Monday, August 1, 2016

ஆதிக்க சாதிவெறியர்களால் முற்றாக அரபுமயமாகப் போகிறது தமிழ்நாடு.


இஸ்லாமியப் படையெடுப்புகளாலும், நவாப்புகளின் ஆட்சியிலும், தென்னாட்டில் திப்புசுல்தான் போன்ற முஸ்லீம் மன்னர்கள் மக்களை வாள்முனையில் மதமாற்றம் செய்தும் கூட தமிழ்மண்ணில் இஸ்லாம் இன்றும் 5% வீதத்தில் தான் நின்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களாலேயே முடியாத செயலை, இன்று தமிழ் ஆதிக்க சாதிவெறியர்கள் முடித்துக் காட்டி விடுவார்களோ என்று தான், மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் முஸ்லீம்களாக மதம் மாறியது போன்றே, மீண்டும், சாதிவெறித் தமிழர்களின் கொடுமைகளால் பழங்கள்ளிமேடு கிராமத்தில் தமிழர்கள் முஸ்லீம்களாக மதம்மாற முடிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியைப் பார்த்ததும் எண்ணத் தோன்றுகிறது.

உலக முஸ்லீம்களுக்கும், அரேபியாவுக்கும் அதீத விசுவாசம் காட்டும் விதத்தில், அரபுமயமாக்கப்பட்டுக் கொண்டே தம்மைத் தமிழர்கள் என்றும் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் சிலர் தம்மை (வெளியில்) அடையாளப்படுத்திக் கொள்வதனால், முஸ்லீம்களாக மதம் மாறுவது வெறும் மதமாற்றமல்ல, இக்கால வஹாபியத்தின் அடிப்படையில் அது இனமாற்றம் என்பதை, ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டது போன்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.  

