Wednesday, June 15, 2016

குரு தமிழ்ச்சொல்லே - தமிழெதிர்ப்பு வெறி பார்ப்பனர் கண்களை மறைக்கிறது.


"There is no other language in the whole world as Tamil, that has suffered so much damage by natural and human agencies, and has been done so much injustice by malignant foreigners and native dupes." - Pavanar_ 

தமிழின் மீட்பர் தேவநேயப் பாவாணரை சமக்கிருதவெறியர்கள் இன்றும் வெறுப்பதற்குக் காரணம் அவர் தனது காலத்தில் வடமொழி வெறியர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழை ஆராய்ந்து,  அவர்கள் உயர்ந்த மொழியாக, எல்லா மொழிகளினதும் தாயெனப் பொய்ப்பிரச்சாரம் செய்கின்ற சமக்கிருதத்திலுள்ள முக்கியமான, பெரும்பான்மையான சொற்கள் எல்லாம் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டு, உருமாற்றப்பட்ட சொற்களேயென நிறுவியதால் தான். 


பெரும்பான்மைத் தமிழர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக, கணணியும் கையுமாக, பார்ப்பனச்சதிகளை நன்கறிந்தவர்களாக உள்ள இந்தக் காலத்திலேயே உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்து, தமிழும் தமிழர்களும் சமக்கிருதத்துக்கும், பார்ப்பனர்களுக்கும் ஏதோ கடமைப்பட்டவர்கள் போல் திரிபுபடுத்தி, ஊதிப்பெருக்கி எழுதும் பார்ப்பனர்கள், பாவாணர் காலத்திலும் அதற்கு முன்பும் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் எனச் சிந்தித்துப் பார்க்கும்போது தான், தனது வாழ்நாள் முழுவதையும் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுத் தமிழை மீட்ட தேவநேயப் பாவாணருக்கும், பார்ப்பனச் சதியினால் தமிழ் மணிப்பிரவாளமாகி, இன்னொரு மலையாளமாகித் தமிழினமே சிதைவுற்றுப் போகாமல் தமிழைக் காக்க தனித்தமிழ் இயக்கம் தொடங்கிய மறைமலையடிகளுக்கும் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வு தமிழர்களுக்கு ஏற்படுகிறது.

பூசை என்ற தமிழ்ச் சொல்லை சமக்கிருதம் இரவல் வாங்கியது என்ற உண்மையை வடமொழி வல்லுனர்கள் ஒப்புக் கொண்ட பின்பும், சமக்கிருதவெறி பிடித்த ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன் போன்ற பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து அடம்பிடிப்பார்கள் என்பதால் தான் அந்த நூலின் பக்கத்தையே அப்படியே படம் பிடித்துப் போட்டேன். அதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் அவர். இப்பொழுது என்னடாவென்றால் குரு என்பது தமிழ்ச் சொல் அல்ல என்று அடம்பிடிக்கிறார்.

மலேசிய தமிழறிஞர் இர. திருச்செல்வனார் கூறியது போல, நாங்கள் தமிழர்கள், போரிலும் அறப்போர் நடத்தியவர்கள், ஆகவே தமிழுக்கும் - சமக்கிருதத்துக்குமிடையிலான சொல் உரிமைப்போரிலும் எமது கருத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுவோம். ஆனால் ஸ்ரீனிவாசன் போன்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமக்கிருதவெறியர்கள் இப்படிக் கேட்டால் எப்படிப் பதில் கூறுவது?
நான் ஒன்று கேட்கிறேன் குரு (GURU) என்பதை எப்படி உச்சரிப்பீர்கள். GURU என்றா? இல்லை KURU என்றா?. தமிழில் GHU என்ற ஓசையில் எழுத்து உள்ளதா?. இல்லையெனில் எப்படி குரு(GURU) என்று உச்சரிப்பீர்கள். பிறகு குரு எப்படி தமிழ் சொல் ஆகும். ஆங்கிலமே அறியாத ஒரு பாமரனிடம் சென்று பாண்ட் என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என கேட்டால் அவன் PAAND (பாண்ட்) என்று தான் உச்சரிப்பான்  BOND என்றோ POND என்றோ FONT என்றோ அவனுக்கு உச்சரிக்க தோன்றாது. ஆங்கிலம் அறிந்தவனே BOND என்று உச்சரிப்பதா இல்லை POND என்று உச்சரிப்பதா என்று யோசிப்பான். அதுபோலதான் குரு வும். ஒரு மொழியில் எழுத்தே இல்லாதபோது எப்படி இல்லாத எழுத்தை கொண்டு உச்சரிப்பீர்கள். என்கிறார். 
தமிழில் குரு என்ற சொல்லை நீங்கள்(சமக்கிருதம்) இரவல் வாங்கி அதை உருமாற்றி Guru என்று உச்சரித்தால் அதற்கு தமிழோ அல்லது நாங்கள் தமிழர்களோ எப்படிப் பொறுப்பாக முடியும். நீங்கள் உச்சரிப்பை மாற்றிக் கொண்டதால், தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொல் தமிழ் இல்லை என்றாகி விடுமா?  இரவல் வாங்கிய உண்மையை மறைத்து சொந்தம் கொண்டாடுவது தான் அபத்தம்.

