்கும் தமிழகத்து கட்சிகள் தமது தேர்தல்விஞ்ஞாபனத்தில் அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் முறைகள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோருவோம்...
எல்லாவிதமான சித்திரவதைகளிலும் மோசமானது அவமானப்படுத்தல் தான்.அத்தகைய ஒரு அவமானப்படுத்திலின் உச்சமே ஒரு உயிரை பலரும் பார்த்து இருக்க கருக வைத்திருக்கிறது...
தமிழுக்கு அரியணை அமைக்க,தமிழர்களின் தேசிய அடையாளம் காக்க எழுந்த ஒரு போராட்டத்தின் விளைவாக தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள் உலகில் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடாத்தப்பட்டுவரும் முறைகள் தமிழன் என்று பொதுவாக சொல்லிக் கொள்ளவே கூசவைக்கின்றதாக இருக்கின்றது.
இதற்கு வெறுமனே ஆட்சியாளர்கள் மீதும்,அதிகார வர்க்கத்தின் மேலும் குற்றத்தை போட்டுவிட முடியாது.
இத்தகைய நீசச்செயல்களை தொடர்ந்து மௌனமாக பார்த்து கொண்டிருக்கும் எல்லோருமே இந்த மனிதனின் எரிந்து கருகி முகம்குப்புற கிடக்கும் உடலுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.
காலம் இன்னும் கடந்துவில்லை...இப்போதே உங்கள் உங்கள் முகப்புத்தகம் மற்றும் சமூகவலை தளங்களில் ஒலு கணமேனும் இந்த உச்சப்பட்டி அகதிமுகாமின் அவலத்தை பதிந்து அதற்கு நீதி கேட்டு அனைத்து தேர்தல் கட்சிகளிடம் கோரிக்கை வையுங்கள்.
யாருமே அற்றதாக இந்த இனம் இருக்கிறதோ என்ற அவலத்தை நீக்குவோம்...

நன்றி; tamilwin.com  
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com

Saturday, March 5, 2016

சீமான் மீது மட்டும் ஏனிந்தக் கொலவெறி??


நாம் தமிழர் கட்சி (சீமான்) தோற்கடிக்கப்பட வேண்டுமென இலங்கை முஸ்லீம் இணையத்தளமொன்றில் சுவனப்பிரியன் என்ற தமிழ்நாட்டு முஸ்லீம் ஒருவர் ஒரு  கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால் “தமிழ்நாடு தமிழருக்கே” என்கிறாராம் சீமான். " தமிழ்நாடு தமிழருக்கே" என்று சீமான் மட்டும் கூறவில்லை, அவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிஞர் அண்ணா, மறைமலையடிகள், பெரியார் மட்டுமன்றி இக்காலத்துப் பெரியாரிஸ்டுக்கள் கூட பேச்சுக்களிலும், கட்டுரைகளிலும் கூறியிருக்கிறார்கள். ஆனால்  அதையே சீமான்  கூறினால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கின்றனர்  தமிழ்நாட்டு முஸ்லீம்கள். இலங்கை முஸ்லீம்கள் மட்டும் தான் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என நினைத்திருந்தேன். உதாரணமாக, இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக,  இலங்கையில் வடக்கு கிழக்கும் இணைந்து தமிழ்பேசும் மாநிலம் உருவாவதை இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர். இவ்வளவுக்கும் அவர்களின் தாய்மொழியும் தமிழ் தான்.  ஆனால் தமிழ்நாட்டில்  என்னடாவென்றால் தமிழ்நாடு தமிழருக்கே என்று சீமான் கூறுவதால் அவரும் அவரது கட்சியும் தோற்கடிக்கப்பட வேண்டுமென்கிறார் ஒரு முஸ்லீம். அப்படியானால் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அவரது கருத்தை இதுவரை எந்த முஸ்லீமும் எதிர்க்கவில்லை.