இலங்கையில் தமக்கும், தமிழர்களுக்கும் உள்ள பாரம்பரிய, இரத்த, இனத்தொடர்பை மறைத்து, தமிழர்களுக்கும், தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கும் எந்த தொடர்புமில்லை, இலங்கை முஸ்லீம்கள் அனைவரும் யேமனிலும், மொரோக்கோவிலுமிருந்து வந்தவர்களின் பரம்பரையினர் என்று வரலாற்றைத் திரித்து வாதாடுவது மட்டுமன்றி, இன்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு, இவ்வளவு உயிரிழப்புகளுக்கு, பின்பும் நியாயமான தீர்வு கிடைப்பதற்கும், வடக்கு – கிழக்கு இணைப்புக்கும் தடையாக இருப்பவர்கள் இலங்கையின் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தான், என்பதிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு தமிழன் முஸ்லீமாக மாறும் போது அவன் தனது மதத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை தனது இனத்தையே மாற்றிக் கொள்கிறான். இலங்கையில் அந்த மாற்றம் உடனடியாகவே நடைபெற்று விடும், இஸ்லாத்துக்கு மாறிய, அந்த நிமிடமே அவன் தமிழன் இல்லை என்றாகி விடும். ஆனால் தமிழ்நாட்டில் அது படிப்படியாக நடைபெறும் அவ்வளவு தான் இங்குள்ள வேறுபாடு.
ஒரு தமிழன் முஸ்லீமாக மாறியதும் அவன் பெரும்பான்மை இந்துக்களாகிய உலகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவோ, ஆதரவளிக்கவோ முடியாது. மாறாகத் தமிழர்களுக்கு இன, மொழிவழியில் எந்த தொடர்புமற்ற அரபுக்கள், பலத்தீனியர்கள் மற்றும் ஆபிரிக்க காப்பிரி முஸ்லீம்களைத் தான் தனது உடன்பிறப்புகளாக (உம்மத்துகளாக) வரித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு முதலுரிமை கொடுத்து அவர்களுக்காக குரலெழுப்ப வேண்டும். இது தான் ஈழவிடுதலைப் போராட்டத்தின் போதும் நடந்தது. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இன்றும் பிரபாகரனைத் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெறுக்கின்றனர், பிரபாகரனின் இறப்பைக் கொண்டாடுகின்றனர். இதில் வேதனைக்குரிய விடயமென்னவென்றால் பிரபாகரனை அண்ணனாக, தலைவனாகக் கருதுவதாகக் கூறும் தமிழ்நாட்டுத் தலித்துகள், பிரபாகரனை வெறுக்கும், பிரபாகரனை இணையத்தளங்களில் இன்றும் தூற்றும் வஹாபி முஸ்லீம்களின் பேச்சில் மயங்கி, அதை நம்பி முஸ்லீம்களாக மதம் மாறுகிறார்கள்.
எடுத்துக் காட்டாக, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்துக்களும், கிறித்தவர்களும் உள்ளனரே தவிர முஸ்லீம்கள் கிடையாது. ஏனென்றால் இலங்கையில் ஒரு தமிழன் முஸ்லீமாக மதம் மாறினால் அவனது இனமும் மாறிவிடும் அவன் இனிமேல் தமிழன் அல்ல அவன் முஸ்லீம் மட்டும் தான். ஆனால் தமிழ்நாட்டில் தம்மைத் தமிழர்கள் என்று தான் கூறிக் கொள்கிறார்கள், ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக அவர்களின் விசுவாசம் மாறி விடும். தமிழினத்திலும். தமிழர்களின் இலக்கியங்களில் அவர்களின் வரலாற்றில், அவர்களின் முன்னோர்களின் கட்டிடக்கலை,  கோயில்கள் என்பவற்றில் அவர்களுக்கும் பங்குண்டு என்ற எண்ணம் மாறி, அரேபியாவைப் பற்றியும் அரேபியர்களின்  வீரத்தையும் அவர்கள் ஏனைய நாடுகளை எப்படிப் பிடித்தார்கள், யூதர்களை எப்படி வென்றார்கள், எப்படியெல்லாம் ஒட்டகம் மேய்த்தார்கள் என்றெல்லாம் எழுதிப் பீற்றிக்  கொள்வார்கள். பாலைவனத்து நாடோடிகளின் ஆடையணிகள், பழக்கவழக்கங்கள், அவர்களின் காட்டுமிராண்டித்தனம் நிறைந்த தண்டனைகளைக் கூட நியாயப்படுத்துவார்கள். தமிழ்முஸ்லீம்களைக் கூலிகளாக மட்டுமன்றி மனிதர்களாகக் கூட மதிக்காத அரபுக்கள் பெரும் செல்வந்தர்களாக இருப்பது இவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறதாம். 
சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு இணையத்தளமொன்றில் நடந்த கருத்துப் பரிமாற்றத்தின் போது ஒரு தமிழ்நாட்டு முஸ்லீம் என்னிடம் இவ்வாறு கூறினார்.
."பொய் பேசக்கூடாது. எப்ப பார்த்தாலும் தமிழன் தமிழன் தமிழன்.தமிழன்னா என்ன?அவன் எங்கிருந்து இறங்கினான்.ஒருவன் தமிழெனென்றால் பெரிய மேன்மை அடைந்தவனோ?"
அவரது கருத்து என்னவென்றால், நான் தமிழன், தமிழன் என்று தமிழர்களைப் பற்றி பேசுவது பொய்யாம். அவர் அரேபிய பாலைவனக் கலாச்சாரத்தின் “மேன்மையை" பற்றிப் பேசி, தமிழர்களை மதம் மாற்றலாம், ஆனால் நான் தமிழரது மேன்மையைப் பற்றிப் பேசியதை அவரால் தாங்க முடியவில்லை. எமது முன்னோர்கள் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா; என்று கூறியதற்கும் அந்த தமிழ்நாட்டு முஸ்லீமின் கருத்துக்குமுள்ள வேறுபாட்டுக்கு விளக்கமேதும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பரவி வரும் தீவிரவாத வஹாபியத்தின் தாக்கத்துக்கு அது நல்ல எடுத்துக்காட்டாகும்.
                                                                       காத்தான்குடி, இலங்கை 
இன்று தமிழ்நாட்டில் ஆதிக்கசாதி வெறியர்களின் கொடுமையினால் முஸ்லீம்களாக மாறும் தலித்து தமிழர்களும், எதிர்காலத்தில் 
தமிழன்னா என்ன?அவன் எங்கிருந்து இறங்கினான்.ஒருவன் தமிழெனென்றால் பெரிய மேன்மை அடந்தவனோ? என்று கேட்கின்ற முஸ்லீம்களாக உருவாக்கப்படுவதன் விளைவை, இருபத்தோராவது நூற்றாண்டிலும் சாதியடிப்படையில், அவர்களின் முன்னோர்கள்  கட்டிய கோயில்களிலேயே, அவர்களை ஒருநாள் கூட வழிபட அனுமதி மறுக்கும் தமிழ்நாட்டுச் சாதிவெறியர்கள் உணரும் காலமேற்படும். இலங்கையில் காத்தான்குடி போன்ற பழந்தமிழ்க் கிராமங்கள் எல்லாம் எவ்வாறு முற்று முழுதாக அரபுமயமாக்கப்பட்டு, தமது தமிழ்ப் பாரம்பரியத்தை இழந்தனவோ அதே நிலை இஸ்லாமிய மதமாற்றங்களால் தமிழ்நாட்டுக் கிராமங்களிலும் ஏற்பட்டு, தமது முன்னோர்களின் சொந்தக் கிராமங்களிலேயே அன்னியர்கள் போன்ற உணர்வு ஆதிக்க சாதிவெறி பிடித்த தமிழர்களுக்கு ஏற்படும்போது தான் அவர்கள் தமது தவறை உணர்ந்து கொள்வர். 

