Monday, June 13, 2016

பூசை என்ற சொல்லே இல்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியானது?

"ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே."

உலகில் வழக்கொழிந்து (செத்துப்போன) மொழியாகிய சமக்கிருதத்துக்கு மந்திரம் உண்டு தந்திரம் உண்டு. அது தான் கோயில்களில் பூசைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். தெய்வத்தமிழுக்குப் பதிலாக சமக்கிருதத்தில் தான் தமிழர்கள் பூசை செய்ய வேண்டும். தமிழில் தில்லையில் தேவாரம் பாடினால் கூட தீட்டுப்பட்டு விடும் என்று வாதாடுகிறார்கள் சமக்கிருத வாதிகள். இன்றும் தமிழ் தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களில் தமிழில் தேவாரம் பாடுவதற்குக் கூட போராட வேண்டிய நிலையில் தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் உள்ளனர்.

'பூசை என்ற சொல்லே வட மொழியில் இல்லை' என்றதற்கு - "பூஜா என்பது என்னவாம். தயவு செய்து பூசையை தான் பூஜா என்று மாற்றிவிட்டார்கள் என்று சொல்லவேண்டாம்."  என்று நண்பர் ஸ்ரீநிவாசன் ராமச்சந்திரன் குறிப்பிட்டிருந்தார்

உண்மையில் பூசை என்ற சொல்லே வடமொழியில் கிடையாது. பூசை செய்யும் வழக்கமும் ஆரியர்களுடையதல்ல. சொல்லும், செயலும் இரண்டுமே தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கி வடமொழியாக்கப்பட்டவையே தான் என்பதை அவருக்கு உணர்த்தவே இந்தப் பதிவு..  :-)

இதில் வேடிக்கை என்னவென்றால் யாராலும் பேசப்படாத மொழியாகிய சமக்கிருதம் பூசைக்குரியது, வழிபாட்டுக்குரியமொழி என வாதாடுகிறார்கள் சமக்கிருதவாதிகள். ஆனால் பூசை(வடமொழியில் பூஜை) என்ற சொல்லே சமக்கிருதம் அல்ல. அது தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொல்லேன 1927 இல் இந்தியாவின் தொன்மையைப் பற்றிய கட்டுரையை எழுதிய Jarl Cahrpentiers என்பவரும் சமக்கிருத மொழியிலக்கண அகராதியை உருவாக்கி வெளியிட்ட பேராசிரியர் Manfred Maryhofer என்பவரும் கூறுகின்றனர். பூசை என்ற சொல்லே இல்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியாக முடியும் நாயன்மார்களால் தமிழில் பாடி இறைவனை உருகவைத்து அற்புதங்கள் பலவற்றை நடத்திக்காட்டிய தமிழ் தான் உண்மையில் பூசைக்குரிய மொழியாகும். 

"தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
யுண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்"

Tamil Roots of Puja or Pujai :  

பூசை சமக்கிருத சொல் அல்ல தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டது.
Mayrhofer **suggests the derivation of pUjA from Tamil (Dravidian). 'pUcu' (to smear).
Jarl Charpentier's 1927 paper in Indian Antiquary connects the meaning and etymology of pooja with 'smearing,' the smearing of images etc with things like red powders etc.  The origin of the word Puja lies in the Dravidian Languages. Two possible Tamil roots have been suggested:  Poosai "to smear with something" and Poosei "to do with flowers".

"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of  the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154). 
(** Manfred Mayrhofer (26 September 1926 – 31 October 2011) was an Austrian Indo-Europeanis who specialized in Indo-Iranian languages. Mayrhofer served as professor emeritus at the University of Vienna. He is noted for his etymological dictionary of Sanskrit.)


"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."20 comments:

நம்பள்கி said...

நீங்க என்ன தான் கரடியா கத்தினாலும்....பார்பனர்கள் அவர்கள் புளுகும் புளுகை நிறுத்த மாட்டார்கள். இவர்களுக்கு சப்போர்டா அடிவருடி சூத்திரர்கள் தொல்லை வேற...அப்படி ஈஷிக் கொள்வதில் என்ன சுகமோ! செத்து காரியம் செய்த மொழிக்கு...துடைப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் மாதிரி இந்தசெத்த சம்ஸ் மொழிக்கு...தூத்தேறி!