அவருக்கு விடுதலைப் புலிகள் மீதுள்ள வெறுப்பை சீமான் மீது காட்டுவது தான் வேடிக்கை. அதிலும் வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனின் “தலைமையை ஏற்காத தமிழர்களை வன்முறையின் மூலம் அடக்கியதை நமது வாழ்நாளிலேயே பார்த்தோம். இதனால் தமிழர்கள் பல ஆண்டுகள் சிறைக் கைதிகளாக அடைபட்டு கிடந்ததை மறந்து விட முடியாது” என்கிறார் அதாவது  இலங்கைச் சிறையில் தமிழர்கள் பல ஆண்டுகளாக சிறைக் கைதிகளாக அடைபட்டுக் கிடந்நததற்கு பிரபாகரன் தான் காரணமாம். பிரபாகரனின் கட்டுபாட்டில் தான் இலங்கை அரசு இருந்தது போலவும், பிரபாகரனின் தலைமையை ஏற்காதவர்களை இலங்கை அரசு பிடித்துச் சிறையில் போட்டது, என்கிறாரா இவர்? பிரபாகரனையும் விடுதலைப் போராட்டத்தையும்  ஆதரித்தனர் என்ற காரணத்துக்காகத் தான் அப்பாவி ஈழத் தமிழர்கள் பலரை இலங்கை அரசு பல ஆண்டுகளாகச்  சிறையில் போட்டதே தவிர, பிரபாகரனை எதிர்த்ததற்காக அல்ல. மாறாக தமிழர்களையும், பிரபாகரனையும் எதிர்ப்பதாகத் தொப்பியைப் பிரட்டி இலங்கை முஸ்லீம்கள், இலங்கை அரசிடமிருந்து சலுகைகளை அனுபவித்தனர்.

சீமானுக்கெதிராக நடைபெறும் திட்டமிட்ட பிரச்சாரத்தைப் பாருங்கள்.
இன்று சீமான் கையிலெடுத்திருக்கும் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோஷம் மேலோட்டமாக பார்த்தால் நியாயமாக தெரிகிறது. தற்போது தலைமைப் பதவிகளில் தமிழன்தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் கன்னடர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் தங்கள் வியாபாரங்களை தமிழருக்கு விட்டுக் கொடுத்து வெளியேற வேண்டும் என்பார். எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவார். ஆட்சியில் இல்லாத போதே சீமானுக்கும் சீமானின் ஆதரவாளர்களுக்கும் இந்த அளவு வெறி வருகிறது என்றால் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் எதுவும் செய்வார்கள்.”

அவரது கருத்தையும் சீமானின் 'கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம்' என்ற நேர்காணலில் அவர் கூறும்,  விளக்கத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் எவருக்குமே சீமான் மீது  ஏனிந்தக் கொலைவெறி என்று தான் கேட்கத் தோன்றும்.  .இப்படியான திட்டமிட்ட எதிர்ப்புப் பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்து தமிழர்கள் தமிழ்நாட்டில் தலைநிமிர்ந்து வாழ, தமிழ்நாட்டுத் தமிழர்கள் சீமான் போன்ற தமிழுணர்வுள்ள தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 கேள்விகளால் ஒரு வேள்வி செய்வோம் - சீமானின் நேர்காணல் 


கேள்வி: நாம் தமிழர் மீது முன்வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு, நீங்கள் தமிழர் - இங்கேயே வாழும் தமிழர் அல்லாத மக்கள் இடையே பிரிவினைவாதத்தை உண்டாக்குகிறது என்பது. அதற்கு உங்கள் விளக்கம்... 

