Sunday, April 24, 2016

கலைஞர் கருணாநிதிக்கு தான் அந்த 'தில்' இருக்கிறது!மேலைநாட்டு அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடனேயே அரசியலிலிருந்து அவர்களே  ஓய்வெடுத்துக் கொள்வார்கள் அல்லது அந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அல்லது அவர்களின் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் ஆரம்பித்து தலைமைப்பதவியை வேறு யாராவது கைப்பற்றிக் கொள்வார்கள்.

பிரிட்டனின் ஆனானப்பட்ட இரும்புப் பெண்மணி - மாகரட் தட்சரோ - அல்லது கனடாவின் அரசியலமைப்பையே மாற்றி அமைத்த பியர ரூடோ கூட அதற்கு விதி விலக்கல்ல. வெறும் 65 வயதிலேயே தட்சரின்  பிரதமர் பதவியை, அவரது கட்சியினரே  பறித்துக் கொண்டு  விட்டார்கள். மேலைநாடுகளில் அதற்குக் கூறும் காரணம் என்னவென்றால் குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் மனிதர்களின் மூளை, முறையாக இயங்க மறுப்பது மட்டுமன்றி, வயதான காலத்தில் ஓய்வெடுக்க வேண்டிய வயதில்  அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவது அவர்களின் உடல் நலத்துக்குக் கேடு என்பது தான்.

ஆனால் தமிழ்நாடு போன்ற சாதி, மொழி, பொருளாதாரப் பிரச்சனைகள் மட்டுமன்றி  கோடிக்கணக்கானோருக்கு சுத்தமான குடிநீர் வசதிகளும், கழிப்பறை வசதிகளும் கூட இல்லாத ஒரு மாநிலத்தில்,    நடக்கக் கூட முடியாமல் தள்ளுவண்டியில் அமர்ந்திருக்கிற  93 வயதான முதியவர்  ஒருவர் தமிழ்நாடு போன்ற, பிரச்சனைகளும் குழப்பங்களும் நிறைந்த ஒரு மாநிலத்துக்கு, அதுவும் இருபத்தோராம் நூற்றாண்டில் முதலமைச்சராக வரத் துடிப்பதற்கு உண்மையிலேயே அவருக்குத்  'தில்' இருக்க வேண்டும். அதிலும் கவலை நிறைந்த, வேடிக்கை என்னவென்றால்  உண்மையிலேயே அவர் மீண்டும் முதலமைச்சராவது  கூட தமிழ்நாட்டில் சாத்தியம் என்பது தான்.

இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களிலோ அல்லது வேறு நாடுகளிலோ நடக்க முடியாத பல அபத்தங்கள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது  தமிழ்நாட்டை உன்னிப்பாக அவதானிக்கும்  உலகத் தமிழர்களுக்குத் தெரியும்.

உதாரணமாக தமிழ்நாட்டில் மட்டும் தான், தமிழ்நாட்டுக்கு ஆடிப்பாடி, பஞ்சம் பிழைக்க வருகிறவர்கள் கூட, ஒரு சில ஆண்டுகளின் பின்னர் தமிழர்களை ஆளுவதைப் பற்றி நினைத்துப் பார்க்க  முடியும் என்பது  மட்டுமன்றி உண்மையாகவே தமிழ்நாட்டுத் தமிழர்களை ஆளவும் முடியும். . அவர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்களே தம்மை ஆளுமாறு வருந்தி அழைப்பார்கள். ரஜனிகாந்த், விஜயகாந்த், குஸ்பு போன்ற பலர் அதற்கு எடுத்துக் காட்டாக உள்ளனர். சொந்த மண்ணிலேயே அந்நியர்களுக்குச் சேவகம் செய்வதில் பெரிய மனத்திருப்தியும், மகிழ்ச்சியும்  அடைபவர்கள், அதைப் பெருமையாக நினைப்பவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள். அதே வேளையில் இன்னொரு  தமிழன் அவர்களை ஆளுவதற்கு  அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஏனென்றால்  ஒரு அந்நியன் தம்மை ஆளலாம், தனது சாதி தவிர்ந்த இன்னொரு சாதிக்காரத் தமிழன் தமிழ்நாட்டை ஆள விடக் கூடாது என்ற சாதி வெறி தான் அதற்குக் காரணம், இவ்வாறு  எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.