உதாரணமா, மதுவிலக்கை ராஜாஜி தமிழகத்தில் அமுல் படுத்தவில்லை என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தாலும்...பார்ப்பனர்கள் ராஜாஜி, ராஜாஜி என்று புளுகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு தலைமை சோ..கூட ஜால்ரா அடிக்க ஈஷிக் கொள்ளும் சூத்திர அடிவருடிகள்.

சென்று படியுங்கள்..உண்மையை...
இடுகை தலைப்பு:
மதுவிலக்கை அமுல்படுத்தியது மு.க.வும் ஓமசந்தூர் ராமசாமி ரெட்டியார் மட்டுமே!
http://www.nambalki.com/2015/07/blog-post.html

Srinivasan Ramakrishnan said...

விடை உகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேல் நாள்
வட மொழிக்கு உரைத் தாங்கி அயன் மால் மாமுனிக்கு
திடம் உறுத்தி அம் மொழிக்கு எதிர் அக்கிய தென் சொல்
மட மகட்கு ஆங்கு என்பது வழுதி நாடு அன்றோ.

அதற்க்கு முன் பாடல் இதையும் சொல்லி இருக்கலாமே சமஸ்க்ருதத்தை வெறுக்காதவர்கள்.

pmk2k7 said...

உங்கள் கருத்துக்கள் அனைத்தும் படித்தேன் அருமையாக எழுதுகிறிர்கள்.
உங்கள் கட்டுரையில் இந்திய தமிழர்களை பற்றி குறைகூறுவதையும் அதற்க்கு பதிலாக சிலர் ஈழத்து தமிழர்களை கிண்டலடிப்பதும் வேண்டாமே.
நாம் அனைவரும் தமிழர்களே...நாடுகள் கடந்திருந்தாலும்.
இந்த உணர்வை எழுப்பிடும் விதமாக உங்கள் கருத்துக்களை அமைக்கவும். உண்மைகள் எப்படி இருந்தாலும் இனியாவது ஒற்றுமையுடன் தமிழன் ஒன்றுபட செயல்படுவது முக்கியம் என்பதை உணர்ந்திருந்தாலும் ஏன் இந்த வேறுபாட்டை இன்னும் கட்டிஎழுப்புகிறிர்கள்.

Srinivasan Ramakrishnan said...

//சமஸ்க்ருதத்தில் பூஜை என்ற வார்த்தை இல்லை, காரணம் ஆரியர்கள் உருவ வழிபாடு அற்றவர்கள். எல்லாவற்றையும் ஆதாரத்தோடு நிரூபியுங்கள். முடிந்தால்.//
பூஜ் என்ற வேர் சொல்லில் இருந்து பூஜா என்னும் சொல் தோன்றியது. பூஜ் என்றால் தெய்வீகம். PUJ - REVERENCE.

//தில்லையில் தேவாரம் பாடினால் தீட்டுப்பட்டு விடும்//
இது விவகாரம் குறித்து பலர் எழுதி உண்மையை வெளிகொணர்ந்து வந்து விட்டனர்.

viyasan said...

//பூஜ் என்ற வேர் சொல்லில் இருந்து பூஜா என்னும் சொல் தோன்றியது. பூஜ் என்றால் தெய்வீகம். PUJ - REVERENCE.///

தமிழிலிருந்து இரவல் வாங்கிய பூசை என்ற சொல் பூஜாவாகி, அதிலிருந்து பூஜ் என்ற சொல்லும் வந்திருக்கலாம் அல்லவா?

பெரும்பாலும் முக்கியமான சமக்கிருதச் சொற்கள் எல்லாவற்றினதும் வேர்கள் (etymological roots) தமிழில் உண்டு என்பதை பாவாணர் நிரூபித்திருக்கிறார். பலரும்டு அதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.எடுத்துக்காட்டாக வேதம், பூசை, குரு எல்லாமே தமிழ்ச் சொற்கள், அவை இரவல் வாங்கப்பட்டு சிறிய மாற்றங்களுடன் சமக்கிருதச் சொற்களாக மாற்றப்பட்டுள்ளன. உங்களின் சமக்கிருத வெறியை ஒரு புறம் வைத்து விட்டு, ஆராய்ந்து பார்த்தால் நீங்களே அதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழில் பூ +செய் = பூசை, அதாவது பூவினால் செய்யும் செயல் பூசை. ஆனால் சமக்கிருதத்தில் puj என்பது கெளரவித்தல் (Honour), மரியாதைக்குரிய, வணக்கத்துக்குரிய (Worship) என்ற கருத்துப்படும்.