  "வட மொழியென்னும் சமற்கிருதத்தில் ஐந்திலிருபகுதி தமிழாதலால், அதை மறைத்தற்பொருட்டுப் பல வடசொற்கட்குப் பொருந்தப் பொய்த்தலாகவும் பொருந்தாப் பொய்த்தலாகவும் பொருள் கூறி வருகின்றனர்."  -மொழிஞாயிறு தேவநேயப்  பாவாணர்- 

குரு என்பது சமக்கிருதம் இரவல் வாங்கிய தமிழ்ச் சொல்

 குரு என்னும் சொல்லிற் ககரத்தை எடுத்தொலித்தும், குரவன் என்னும் சொல்லில் அதனோடு ஈறு திரித்தும், வடசொல்லாகக் காட்டுவர். குருசில் (குரிசில்) குருவன் என்ற வடிவுகள் வடமொழியில் இல்லை. 
குரு என்ற சொல் சமக்கிருதம் தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொல்லேயன்றி தமிழ் வடமொழியிலிருந்து இரவல் வாங்கியதல்ல.  குரு என்ற சொல்லுக்கான வேர்ச்சொல் தமிழிலேயே உள்ளது.

 பழந்தமிழர்கள் குரு என்ற சொல்லை அரசன், தலைவன், தாய் தந்தையர், ஆசிரியர், மூத்தவன் (தமையன்) என்போரைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் உண்டு.


குரு3 - குரு (g)
     குரு = 1. பருமன். 2. பெருமை.
     "குருமை யெய்திய குணநிலை" (சீவக.2748). 3. கனம்.
     "பசுமட் குரூஉத்திரள் போல" (புறம். 32).
     4. தந்தை. 5. ஆசிரியன். 6. குரவன், அரசன்.
     குருக்கள் = பிராமணரல்லாத மரவூண் வேளாளக் குரவர்.
     குரு=குருசில்=தலைவன். "போர்மிகு குருசில்" (பதிற். 31:36).
     குருசில் - குரிசில் = தலைவன். (திருமுருகு. 276).

     குரு-குரவன். இருமுது குரவர்=பெற்றோர். ஐங்குரவர்=தந்தை, தாய்,
தமையன், ஆசிரியன், அரசன் ஆகியோர்.

1.      புறநானூறு பாடல் 16 - 
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகற்
கரும்பல்லது காடறியாப்
 பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்
ஓராங்கு மலைந்தன பெருமநின் களிற
முருகற் சீற்றத்து உருகெழு குருசில் முருகனின் சீற்றத்துக்கு இணையான மிகுந்த எழுச்சியையும் உடைய தலைவா!  இப்பாடலில் குருசில்என்ற சொல் தலைவன், அதாவது அரசன் என்ற பொருளில் இடம் பெறுகிறது. இப்பாட்டில் பாண்டரங் கண்ணனார் சோழன் பெருநற்கிள்ளியை நோக்கி, முருகன் போலும் குருசில் நீ, பகைவர் நாட்டுள் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது ஒளி செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது. இவ்வாறு தீயிட்டுக் கொழுத்திய அந்நாடு கரும்பல்லது நாடறியாப் பெருந்தண் பணைபொருந்திய நன்னாடு. ஆனால் நீ எரியூட்டிச் செய்த போரில் உன் களிறுகளும் உன் கருத்துக்கு ஒப்பப் போர் மலைந்தனஎன்று கூறுகின்றார்.