இந்த இழிநிலைக்கு பெரியாரியமும், திராவிடமும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் தமிழன் என்ற தமிழுணர்வை மழுங்கடித்து, திராவிடன் என்ற கோவணத்தைக் கட்டி விட்டு,  தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்து  அவர்களின் சாதியுணர்வைத் தூண்டி விட்டது தான் காரணமென வாதாடலாம். ஆனால் கலைஞர் கருணாநிதியின் தன்னம்பிக்கையையும், தமிழர்களின் இளிச்சவாய்த்தன்மையை அவர் எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளார் என்பதையும்  வியந்து பாராட்டுவது தான் என்னுடைய இந்தப் பதிவின் நோக்கமாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக கலைஞர் கருணாநிதி அவர்கள், சட்டசபை உறுப்பினராக இருந்தும் கூட, சட்டசபைக்கே போகவில்லையாம். ஐந்து வருடங்களாகச்  சட்ட சபைக்குப் போக முடியாமல் தள்ளுவண்டியில் காலத்தைத் தள்ளும் ஒரு முதியவர், முதல்வராகி எப்படி சட்டசபைக்கு ஒழுங்காகப் போய் தனது கடமையைச் செய்வார். ஓய்வெடுக்க வேண்டிய இந்த வயதில் அவரை இவ்வாறு  துன்புறுத்துவது எவ்வளவு பாவம் என்பதை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லைப் போல் தெரிகிறது.
அளவுகடந்த புத்திரபாசம் தான் காரணமா?  
என்னதான் இருந்தாலும் உலகில் குறிப்பாக மேலைநாடுகளில் எந்த அரசியல்வாதியும் செய்யத் துணியாத ஒரு விடயத்தை, அதாவது 93 வயதில் தள்ளுவண்டியில் அமர்ந்தவாறே, குழப்பங்களும், தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகளும் நிறைந்த தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்துக்கு மீண்டும், மீண்டும் முதலமைச்சராக வர முயல்வதற்கு, எதையுமே சிந்திக்காமல் வாக்களிக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் இளிச்சவாய்த்தனத்தின் மீது அவருக்குள்ள அளவு கடந்த நம்பிக்கை தான் காரணமென சிலர் கூறினாலும் கூட, கலைஞர் கருணாநிதி அவர்களின் "தில்' ஐ யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.

19 comments:

நம்பள்கி said...

[[ரஜனிகாந்த், விஜயகாந்த், குஸ்பு போன்ற பலர் அதற்கு எடுத்துக் காட்டாக உள்ளனர்சொந்த மண்ணிலேயே அந்நியர்களுக்குச் சேவகம் செய்வதில் பெரிய மனத்திருப்தியும், மகிழ்ச்சியும் அடைபவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.]]

ஏனுங்க! ஜெயலலிதா இந்த கும்பலில் இல்லையா?
உண்மையில் விடம் அடிமைகளை விட கேவலாமாக இருக்கிறார்கள். அது ஓகேவா?

ஜெயலலிதா விஜயகாந்த் எந்த விதத்தில் ஜெயலலிதாவை விட மட்டம்? தமிழ்நாட்டை ஆட்சி செய்வது அதிகாரிகள். முதல் அமைச்சர் வேலை கமிஷன் வாங்குவது! ஏன் அந்த வேலையை விஜயகாந்த் செய்யமாட்டாரா??

