Tuesday, May 24, 2016

கனடாவில் கண்ணகியும் ஒரு பார்ப்பனப்பெண்? இப்படித்தான் பார்ப்பனீயம் ஊடுருவியது? .


தமிழர்களின் முப்பாட்டன் முருகனைத் தெய்வமாக வழிபடுவது போன்றே கண்ணகி வழிபாடும் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். தமிழர்களின் மூதாதையர்களில் ஒருவனாகிய முருகன் தமிழர்களால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டது போன்றே தமிழர்களின் முப்பாட்டி தமிழச்சி கண்ணகியையும் வானுறையும் தெய்வத்துள் வைத்துப் போற்றினர் எமது தமிழ் முன்னோர்கள். அந்த தமிழ்ப்பாரம்பரிய வழிபாடு தமிழ்நாட்டில் வழக்கொழிந்து போனாலும், ஈழத்தமிழர்கள் மட்டும் அந்தப் பழந்தமிழ்ப் பாரம்பரியத்தை இன்னும் இழந்து விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது பெருமைப்படக் கூடிய விடயமே.
பார்ப்பனப்பெண்ணாக தமிழச்சி கண்ணகி, Toronto, Canada
மதுரையை எரித்த பின்னர் சினம் தணிந்த சிலப்பதிகாரநாயகியாகிய கண்ணகி இலங்கையை அடைந்து, வடக்கில் வன்னிப்பகுதியிலுள்ள நந்திக்கடலின் கரையிலுள்ள வற்றாப்பளையில் தங்கியதாக மரபுவழிக்கதை நிலவுகின்றது, அவ்வாறே இன்றும் நம்புகின்றனர் ஈழத்தமிழர்கள். வைகாசி விசாகத்தன்று கண்ணகியின் சினம் தணிய தமிழில் பாடல்கள் பாடி, குளிர்த்தி என்ற சடங்கை நடத்தி, சிலப்பதிகாரக்கதை படித்துப் பொங்கலிடுவது ஈழத்தமிழர்களின் வழக்கம். ஆனால் இன்று தமிழச்சி கண்ணகிக்கு முன்னாலும் கூட பார்ப்பனர்கள் சமக்கிருத மந்திரங்களை முணுமுணுக்கும் அபத்தத்தை ஈழத்தமிழர்களின் கோயில்களில் காணலாம். ஆண்டுக்கொருமுறை வைகாசி மாதத்தில் கண்ணகிக்காக நடத்தப்படும் வைகாசிப் பொங்கலை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் தமது கோயில்களில் இன்று கொண்டாடுகின்றனர். ஈழத்தமிழர்களின் பல கோயில்களில் கண்ணகிக்கு தனிச்சன்னதி உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
Tribal Virgin Mary in Jharkhand
அவ்வாறே கனடாவிலுள்ள தமிழர்களும் கண்ணகியின் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அங்குள்ள கோயில் ஒன்றில் தமிழ்ப்பெண் கண்ணகியின் ஓவியத்தில் அவர்  பார்ப்பனப்பெண்கள் அணியும் முறையில் மடிசார் புடவையணிந்த ஒரு பார்ப்பனப் பெண்ணாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இதை வெறும் சாதாரண, சிறியதொரு விடயமாகச் சிலர் கருதலாம். ஆனால் இவ்வாறு தான் பார்ப்பனீயம் படிப்படியாக தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டையும், தமிழர்களின் பழம்பெரும் தெய்வங்களையும் ஆரியமயமாக்கியது, அவர்களை இணைத்து புராணக் கட்டுக்கதைகளை இயற்றியது என்பது தமிழர்கள் பலரும் அறிந்ததே. இன்று தமிழ்க்கடவுள் முருகன் பூணூலுடன் காட்சியளிப்பதன் காரணம் கூட இது தான். இதிலிருந்து  என்ன தெரிகிறதென்றால் கண்ணகி உண்மையில் ஒரு தமிழச்சி என்ற உண்மை கூட ஈழத்தமிழர்கள் பலருக்கும் தெரியாது. அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் பிறந்து வளரும் இளந் தமிழ்ச்சமுதாயத்தினருக்குத் தெரியாது. தமிழ்நாட்டிலும் கூட பல கோயில்களில் அம்மனுக்கு, பிராமணப் பெண்களைப் போலவே மடிசார் புடவை கட்டி அலங்காரம் பண்ணியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதற்குப் பதில் என்னவென்றால், சிவன், பார்வதி எல்லாம் பார்ப்பனர்கள், என்றார்கள். அது எவ்வளவு அபத்தமானது. சிவனே சுடலையில் ஆடும் புலையனல்லவா?
 சிங்களவர்களுக்கு பத்தினியம்மா  
ஆபிரிக்க கறுப்பினக் கிறித்தவர்கள் ஏசுநாதரை ஒரு கறுப்பராகச் சித்தரிப்பதும், தமிழ்க்கிறித்தவர்கள் கன்னிமேரியின் உருவச்சிலைக்கு தமிழ்ப்பெண்கள் போல் புடவை அணிந்து அவர்களில் ஒருவராக மாற்றிக் கொள்வதன் மூலம் தமது பக்தியையும் கடவுளுக்கும் அவர்களுக்கும் உள்ள நெருக்கத்தையும் காட்டிக் கொள்வதை நாங்கள் பார்க்கலாம். ஆனால் இங்கு என்னடாவென்றால் தமிழ்ப்பெண் என்று தெளிவாகத் தெரிந்த தமிழ்க் காப்பியத்தின் கதாநாயகியைக் கூட பார்ப்பனீயம் விட்டு வைக்கவில்லை. ஈழத்தமிழர்களும் அதைப் பெரிது படுத்தவில்லை.  தமிழில் சிலப்பதிகாரம் பாடி, பார்ப்பனப் பெண்ணின் கோலத்தில் காணப்படும் கண்ணகிக்கு 'குளிர்த்தி' நடத்துகின்றனர். ஆனால் (முன்னாள் தமிழர்களாகிய) சிங்களவர்கள் இன்றும் கண்ணகியைப் பொட்டிட்டுப் பூவைத்த தமிழ்ப்பெண்ணாகத் தான் வணங்குகின்றனர் (இலங்கையில் பொட்டும், பூவும் தமிழர்களின் அடையாளம் மட்டுமே) சிங்களவர்கள் கூட கண்ணகியின் தமிழ்ப்பெண் என்ற தோற்றத்தை மாற்றவில்லை, ஈழத்தமிழர்கள் மட்டும் கண்ணகியைப் பிராமணராக்கி விட்டோம். அதை திருத்திக் கொள்ள வேண்டியது தமிழர்களின் கடமை. 