அது மட்டுமன்றி பூசை என்ற தமிழகச் சொல் தான் சமக்கிருதத்தால் இரவல் வாங்கப்பட்டு பூஜாவாகியது என்பதை சமக்கிருதத்தில் etymological dictionary of Sanskrit உருவாக்கிய Manfred Mayrhofer கூட ஒப்புக் கொண்டுள்ளார். ஆகவே சீனிவாசன் ராமச்சந்திரன் தனது சமக்கிருத வெறியினால் உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால்,பூசை என்ற தமிழ்ச் சொல்லை சமக்கிருதம் இரவல் வாங்கியது என்ற உண்மையை சமக்கிருத வல்லுனர்கள் ஒப்புக் கொண்டாலும் கூட ஸ்ரீநிவாசன் ராமச்சந்திரனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. செத்துபோன மொழியாகிய சமக்கிருதம் தமிழிலிருந்து சொற்களை இரவல் வாங்கியது என்ற உண்மையை ஸ்ரீநிவாசனால் தாங்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் பிராமணர்களும் தமிழர்கள் தான் என்று வாதாடுகின்றார். தமிழிலிருந்து சமக்கிருதம் சொற்களை இரவல் வாங்கியது என்ற உண்மையைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவரைப் போன்ற “(பார்ப்பனத்)தமிழர்கள்” தமிழர் மத்தியில் தமிழர்கள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது தமிழுக்கும், தமிழர்களுக்கும் வெளிப்பகை எதற்கு?


//தில்லையில் தேவாரம் பாடினால் தீட்டுப்பட்டு விடும்//
//இது விவகாரம் குறித்து பலர் எழுதி உண்மையை வெளிகொணர்ந்து வந்து விட்டனர்.//

என்ன உண்மை, தீட்சிதர்களை எல்லாம் சிவபெருமான் வரும் போது கூட்டிக் கொண்டு வந்தவர் அதனால் அவர்களுக்கு தமிழர்கள் கட்டிய கோயில் சொந்தம் என்ற உண்மையா? உண்மையை விளக்கலாமே. :-)

viyasan said...

@pmk2k7,

நன்றி. நான் சில நேரங்களில் வெவ்வேறு விடயங்களில் வேண்டுமென்று விதண்டாவாதம் பண்ணியிருந்தாலும் கூட, தமிழ், தமிழ்நாடு சம்பந்தமான கருத்துக்கள் எனது உள்ளத்திலிருந்து வருபவை. எனது பதிவுகளில் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் குறை கூறுவதல்ல என்னுடைய நோக்கம். நானும் ஒரு தமிழன் என்ற முறையில் தமிழர்களின் நலன், தமிழின் பெருமை என்பவற்றின் மீது எனக்கு இயல்பாகவேயுள்ள அக்கறை தான் குறை கூறுவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் சில வேளைகளில் தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்களுக்குள்ள தமிழுணர்வு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இல்லை என்ற உணர்வு ஏனைய தமிழர்களுக்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டுத் தமிழர்களையும் முற்றுமுழுதாகக் குறை கூற முடியாது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழடையாளத்தை இல்லாமல் செய்யவும், தமிழுணர்வை மழுங்க வைக்கவும் திராவிடம், இந்தியம், பார்ப்பனீயம் எல்லாம் கூட்டாகப் பல ஆண்டுகளாக திட்டமிட்டு இயங்கிக் கொண்டு வருகின்றன என்ற உண்மையையும் நாங்கள் மறந்து விட முடியாது.
கடல் கடந்த நாடுகளில் வாழ்ந்தாலும், பாரதிதாசன் கூறியது போல “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே” என்ற ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பது தான் என்னுடைய கருத்தும் கூட. உங்களின் கருத்தை நினைவில் வைத்துக் கொள்கிறேன். நன்றி.

viyasan said...