ஏன் எம்ஜீயார் என்ன மண்ணின் மைந்தரா? வைகோ, விஜயகாந்த் கூட நாம் மண்ணின் மைந்தர் என்று அழைக்கலாம்! எம்ஜீயார் இல்லை!


கலைஞர் கருணாநிதிக்கு தான் அந்த 'தில்' இருக்கிறது என்பது மட்டும் இல்லை; இவர்கள் எல்லோரையும் விட மூளை நன்றாக வேலை செய்கிறது!

கலைஞர் கருணாநிதியை மூட்டை என்று சொன்னவர்கள் எல்லோரும்...இன்று நடக்க நிற்க முடியாமல், சொந்தாமாக சிந்தித்து எழுத தெரியாமல்...ஆட்சி என்ற பெயரில் கூத்து அடிக்கிறார்கள்.


viyasan said...

திரு. நம்பள்கி,

//ஏனுங்க! ஜெயலலிதா இந்த கும்பலில் இல்லையா? உண்மையில் விடம் அடிமைகளை விட கேவலாமாக இருக்கிறார்கள். அது ஓகேவா?//

விரும்பினால் ஜெயலலிதாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு என்னிடமிருந்து எந்த எதிர்ப்புமில்லை. நான் அவரைக் குறிப்பிடாததன் காரணம். அவருக்கு இன்னும் 90 வயதாகி, தள்ளுவண்டியில் இருந்து கொண்டு ஆட்சி செய்ய ஆசைப்படவில்லை, அவர் இயங்கும் நிலையில் தான் உள்ளார் என நம்புகிறேன். அவர் தனது கட்சியிலுள்ள தமிழர்களை அடிமைகளாக நடத்துவது பற்றியதல்ல இந்தப் பதிவு. அது கேவலமானது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.


//ஜெயலலிதா விஜயகாந்த் எந்த விதத்தில் ஜெயலலிதாவை விட மட்டம்? ///

ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் ஒப்பிடுவது அபத்தம். விஜயகாந்த்துக்கு தமிழில் கூட கோர்வையாக, புரியும் வகையில் ஒருவசனம் கூடப் பேசமுடியாது என்பதை காஞ்சிபுரம் மாநாட்டின் மூலம் முழு தமிழ் பேசும் நல்லுலகமே அறிந்து கொண்டது. ஆனால் ஜெயலலிதாவிடம் பேச்சுத்திறன் மட்டுமன்றி ஆளுமைத் திறமையும் உண்டு. ஆனால் அவரும் விலகி, இளைய தமிழர்களுக்கு வழி விடுவது தான் நல்லது என்பது எனது கருத்தாகும். எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதாவின் பூர்வீகம் திருவரங்கம், அவரது தாய்மொழி, வாய்மொழி, பேச்சுமொழி, வீட்டுமொழி எல்லாமே தமிழ் தான். அவர் ஒரு தமிழச்சி என்றும் கூட வாதாடலாம். அவர் அரசியலுக்கு வருமுன்பே அவரே அவ்வாறு வாதாடியதாகவும் கூறுகின்றனர். ஆனால் விஜயகாந் என அழைக்கப்படும் விஜயராஜ் நாயுடு தமிழனா என்பதை நீங்கள் தான் கூற வேண்டும். :-)


//தமிழ்நாட்டை ஆட்சி செய்வது அதிகாரிகள். முதல் அமைச்சர் வேலை கமிஷன் வாங்குவது! ஏன் அந்த வேலையை விஜயகாந்த் செய்யமாட்டாரா??///