சாதி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் ஆலயங்களில் புகுந்து வழிபடும் நிலையேற்பட, தமிழ்நாட்டு அரசு மட்டுமன்றி,  தமிழர்கள் அனைவரும் ஆவன செய்ய வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு, இரண்டாயிரமாண்டுகளுக்கு மேலாக, அவர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த, இலங்கையின் கிழக்கு மண்ணில், ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை, தமிழ்நாட்டிலும் ஏற்படாதிருக்க, இவ்வாறான மதமாற்றங்கள் நடைபெறுவதற்கான பிரச்சனைகளை அறிந்து சுமுகமாகத் தீர்க்க வேண்டும்.
எவரையும் திட்டமிட்டு மதமாற்றுவதும், மற்றவர்களின் தூண்டுதலால் மதம் மாறுவதும்,  அந்த மதத்தைப் பற்றி நன்கு கற்றறிந்து கொள்ளாமல், தமது கோபத்தை வெளிப்படுத்த அடையாள மதமாற்றம் செய்வதும்/அப்படி அவர்களை மதம் மாற்றுவதும் எல்லோராலும் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமன்றி, இப்படியான சமூகப் பிரச்சனைகளைச் சாட்டாக வைத்து மதமாற்றம் செய்வதற்குக் கழுகு போலக் காத்திருப்பவர்களை சட்டத்தின் மூலம் தடுக்கவும், தண்டிக்கவும் வேண்டும்.   

"…anyone who threatens our values, whether fascists or communists or jihadists or homegrown demagogues, will always fail in the end."                

 -Barack Obama, President of the USA.

3 comments:

கொ. வை.அரங்கநாதன் said...

உண்மையில் கவலை அளிக்கக் கூடிய விஷயம். ஆதிக்க சாதியினர் திருந்துவார்களா?

Ant said...

//ஆனால் அந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களாலேயே முடியாத செயலை, இன்று தமிழ் ஆதிக்க சாதிவெறியர்கள் முடித்துக் காட்டி விடுவார்களோ என்று தான், // இது தலித் அரசியல்வியாதிகளாலும் கம்யூனிஸ்ட்டுகளாலும் அரசியல் லாபங்களுக்காக உருவாக்கப்படுவது. பிற சமுபத்தினர் காலகாலமாக வழிபடும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது என்ற காரணத்தை காட்டி இதுபோன்ற செயல்களால் ஆத்திரம் ஊட்டி அந்த கோவில்களை பூட்டி பயன்படுத்த முடியாதபடி செய்வதே இவர்களின் நோக்கம். உண்மையில் நம்பிக்கை கொண்டவர்கள் கோவில்களை பூட்டிவைக்க விரும்புவதில்லை அதனாலேயே அவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது ஆத்திரம் கொள்கின்றனர். இதையே அரசியல்வாதிகள் வாக்குவங்கி உருவாக்க விரும்புகின்றனர்.
//மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் முஸ்லீம்களாக மதம் மாறியது போன்றே, மீண்டும், சாதிவெறித் தமிழர்களின் கொடுமைகளால் பழங்கள்ளிமேடு கிராமத்தில் தமிழர்கள் முஸ்லீம்களாக மதம்மாற முடிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியைப் பார்த்ததும் எண்ணத் தோன்றுகிறது.// மீனாட்சிபுரத்தில் அணைவரும் மதம் மாறியதாக கூறப்பட்டது இப்போது சுவாதி கொலையாளி குடும்பம் அதில் இருந்து விலக்கப்பட்டதாக அறியப்படுகிறது. எது உண்மை? மொத்தமாக மாற பின்னிருந்து செயல்படும் குழு அதற்கான காரணத்தை ஏற்படுத்த இது போன்ற நிகழ்வுகளை உருவாக்குகின்றனர். அவர்கனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதே சரியானது.

Ant said...

//மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் முஸ்லீம்களாக மதம் மாறியது போன்றே, மீண்டும், சாதிவெறித் தமிழர்களின் கொடுமைகளால் பழங்கள்ளிமேடு கிராமத்தில் தமிழர்கள் முஸ்லீம்களாக மதம்மாற முடிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியைப் பார்த்ததும் எண்ணத் தோன்றுகிறது.// மீனாட்சிபுரத்தில் அணைவரும் மதம் மாறியதாக கூறப்பட்டது இப்போது சுவாதி கொலையாளி குடும்பம் அதில் இருந்து விலக்கப்பட்டதாக அறியப்படுகிறது. எது உண்மை? மொத்தமாக மாற பின்னிருந்து செயல்படும் குழு அதற்கான காரணத்தை ஏற்படுத்த இது போன்ற நிகழ்வுகளை உருவாக்குகின்றனர். அவர்கனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதே சரியானது.
கொள்கிறான். // வாக்கு வாங்கிக்காக அரசியல்வாதிகள் தாங்கள் தான் அதற்கு காரணமாக உள்ளோம் என்பதைகூட இந்து மாதத்தின் மீது திணிக்கின்ற செயலைத்தான் செய்வர். இதற்கு கடவுள் மறுப்பாளராக காட்டிக் கொள்ளும் திராவிட இயங்கத்தினரும் உடைந்தையே. உண்மையில் இஸ்லாம் முழுமையாக இருந்தால் இந்த திராவிட இயக்கதினர் உயிருடன் கூட இருக்க இயலாது என்ற உண்மை புரியாமல் இல்லை. ஆனாலும் அவர்கள் இந்துமாதத்தை எதிர்த்து இஸ்லாமிய எதிரிகளை ஆதரிக்கவே செய்யகின்றனர்.