சீமான்: ஓராண்டு ஈராண்டல்ல.. நீண்ட நெடிய காலமாக அதிகாரத்தை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அடிமையாகக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள் அதிகாரத்தை கையிலெடுக்க நினைப்பது அவர்களின் உரிமை. ஒருவருடைய பொருளாதாரம், அரசியல், அதிகாரம்.. இந்த மூன்றில் ஒன்றை அடுத்தவரிடம் இழந்தாலும் நான் அடிமையாகிவிடுவேன். ஆனால் இந்த மூன்றுமே என் இனம் சார்ந்த மக்களுக்கு அடுத்தவரிடத்தில் இருக்கிறது. நீண்ட நெடிய காலமாக இவை அடுத்தவரிடம்தான் இருக்கின்றன. தமிழர்கள் பெருந்தன்மை என்ற பெயரில் செய்த பிழையால் இந்த நிலை. இன்று நாங்கள் விழித்துக் கொண்டு எங்களின் நியாயமான உரிமையை நான் கேட்கும்போது பிற மொழியாளர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் போல இது சித்தரிக்கப்படுகிறது. இது ஒரு பெரிய துரோகம் என்கிறேன். இந்த மண்ணை நம்பி நீண்ட காலமாக இருந்தவர்களுக்கு நீர் கொடுத்து, சோறு கொடுத்து, பாதுகாப்பான வாழ்க்கை கொடுத்து, அதிகாரம் கொடுத்து, வாழவும், ஆளவும் வைத்து அழகு பார்த்த ஒரு தேசிய இன மக்களுக்குச் செய்கிற துரோகம். வாழும் உரிமை எவருக்கும் உண்டு. ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு என்ற தத்துவத்தை முன் வைக்கிறோம். வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் அது எம் இனத்தின் பெருமை. ஆனால் எம் சொந்தவரை மட்டும் ஆள வைப்போம். அது எங்கள் உரிமை. உலகம் பூரா இதுதான் நடைமுறை. அந்தந்த தேசிய இன மக்களை அந்தந்த மொழி வழி தலைவர்கள்தான் ஆளுகிறார்கள். என்னைப் பெற்ற என் தாய் தந்தைக்கு என்னைவிட உண்மையான மகன் யார் இருக்க முடியும்? என் மண்ணையும் மக்களையும் நிலத்தையும் வளத்தையும் என்னைவிட யார் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும்? 
நீண்ட காலமாக எங்களை ஆண்டு வந்திருக்கிறீர்கள். மொழிப்போர் ஈகிகளின் தியாகத்தால்தான் இந்த திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்த அரசியலை நீங்கள் நுட்பமாகப் பார்க்க வேண்டும். என் மொழி செத்துவிடக் கூடாது என்று செத்தவனின் தியாகத்துக்கு ஏதாவது பலனிருக்கா? இந்த 50 ஆண்டுகளில் தமிழை அழித்துவிட்டார்கள். சாகடித்துவிட்டார்கள். மொழிப்போராட்டத்தில் செத்தவன் எல்லாம் தமிழன். பிற மொழியாளர் யாரும் சாகவில்லை. ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியவன் திராவிடர் போர்வையில் இருந்த மாற்று மொழியாளன். 'தமிழன் தாய்மொழிமேல உயிரையே வச்சிருக்கான். மொழிக்கு ஒன்று என்றால் உயிரையும் விடத் தயாரா இருக்கான். அந்த மொழியை அழிச்சாத்தான் சூழல் நமக்கு சாதகமாகும்'னு திட்டமிட்டு வேலை செய்தார்கள் பிறமொழி ஆட்சியாளர்கள். தமிழன் தமிழனாக இருக்கும்வரை அதிகாரத்துக்கு வரமுடியாது என்று தெரிந்து கொண்டு திட்டமிட்டு தமிழை அழித்தார்கள். ஒரு சின்ன பதிலில் இதற்கு பதில் சொல்லிவிட முடியாது. நான் கேட்பது எனது தார்மீக உரிமை. 


