Sunday, September 25, 2016

எழுக தமிழ்! தமிழ்மண்ணில் ஆக்கிரமிப்பை எதிர்த்து நீதியரசர் சி.வி சூளுரை

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற “எழுக தமிழ்” பேரணியில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.

புத்தபகவான் தமிழர்களின் காணி ஆக்கிரமிப்பாளரா? இலங்கையில் புத்தர் சிலை சிங்கள ஆக்கிரமிப்பின் அடையாளம்.

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் ஏன்? எம்மைமதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமதுபிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா? என்பது எமது முதலாவதுகரிசனை.
சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்கும் கேட்காதது ஏன்?அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகாரபீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா?
A recently constructed Buddhist Statue in Kilinochchi
போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூடகொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில்வாடுவது எம்மால் சகிக்க முடியாத தொன்றாக இருக்கின்றது.
புதிய நல்லாட்சிஅரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா? என்றும்கேள்வி எழுப்பினார்.
காணாமல் போனோர் பற்றி இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? காணாமற்போனவர் காரியாலயம் காலத்தைக் கடத்தும் கரவுத் திட்டமா? போர் முடிந்து ஏழுவருடங்களுக்குப் பின்னரே இக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் சர்வதேசநெருக்குதல்களின் காரணமாக!
இன்னமும் எவ்வளவு காலஞ் சென்றால் படையினரிடம்கையளிக்கப்பட்ட, சரணடைந்த அல்லது தஞ்சமடைந்த எம் மக்கள் பற்றித் தரவுகள்கிடைக்கப் பெறலாம்?போர்க்குற்ற விசாரணை சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட திடமான நடவடிக்கைகள் என்ன?எம் மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள்.
சிவபூமி கோணேஸ்வரத்தில் புத்தர் சிலை 
இதற்கான விளக்கங்களை யார்தருவார்கள்?அவற்றைக் கோரியே இந்தப் பேரணி.
நாவற்குழியில், முருங்கனில், வவுனியாவில், முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும்மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இது எதற்காக? எமது தனித்துவம்பேணப்படும், எமது உரித்துக்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் கூறி வரும் இவ்வேளையில்இவ்வாறான குடியேற்றங்கள் எமது மக்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கின்றன.
இலங்கைசுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக இலங்கை பூராகவும் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் அடித்து துரத்தப்பட்டு வெளிநாடுகள் சென்றவர்கள் போக பெரும்பாலானவர்கள்வடக்கு கிழக்கில் தங்கள் தாயகப் பிரதேசங்களில் அவர்கள் தஞ்சம் புக, இங்கும் வந்துஎமது இன அடையாளங்களை அழிக்கவும் குடிப் பரம்பலை மாற்றவும் நடவடிக்கைகள்எடுக்கப்படுகின்றன என்றால் இக் குழப்பத்தை யாராவது தீர்த்து வைப்பார்களா? என்று கேட்டுவைக்கவே இந்தப் பேரணி!
இப்பேரணி யாருக்கும் எதிரானதல்ல? ஆனால் எமது வட மாகாணத்தில் நடைபெறும் பலநடவடிக்கைகள் பற்றி நாம் அறிய விரும்புகின்றோம். அவற்றிற்கான காரணங்களைத்தெரிந்து கொள்ள விரும்புகின்றோம்.
தமிழ்மண்ணில் திட்டமிட்ட சிங்கள – முஸ்லீம் குடியேற்றம். (வடக்கு -கிழக்கு இணைப்பை எதிர்க்கும் தமிழ் பேசும் முஸ்லீம்கள்)
உதாரணத்திற்கு ஏன் சிங்கள முஸ்லிம் மக்களின்மீள் குடியேற்றத்திற்கு மத்திய அமைச்சர்களுடனான ஒரு செயலணி வேண்டியிருக்கின்றது? மற்றையமக்களின் மீள் குடியேற்றத்திற்கு செயலணி வேண்டாமா? இந்தியாவில் இருந்து வரும் எமதுஇடம் பெயர்ந்தோர் சம்பந்தமாக போதிய கவனம் செலுத்தியுள்ளோமா?
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை எதிர்த்து ,நாவுக்கு 
எதிராக இலங்கை முஸ்லீம்கள் போராட்டம்
கேரதீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அது பற்றி எமக்குஎதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப்புறக்கணித்து மத்திய அரசாங்கம் எமது வடமாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்குஅனுமதி வழங்குவதன் சூட்சுமம் என்ன?

போர் முடிந்து ஏழு வருடங்கள் ஆன பின்னரும் இராணுவம் பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துவைத்துக் கொண்டு அவற்றில் பயிர் செய்து பயன்களை அனுபவிப்பதன் அர்த்தம் என்ன?உல்லாச விடுதிகள், விவசாயப் பண்ணைகள், தனியார் வாசஸ்தலங்கள் தொடர்ந்துபடையினரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் நியாயம் என்ன?
ஆக்கிரமிக்கப்பட்டகாணிகள் அனைத்தையும் விடுவிக்காததன் காரணம் என்ன? மேலும் பல ஏக்கர் மக்கள்காணிகளை இப்பொழுதும் புதிதாகக் கையகப்படுத்தும் இராணுவத்தினரின் நடவடிக்கை எம்மக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
போர்க்குற்றப் பொறிமுறை கலப்புப் பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பது 2015ம்ஆண்டின் செப்ரெம்பர் மாத சர்வதேச எதிர்பார்ப்பு. வெளிநாட்டு வழக்கு நடத்துநர்,வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச போர்க்குற்ற சட்டத்தை உள்ளேற்றல் போன்றவைஇல்லாது கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீண்டும் உள்ளகப் பொறிமுறையை மட்டும் எமதுநல்லாட்சி அரசாங்கம் நாடுவது எமக்குச் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்டஎமது மக்களுக்கு நீதி கிடைக்காமல் செய்ய எடுக்கப்படும் முன்னேற்பாடுகளா இவை என்று நாம்சிந்திக்க வேண்டியுள்ளது.
இவை மட்டுமல்ல. எமது வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் இப்பொழுதும்பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் காலத்தை ஓட்டி வருகின்றார்கள். தென்னிலங்கைமீனவர்கள் வடக்கு கிழக்கு கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமன்றி எமதுமீனவர்களின் படகுகளை சட்ட விரோதமாகப் படையினர் உதவியுடன் கைப்பற்றுகின்றார்கள்,வாடிகளை அமைக்கின்றார்கள். சட்டவிரோத மீன்பிடி முறைகளைக் கையாள்கின்றார்கள்.கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன.

 நன்றி. Tamilwin