 2. பாடியவர்: கோவூர் கிழார்..  பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி

மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான்ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும 
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.

கொண்டு கூட்டு: பாண, நீ செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ எனக் கூட்டுக.

வரைப்பு = எல்லை; ஓர்த்தல் = கேட்டல்.

குருசில் = அரசன்( தலைவன்)

குரு > குரு+ அவர் > குரவர்

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்  குரவன் என்றால் ஆசிரியர் என்கிறார்.

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளிஇறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான்  185
சிலப்பதிகாரம் -  நாடுகாண் காதை

இறைவன்- எப்பொருளினும் தங்குகின்றவனும்; குரவன் - நல்லாசிரியனும்; இயல்குணன் - இயல்பாகவமைந்த நற்குணமுடையோனும்; எங்கோன் - எம்முடைய தலைவனும்.


4. அடியார்க்கு நல்லார் தனது உரையில் குரவர்’  என்றால் அரசன், ஆசிரியர், தாய் தந்தையும், தனக்கு மூத்தோனும் என்கிறார்;

அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன்நிகரில் குரவர் இவரிவரைத்தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதேயாவருங் கண்ட நெறி.

(-ள்.) அரசன் - அரசனும், உவாத்தியான் - உவாத்தியும், தாய் தந்தை - தாயும் தந்தையும், தம்முன் - தனக்கு மூத்தோனும், இவர் - என இவர்கள், நிகர் இல் குரவர் - தமக்கு நிகரில்லாக் குரவராவார், இவரை - இவர்களை, தேவரைப் போலத் தொழுது எழுக - தேவரைப்போலத் தொழுது எழுக, என்பது - என்று சொல்லப்படுவது, யாவரும் - எல்லாரும், கண்ட - வரையறுத்துக் கூறிய, நெறி - வழி.

(பொ-ரை.) அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவர்.
5. ‘குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ

(புறஞ்சேரியிறுத்த காதை) என்கிறது சிலப்பதிகாரம்.

ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது  
 கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய

குரவனும் நோயும் நிறமும் பாரமும் அரசனும் குரு எனலாகும் - (பிங்கல நிகண்டு, 10: 370)
Teacher, disease (of the pox or blister type), colour, heaviness and king are termed as Kuru


சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே” (குறுந்தொகை, 1: 3-4)

The hill of (the red coloured god) Murukan is full of the red flower bunches of Kaantha'l (Gloriosa superba)

குருந்த மரம் = எப்போதும் செழிப்பாக இருக்கக் கூடிய மரம். குருந்த மர நிழலில் குருக்கள் அல்லது குரவர்களிடம் கல்வி கற்பது தமிழர்களின் மரபு. 


எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவென்பது
    “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.”

(பெயரியல்,1) என்பது தொல்காப்பிய நூற்பா’’   

    தமிழ் இயன்மொழியாதலால், அதிலுள்ள பெயர் வினை யிடை யென்னும் மூவகைப்பட்ட எல்லாச் சொல்லும், வேர்ப்பொருளுணர்த்தும் கரணியக் குறிகளே. ஆரியம் திரிமொழியாதலின், அதிலுள்ள சில பல சொற்கள், மேன்மேலுந் திரிந்து முதனிலையுருத் தெரியாவாறு முற்றுஞ் சிதைந்து, வேர்ப்பொருள் அறிய முடியா நிலையில் உள்ளன. அதனால், வடமொழியிலக்கண நூலார், வேர்ப்பொருள் விளங்காச் சொற்களை இடுகுறி யென்றனர். ஆயின், இவற்றை வண்ணனைமொழி நூலாரோ, எல்லா மொழியும் இடுகுறித் தொகுதியென்றொரு நெறியீடு செய்து, தம் இரு கண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டனர்.

  எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவேனும், வேர்ப்பொருள் சிலவற்றில் விளங்கித் தோன்றும்; சிலவற்றில் விளங்கித் தோன்றாது. அதை ஆய்ந்தே காணல் வேண்டும். இதனையே,

  “மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா”

(உரியியல், 96) என்று குறித்தது தொல்காப்பியம்’’13 comments:

Ant said...