இது அபத்தமான வாதம். அதிகாரிகள் தான் எல்லா நாட்டிலும் நிர்வாகத்தை கொண்டு நடத்துகிறார்கள் என்பதற்காக. கண்டவனையும் தம்மை ஆளுவதற்கு எந்த நாட்டு மக்களும் தெரிவு செய்வதில்லை. தகுதியுள்ளவர்களை, நாட்டு நடப்பை, அரசியல், பொருளாதாரம் புரிந்தவர்களைத் தான் தெரிவு செய்கிறார்கள். நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் எதற்காக, தமிழ்நாட்டை விஜய்காந்து ஆள வேண்டும். அதிகாரிகளின் உதவியுடன் செந்திலோ அல்லது வடிவேலோ ஆள முடியாதா. தமிழ்நாட்டுத் தமிழர்கள் அவர்களுக்கு வாக்களித்தால் என்ன. கருணாநிதி, வைகோ, விஜயகாந், ரஜனிகாந்த் எல்லோரையும் விட குறைந்த பட்சம் அவர்கள் இருவரும் தமிழர்கள், தமிழ் மண்ணின் மைந்தர்கள் அல்லவா?


//ஏன் எம்ஜீயார் என்ன மண்ணின் மைந்தரா? வைகோ, விஜயகாந்த் கூட நாம் மண்ணின் மைந்தர் என்று அழைக்கலாம்! எம்ஜீயார் இல்லை!///

எம்ஜீயார் மண்ணின் மைந்தர் என்று நான் கூறவில்லையே

//கலைஞர் கருணாநிதிக்கு தான் அந்த 'தில்' இருக்கிறது என்பது மட்டும் இல்லை; இவர்கள் எல்லோரையும் விட மூளை நன்றாக வேலை செய்கிறது! ///

அது அவரை, அவரது அசாதாரண மூளையை யாராவது விஞ்சானிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்ன்னர் தான் கூற வேண்டும். ஏனென்றால் வயதாக, ஆக மூளையின் இயக்கம் குறைகிறது என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. அது மட்டுமன்றி அவர் மீது அக்கறையுள்ள உங்களைப் போன்ற தமிழர்கள், அவரது நன்மைக்காக, அவரது உடல்நலனைக் கருதி அவரைக் கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டும். :-)

Anonymous said...

இது ‘தில்’ சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இது தன்னுடைய கடைசி தேர்தல் என்றெல்லாம் சொல்லி, அசட்டுத் தமிழன் மனதில் செண்ட்டிமெண்ட்டை கிளப்பி, தன் பெயரைச் சொல்லியாவது அதிக ஓட்டு வாங்கி, தன் அருமைப்பிள்ளை ஸ்டாலினை அரியாசனத்தில் அமர்த்திவிடவேண்டும் என்கிற அடங்கா ஆசை சம்பந்தப்பட்டது. எப்படி 2014-ல் மன்மோகனுக்குப்பிறகு, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க, சோனியாவுக்கு ‘தில்’ இல்லையோ, அதேபோல் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கலைஞருக்கு ‘தில்’ இல்லை. அப்படி அறிவித்தால் கட்சியில் குழப்பம் விளையும்.மதுரை வீரன் அழகிரி போர் வாள் எடுப்பார். கட்சி உடையும் என்பது கலகக் கருணாநிதிக்குத் தெரியாததா? கருணாநிதி குள்ளநரித் தந்திரத்திற்குப் பேர்போனவர். ‘தில்’லுக்கு அல்ல, நண்பரே !

நம்பள்கி said...

[[[ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் ஒப்பிடுவது அபத்தம். விஜயகாந்த்துக்கு தமிழில் கூட கோர்வையாக, புரியும் வகையில் ஒருவசனம் கூடப் பேசமுடியாது என்பதை காஞ்சிபுரம் மாநாட்டின் மூலம் முழு தமிழ் பேசும் நல்லுலகமே அறிந்து கொண்டது. ஆனால் ஜெயலலிதாவிடம் பேச்சுத்திறன் மட்டுமன்றி ஆளுமைத் திறமையும் உண்டு]]]
அது இன்று! நோய் எல்லோருக்கும் வரும்! நோய் எப்படி வந்தது பார்க்கத் தேவையில்லை.
நோய் அரசி சோறு தின்னு வந்தா என்னா? தண்ணி அடிச்சு வந்தா என்ன?