//விடை உகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேல் நாள்
வட மொழிக்கு உரைத் தாங்கி அயன் மால் மாமுனிக்கு
திடம் உறுத்தி அம் மொழிக்கு எதிர் அக்கிய தென் சொல்
மட மகட்கு ஆங்கு என்பது வழுதி நாடு அன்றோ.//
//அதற்க்கு முன் பாடல் இதையும் சொல்லி இருக்கலாமே சமஸ்க்ருதத்தை வெறுக்காதவர்கள்.///

@Srinivasan Ramakrishnan,

எதற்கு முன்பாடல்? என்ன முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் பதில் எழுதுகிறீர்கள். மேலேயுள்ள பாடல் திருவிளையாடல் புராணத்தில் உள்ளது. நான் எந்தப் புராணத்தையாவது ஆதராம் காட்டினேனா. புராணங்கள் என்பது வெறும் பார்ப்பனப் புருடாக்கள். நானும் சிவநம்பிக்கையுள்ள சைவன் தான். ஆனால் பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய எந்தப் புராணக் கதையையும் நான் நம்பவில்லை. சிவபெருமான் தமிழை மட்டுமல்ல, சமஸ்கிருதத்தையோ அல்லது எந்த மொழியையும் உருவாக்கவில்லை. தமிழர்களின் மொழியாகிய தமிழர்களால், தமிழர்களிடமிருந்து உருவாகியது தான் தமிழே தவிர, சிவனும் உருவாக்கவில்லை. அகத்தியர் வடக்கிலிருந்து கொண்டு வரவுமில்லை. எல்லாம்திட்டமிட்ட பார்ப்பனப் புளுகுகள். அகத்தியர் என்ற பெயரில் பல தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்திருக்கலாம், அது வேறுகதை. அகத்தியர் என்பது தமிழ்ச் சொல்.

அகத்து + இயர் = அகத்தியர்:

அகத்தியர் - 1. அகம் - மனம், புத்தி, ஞானம் , மூளை, உள்ளிருந்து ௨. இயர் - அதனில் வழுவாமல் நின்று இயங்கியவர்.

அகம் – உள்ளே (உள்நாட்டவர்) அல்லது அகத்தவர், நம்மவர்

அகத்து +இயர் (honorific term)

viyasan said...

//செத்து காரியம் செய்த மொழிக்கு...துடைப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் மாதிரி இந்தசெத்த சம்ஸ் மொழிக்கு...தூத்தேறி!///

உண்மை. செத்தது எதுவுமே கோயிலுக்குள் போகக் கூடாது என்பது தான் உண்மை. ஆனால் ஸ்ரீனிவாசன் தொடர்பில்லாமல் புளுகித்தள்ளுகிறார். :-)


//உதாரணமா, மதுவிலக்கை ராஜாஜி தமிழகத்தில் அமுல் படுத்தவில்லை என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்தாலும்...பார்ப்பனர்கள் ராஜாஜி, ராஜாஜி என்று புளுகிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு தலைமை சோ..கூட ஜால்ரா அடிக்க ஈஷிக் கொள்ளும் சூத்திர அடிவருடிகள்.///

முற்றிலும் உண்மை பார்ப்பன ஊடகங்கள் தான் உ.வே சாமிநாதையருக்கு முன்னோடியாக தமிழ் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கத் தொடங்கிய யாழ்ப்பாணத் தமிழர்களை மூடி மறைத்து விட்டு சாமிநாதையரின் தமிழ்த்தொண்டை மட்டும் ஊதிப்பெருக்கின.

நீங்கள் கூறுவது போல ராஜாஜி விடயத்திலும் அவர் செய்த பகுதிநேர மதுவிலக்கை அமுல் படுத்தியதை ஊதிப்பெருக்கின.

தமிழீழீழ போராட்டத்திலும் சிங்களவர்களின் தமிழ்ப்படுகொலைகளை மறைத்து ஈழத்தமிழர்களை மட்டும் வில்லன்களாகின. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழ்நாட்டிலேயே தமிழை எதிர்த்த சோ ராமசாமியின் விசிறிகளில் பெரும்பாலானோர் அடிவருடிச் சூத்திரர்கள் தான்.