இலங்கையில் யுத்தத்துக்கு முன்பு பார்ப்பனீய, வடமொழிக் கலப்பில்லாமல் தமிழ்ப் பூசாரிகளால், தூய தமிழ் வழிபாட்டு முறைகளால் வணங்கப்பட்டு வந்த கண்ணகி வழிபாட்டில் கூட மெல்ல, மெல்ல பார்ப்பனீயமும், வடமொழியும் ஊடுருவி விட்டன என்பதை ஈழத்தமிழர்களின் கோயில்களை, அங்கு நடைபெறும் மாற்றங்களை அவதானிப்போரால் உணர்ந்து கொள்ள முடியும். உண்மையில் தமிழ், தமிழர் என்று பீற்றிக் கொள்ளும் ஈழத்தமிழர்கள், அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள்  தான் மும்முரமாக பார்ப்பனீயத்தை வளர்த்து விடுகிறார்கள் என்ற உண்மையும் விளங்கும். ஈழத்தில் தமிழில் தேவாரம் பாடாமல் எந்தப் பூசையும், நிகழ்ச்சியும் நிறைவுறாது என்ற நிலை மாறி, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோயில்களில்அங்கு வேலை செய்யும் பார்ப்பனர்கள் விரும்பினால் மட்டும், தேவாரம் பாடுமாறு (அவர்களே பாடுவதில்லை) கேட்கும் நிலையுமேற்பட்டு விட்டது. ஒலிபெருக்கிகளிலும் தமிழ் தேவாரங்களுக்குப் பதிலாக, வடமொழி கலந்த மெல்லிசைப் பாடல்கள் ஒலிக்கின்றன. 

நாம், ஈழத்தமிழர்கள், சைவத்தைத் தமிழாக்க வேண்டுமே தவிர மேலும் வைதீக/பார்ப்பனீய/சமக்கிருதமயமாக்கக் கூடாது, அலங்காரங்களும், வெளி அடையாளங்களும் கூட அதற்கு விதிவிலக்கல்ல. 