கேரளாவில் பல லட்சம் தமிழர்கள் வாழ்கிறோம். மகாராஷ்ட்ராவில் 26 லட்சம் பேர் இருக்கோம். கர்நாடகத்தில் ஒண்ணேகால் கோடிக்கு மேல் வாழ்கிறோம். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் தமிழர் வாழாத நிலப்பரப்பு இல்லை. உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறோம். ஆனால் எந்த நாட்டிலும் தமிழருக்கென்று தனித்த அரசியல் இல்லை. அந்தந்த மண்ணின் மக்கள் முன்னெடுக்கிற அரசியலோடு நாங்க கரைஞ்சி பயணிக்கிறோம். அதுபோல இந்த மண்ணில் வாழ்கிற பிறமொழி தேசிய இன மக்கள், தமிழ் தேசிய இன மக்களாகிய நாங்கள் முன்னெடுக்கிற அரசியலோடு பயணித்து வலிமை சேர்க்க வேண்டும் என்பது தார்மீகக் கடமை என்றுதான் நாங்கள் சொல்கிறோம். நீங்கள் எங்களை ஆள வேண்டும், அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் அடிமையாகி விடுவோம். நாங்கள் இன்னொரு முறை அடிமையாகத் தயாராக இல்லை. இப்போது தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சிலர் இங்கே எங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட யாராவது? அல்லது மலையாளிகள் யாராவது? அண்மையில் கேரள முதல்வர் உம்மண்சாண்டி சொன்னதை எல்லாரும் அறிவீர்கள். 'அவன் அதிகாரத்தைக் கேட்டு வெறியோடு வருகிறான். அவன் கேட்பது நியாயம். அதில் என்ன தவறு இருக்கிறது? என்னை மலையாளியா திராவிடனா என்று கேட்டால் நான் மலையாளி என்றுதான் சொல்வேன்' என்று கூறியிருக்கிறார். அந்த உணர்வு எல்லாருக்கும் வரணும். வெளிப்படையா பேசுவோம்... ஆந்திரா. ஒரே மொழிவழி தேசிய இனத்தின் மக்கள் அங்கு வாழ்கிறார்கள். நீண்ட காலமாக ஒரே நிலப்பரப்பில் வசித்தவர்கள் இன்று தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களாக பிரிந்துவிட்டன. தெலங்கானாவை சந்திரசேகர் ராவும், ஆந்திராவை சந்திரபாபு நாயுடுவும் ஆள்கிறார்கள். மாறி, சந்திரசேர் ராவை ஆந்திராவுக்கும், சந்திரபாபு நாயுடுவை தெலங்கானாவுக்கும் முதல்வராகிடச் சொல்லுங்க பார்ப்போம். 

நாம இந்த அரசியலை விட்டுடலாம். வாய்ப்பே இல்ல. ஆக நான் கேட்பது ரொம்ப தார்மீக உரிமை. காலங்கடந்து கேட்கிறேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டு, கண் முன்னாடி ஒரு இனச் சாவைச் சகித்துக் கொண்டு நிற்கிறேன். நானூறு ஆண்டுகளாக இருக்கிறார்களே... அவர்களை எங்கே போகச் சொல்கிறீர்கள் என்கிறார்கள். எங்கேயும் போக வேணாம். எங்களோடு தாயா புள்ளையா இருங்க. எங்களோடயே வாழுங்க. எங்ககிட்ட அமைச்சரா இருங்க. ஆனா முதலமைச்சர் நாங்கதான். எத்தனை தளபதிகள் வேணும்னாலும் இருங்க.. மன்னன் நான்தான். இதுல என்ன கசப்பு இருக்கு? இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள தடுமாற்றம்தான் அவர்களுக்கு. உங்களுக்கு நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். நானூறு ஆண்டுகளாக இருந்த எங்களை இப்படிச் சொல்கிறார்களே என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், மூவாயிரம் ஆண்டுகளாக இங்கிருக்கும் பிராமணர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏன் இத்தனை ஆண்டுகள் அவர்களை எதிர்த்தீர்கள்? தூய தமிழர் எங்களை திராவிடன் என்று சேர்த்துக் கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக ஏன் எதிர்த்தீர்கள்? அவன் இத்தனைக்கும் வீட்டுக்குள் தமிழ், வெளியிலும் தமிழ் பேசறான். வாய் மொழியும் தாய் மொழியும் தமிழா இருக்கு. நீங்களாவது வீட்டுக்குள் போய் தெலுங்கு பேசுகிறீர்கள். அவன் வீட்டிலும் தமிழ்தானே பேசுகிறான். அவனை ஏன் எதிர்த்தீர்கள்பிறப்பின் அடிப்படையில் சீமான் தூய இனவாதம் பேசுகிறான் என்று சொல்கிறீர்கள். பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்று நீதிக்கட்சி ஆரம்பித்தீர்களே.. எந்த அடிப்படையில் அவர்களைப் பார்ப்பனர்களாகப் பார்த்தீர்கள்? ஆரியர் திராவிடர் என்றீர்களே.. எப்படி ஆரியர்களைக் கண்டீர்கள்? பிறப்பின் அடிப்படையில்தானே?