Srinivasan Ramakrishnan said...

என்னவொரு அருமையான விளக்கம், பூ + செய் = பூசை. பூவை கொண்டு என்ன செய்ய வேண்டும். காதில் வைத்துக்கொள்ள வேண்டுமா?.சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு சமஸ்க்ருத வெறுப்பு இருந்தால் பூசை என்பது தமிழ் வார்த்தை தான் என்று நிரூபிக்க போராடுவீர்கள்.

சமஸ்க்ருதத்தை வெறுக்கவில்லை வெறுக்கவில்லை என்று சொல்லிவிட்டு செத்த மொழி, காரியம் செய்யப்பட்ட மொழி என வெறுப்பை கக்குகிறீர்கள்.

நான் ஒன்று கேட்கிறேன் குரு (GURU) என்பதை எப்படி உச்சரிப்பீர்கள். GURU என்றா? இல்லை KURU என்றா?. தமிழில் GHU என்ற ஓசையில் எழுத்து உள்ளதா?. இல்லையெனில் எப்படி குரு(GURU) என்று உச்சரிப்பீர்கள். பிறகு குரு எப்படி தமிழ் சொல் ஆகும்.

ஆங்கிலமே அறியாத ஒரு பாமரனிடம் சென்று பாண்ட் என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என கேட்டால் அவன் PAAND (பாண்ட்) என்று தான் உச்சரிப்பான். BOND என்றோ POND என்றோ FONT என்றோ அவனுக்கு உச்சரிக்க தோன்றாது. ஆங்கிலம் அறிந்தவனே BOND என்று உச்சரிப்பதா இல்லை POND என்று உச்சரிப்பதா என்று யோசிப்பான். அதுபோலதான் குரு வும்.

ஒரு மொழியில் எழுத்தே இல்லாதபோது எப்படி இல்லாத எழுத்தை கொண்டு உச்சரிப்பீர்கள்.

Srinivasan Ramakrishnan said...

//எதற்கு முன்பாடல்? என்ன முன்னுக்குப் பின் தொடர்பில்லாமல் பதில் எழுதுகிறீர்கள். மேலேயுள்ள பாடல் திருவிளையாடல் புராணத்தில் உள்ளது. நான் எந்தப் புராணத்தையாவது ஆதராம் காட்டினேனா.//

கண் நுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண் உறத் தெரிந்து ஆய்ந்த இப் பசுந் தமிழேனை
மண் இடைச் சில இலக்கண வரம்பு இலா மொழி போல்
எண் இடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.

ஐயா ஐயா இது என்ன பாடல் ஐயா. திருவிளையாடல் புராணத்தில் வரவில்லையா?
வேடிக்கை மனிதரையா நீர். நீங்கள்தான் இந்த பதிவில் இந்த பாடலை குறிப்பிட்டு உள்ளீர்கள். இப்போது நான் எந்த புராணத்தையாவது ஆதாரம் காட்டினேனா என்று வேறு கேட்கிறீர்கள். பாடல் எங்கே சொல்லப்பட்டது என்றே தெரியாமல் பேசிக் கொண்டு இருக்கீர்கள். திருவிளையாடற் புராணம் /மதுரை காண்டம்/திரு நாட்டுச் சிறப்பு - இல் இந்த பாடல் வருகிறது. நான் சொன்ன பாடல் இதற்கு முந்தய பாடல்.

viyasan said...

//ஐயா ஐயா இது என்ன பாடல் ஐயா. திருவிளையாடல் புராணத்தில் வரவில்லையா? //

இது தான் முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம் என்பது. அந்தப் பாடல் திருவிளையாடல் புராணத்தில் உள்ளது என்பது எனக்கும் தெரியும். ஆனால் நான் திருவிளையாடல் புராணப் பாட்டை, இங்கு பேசப்படும், இந்தப் பதிவிலுள்ள விடயமாகிய 'பூசை என்பது தமிழ்ச்சொல்' என்ற கருத்துக்கு ஆதாரமாகக் காட்டியுள்ளேனா என்பதை மீண்டுமொருமுறை உங்களை நீங்களே கேட்டுப் பார்த்துப் பதில் எழுதுங்கள். அந்தப் பாட்டு தமிழின் சிறப்பைக் கூறும் எனக்குப் பிடித்த பாட்டு என்பதால் பதிந்தேனே தவிர, இங்கு பேசப்படும் விடயத்துக்கு ஆதாரம் காட்டவில்லை. அதனால் தான் நான் எந்தப் புராணத்தையாவது ஆதராம் காட்டினேனா? என்று கேட்டேன். இப்பவாவது விளங்கியதா? :-)

Srinivasan Ramakrishnan said...

