Wednesday, June 8, 2016

இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியுமொரு சமக்கிருதவெறி?


தமிழிலக்கியங்களில் தமக்குச் சார்பான இடைச்செருகல்களை உண்டாக்கியும். தமிழ்மொழியில் தேவையில்லாமல் சமக்கிருதத்தைக் கலந்தும், தமிழை மணிப்பிரவாளமாக மாற்ற முயன்ற பல சமக்கிருத வெறியர்களிடமிருந்து தமிழைக் காக்க அதற்கென தனித்தமிழ் இயக்கமே தொடங்க வேண்டிய கட்டாயம் ஒருகாலத்தில்  தமிழர்களுக்கிருந்தது. அந்த தமிழறிஞர்களினது அயராத உழைப்பினாலும், தமிழுக்காக தமதின்னுயிரையே ஈந்த பல தமிழர்களாலும் இன்றும் தமிழ்மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் செம்மையும், செழுமையுமுள்ள மொழியாக விளங்குகிறது.

அன்று எவ்வாறு தமிழிலக்கியங்களைத் திரித்தும், சமக்கிருத/வேத/புராண/பார்ப்பனத்  தொடர்புகளை  இட்டுக்கட்டியும், இருக்கிற சில பார்ப்பனத்தொடர்புகளை ஊதிப்பெருக்கியும், தொல்காப்பியரை பிராமணராக்கி, ஒரு தமிழனல்ல, ஒரு 'ஆரியமைந்தன்' தான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தான் ஆகவே தமிழும் சமக்கிருதத்திலிருந்தும், ஆரிய வேதங்களிலிருந்தும் தான் உருவாகியது என்றும், வள்ளுவனும் ஒரு ஆரியத் தந்தைக்குப் பிறந்த கலப்பு மகன் என்றும், கதை விட்டதைப் போலவே இன்றும் சிலர், அதிலும் குறிப்பாக சில பார்ப்பனர்கள், தமிழ்மொழியும், தமிழர்களும் சமக்கிருதத்துக்கும். பார்ப்பனர்களுக்கும் கடமைப்பட்டவர்கள் போல, அல்லது சமக்கிருதத்திலிருந்து தான் தமிழில் எல்லாம் உருவாகின என்று கதை விடுவதற்கென்றே இணையத் தளங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஒருவராகிய நண்பர் ஸ்ரீநிவாசன் ராமகிருஷ்ணன் இன்றைக்கு என்னடாவென்றால் திருமந்திரத்தில் “ஆகமங்கள் எல்லாம் சமஸ்க்ருதத்தில் தானிருந்தன எனத் திருமூலர் கூறுகிறார்” என்று எனது வலைப்பதிவில் பதில் எழுதியிருக்கிறார்.
"திருமந்திரம்/நான்காம் தந்திரம்/திருவம்பலச் சக்கரம். ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும் ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின் ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. திருமூலர் வேதங்கள்/ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் தான் சொல்லப்பட்டவை என்று சொல்லும் பாடல். திரிபு அல்லது இடைசெருகல் என்று சொல்லிவிடலாமா?" - Srinivasan Ramakrishnan
அதாவது “ஆலயவமைப்பு, கிரியை முறைகள், வழிபாட்டு முறைகள் முதலியனவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. ஆலய வழிபாடோ உருவ வழிபாடோ இல்லாத ஆரியர் இந் நூல்களை எவ்வாறு எழுதியிருக்கலாம்? வட மொழியில் இன்றுள்ள ஆகமங்கள் யாவும் திராவிட மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவையாகும். புராணங்களும் இதிகாசங்களும் பெரும்பாலும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட வரலாறுகளைக் கூறுகின்றன. இவை திராவிட மொழிகளில் இருந்திருக்கவேண்டும்.பிராமணர் வடமொழியில் மொழி பெயர்த்தபோது, இவற்றைத் திரித்தும் பெருக்கியும் கட்டுக்கதைகளைச் சேர்த்து தமது கொள்கைகளைப் புகுத்தியும் எழுதினர்." 
என்ற தமிழறிஞர்களின் கருத்தையும், தமிழர்களின் நம்பிக்கையையும் மறுப்பது தான் அவரது நோக்கமாகும்.


உண்மையில் திருமந்திரத்தில் திருமூலர் “வேதங்கள்/ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் தான் சொல்லப்பட்டவை” என்று கூறுகிறாரா என்று திருமந்திரத்தைப் பார்த்தால். அங்கே திருமூலர் என்ன கூறுகிறார் என்றால் “ஓங்காரத்துடன் கூடிய *ஐம்பத்தோரெழுத்துக்களாலாகியது பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும் தொன்மைத் தமிழ்மறையும், முறையும் (ஆகமம்) தான் என்கிறார். (ஐம்பத்தோரெழுத்துக்கள் என்பது 51 தமிழ்ச்சொற்களைக் குறிக்கின்றன). அதாவது தொல்காப்பியர் குறிப்பிடும் தமிழர்களின், தொன்மையான தமிழ் நான்மறைகளைத் தான் திருமூலரும் குறிப்பிடுகிறார்.


அஞ்சொல்:  சிவாயநம

சி - சிறப்பு
 வ  - வனப்பு
ய- யாப்பு
ந- நடப்பு
ம- மறைப்பு

பார்த்தீர்களா,  இருபத்தோராவது நூற்றாண்டிலே, அதுவும்  நாங்கள் தமிழர்கள் எல்லாம் 24 மணிநேரமும் கணணியும் கையுமாக இருக்கும் இந்தக் காலத்திலேயே இப்படியென்றால், அந்தக் காலத்தில் எத்தனை சுத்து மாத்துகள் நடந்திருக்கும். :-)
*


Ref: http://www.siththarkal.info/2013/04/secret-of-thirumantra-01.html
TVU

19 comments:

நம்பள்கி said...

Very well written!

Srinivasan Ramakrishnan said...

இருப்பத்தோராம் நூற்றாண்டில் இப்படி ஒரு சமஸ்க்ருத வெறி, இதே கேள்வியை நான் திருப்பி கேட்கிறேன். ஆங்கிலேயர்கள் நம்மை பிரித்தாளுவதற்க்கு வசதியாக சொன்ன ஆரிய திராவிட கதையை நம்பி, திராவிட கட்சிகள் ஏற்படுத்திய பிராமண, சமஸ்க்ருத வெறுப்பை நம்பி இருப்பத்தோராம் நூற்றாண்டில் இன்னும் இப்படி ஒரு சமஸ்க்ருத வெறி, பார்ப்பண துவேஷம்.

உண்மையை சொன்னால் சமஸ்க்ருத வெறியரா, பலே. அப்போ நீங்கள் என்ன வெறியர். நீங்கள்தான் சொல்கிறீர்கள் ஆரியர்கள் உருவ வழிபாடு அற்றவர்கள் என்று. ஆனால் எல்லோரும் ஆரியர்கள் தான் வேள்வி,உருவ வழிபாடு எல்லாம் கொண்டு வந்தார்கள் என்றும் தமிழர்கள் இயற்கையை வழிப்பட்டார்கள் என்று சொல்கிறார்கள். உங்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை. பல முரண்கள்.

"ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு.." - சம்பந்தர்.

சங்கதம் என்று சமஸ்க்ருதத்தை சொல்கிறார் சம்பந்தர். எனவே திருமந்திரம் பாடல் சொல்லும் 51 எழுத்து சமஸ்க்ருததையே குறிக்கும்.

திருமூலர் காலத்தில் 51 எழுத்துக்கள் இருந்தன என்கிறீர்கள். திருமூலரின் காலம் என்ன? தொல்காப்பியருக்கு முன்பா இல்லை தொல்காப்பியருக்கு பிறகா? தொல்காப்பியத்தில் இதை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா?

வெறுப்பாளர்கள் ஏற்கவில்லை என்பதால் உண்மை இல்லை என்று ஆகிவிடாது.

63. இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு1 வாய்நின்ற கண்ணனு மாமே.

(ப. இ.) இருக்காகிய மந்திரங்களின் தொகுப்பு ஆதிமறை என்ப. அம் மறையினுள் உணர்வையுருக்கும் பொருள்சேர் புகழ்ப் பாடலால் சிறந்தனவற்றை விருப்புடன் சிவவேதியர் சொல்லுவர். கண்ணன் முதலிய தேவர்கட்கும் மூலகுருவாய் எழுந்தருளுபவன் சிவனே. கண்ணன் முக்கண்ணன் எனலுமாம்.

(அ. சி.) இருக்கு உருவாம் எழில் வேதம் - இருக்கு என்று சொல்லப்படுகின்ற சுலோகங்களையுடைய ஆரிய வேதம்.பாருங்கள் இங்கே அதே உரை ஆசிரியர் ஆரிய வேதம் என்கிறார்.

ravikumar said...

Sankrit is a treassure

நம்பள்கி said...

ravikumar said...

Sanskrit is a [stolen] treasure from the "One and the Only" surviving செம்மொழி in the Indian [sub]continent...

செங்கதிரோன் said...

kudos for contiously enlightening us about the orignality of tamil language ..

நம்பள்கி said...

மனசு ஆறலை!
தமிழ் புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள் எல்லாம் இப்படி பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்களே! ஆம்! ஏன் இப்படி கோழைகளாக இருக்கிறார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி; உண்மையை சொல்வதற்கு என்ன தயக்கம்? அல்லது பயம்?

தமிழும் தெரியாமல், சமஸ்க்ரிதம் என்றால் கிலோ என்ன விலை என்று சொல்பவர்களும் தமிழை மட்டம் தட்ட---இடை செருகல்கள் மூலம் புளுவுவது வாடிக்கை. நம்ம ஸ்ரீநிவாசன் ஒரு உதாரணம்!

I believe the Tamil Scholars are mortally afraid of speaking the truth as they are afraid of the Sanskrit lobby.

சும்மா உலகம் முழுவதும் சுற்றி தமிழ் பெருமை பேசினா பத்தாது! சமஸ்க்ரித lobby புளுகி இடை செருகல்கள் செய்யும் போது தடுக்கணும்! சும்மா தமிழ் புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிவதில் ஒரு அர்த்தம் இல்லை---At least, இதற்கு கருத்து சொல்ல கூட முடியாதா?

நம்பள்கி said...

ஸ்ரீநிவாசன்:
நீங்க ஆரம்பித்த "51"--க்கு...
வியாசன் அவர்களின் பதில் வாதத்திற்கு உங்க பதில் என்ன? அதை முதலில் சொல்லவும். பிறகு ஏனைய...நீங்க ஆரம்பித்ததை நீங்களே முடியுங்களேன்!

viyasan said...

@Srinivasan Ramakrishnan,

//ஆங்கிலேயர்கள் நம்மை பிரித்தாளுவதற்க்கு வசதியாக சொன்ன ஆரிய திராவிட கதையை நம்பி, திராவிட கட்சிகள் ஏற்படுத்திய பிராமண, சமஸ்க்ருத வெறுப்பை நம்பி இருப்பத்தோராம் நூற்றாண்டில் இன்னும் இப்படி ஒரு சமஸ்க்ருத வெறி, பார்ப்பண துவேஷம். ///

இந்தக் கருத்தை நீங்கள் ஆங்கிலேயர் காலத்திலேயே கூறியிருந்தால், அதில் ஏதாவது உண்மையிருக்கிறதா என்று நிச்சயமாக தமிழர்கள் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள். ஆனால் நீங்கள் (குறிப்பாக பார்ப்பனர்கள்) ஆங்கிலேயர் காலத்தில் அவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறவும், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கவும்அவர்களுடன் சேர்ந்து அவர்களில் ஒருவராக, அவர்களுடன் ஒட்டிக் கொள்வதற்காக, அதாவது நீங்களும் ஆரியர்கள் எனக் கூறிக் கொண்டிருந்தீர்கள். ஆரியர் என்ற அடிப்படையில் Helena Blavatsky, Henry Steel Olcott போன்ற நாசிகளுக்கும், அநகாரிக தர்மபால போன்ற நாசி ஆதரவாளர்களுடன் கூட்டுச் சேர்ந்தீர்கள். ஆனால் இக்காலத்தில் மண்ணின் மைந்தர்களாகிய பிராமணரல்லாதோர் விழித்துக் கொண்டனர். ஆனால் இப்பொழுது ஆரியக்கருத்தால் இலாபமேதுமில்லாததால் நீங்களும் மண்ணின் மைந்தர்கள் என்று நிறுவும் ஆசையில் ‘ஆரியப்படையெடுப்பு’ என்பது பொய் என்று கூச்சலிடுகிறீர்கள் என்று நினைப்பதில் என்ன தவறு?

இந்தியாவிலுள்ள பார்ப்பனர்கள் தான் ஆரியப்படையெடுப்பு நடக்கவில்லை என்று வாதாடுகிறார்கள் ஆனால் வெளிநாட்டில் வாழும் பல பார்ப்பனர்கள் இன்றைக்கும் தம்மை ஆரியர்கள் என்று வெள்ளைக்காரர்களுக்குச் சொல்லிக் கொள்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த அடிப்படையில் யூதர்களை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் கூட உள்ளனர். :-)///உண்மையை சொன்னால் சமஸ்க்ருத வெறியரா, பலே. ///

நீங்கள் பொய்களைத் திரித்து உண்மையாக்க முயல்கிறீர்கள். உங்களைப் போன்றவர்களின் சமக்கிருத வெறி தான் தொல்காப்பியரை ஆரியமைந்தன் (பிராமணன்) ஆக்கியது. வள்ளுவருக்குப் பூணூல் போட்டு விட்டது. இடைச்செருகல்களையும், கட்டுக்கதைகளையும் இயற்றியது. தமிழ்நாட்டில் தமிழர்கள் தமது இரத்தத்திலும், வேர்வையிலும் கட்டிய கோயில்களுக்குப் புராணக்கதைகளை இயற்றி பார்ப்பனமயமாக்கியது. அது மட்டுமன்றி தூய தமிழ் ஊர்ப்பெயர்களைக் கூட சமக்கிருதமாக்கியது. இவ்வாறுசொல்லிக் கொண்டே போகலாம். இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் அந்தப் பார்ப்பனப் பொய்களையும், புனைகதைகளையும் நியாயப் படுத்த முயலும் உங்களைப் போன்ற அனைவருமே என்னைப் போன்ற தமிழர்களின் கண்களுக்கு சமக்கிருத வெறியர்கள் தான். அவர்கள் மீது தமிழர்கள் எப்போதும் ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆரியக்கூத்தாடிகள் தமிழுக்கும், தமிழினத்துக்கும் செய்த அழிவுகள் கொஞ்ச நஞ்சமன்று.

நம்பள்கி said...

ஊர் பேர்களை கூட பார்ப்பன [சமஸ்க்ரித்த ஜால்ரா} பெயர்களாக மாற்றியுள்ளீர்...
உதாரணம்...மாயுரம், வேதாரண்யம்...

அப்ப ஊடகங்கள் பார்பனர்கள் கையில்..இன்றும் தான்...
ஆனாலும், இணையம் எங்களுக்கும் சொந்தம்!

viyasan said...

@Srinivasan Ramakrishnan,

//ஆரியர்கள் உருவ வழிபாடு அற்றவர்கள் என்று. ஆனால் எல்லோரும் ஆரியர்கள் தான் வேள்வி,உருவ வழிபாடு எல்லாம் கொண்டு வந்தார்கள் என்றும் தமிழர்கள் இயற்கையை வழிப்பட்டார்கள் என்று சொல்கிறார்கள். உங்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை. பல முரண்கள்.///

ஆரியர்கள் உருவ வழிபாடு அற்றவர்கள். அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வரும்போது ஒரு சில வெறும் நாடோடிப்பாடல்களும், ஒரு கிடங்கை வெட்டித் தீ வளர்த்து மாட்டை அதில் BBQ செய்து அவர்களின் கடவுள்களுக்கும் படைத்து, அவர்களும் புசிப்பது மட்டும் தான் அவர்கள் கொண்டு வந்தது. உருவ வழிபாடு, கோயில் கட்டுவது மட்டுமன்றிப் பூக்களினால் பூசை செய்யவும் அவர்கள் கற்றுக் கொண்டதே மண்ணின் மைந்தர்களாகிய தமிழர்களிடம் தான் (தமிழர்கள் இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்தனர். அக்காலத்தில் தமிழ் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி என்கிறார் அண்ணல் அம்பேத்கர்). பூசை என்பதே தமிழ்ச் சொல் தானே தவிர சமக்கிருதம் அல்ல. பூசை என்ற சொல்லே இல்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியானது என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.


/"ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு.." - சம்பந்தர்.
சங்கதம் என்று சமஸ்க்ருதத்தை சொல்கிறார் சம்பந்தர். எனவே திருமந்திரம் பாடல் சொல்லும் 51 எழுத்து சமஸ்க்ருததையே குறிக்கும்.///

திருமூலர் சங்கதம் என்ற சொல்லை சமஸ்கிருதத்துக்கு நீங்கள் குறிப்பிட்ட திருவம்பலச் சக்கரப் பாடலில் கூறுகிறாரா, இல்லையே. அவ்வாறிருக்க, சம்பந்தர் சங்கதம் என்பது, எவ்வாறு திருமந்திரம் சொல்லும் 51 எழுத்தும் ‘சமஸ்க்ருதத்தையே குறிக்கும் என்பதை விளக்குவீர்களா?

ஆதாரமின்றி கண்டதையும் உளறி மூக்குடைபட்டுக் கொள்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா. முதலில் தொல்காப்பியர் ஒரு பிராமணர் என்றீர்கள் அதற்கு தொல்காப்பியத்திலேயே எந்தச் சான்றும் கிடையாது என்றதும், திருமூலர் “வேதங்கள்/ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் தான் சொல்லப்பட்டவை” என்றீர்கள். அவரும் சமஸ்கிருதம் என்ற சொல்லையே பாவிக்கவில்லை, அதன் உரையிலும் அப்படியில்லை. “ஐம்பத்தோரெழுத்துக்களாலாகியது பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும்தொன்மைத் தமிழ்மறையும், முறையும் (ஆகமம்) “ என்பதைக் காட்டியதும் இப்பொழுது என்னடாவென்றால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய திருமூலரின் கருத்துக்கு ஆதாரமாக, தமிழிலிருந்து சமைக்கப்பட்ட மொழியாகிய சமக்கிருதம், தமிழர் மத்தியில் வேரூன்றிய பின்னர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டு சம்பந்தரைத் துணைக்கழைத்து வருகிறீர்கள். அதிலுள்ள அபத்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேடிக்கை.

இந்தத் தேவாரத்தின் கருத்தையாவது படித்துப் பார்த்தீர்களா? தமிழில் சங்கதம் என்பதன கருத்து சமைக்கப்பட்ட கதம் (கதை). அதைப் பின்பு விரிவாகப் பார்ப்போம்.

//திருமூலர் காலத்தில் 51 எழுத்துக்கள் இருந்தன என்கிறீர்கள். திருமூலரின் காலம் என்ன? தொல்காப்பியருக்கு முன்பா இல்லை தொல்காப்பியருக்கு பிறகா? தொல்காப்பியத்தில் இதை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா? ///

ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பார்கள், அதனால் தான் இப்படி அடிக்கடி தாவுகிறீர்கள். திருமூலர் காலத்தில் 51 எழுத்துக்கள் மட்டுமிருந்ததாக நான் கூறவில்லை. திருமந்திரத்தில் 51 எழுத்துக்களும் தமிழிலுள்ள எழுத்துக்களையும், அது பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும்தொன்மைத் தமிழ்மறையும், முறையும் (ஆகமம்) “ குறிக்கிறது என்கிறேன் நான். அதற்கு ஆதாரமாக தமிழறிஞர்களின் ஆய்வின் உரையையும் ஆதாரம் காட்டியுள்ளேன். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது விட்டால் அது தவறு என்று நிரூபிக்க வேண்டுமே தவிர, ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு தாவக் கூடாது.


//63. இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு1 வாய்நின்ற கண்ணனு மாமே.//

இதற்கு வேறு பொருளும் உண்டு:

பூனையை ஒத்த புறத்தோற்றம் உடைய வேதியர்கள் சொல்கின்ற, பிறப்பை உடைய ஆசிரியனாகிய மாயோன் றானும், மந்திரவடிவாகிய எழுச்சியான ஓசையை உடைய கன்ம காண்டத்துள் உள்ளத்தை உருக்குகின்ற அன்புருவாயும், ஞான காண்டத்துள் கேள்வி, ஆய்வு முதலியவற்றால் துணியப்படும் மெய்ப் பொருளாயும் உயர்ந்து நிற்பவனாவனோ? ஆகான்.

நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருப்பது திருமூலர் வேதங்கள்/ஆகமங்கள் சமஸ்க்ருதத்தில் தான் சொல்லப்பட்டவை என்று கூறுகிறாரா என்பது. மேலேயுள்ள திருமந்திரத்தில் அவ்வாறு கூறுகிறாரா? தயவு செய்து அங்குமிங்கும் தாவாமல் பதிலேழுதிப் பழகுங்கள்.

viyasan said...

நம்பள்கி அண்ணா,

நன்றி :-)

Srinivasan Ramakrishnan said...

//திருமூலர் சங்கதம் என்ற சொல்லை சமஸ்கிருதத்துக்கு நீங்கள் குறிப்பிட்ட திருவம்பலச் சக்கரப் பாடலில் கூறுகிறாரா, இல்லையே//

திருமூலர் 51 எழுத்துக்கள் தமிழ் என்று குறிப்பிட்டு உள்ளாரா? அவர் 51 எழுத்துக்களால் ஆன வேதம் என்று மட்டும் தான் குறிப்பிடுகிறார். அந்த 51 எழுத்து தமிழ் எழுத்து தமிழ் எழுத்து என்று சொல்லவில்லை. உரை ஆசிரியர் தான் அது தமிழ் எழுத்து என்று கூறுகிறார்.

வேதங்கள் சொல்லப்பட்டது சமஸ்க்ருதத்தில் தான் என்று நான் சொல்வதற்கே சம்பந்தர் பாடலை உதாரணம் கூறினேன். வேத,ஆகமம் என்று சேர்த்துதான் சொல்வார்கள். சம்பந்தர் அந்த இடத்தில் மந்திரம் என்று சொல்வது வேதத்தையே குறிப்பிடும். இதை சொன்னால் உடனே தாவுகிறேன் என்று சொல்கிறீர்கள். சம்பந்தருக்கு தெரியாததா இந்த உரை ஆசிரியர்க்கும், நீங்கள் உதாரணமாக கூறிய தமிழ் அறிஞர்களுக்கும் தெரிந்து விட்டது.

//ஆரியர்கள் உருவ வழிபாடு அற்றவர்கள். அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு வரும்போது ஒரு சில வெறும் நாடோடிப்பாடல்களும், ஒரு கிடங்கை வெட்டித் தீ வளர்த்து மாட்டை அதில் BBQ செய்து அவர்களின் கடவுள்களுக்கும் படைத்து, அவர்களும் புசிப்பது மட்டும் தான் அவர்கள் கொண்டு வந்தது. //

முதலில் ஆரியர்கள் எப்போது வந்தார்கள் என்று கூறுங்கள்? மாக்ஸ்முல்லர் கூறுவதற்கு முன் எங்காவது சொல்லப்பட்டு உள்ளதா? ஆரியன் என்றால் என்ன? சிவபெருமானை ஆரியனே என்கிறார் மாணிக்கவாசகர். அப்படியானால் சிவன் ஆரியரா? சிவபெருமானிடம் உபதேசம் பெற்ற திருமூலர் ஆரியரா?

//திருமூலர் காலத்தில் 51 எழுத்துக்கள் இருந்தன என்கிறீர்கள். திருமூலரின் காலம் என்ன? தொல்காப்பியருக்கு முன்பா இல்லை தொல்காப்பியருக்கு பிறகா? தொல்காப்பியத்தில் இதை பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா? ///

//ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்பார்கள், அதனால் தான் இப்படி அடிக்கடி தாவுகிறீர்கள். திருமூலர் காலத்தில் 51 எழுத்துக்கள் மட்டுமிருந்ததாக நான் கூறவில்லை. திருமந்திரத்தில் 51 எழுத்துக்களும் தமிழிலுள்ள எழுத்துக்களையும், அது பொதுவும் சிறப்புமாகக் கூறப்படும்தொன்மைத் தமிழ்மறையும், முறையும் (ஆகமம்) “ குறிக்கிறது என்கிறேன் நான். அதற்கு ஆதாரமாக தமிழறிஞர்களின் ஆய்வின் உரையையும் ஆதாரம் காட்டியுள்ளேன். உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது விட்டால் அது தவறு என்று நிரூபிக்க வேண்டுமே தவிர, ஒன்றை விட்டு மற்றொன்றுக்கு தாவக் கூடாது. //

தாவுவது யார்?
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்புவது யார்? நான் கேட்ட கேள்வி திருமூலர் காலம்? திருமூலரின் காலம் தொல்காப்பியருக்கு முன்பா? இல்லை பிறகா? என்று. தொல்காப்பியர்க்கு முன் என்றால் தொல்காப்பியத்தில் தமிழில் 51 எழுத்துக்கள் இருந்ததை பற்றி சொல்லி இருப்பார் என்றே அந்த கேள்வியை கேட்டேன். அதற்க்கு பதில் சொல்லாமல் வேறு ஏதோதோ சொல்லிவிட்டு நான் தாவுவதாக சொல்கிறீர்கள்.
------------------------------------------------------
//(தமிழர்கள் இந்தியா முழுவதும் பரந்து வாழ்ந்தனர். அக்காலத்தில் தமிழ் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி என்கிறார் அண்ணல் அம்பேத்கர்). பூசை என்பதே தமிழ்ச் சொல் தானே தவிர சமக்கிருதம் அல்ல. பூசை என்ற சொல்லே இல்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியானது என்பதை சிந்தித்துப் பார்க்கவும்.//

அதே அம்பேத்கர் தான் ஆரிய படையெடுப்பை ஒரு கட்டுக்கதை என்கிறார். சமஸ்க்ருதத்தை ஆட்சி மொழியாக்கவும் அவர் சட்டம் கொண்டு வர எண்ணினார்.

பூசை என்ற சொல்லே வட மொழியில் இல்லை. பூஜா என்பது என்னவாம். தயவு செய்து பூசையை தான் பூஜா என்று மாற்றிவிட்டார்கள் என்று சொல்லவேண்டாம்.
நான் பலமுறை பதிவு செய்தும் பிரசுரிக்க மறுக்கும் தொல்காப்பிய செய்யுள் வடசொல் கொண்டு செய்யுள் செய்யலாம் என்று என்பதற்கு என்ன சொல்லபோகிறீர்கள்.
தமிழ் இலக்கணம் எழுத்தும் போது அங்கே வடமொழியும் இருந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. வட மொழிக்கு எழுத்து இல்லாமலா வடஎழுத்து ஓரியி என்றார்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு பத்தி சொல்ல பழகுங்கள், பிறகு என்னை குறை சொல்லவும்.
முதலில் தமிழில் 51 எழுத்துக்கள் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.
தொல்காப்பிய செய்யுள் வடசொல் கொண்டு செய்யுள் செய்யலாம். இதற்க்கு பதில் சொல்லுங்கள்

Srinivasan Ramakrishnan said...

#நம்பள்கி
ஊர் பெயர்களை மாற்றியது பாரப்பனர்கள் அல்ல. திருமுறைகள் பாடிய பிராமணர்களான சம்பந்தர் மாணிக்கவாசகர் போன்றோர் தூய தமிழில் தான் பாடி உள்ளார்கள். தலத்தின் பெயர்களையும் தூய தமிழில்தான் சொல்லி உள்ளார்கள். (ex: திருமறைக்காடு, ஆலவாய், திருவெண்காடு என்று).

ஒத்து ஊதுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாது போல உங்களுக்கு.

Srinivasan Ramakrishnan said...

#நம்பள்கி
//தமிழ் புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள் எல்லாம் இப்படி பயந்தாங்கொள்ளிகளாக இருக்கிறார்களே! ஆம்! ஏன் இப்படி கோழைகளாக இருக்கிறார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி; உண்மையை சொல்வதற்கு என்ன தயக்கம்? அல்லது பயம்?//

தமிழ் அறிஞர்கள் திராவிடவாதிகளுக்கு பயந்தும், சுய நலத்திற்காகவும் தான் சம்ஸ்க்ருதமும், தமிழும் இந்த மண்ணின் மொழிகள், இரு கண்கள் என்று சொல்ல தயங்குகின்றனர்.

viyasan said...

@Srinivasan Ramakrishnan

//திருமூலர் 51 எழுத்துக்கள் தமிழ் என்று குறிப்பிட்டு உள்ளாரா? அவர் 51 எழுத்துக்களால் ஆன வேதம் என்று மட்டும் தான் குறிப்பிடுகிறார். அந்த 51 எழுத்து தமிழ் எழுத்து தமிழ் எழுத்து என்று சொல்லவில்லை. உரை ஆசிரியர் தான் அது தமிழ் எழுத்து என்று கூறுகிறார். ///

இதற்கு பிந்திய பதிவில் பதிலுள்ளது போய்ப் பார்க்கவும்/

//வேதங்கள் சொல்லப்பட்டது சமஸ்க்ருதத்தில் தான் என்று நான் சொல்வதற்கே சம்பந்தர் பாடலை உதாரணம் கூறினேன். வேத,ஆகமம் என்று சேர்த்துதான் சொல்வார்கள். சம்பந்தர் அந்த இடத்தில் மந்திரம் என்று சொல்வது வேதத்தையே குறிப்பிடும். ///

சமபந்தர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில் அவரது காலத்தில் தமிழர்களின் நான்மறைகளும், தமிழ் ஆகமங்களும் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டு, பார்ப்பனச் சார்பான இடைச்செருகல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தமிழ்மறைகளும், முறைகளும் (ஆகமங்கள்) பார்ப்பனர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆகவே சமபந்தர் காலத்தில் சமக்கிருத வேதங்கள் தான் இருந்தன. அதை அவர் குறிப்பிட்டிருக்கலாம். சம்பந்தருக்கு முந்தியவராகிய திருமூலர் காலத்தில் கூறப்பட்டவற்றுக்கு ஆதாரமாக, அவருக்குப் பின்னால் சமக்கிருதமும் பார்ப்பனீயமும் தமிழ்மண்ணில் வேரூன்றிய காலத்தில் வாழ்ந்த சம்பந்தரை ஆதாரம் காட்டுவது வெறும் முட்டாள் தனம் மட்டுமல்ல வெறும் கோமாளித்தனமுமாகும்.

viyasan said...

@Srinivasan Ramakrishnan

//கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் மழுப்புவது யார்? நான் கேட்ட கேள்வி திருமூலர் காலம்? திருமூலரின் காலம் தொல்காப்பியருக்கு முன்பா? இல்லை பிறகா? ///

இது கூடத் தெரியாமலா, தொல்காப்பியத்தைக் கரைத்துக் குடித்தவர் போல இவ்வளவு காலமும் தொல்காப்பியர் ஒரு பார்ப்பான் என்று பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டு வந்தீர்கள். வட்டேழுத்துக் காலத்தில் தான் தமிழில் உயிர், மெய் சேர்த்து 51 எழுத்துக்கள் இருந்தன. ஆகவே திருமூலர் வட்டெழுத்துக் காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதினால் அவர்க் தொல்காப்பியத்துக்குப் பிந்தியவர். திருமூலர் 51 சொற்கள் என்று குறிப்பிட்டவை சமக்கிருதச்சொற்கள் தான் என்று அடித்துக் கூறிய போது என்ன ஆதாரத்துடன் கூறினீர்கள்.. திருமூலர் எங்காவது அப்படிக் கூறியிருக்கிறாரா. தொல்காப்பியரை பார்ப்பானாக்கிய கதை போன்றது தான் அதுவுமல்லவா?//அதே அம்பேத்கர் தான் ஆரிய படையெடுப்பை ஒரு கட்டுக்கதை என்கிறார். சமஸ்க்ருதத்தை ஆட்சி மொழியாக்கவும் அவர் சட்டம் கொண்டு வர எண்ணினார்.///

சமஸ்கிருத்தை ஆட்சி மொழியாக்க இக்காலத்தில் இந்துத்துவாக்களும் தான் முயல்கிறார்கள் ஏனென்றால் இக்கால இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் அதிகம். அதற்காக அவர் தமிழ் பற்றிக் கூறியது பொய் என்கிறீர்களா

//பூசை என்ற சொல்லே வட மொழியில் இல்லை. பூஜா என்பது என்னவாம். தயவு செய்து பூசையை தான் பூஜா என்று மாற்றிவிட்டார்கள் என்று சொல்லவேண்டாம். //

பூசை என்ற சொல்லே வடமொழி இல்லை. அது தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டு பூஜா ஆக்கப்பட்ட சொல் என்பதற்கு ஆதாரம் என்னுடைய வலைப்பதிவிலேயே உள்ளது. தேடுங்கள் கிடைக்கப்படும்.

//நான் பலமுறை பதிவு செய்தும் பிரசுரிக்க மறுக்கும் தொல்காப்பிய செய்யுள் வடசொல் கொண்டு செய்யுள் செய்யலாம் என்று என்பதற்கு என்ன சொல்லபோகிறீர்கள்.///

இதுவும் தொல்காப்பியத்திலுள்ள பார்ப்பன இடைச்செருகல்களில் ஒன்று என்றும் கூறுவர்.

//தமிழ் இலக்கணம் எழுத்தும் போது அங்கே வடமொழியும் இருந்துள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. வட மொழிக்கு எழுத்து இல்லாமலா வடஎழுத்து ஓரியி என்றார்.

ஒரிஇ என்றால் தமிழில் தவிர் அல்லது ஒதுக்கு/விலக்கு என்று தான் பொருள். :-)

viyasan said...

நாயன்மார்கள் எல்லாம் அக்கால வழக்கப்படி தூய தமிழ்ப்பெயர்களைத் தான் கூறியுள்ளார்கள். ஆனால் நாயக்கர் காலத்தில் தெலுங்குப் பார்ப்பான்களின் கைகளில் கோயில்கள் போனதும் அவர்கள் தமிழ்ப்பெயர்கள் பலவற்றை சமக்கிருதமயமாக்கி விட்டனர். பழமையான தமிழ்நாட்டுக் கோயில்களில் அம்மை, அப்பனுடைய பெயர்கள் - பிறைநுதலாள், மாதுமையாள், பிறையணிந்த பெருமான், பெருவுடையார் என்ற அழகான தமிழ்பெயர்களை மாற்றி குசலாம்பிகா, குசுவாம்பிகா என்று அசிங்கமான சமக்கிருதப் பெயர்களை வைத்துள்ளனர் பார்ப்பனர்கள். அவற்றை நாம் தமிழர்கள் இனிமேலாவது மாற்றவேண்டும் சமக்கிருதப் பெயர்களைக் கோயில்களில் எழுதுவதையும், பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

viyasan said...

//தமிழ் அறிஞர்கள் திராவிடவாதிகளுக்கு பயந்தும், சுய நலத்திற்காகவும் தான் சம்ஸ்க்ருதமும், தமிழும் இந்த மண்ணின் மொழிகள், இரு கண்கள் என்று சொல்ல தயங்குகின்றனர்.///

இருகண்கள் எல்லாம் கிடையாது. சமஸ்கிருதம் வேண்டுமானால் தமிழ்மண்ணில் தமிழுக்கு சாமரம் வீசலாமே தவிர, கண் எல்லாம் கேட்கப்படாது. :-)

Srinivasan Ramakrishnan said...

வேதங்கள் சமஸ்க்ருதத்தில் தான் சொல்லப்பட்டது என்று நான் திருமந்திரத்தில் உள்ள பாடல் ஒன்றை உதாரணம் சொல்லி சொன்னேன். நீங்கள் அதற்கு இல்லையில்லை திருமந்திர பாடல் கூறும் 51 எழுத்துக்கள் தமிழில் இருந்த 51 எழுத்துக்கள் என்றீர்கள்.

திருமூலர் காலம் வட்டெழுத்து காலம், வட்டெழுத்துக் காலத்தில் தமிழில் உயிர், மெய் எழுத்துக்கள் மொத்தம் 51 இருந்தன என்றீர்கள். நான் திருமூலர் காலம் தொல்காப்பியருக்கு முன்பா? இல்லை பிறகா என்று கேட்டதற்கு தாங்கள் அளித்த பதில் கீழே.

//இது கூடத் தெரியாமலா, தொல்காப்பியத்தைக் கரைத்துக் குடித்தவர் போல இவ்வளவு காலமும் தொல்காப்பியர் ஒரு பார்ப்பான் என்று பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டு வந்தீர்கள். வட்டேழுத்துக் காலத்தில் தான் தமிழில் உயிர், மெய் சேர்த்து 51 எழுத்துக்கள் இருந்தன. ஆகவே திருமூலர் வட்டெழுத்துக் காலத்தில் வாழ்ந்தவர் என்று கருதினால் அவர் தொல்காப்பியத்துக்குப் பிந்தியவர். //
-------------------------------------------------------------
1. தொல்காப்பியம் உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18 என்று தான் கூறுகிறது.
2. உங்கள் கூற்றுப்படி திருமூலர் தொல்காப்பியர்க்கு பிறகு தோன்றியவர். அவர் காலத்தில் தமிழில் 51 எழுத்துக்கள்.
3. அப்படியானால் புதிய எழுத்துக்கள் எப்போது சேர்க்கப்பட்டன. எங்கே சொல்லப்பட்டு உள்ளது. இலக்கண விதி முறைகள் பற்றி ஏதேனும் நூல் உள்ளதா?
4.அப்படியானால் தொல்காப்பியருக்கு பிறகுதான் தமிழ் நான்மறை தோன்றியதா? (ஏனென்றால் நீங்கள்தான் சொன்னீர்கள் 51 எழுத்துக்களால் ஆன தமிழ் நான்மறை என்று.)
5. தொல்காப்பியர் நான்மறை பயின்றவர் என்று பாயிரத்தில் சொல்லப்பட்டு உள்ளது. அந்த நான்மறை கண்டிப்பாக 51 தமிழ் எழுத்துக்களாக இருக்க வாய்ப்பில்லை. அது என்ன நான்மறை?. இவர் படித்த நான்மறைக்கும், திருமூலர் சொன்ன 51 எழுதுக்காளால் ஆன வேதத்துக்கும் என்ன வேறுபாடு?