விட்டால் ஜல்லிக்கட்டு என்றும் ஆரியர் விளையாட்டுதான் சல்லிகட்டு என்று தமிழர்கள் அழைக்கின்றனர் என்பர். பாவம் என்ன செய்வது எதை எடுத்தாலும் அது சமஸ்கிருத்தில் இருந்துதான் வந்தது என்று கூறி பெருமைபட்டு வந்தவர்களுக்கு அதில் உண்மையில்லை என்று தெரிய வரும் போது அதை ஏற்றுக் கொள்ள மனம் பக்குவம் இன்மைகாரணமாக இவ்வாறு எதையாவது கூறி ஆறுதல் அடைந்து கொள்கின்றனர்.

Srinivasan Ramakrishnan said...

நான் வெறியரோ இல்லையோ நீங்கள் வெறியர் என்பது நன்றாக தெரிகிறது.

எவ்வளவு வெறுப்பை கக்குகிறீர்கள். KU- வை Gu என்று உச்சரித்தார்களாம்.

கும்பம், கும்ப முனி, கும்பாபிஷேகம், குமார சம்பவம் என்று உச்சரிக்க தெரிந்தவர்களுக்கு குரு(kuru) வை குரு(kuru) என்று உச்சரிக்க தெரியவில்லையாம். ஐயோ பாவம்.

viyasan said...

@Srinivasan Ramakrishnan,


ஐயோ பாவம், நானல்ல, நீங்கள் தான், ஒரு மொழி, வேறொரு மொழியிலிருந்து சொற்களை இரவல் வாங்கும் போது அவற்றில் சில எழுத்து அல்லது உச்சரிப்பு மாற்றங்கள், இரவல் வாங்கும் மொழிக்கேற்ப நடைபெறும் என்பது கூடத் தெரியாத, அதாவது இது பற்றி எந்த விளக்கமும் இல்லாதவராக நீங்கள் இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால், வழக்கம் போல் உங்களின் பதில்களை அழித்து விட்டுப் பேசாமலிருந்திருப்பேன். சமக்கிருதவாதிகள் ‘கு’ வை உச்சரிக்க முடியாமல் அதை Gu ஆக்கினார்கள் என்பதல்ல எனது கருத்து, உங்களின் புரிதல் அவ்வளவு தான் என்பதை நினைக்கச் சிரிப்புத் தான் வருகிறது.

இரவல் வாங்கும் சொற்கள் உச்சரிப்பிலும் மாற்றம் அடைவதுண்டு. அதனால் தான் குருவை தமிழிலிருந்து இரவல் வாங்கிய சமக்கிருதம் அதைக் Guru என்று உச்சரித்தது. எடுத்துக்காட்டாக, அதிகளவு பாளிமொழிக் கலப்பின் காரணமாக இந்தோ- ஐரோப்பிய மொழி என்று கருதப்படும் சிங்களமொழி நாலாயிரத்துக்குமதிகமான தமிழ்ச்சொற்களை இரவல் வாங்கியுள்ளது. ஆனால் எல்லா தமிழ்ச் சொற்களுமே உச்சரிப்பில், அல்லது எழுத்தில் சில மாற்றங்களுக்குட்படுத்தப்பட்டுத் தான் சிங்களமாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அம்பலம், என்ற தமிழ்ச் சொல் ‘அம்பலம’ என்றும் இளந்தாரி என்ற சொல் இளந்தாரிய என்றும், காப்பு என்ற தமிழ்ச்சொல் Gaaப்புவ என்றும், பதக்கம் என்ற தமிழ்ச்சொல் baதக்கம என்றும் உச்சரிக்கப்படும். அதன் கருத்து சிங்களவர்களுக்கு ப அல்லது க என்ற சொல்லை உச்சரிக்க முடியாதென்பதல்ல. ஆனால் தமிழ்ச் சொற்களை சிங்கள மொழி இரவல் வாங்கியுள்ளதென்பதை மறுத்து, உங்களைப் போல முட்டாள்தனமாக சிங்களவர்கள் உளறுவதில்லை.

உங்களின் தமிழெதிர்ப்பு பார்ப்பன சமக்கிருத வெறி உண்மையைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இவ்வாறு தமிழின் மேன்மை பற்றிய உண்மையை மறைத்து தமிழைத் தாழ்த்தி செத்துப்போன சமக்கிருதத்தை, அதுவும் தமிழ்நாட்டிலேயே உயர்த்தும், உங்களைப் பார்ப்பான்கள் தான் தமிழர்கள் சமக்கிருதத்தை எதிர்ப்பதற்கு முதல் கரணியமாகும்

viyasan said...