தென்னம் பழஞ்சொரியத் தேமாங்
கனியுதிர வன்னி வழிநடந்த மாதே
குளிர்ந்தருள்வாய்"

நந்திக்கடலில் புலிகளின் அழிவுக்குக் கார‌ண‌ம் க‌ண்ண‌கியின் கோப‌மா?

கண்ணகியம்மன் தான் மடுமாதா” என்பது பாப்பாண்டவருக்குத் தெரியுமா? என்கிறார் ஒரு சிங்களப் பேராசிரியர்?

12 comments:

நம்பள்கி said...

அதனாலென்ன?
தமிழ் நாட்டில், பிள்ளையாருக்கு பூணூல் போடும் போது அங்கே கண்ணகிக்கு மடிசார் கட்டினா என்ன? பிராமணர் அல்லாத [தன்னம்பிக்கை இல்லா] சூத்திரப் பயல்களுக்கு கடவுள்[கள்] கூட உயர்ந்த சாதியா இருந்தாத்தான்...அப்படி இருந்து கும்பிட்டாதான் இவனுகளுக்கு சமூகத்தில் மதிப்பு! அப்பத்தான் சாமியே கும்பிடுவார்கள்...கூமுட்டைகள்!

இது பராவாயில்லை...
நாங்கள் இளவயதில், திருப்பதியில் பிள்ளையாரா பார்த்த சிலையை (கார் செல்லும் பாதை) இப்போ தும்பிக்கை ஆழ்வாராக்கி, அதுக்கு "நாமத்தை" வேற போட்டு உள்ளார்கள். அவருக்கு பூணூல் எப்பவோ போட்டாச்சு--அது நோ ப்ராப்ளம்! அது "தென்கலை நாமமா அல்லது வடகலை நாமமா" என்று வைணவ ஆன்மீகர்கள் சொன்னால் நலம்!

viyasan said...

திரு.நம்பள்கி,

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. வேதகாலத்தில் இல்லாத கடவுள்களாகிய தமிழர்களின் ஐயனார், கண்ணகி, சுடலைமாடன், கருப்பசாமி போன்ற கடவுள்களுக்குக் கூட எங்கிருந்து சமக்கிருத மந்திரங்கள் கண்டு பிடித்தார்கள் பார்ப்பனர்கள் என்று நான் வியப்பதுண்டு. ஈழத்துச் சைவத்தின் ‘வஹாபிஸ்ட்’ ஆறுமுக நாவலர் காலத்துக்கு முன்பு கண்ணகி, ஐயனார் போன்ற தமிழர்களின் கிராமிய தெய்வங்களின் வழிபாடு தான் பரவலாக ஈழத்தமிழர்களிடம் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோயிலில் தேரை இழுக்கு முன்பாக தேர்ச்சில்லில் கிடா(ஆடு) வெட்டிய பின்னர் தான் தேரை இழுத்த வழக்கமும் உண்டென்கிறார்கள். சிறு தெய்வங்களாகிய கண்ணகியையும், ஐயனாரையும் கும்பிடுவது ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டது, ஆகமத்துக்கு அதில் இடமில்லை என்று தான் ஆறுமுகநாவலர் அதை எதிர்த்தார். ஆனால் இக்காலத்தில் தமிழர்களின் ஐயனாரை கேரளத்து ஐயப்பனுடன் இணைத்து, காசைக் கொடுத்தால் கண்ணகிக்கும் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதி பூசை செய்கின்றனர் பார்ப்பனர்கள். அது ஆகமவிதிகளுக்கு எதிரானது அல்லவா. ஒரே குழப்பமாக இருக்கிறது.

அன்பு said...