// புராணங்கள் என்பது வெறும் பார்ப்பனப் புருடாக்கள்.
பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய எந்தப் புராணக் கதையையும் நான் நம்பவில்லை.
ஆனால் புராணத்தில் சொல்லப்பட்டுள்ள பாடல் மட்டும் பிடிக்கும். //
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சிரிப்புதான் வருகிறது.
யார் முட்டாள் என்று நடுநிலையுடன் படிப்பவர்களுக்கு புரியும்.

//அந்தப் பாட்டு தமிழின் சிறப்பைக் கூறும் எனக்குப் பிடித்த பாட்டு என்பதால் பதிந்தேனே தவிர, இங்கு பேசப்படும் விடயத்துக்கு ஆதாரம் காட்டவில்லை//

//தமிழின் சிறப்பை கூறும் பாடல் அதனால் பதிந்தேன். ஆனால் இங்கு பேசப்படும் விடயத்துக்கு ஆதாரம் இல்லை. //
தமிழின் சிறப்பை கூறும் பாடல் - இந்த சொற்றொடரே ஒரு ஆதாரம்/உதாரணம் தான்.

viyasan said...

ஒருவர் திரைப்படமொன்றின் பாடல் பிடிக்குமென்றால் அதன் கருத்து அந்தத்திரைப்படத்தின் கதையையும், கதாநாயகன் தனியொருவனாக வானூர்தியிலிருந்து குதித்து ஆயிரம்பேரை ஒரேயடியில் அடித்துக் கொன்று விட்டு, மலை, மடு, மேடு பள்ளம் எல்லாவற்றிலும் ஓடிப்பிடித்துப் பாட்டுப் பாடுவதை உண்மையென்று நம்புகிறாரெனக் கருத்துப்படுமா. ஸ்ரீநிவாசனுக்கு ஒரு படத்தின் பாட்டுப் பிடித்துக் கொண்டால் அதன் கருத்து அவர் அந்தப் படத்தை அப்படியே நம்புகிறார் என்பது தான் போலிருக்கிறது.

எடுத்துக் காட்டாக கம்பராமாயணக் கதையை நம்பாத இஸ்லாமியத் தமிழறிஞர்கள் பலர், கம்பரின் கவிதைகளில் தமிழின் நயத்தை, அழகை, அதன் சிறப்பை ரசிப்பதில்லையா. மன்னிக்கவும், நான் இதுவரை பார்த்த பார்ப்பனர்களில் ஒரு விளக்கம் குறைந்த பார்ப்பான் என்றால், அது நீங்கள் தான் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் அவர்களே. :-)

viyasan said...

@ Srinivasan Ramakrishnan,

உங்களின் பின்னூட்டங்கள் (உளறல்களைத் தவிர்த்து) அவற்றுக்குப் பதிலுடன் எனக்கு நேரமுள்ள போது வெளியிடப்படும். உங்களின் வாதங்கள் அனைத்துமே பார்ப்பன இடைச்செருகல்கள் எல்லாமே உண்மை என்ற அடிப்படையில் உள்ளன. அவையெல்லாம் பார்ப்பன இடைச்செருகல்கள் அவற்றை நான் நம்பவில்லை. மற்றும், குரு, பூசை என்பன தமிழ்ச் சொற்கள் தான் என்பதற்கு ஆதாரம் காட்டியும் அதை நீங்கள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பார்ப்பன இடைச்செருகல்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவா போகிறீர்கள்.

நம்பள்கி said...

[[[ஆங்கிலமே அறியாத ஒரு பாமரனிடம் சென்று பாண்ட் என்பதை எப்படி உச்சரிக்க வேண்டும் என கேட்டால் அவன் PAAND (பாண்ட்) என்று தான் உச்சரிப்பான். BOND என்றோ POND என்றோ FONT என்றோ அவனுக்கு உச்சரிக்க தோன்றாது. ஆங்கிலம் அறிந்தவனே BOND என்று உச்சரிப்பதா இல்லை POND என்று உச்சரிப்பதா என்று யோசிப்பான். அதுபோலதான் குரு வும்.

ஒரு மொழியில் எழுத்தே இல்லாதபோது எப்படி இல்லாத எழுத்தை கொண்டு உச்சரிப்பீர்கள். ]]

Height of முட்டாள் தனம்...ஆங்கில மொழிக்கு உச்சரிப்புக்கு ஏன் நைனா தமிழில் எழுத்து வேணும்? Are you out of your mind?

ஆங்கிலத்தை விட தமிழ் பழமையான மொழி!
அப்ப...ஆங்கிலத்தில் 'ழ" உச்சரிப்பு இல்லை: "ள" உச்சரிப்பு இல்லை! அதுக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை உருவாக்க சொல்லுங்களேன்...

தமிழை நீங்கள் வேசி மொழி மாறி மாறி...செய்றீங்க!?
கிரந்த எழுத்துக்களை தமிழில் விட்டதே தவறு!

இதைப் பற்றி ஒரு தனி பதிவு வரும்...

Srinivasan Ramakrishnan said...

@நம்பள்கி
நான் பார்த்த முட்டாள்களிலேயே மிக வடிகட்டிய முட்டாள் நீங்கள்தான்.
நான் ஆங்கில வார்த்தையை உதாரணம் சொன்னது pond/bond போல kuru/Guru ஓசை வித்தியாசம் தெரிவதற்காக. உடனே சொல்ல வந்து விட்டீர் ஆங்கிலம் தமிழை விட பழமையான மொழி என்று. இங்கே யாராவது ஆங்கிலத்தை தமிழுடன் ஒப்பிடார்களா?

கிரந்த எழுத்துக்களை இங்கே திணித்தவர்கள் புத்த மற்றும் சமண மதத்தவர்கள். பிராமணர்கள் அல்ல.

நம்பள்கி said...

ஐயா உளறல் மன்னனே!
அப்ப...ஆங்கிலத்தில் 'ழ" உச்சரிப்பு இல்லை: "ள" உச்சரிப்பு இல்லை! அதுக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை உருவாக்க சொல்லுங்களேன். சமஸ்க்ரிதத்தில் என்ன புண்ணக்கு உச்சரிப்பு இருந்தாலும் அதுக்கு தமிழில் வார்த்தைகள் உருவாக்கியது தப்பு!

ஒரு மொழியில் எழுத்தே இல்லாதபோது எப்படி இல்லாத எழுத்தை கொண்டு உச்சரிப்பீர்கள்? என்ற உங்கள் கேள்விக்கு இது பதில்

நம்பள்கி said...

[[ஆங்கிலம் தமிழை விட பழமையான மொழி என்று. இங்கே யாராவது ஆங்கிலத்தை தமிழுடன் ஒப்பிடார்களா? ]]
இதை கூறியது...மற்றுமொரு மொழிக்கு உதரணமா செத்த மொழிக்கு நாம் எழுத்தை உண்டாக்க தேவையில்லை. என்ன புடுங்கினாலும் ஆகிலத்தில் வேறு மொழி எழுத்துக்கள் வராது! அதான் கருத்து. புரிந்ததா உளறல் மன்னா!

நம்பள்கி said...

Srinivasan Ramakrishnan:
இங்கு வாதம் கிரந்த எழுத்துக்களை தமிழில் நுழைத்தது தவறு எனபது தான். இது என்ன வேசி மொழியா? இப்படியே போனா உலத்தில் உள்ள எல்லா மொழி உச்சரிப்புக்கும் தமிழில் வார்த்தைகள போடுவாகள் போல!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

https://youtu.be/h3epa83tBDk, வியாசன் , நம்பள்கி இந்த இணைப்பைப் பகிர்ந்துள்ளார். பார்க்கவும்.
திரு. ஶ்ரீநிவாசன் ராமகிருஸ்ணனும் விரும்பினால் பார்க்கலாம்.