பாரதி, சூரிய நாராயண சாஸ்திரியாக இருந்த பரிதிமாற் கலைஞர், தூய தமிழறிஞர்.. பிறகு உ வே சாமிநாதய்யர், இவரைத் தாண்டிய தமிழறிஞர் உண்டா.. காலில் செருப்பு கூட இல்லாமல் ஊர் ஊராகப் போய் ஓலைச் சுவடிகளை உவே சாமிநாதய்யர் திரட்டிக் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்றால், எனக்கு ஏது இத்தனை சங்கத் தமிழ் நூல்கள்? பாரதியைத் தாண்டிய ஒரு தமிழன் உண்டா? சாதிகள் இல்லையடி பாப்பான்னு சொன்னவனை 'பார்ப்பான்னு' சொல்லிக் கொடுத்தது யாரு? அடிமைப்பட்டுக் கிடந்த தேசிய இன மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கிறார்கள் என்ற புரிதல் வந்துவிட்டால் நான் கேட்பது நியாயம் என புரியும். இல்லையில்லை.. நாங்கள்தான் ஆளுவோம் என்றால்... மன்னராட்சிக் காலத்தில் நாயக்க மன்னர்கள் ஆட்சி. மக்களாட்சிக் காலத்திலும் நாயக்கர்கள் ஆட்சி என்றால் நாங்கள் விடுதலைப் பெறுவது எப்போது? யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதில் கோபப்பட ஆத்திரப்பட, இனத் துவேஷம், பாஸிஸம், இன வெறி என்று சொல்ல ஏதுமில்லை. 

எங்களோடு இருங்கள். தெலுங்கர் தெலுங்கராக இருங்கள், கன்னடர் கன்னடராக இருங்கள், மலையாளி மலையாளியாக இருங்கள், துளுவர் துளுவராக இருங்கள், மராட்டியர் மராட்டியராக இருங்கள், உருது பேசும் இஸ்லாமியர் உருது பேசுபவர்களாகவே இருங்கள்... எல்லாரையும் ஆரத் தழுவி அன்பு கொண்டு வாழ்கிற மாண்பு எங்களுக்கு இருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் நான்தானே. திருவள்ளுவரிலிருந்து, கம்பரிலிருந்து, இளங்கோவடிகளிலிருந்து உலகந்தழுவி நேசித்துப் பாடியது எங்கள் முன்னோர்கள்தானே. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியதாகப் பாடினார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் சாதி என்றான் பாரதி. பயிருக்கும் காக்கை குருவிக்கும் வாடிய நாங்கள் சக மனிதரை நேசிக்க மாட்டோமா? பிறமொழிக்காரர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாங்கள் அவர்களைச் சகோதரர்களாக ஆரத் தழுவிக் கொண்டு வாழ்கிறோம். ஆனால் ஆளும் உரிமை எங்களுக்குத்தான். தமிழனை தமிழன் ஆண்டிருந்தால் ஈழத்தில் இனம் அழிந்திருக்காதே. தமிழன் ஆண்டிருந்தால் கச்சத் தீவை எடுத்துக் கொடுத்திருக்க முடியாது. நாங்கள் ஆண்டிருந்தால் மீத்தேனுக்கு கையெழுத்து போட்டிருக்க முடியாது. நாங்க ஆண்டிருந்தா அணு உலைகள் இங்கே இருந்திருக்காது. நாங்க ஆண்டிருந்தா மேற்குத் தொடர்ச்சி மலையில் அந்த நியூட்ரினோ ஆய்வு வந்திருக்காது. இந்த 50 ஆண்டுகளில் வெட்டப்பட்ட குளங்கள் ஏரிகள் எத்தனை... ஆனால் இந்த திராவிட ஆட்சிகளில் அவை தூர்க்கப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் எத்தனை? நாங்கள் ஆண்டிருந்தால் இது நடந்திருக்காது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த திராவிட இயக்கத் தலைவர்களுக்கு தமிழர்களை ஆள வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான். 

எல்லா மொழிவழி தேசிய இன மக்களைப் போல தமிழர்களும் உரிமை பெற்று பெருமையோடு வாழ வேண்டும் என்ற கனவு ஒருபோதும் இருக்காது. அது இந்த மண்ணின் பிள்ளை இந்த இனம் சார்ந்த பிள்ளைக்குத்தான் இருக்கும். அதனால்தான் அந்த உரிமையை எங்களுக்குத் தாங்கன்னு கேட்கிறோம்!

மேலும் இணைப்பை அழுத்தவும்: