Saturday, April 30, 2016

“தமிழ்நாட்டில் உண்மையான தமிழ்த் தலைவர்களே கிடையாது?”


“தமிழினத் தலைவர்” கூட உண்மையிலேயே தமிழர் இல்லை என்கிறது 'The Pioneer' இணைய இதழிலுள்ள NO REAL TAMIL-SPEAKING LEADERS IN TN! என்ற கட்டுரை. பல ஈழத்தமிழர்களுக்கு இது நிச்சயமாக அதிர்ச்சியைக் கொடுக்கும், ஏனென்றால் பலருக்கும் (நான் உட்பட) இந்த உண்மை தெரியாது. 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்தகுடி' என்று  பீற்றிக் கொள்ளும் தமிழர்களுக்கு, இதை விடக் கொடுமை வேறேதுமிருக்க முடியாது. விஜயநகர மன்னர்களினதும் நாயக்கர்களினதும் ஆட்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முடிந்த பின்னரும் கூட, தமிழ்நாட்டில் மட்டும் அது இன்றும் தொடர்வதற்குக் காரணம் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் வீரமும், விவேகமும் இல்லையா அல்லது வெறும் இளிச்சவாய்த்தனமா என்பதைத் தான் என்னைப் போன்ற உலகத் தமிழர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.  

அப்பாவித் தமிழ்நாட்டுத் தமிழர்களின் நிலைமையுடன் ஒப்பிடும் போது, ஈழத்தமிழர்களின் நிலை எவ்வளவோ பரவாயில்லைப் போல் தெரிகிறது. குறைந்த பட்சம் எங்களின் தலைவர்கள் எல்லோருமே தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கையுள்ள, அப்பழுக்கற்ற தமிழர்கள்.

தெலுங்கர்களிடமும், கன்னடர்களிடமும், தமது சொந்த மண்ணின் அரசியலையும். வட இந்தியர்களிடம் பொருளாதாரத்தையும், மலையாளிகளிடம் தமது  சொந்த தாய்த்தமிழ் மாநிலத்தின் வர்த்தகபலத்தையும் இழந்து விட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்கின்ற தமிழ்நாட்டுத் தமிழர்களால் எத்தனை ஆண்டுகளானாலும் எழுந்திருக்கவே முடியாது என்பது பெரியாருக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால் தான்  ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு உதவுமாறு கோரிய ஈழத் தமிழர்களின் தலைவர் தந்தை செல்வாவிடம் , “ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது” என்று  நாற்பது வருடங்களுக்கு முன்பே அவர் கூறியதற்கு காரணமாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

பெரியார் கட்டிவிட்ட 'திராவிடன்' என்ற கோவணத்தை எந்த மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டதால் ஆயிரமாயிரமாண்டுகளாக நமது முன்னோர்கள் கட்டிக்காத்த தமிழன் என்ற அடையாளத்தையும், உரிமைகளையும் மட்டுமன்றி தமது சொந்த மண்ணில் ஆட்சியையும், அதிகாரத்தையும் இழந்து நிற்கின்றனர் தமிழ்நாட்டுத் தமிழர்கள். ஐம்பதாண்டு காலமாக திராவிடம் என்ற பெயரில் மாற்று மொழிவழி, இனவழித் தோன்றல்கள் செய்த அட்டூழியங்களினதும், அவர்களின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்தினதும் காரணமாக அவர்கள் மீது ‘நாம் தமிழர்’ போன்ற தமிழுணர்வுள்ள தமிழர்களின் கோபம் திரும்பியுள்ளது நியாயமானதாகத் தான் படுகிறது. 

தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழர்கள் மீண்டும் தமிழர்களாக எழ முடியும். ஆனால் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்களும், தமிழ் நாட்டை தமிழர்கள் தான்ஆள வேண்டுமென்ற வெறும் சாதாரண அடிப்படைக் கருத்தையே திரித்துப் பூச்சாண்டி காட்டித்,  தமிழின ஒற்றுமையை வலியுறுத்துகிறவர்களைப் பழிவாங்கவும், அவர்களை இழிவு படுத்தவும்,  அவர்களுக்கெதிராக பொய்ப் பிரச்சாரம் செய்பவர்களுமே தமிழ் இணையவுலகில் அதிகமாக உள்ளனர். அவர்களையும், அத்தகைய இணையத் தளங்களையும் உலகெங்கும் பரந்து வாழும், தமிழுணர்வுள்ள தமிழர்களாகிய உலகத் தமிழர்கள் ஆதரிக்கலாமா என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைத் தான் 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்றார்கள் எமது முன்னோர்கள்.


8 comments:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

தமிழ்த் தலைவர்கள் இல்லாவிட்டாலும்
தமிழ் பேசும் தலைவர்கள் ஆச்சே!

Raj Kumar said...

அன்பரே உங்க கட்டுரைகளை நான் மலேசியாவில் semparuthi.com... எனும் வலைபகுதிக்கு அனுப்பி வருகிறேன் . இதை ஏற்க்கனவே நான் உங்களுக்கு தெரியபடுத்திருக்கேன் . உங்களுக்கு ஆட்சேபனை இருந்ததால் தெரியபடுத்தவும் . நன்றி .

viyasan said...

திரு. Raj Kumar,

நீங்கள் விரும்பினால், மீள்பதிவு செய்து கொள்ளலாம். அதில் எனக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. நன்றி.

Kalai said...

ஆச்சரியமான விஷயம்தான். இதைதான் கமல் இங்க சொல்லியிருக்காரு! https://www.youtube.com/watch?v=GnEFIqAzVJQ

viyasan said...

திரு. Jeevalingam Yarlpavanan Kasirajalingam,

அப்படிப் பார்த்தால், மகிந்த ராஜபக்சவும் கூடத் தான் தமிழ் பேசுகிறார். அவரை நாங்கள், ஈழத்தமிழர்கள் தமிழினத் தலைவராக ஏற்றுக் கொண்டால் என்ன?

Kalai said...

இதைதான் கமல் இங்க (1:40 to 1:53)சொல்லியிருக்காரு! https://www.youtube.com/watch?v=GnEFIqAzVJQ

Vadivel Kannu said...

//////பெரியார் கட்டிவிட்ட 'திராவிடன்' என்ற கோவணத்தை எந்த மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டதால் //////
அந்த கோவணமும் இல்லையென்றால் தமிழன் நிர்வாணம்தான் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி!

viyasan said...

@Vadivel Kannu,

வடிவேல் என்று பெயர் இருந்தாலே அவர்கள் நகைச்சுவையில் வல்லவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. தமிழர்களின் தமிழர் என்ற அடையாளத்தை, அதாவது கட்டியிருந்த வேட்டியையும் உருவி விட்டுத் தான், திராவிடர் என்ற கோவணத்தைப் பெரியார் தமிழர்களுக்குக் கட்டி விட்டார். தமிழர்களுக்கு தமிழன் என்ற அடையாளம் மிகவும் பழமையானது. ஆனால் பெரியாரின் புண்ணியத்தில் அந்த வேட்டியும் பறிபோய் விட்டது.