இதெல்லாம் ஒரு மேட்டரா, மகராஷ்டிரா ஷீரடியில் சாய்பாபாவுக்கே பூனூல் போட்டுவிட்டுருக்காங்க. ஷீரடியில் உள்ள ஒரிஜினல் சாய்பாபா யார் என்று உங்களுக்கே தெரிந்து இருக்கும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வள்ளுவருக்கும் பூணூல் போட்டவர்கள் தான் இவர்கள். பழனி ஆண்டவரோ கோவணாண்டி அவருக்கு தங்கக் கவசம் சாற்றி, பட்டுடுத்துக் கூட்டம் இந்த கொள்ளைக் கூட்டம். கண்ணகிக்குப் மடிசார் ஹா ஹா!
நீங்கள் கூறுவது போல் இப்போ வெளிநாடுகளில் ஈழத்தவர்கள் நடத்தும் கோவில் வியாபாரத்தில் பார்பனர்களின் ஆதிக்கமும், வடமொழி ஆராதனைத் திணிப்பும் அதிகம். இதில் பல கோவில்களின் பூசை செய்வது ஈழப் பார்ப்பனர்கள், இவர்களுக்கு வடமொழிச் சுலோகங்களின் கருத்தே தெரியாதென்பது பேரவலம். உச்சரிபைத் தமிழில் எழுதிய புத்தகங்களை வாங்கிப் பாடமாகி விட்டு! கக்குவதே இவர்கள் தொழில்!
கோவில் வியாபாரம் வெளிநாட்டில் மிக லாபகரமானதுடன், அரச சலுகையும் பெறக்கூடிய தொழிலெனும் வகையில், இதில் நம் இனத்துக்கு கேடானவை, மாறானவை என்பது பொருட்டல்ல, பொருள் சம்பாதிக்க என்ன? கூத்துக்கும் தயார். இங்கு கோவில் நடத்தும் பலருக்கு பஞ்ச புராணம் ஓதுக எனும் போது, ஒழுங்காக அவை எவை என ஓதத்தெரியாதென்பதே வேடிக்கை!

viyasan said...

திரு. அன்பு,

இதன் பின்னணி எதுவாக இருக்கும். சூத்திரர்களுக்கு பூணூல் போட்டுப் பார்ப்பனர்களாக்கினால் தான் பார்ப்பனர்கள் அவர்களுக்குப் பூசை செய்யலாம் என்று ஏதாவது விதி இருக்கிறதோ தெரியாது. சிறுதேவதை வணக்கம் ஆகமவிதிகளுக்கு எதிரானது என்றால், காசைக் கொடுத்தால் இக்காலப் பார்ப்பனர்கள் முத்துராமலிங்கத்தேவருக்குக் கூடப் பூசை செய்கிறார்களே. :-)

viyasan said...

திரு. யோகன் பாரிஸ்,

நீங்கள் கூறுவதை எல்லாம் நானும் அவதானித்துள்ளேன். வள்ளுவரை மட்டுமா, தொல்காப்பியரையும் பார்ப்பானாக்கி பூணூல் போட்டு விட்டார்கள். அந்த தமிழ்க் கோவணப்பழனியாண்டியிடமிருந்து தமிழையே பறித்தது வடுகர் – பார்ப்பனக் கூட்டணி. கண்ணகிக்கு மடிசார் அணிவித்து விடுவது பெரிய விடயமில்லைத் தான். ஆனால் கண்ணகியை மடிசாரில் பார்க்கச் சகிக்கவில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களின் கோயில்களில் எல்லாமே பார்ப்பன ஆதிக்கம் அதிகம். உண்மையில் அவை கூட்டு வியாபாரநிறுவனங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. கனடாவில் சில கோயில்களில் நிர்வாகத்தை நடத்துவதே தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தான். அர்ச்சனைச் சீட்டு கொடுப்பது தொடக்கம், பணத்தைக் கையாளுவது, நினைத்தவாறு கட்டணங்களை உயரத்துவது எல்லாமே, தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில பார்ப்பனர்கள் தான். எந்த இலங்கைத் தமிழனையும் அங்கு வேலைக்கமர்த்த முடியாதா. அல்லது தமிழில் அர்ச்சனைப் பயிற்சி பெற்றுள்ள பார்ப்பனரல்லாத தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தால் என்ன. கனடாவில் கேரளப் பார்ப்பனர்களும் கோயில்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஈழத்தமிழர்களின் அழிவில் மலையாளிகளின் பங்களிப்பை எப்படி மறந்தார்கள் என்று தான் தெரியவில்லை.

தமிழ்வளர்க்க வேண்டிய புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோயில்கள் எல்லாம் பார்ப்பனீயத்தை வளர்க்கின்றன. இந்த நிலை மாற ஈழத்தமிழர்கள் எல்லோரும் அதைப்பற்றி அறியவேண்டும், பேசவேண்டும்.