@ANT,

எங்களின் அருமை நண்பர் ஸ்ரீனிவாசன் போன்ற பார்ப்பனர்கள் நினைத்தால் ஜல்லிக்கட்டை மட்டுமல்ல, தமிழையே ஆரியமாக்கிக் காட்டுவார்கள். அதில் அவர்கள் கைவந்தவர்கள். தமிழர்கள் எதிர்க்காமல் விட்டதால் தான் ஸ்ரீனிவாசன் கூட இன்றைக்கும் தொல்காப்பியரை ஆரியப் பிராமணனாக்கியது மட்டுமன்றி, இங்கேயே போகிறபோக்கில் வள்ளுவருக்குக் கூடப் பூணூல் போட்டு விட்டார். அவரது சமக்கிருதவெறி அவரது கண்களை மறைக்கிறது. அவரது வலைப்பதிவில் இப்படியான சுத்துமாத்துகள் அதிகம். நாங்கள் தமிழர்கள் அசந்தால், அவர் தமிழர்கள் எல்லோருக்குமே பூணூல் போட்டு விடுவார், அத்தகைய வித்தகர் அவர். அவரைப் போன்ற பல பார்ப்பான்கள் ஆங்கிலத்தில், தமிழர்களின் பெருமைக்குரிய வீரமிகு வரலாற்றுக்குப் பார்ப்பனப் பூச்சுப் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

Srinivasan Ramakrishnan said...

ஆரியர் யார்? எப்போது வந்தார்கள் என நிருபியுங்கள்?
சமஸ்க்ருத, பார்ப்பன வெறுப்பு உங்கள் கண்களை மறைக்கிறது?
தொல்காப்பியர் நான்மறை பயின்றவர்தானே, நான்மறை பயின்றவர்கள் பிராமணர்கள் தானே, பனம்பரனார் தானே சொல்லி உள்ளார்.

நீங்கள் சொன்ன அனைத்து உதாரணங்களும் ஏன் சமஸ்க்ருத குரு சொல்லிலிருந்து தோன்றி இருக்க கூடாது?.

நீங்கள் உதாரணம் சொன்ன அனைத்து சங்ககால இலக்கியங்களுக்கும் முன்பே தோன்றிய வேதத்தில் குரு வார்த்தை சொல்லப்பட்டு உள்ளது.

//இரவல் வாங்கும் சொற்கள் உச்சரிப்பிலும் மாற்றம் அடைவதுண்டு. அதனால் தான் குருவை தமிழிலிருந்து இரவல் வாங்கிய சமக்கிருதம் அதைக் Guru என்று உச்சரித்தது.//

தமிழ் இலக்கணம் நூலான தொல்காப்பியத்தில் வடசொல் கிளவி என்ற ஒரு செய்யுளே உள்ளது. இதை சொன்னால் பார்ப்பண இடைசெருகல் என்று ஒரே வார்த்தை சொல்லி தப்பித்து விடுவீர்கள்.

viyasan said...

@ஸ்ரீனிவாசன் ராமகிருஷ்ணன்,


//ஆரியர் யார்? எப்போது வந்தார்கள் என நிருபியுங்கள்?//

தம்மை ஆரியப் பார்ப்பனர் என்று பீற்றிக் கொள்ளும் பார்ப்பான்கள் தான் அதை நிரூபிக்க வேண்டும். தமிழர்கள் ஆரியர்கள் அல்ல. நான் தமிழன். ஆரியப் பார்ப்பனர்களாக தம்மை அடையாளப்படுத்தும் எவனுமே தமிழன் அல்ல.

//சமஸ்க்ருத, பார்ப்பன வெறுப்பு உங்கள் கண்களை மறைக்கிறது? ///

தமிழெதிர்ப்பும், சமக்கிருத வெறியும் பிடித்தவர் நீங்கள் என்பதை உங்களின் வலைப்பதிவைப் படித்துப் பார்க்கும் அனைவருமே ஒப்புக் கொள்வார்கள்.


//தொல்காப்பியர் நான்மறை பயின்றவர்தானே, நான்மறை பயின்றவர்கள் பிராமணர்கள் தானே, பனம்பரனார் தானே சொல்லி உள்ளார். ///

இந்த உளறலுக்கு தொல்காப்பியர் பிராமணரா என்ற பதிவில் விடையுள்ளது. மீண்டும் படித்துப் பார்க்கவும். தொல்காப்பியம் கூறும் நான்மறை தமிழர்களின் மூலமறைகளே தவிர சமக்கிருத நான்குவேதங்கள் அல்ல.


//நீங்கள் சொன்ன அனைத்து உதாரணங்களும் ஏன் சமஸ்க்ருத குரு சொல்லிலிருந்து தோன்றி இருக்க கூடாது?. ///

சமக்கிருதத்துக்கு எழுத்து வடிவமிருக்கவில்லை. வேதங்கள் எழுதப்படவில்லை.அதை எழுதாக்கிளவி என்பர். ஆனால் தமிழுக்கு தொன்று தொட்டே எழுத்து வடிவமுண்டு. இதைப் பற்றி பின்பு விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம். அது மட்டுமன்றி குரு தமிழிலிருந்து சமக்கிருதம் இரவல் வாங்கப்பட்ட சொல் என்பதை பாவாணர் நிறுவியிருக்கிறார். வடமொழியில் குருசில் (குரிசில்) குருவன் என்ற வடிவுகள் வடமொழியில் இல்லை. என்றும் அவர் கூறுகிறார். பாவணரின் சமகாலத்தில் வாழ்ந்த எந்தப் பார்ப்பானாவது பாவாணரின் கருத்து தவறென வாதாடி அது சமக்கிருதச் சொல்லேன நிறுவியிருந்தால் அதற்கு ஆதாரம் காட்டுங்கள்.


//தமிழ் இலக்கணம் நூலான தொல்காப்பியத்தில் வடசொல் கிளவி என்ற ஒரு செய்யுளே உள்ளது. இதை சொன்னால் பார்ப்பண இடைசெருகல் என்று ஒரே வார்த்தை சொல்லி தப்பித்து விடுவீர்கள்.///

இந்தப் பார்ப்பனப் புளுகுக்கு பல தமிழறிஞர்கள் ஏற்கனவே பதிலளித்துள்ளனர். அவற்றில் ஒன்றை எனது வலைப்பதிவில் வார இறுதியில் பாருங்கள்.
பார்ப்பன இடைச்செருகல்கள் தமிழிலக்கியங்களில் மட்டுமன்றி, தொல்காப்பியத்தில் கூட உண்டென்பது பல அறிஞர்களின் கருத்து. தமிழன் என்ற முறையில், நீங்கள் தமிழர்களின் வரலாற்றுக்கும், தமிழுக்கும், இலக்கியத்துக்கும் திட்டமிட்டுப் பார்ப்பனப் பூச்சுப் பூசுவது எனக்கு எரிச்சலையூட்டுகிறது.

நம்பள்கி said...

[[[ஆங்கிலமே அறியாத ஒரு பாமரனிடம் சென்று பாண்ட் என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என கேட்டால் அவன் PAAND (பாண்ட்) என்று தான் உச்சரிப்பான். BOND என்றோ POND என்றோ FONT என்றோ அவனுக்கு உச்சரிக்க தோன்றாது. ஆங்கிலம் அறிந்தவனே BOND என்று உச்சரிப்பதா இல்லை POND என்று உச்சரிப்பதா என்று யோசிப்பான். அதுபோலதான் குரு வும்.

ஒரு மொழியில் எழுத்தே இல்லாதபோது எப்படி இல்லாத எழுத்தை கொண்டு உச்சரிப்பீர்கள். ]]

அதே மாதிரி [k]குதிரை தான் சரி! அதை [G]குதிரை என்று தவறாக உச்சரித்து பார்ப்பனர்கள். காரணம்...சம்ச்க்ரித்த வெறி. [chu]சுப்ரமணியம் தான் சரி [sub]சுப்பிரமணியம் தவறு! முருகனை சுப்ரமணியம் ஆக்கியது [சம்ச்க்ரித்த வெறி பிடித்த] பார்ப்பனர்களே

Height of முட்டாள் தனம்...ஆங்கில மொழிக்கு உச்சரிப்புக்கு ஏன் நைனா தமிழில் எழுத்து வேணும்? Are you out of your mind?

ஆங்கிலத்தை விட தமிழ் பழமையான மொழி!
அப்ப...ஆங்கிலத்தில் 'ழ" உச்சரிப்பு இல்லை: "ள" உச்சரிப்பு இல்லை! அதுக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை உருவாக்க சொல்லுங்களேன்...

தமிழை நீங்கள் வேசி மொழி மாறி மாறி...செய்றீங்க!?
கிரந்த எழுத்துக்களை தமிழில் விட்டதே தவறு!

இதைப் பற்றி ஒரு தனி பதிவு வரும்...

Srinivasan Ramakrishnan said...

பார்ப்பணர்கள் குதிரையை(kuthirai), Guthirai என்று உச்சரித்தார்களா? ஹா ஹா. ஏதோ ஒன்றிரண்டு பேர் உச்சரித்தால் ஒட்டுமொத பார்ப்பணர்களும் அப்படிதான் உச்சரிப்பார்கள் என்று எப்படி சொல்வீர்கள். தமிழ்நாட்டில் பலர் தமிழை தமிள் என்றும், பழத்தை பளம் என்றும் வாழைப்பழத்தை வாளப்பளம் என்றும் உச்சரிக்கிறார்கள். நானே பார்த்துள்ளேன். இத்தனைக்கும் பூரிவீக தமிழர்கள். அவர்களை என்ன சொல்வீர்கள். சிலருக்கு இயற்கையாகவே ழ உச்சரிப்பதில் பிரச்சனை உள்ளது. அதனால் அவர்களை பார்த்து தமிழை அழிக்கிறான் என்று சொல்வீர்களா?

//Height of முட்டாள் தனம்...ஆங்கில மொழிக்கு உச்சரிப்புக்கு ஏன் நைனா தமிழில் எழுத்து வேணும்? Are you out of your mind?//
ஆங்கில மொழி உச்சரிப்புக்கு நான் தமிழில் எழுத்து சேர்க்க சொல்லவில்லை. இல்லாத எழுத்தின் ஓசையில் எப்படி உச்சரிக்க முடியும் என்றுதான் கேட்டேன். கேள்வியை புரிந்து கொண்டு பேசுங்கள்.

GHU வர்க்கம் தமிழில் உள்ளதா? இல்லையெனில் எப்படி அந்த ஓசையில் உச்சரிக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.

ஒன்று GHU வர்க்க எழுத்துக்கள் இருக்க வேண்டும், அல்லது இருக்கும் எழுத்தை கொண்டு KURU என்று உச்சரிக்கவேண்டும்.

ஒருவேளை நீங்கள் குரு(GURU) தவறு KURU தான் சரி என்று சொன்னால் இதை போல பல சொற்கள் உள்ளன. அதற்கெல்லாம் என்ன சொல்வீர்கள்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

இதோ மின்நூல் களஞ்சியம்
http://ypvn.myartsonline.com/

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


தமிழில் இருந்து பல சொல்களை
வடமொழி பெற்றுப் பாவிப்பது
உண்மையே!

Ant said...

//நீங்கள் உதாரணம் சொன்ன அனைத்து சங்ககால இலக்கியங்களுக்கும் முன்பே தோன்றிய வேதத்தில் குரு வார்த்தை சொல்லப்பட்டு உள்ளது. // நான்கு வேதங்களிலும் இந்திய நதிபற்றி என்ன குறிப்பிட்டுள்ளது? குறிப்பாக இந்துக்களின் புன்னிய நதியான கங்கையை பற்றி ...?

Ant said...

//நீங்கள் உதாரணம் சொன்ன அனைத்து சங்ககால இலக்கியங்களுக்கும் முன்பே தோன்றிய வேதத்தில் குரு வார்த்தை சொல்லப்பட்டு உள்ளது. // நான்கு வேதங்களிலும் இந்திய நதிபற்றி என்ன குறிப்பிட்டுள்ளது? குறிப்பாக இந்துக்களின் புன்னிய நதியான கங்கையை பற்றி ...?

Ant said...

. //நீங்கள் உதாரணம் சொன்ன அனைத்து சங்ககால இலக்கியங்களுக்கும் முன்பே தோன்றிய வேதத்தில் குரு வார்த்தை சொல்லப்பட்டு உள்ளது. // நான்கு வேதங்களிலும் இந்திய நதிபற்றி என்ன குறிப்பிட்டுள்ளது? குறிப்பாக இந்துக்களின் புன்னிய நதியான கங்கையை பற்றி ...?