Srinivasan Ramakrishnan said...

தொல்காப்பியர் நான்கு வேதங்களையும் கற்றவர். அவருடைய இயற்பெயரே திரண தூமாக்கினி என்னும் சமஸ்க்ருத பெயர்தான். அதே போல மயிலாப்பூரில் கண்டெடுக்கப்பட்ட வள்ளுவர் சிலையில் வள்ளுவர் பூணல் அணிந்துள்ளார். இப்போது உள்ள வள்ளுவர் உருவபடத்தில் பூணல் மறைக்கப்பட்டுவிட்டது திராவிட கட்சிகளின் கைங்கரியத்தால்.

அந்த கண்ணகியே மதுரையை எரிக்கும்போது பார்பணர்களை விட்டுவிடு என்று தான் கூறுகிறாள், தமிழர்களை விட்டுவிடு என்று சொல்லவில்லை.

viyasan said...

@Srinivasan Ramakrishnan,

எல்லாமே பார்ப்பன இடைச்செருகல்கள். பார்ப்பனர் புகுத்திய சாதிப் பிளவுகளாலும், பார்ப்பனர்களின் பேச்சில் மயங்கிய தமிழ் மன்னர்களின் தவறுகளாலும், உண்மையான தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்த காலத்தில் சமக்கிருதவெறி பிடித்த ஆரியப் பார்ப்பனர்கள் தமிழர்களின் கலை, இலக்கியங்கள் எல்லாவற்றிலும் தமக்குச் சார்பான இடைச்ச்செருகல்களை உண்டாக்கியும், புலவர்கள், அறிஞர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் எனக் கட்டுக்கதைகளைப் புகுத்தியும், பரப்பியும் விட்டனர் என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். சாதியால் பிளவுபட்டுக் கிடந்த தமிழரால் அந்த பார்ப்பனச் சதியை முறியடிக்க முடியவில்லை. அதைத் தான் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் இவ்வாறு கூறினார்.

"தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் அயலாரால் நேர்ந்த கேடுகளைத் தடுக்க இனவொற்றுமையில்லாது போனதே கரணியம் "

- மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்-

viyasan said...

@Srinivasan Ramakrishnan,

//அந்த கண்ணகியே மதுரையை எரிக்கும்போது பார்பணர்களை விட்டுவிடு என்று தான் கூறுகிறாள், தமிழர்களை விட்டுவிடு என்று சொல்லவில்லை.///

பார்ப்பான்களை மட்டும் விட்டு விடு என்று கூறவில்லை. முதியோர், அறவோர், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டார் எல்லோரையும் தான் விட்டு விடு என்று கண்ணகி கூறினாள். அக்காலத்துப் பார்ப்பான் என்பது இக்காலப் பிராமணர்களைக் குறிக்குமா என்பதும் விவாதத்துக்குரியது. பஞ்சம் பிழைக்க தமிழ் மண்ணுக்கு ஓடிவந்த பரதேசிகள், கொல்லப்படுவதை தமிழர்கள் விரும்புவதில்லை. அது பண்டைத்தமிழனின் அறம். அதனால் குழந்தைகள், முதியோர்களுடன் பார்ப்பான்களையும் விட்டு விடு என்று கூறினாள் கண்ணகி.


"பார்ப்போர் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்."

பொருள் : பார்ப்போர்*, அறவழி தவறாதவர்கள், பசுக்கள், பத்தினிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டுத் தீயவர்களை மட்டும் எரித்திடுக எனக் கோபம் கொண்டு கண்ணகி ஏவ, கூடல் நகராகிய மதுரையைப் புகை மண்டிற்று.

* அக்காலத்தில் ஆதித்தமிழர்களாகியா பறையர்களும் பூசாரிகளாக அதாவது பார்ப்போராக இருந்தனர். கண்ணகி அவர்களை விட்டுவிடுமாறு கூறியதாகவும் கொள்ளலாம்,

Srinivasan Ramakrishnan said...

//என்ன இடைசெருகல்//
சங்க இலக்கியங்கள் சொன்னால் அது இடைசெருகல். பாவாணர் சொன்னால் அது உண்மையா?

//பார்ப்பனர்கள் என்ன சாதியை புகுத்தினார்கள்//
தொல்காப்பியம் மக்களை பார்ப்பணர், அரசர், வணிகன், வேளாண்மாந்தர் என்று வகைப் படுத்தி சொல்லவில்லையா?

உங்களுக்கும் திராவிட கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு?
அவர்களும் பிராமணர்களை வெளியில் இருந்து வந்தவர்கள் என்றார்கள், நீங்கள் திராவிடர்களும், பிராமணர்களும் வெளியில் இருந்து வந்தார்கள் என்கிறீர்கள்.

கண்ணகி பார்ப்பனர்களை மட்டும் சொல்லவில்லை என்பதை நான் அறிவேன். நான் பார்ப்பனர்களை யாரும் வெறுக்கவில்லை என்று சுட்டிக்காட்டவே பார்ப்பனர்களை எரிக்க வேண்டாம் என்று கண்ணகி சொன்னதை மட்டும் சொன்னேன்.

உண்மையான தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது?
எங்கே மறுக்கப்பட்டது சொல்லுங்கள்? சும்மா எல்லோரும் சொல்கிறார்கள் என்று சொல்லக்கூடாது?

அடுத்து சமஸ்க்ருத வெறி பிடித்த ஆரிய பார்ப்பணர்கள், இதுவும் காழ்ப்புணர்ச்சி. என்ன சமஸ்க்ருத வெறி? சொல்லுங்கள்.

//பறையர்கள் பார்ப்பணர்களாக இருந்தனர்.//
தொல்காப்பியம் உயிர்களை அறிவு-ஜாதி-பிறப்பு-பெயர் என வகைப் படுத்துகிறது.

அறிவு - ஓரறிவு முதல் ஆறறிவு வரை,
ஜாதி - விலங்கு ஜாதி, பறவை ஜாதி, மக்கட் ஜாதி,
பிறப்பு - அந்தணர், அரசர், வணிகர், வேளாண்மாந்தர்,
பெயர் பற்றி சொல்லும் போது
நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின் பெயரே,
வினைப் பெயர், உடைப் பெயர்,பண்பு கொள் பெயரே,
பல்லோர் குறித்த முறை நிலைப் பெயரே,
பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே,
பல்லோர் குறித்த திணை நிலைப் பெயரே,
கூடி வரு வழக்கின் ஆடு இயற் பெயரே,
இன்றிவர் என்னும் எண்ணியற்பெயரொடு,
அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே .

இதன் படி பார்த்தால் பறையர்கள் குடிப்பெயர் கீழ் வருகிறார்கள். புறநானூறு பாடல் ஒன்றும் குடிகள் என்றால் பாணன், துடியன், பறையன், கடம்பன் என்னும் 4 குடிகளே, வேறு யாரும் இல்லை என்கிறது.

அதே போல குடிகள் அல்லாது மற்ற பெயர்களின் கீழும் மக்கள் வகை படுத்தப்பட்டனர். (ex:நிலப்பெயர், குழு பெயர் etc...)

புறநானூறு குடிகள் தான் வேறு இல்லை என்று சொன்னதே ஒழிய வேறு மக்களே இல்லை என்று சொல்லவில்லை. எனவே பல்வேறு பிரிவுகளில் இருந்த மக்களும் பார்ப்பணர்கள் ஆக மாறி இருக்க வாய்ப்பிருக்கிறது. பறையர்கள் மட்டுமே பார்ப்பணர்கள் அல்ல.

நம்பள்கி said...

மதுரை எரியும் போது, பார்பனர்களை விட்டு விடு என்று சொன்னது ஓர் இடை செருகல்.
ஏன் அப்படி?
பார்ப்பனர்கள் மற்றவர்களை விட மேலானவர்கள், நல்லவர்கள், இயலாதவர்கள்...ஆதாலால் அவர்கள் எரியக் கூடாது!--இதான் சூட்சமம்!

புரியவில்லையா?
இதையே சூத்திரர்கள் (பிராமணர் அல்லாதோர்) எறியக்கூடாது என்று இருந்தால் என்ன சொல்வீர்கள்? அதான் அவாளின் இடைசெருகல் சூட்சமம்!

K Abinaya said...

அந்தக்ககாலத்தில் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்பெறும் அந்தணர் , பார்ப்பான் போன்ற சொல்லாடல்களை இக்கால பிராமணர்கள் எனப் பொருள் கொள்வது முற்றிலும் தவறு.