[அன்று விஜயகாந் சொந்தமா பேசாத பேச்சா? ஆனால், என்று ஜெயலலிதா சொந்தமாக பேசியுள்ளார்கள்? எழுதி கொடுத்ததை தான் பேசியுள்ளார்கள். அவர்கள் கடந்த ஐந்து வருடம் செய்த ஆட்சி தான் தெரியுமீ! 110 விதியின் கீழ் படித்தார்கள். ஏதாவது விவாதம் உண்டா? இல்லை அவர்கள் படித்தது எதையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா?
இப்ப இருக்கும் ஆட்சிக்கு செந்திலோ அல்லது வடிவேலோ தாரளமா ஆளலாம்!

.

viyasan said...

//அது இன்று! நோய் எல்லோருக்கும் வரும்! நோய் எப்படி வந்தது பார்க்கத் தேவையில்லை.//

நோய் வந்தால் அதற்கு மருத்துவம் பார்க்க வேண்டுமே தவிர, நோய் வருமுன்பு எவ்வளவு நன்றாக இருந்தார் என்ற காரணத்துக்காக அவரை எட்டுக்கோடித் தமிழர்களை ஆளுவதற்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் எல்லோரும் அண்ணாந்து, அன்போடு பார்க்கும் தமிழ்மண்ணுக்கு முதலமைச்சராக்க வேண்டியதில்லை. அது வெறும் அபத்தம். விஜயகாந்த் அவரது நோய்க்கு மருத்துவம் பார்த்து விட்டு, தமிழர்கள் தமிழ்மண்ணை ஆளுவதைப் பார்த்து பூரிப்படைய வேண்டுமே தவிர தமிழர்களை ஆளுவதற்கு ஆசைப்படக் கூடாது.


//இப்ப இருக்கும் ஆட்சிக்கு செந்திலோ அல்லது வடிவேலோ தாரளமா ஆளலாம்!//
செந்திலும் வடிவேலும் தமிழர்கள், அவர்களுக்கு தமிழ்மண்ணை ஆளும் தார்மீக உரிமையுண்டு.

viyasan said...

திரு.maalvannan,

எந்தவித தயக்கமுமின்றி தமிழர்களின் அசட்டுத் தனத்தை மீண்டும்,மீண்டும் அவர்கள் உணர விடாமல் தனக்கும், தனது குடும்பத்துக்கும் சாதகமாக்கிக் கொள்ளவும் கூட. ஒரு 'தில்' இருக்க வேண்டும். அது இந்த தள்ளாத வயதிலும் கலைஞர் கருணாநிதியிடம் உள்ளது என்பது தான் எனது கருத்தாகும்.

நம்பள்கி said...

[[ஆனால், என்று ஜெயலலிதா சொந்தமாக பேசியுள்ளார்கள்? எழுதி கொடுத்ததை தான் பேசியுள்ளார்கள். அவர்கள் கடந்த ஐந்து வருடம் செய்த ஆட்சி தான் தெரியுமீ! 110 விதியின் கீழ் படித்தார்கள். ஏதாவது விவாதம் உண்டா? இல்லை அவர்கள் படித்தது எதையாவது நிறைவேற்றி இருக்கிறார்களா?]]

விஜயகாந்தை விடுங்கள்; இப்ப நடக்கும் ஆட்சி எப்படி? அதற்கு பதில் சொல்லுங்க? வரப்போகும் விஜயகாந்த் ஆட்சி வேணாம் சரி! இப்ப நடக்கும் கூத்து ஒழிய வேண்டாமா? அதான், இப்ப இருக்கும் ஆட்சிக்கு செந்திலோ அல்லது வடிவேலோ தாரளமா ஆளலாம்!

வே.நடனசபாபதி said...

கேரளாவில் கூட 93 வயதான மார்க்சிஸ்ட் தலைவர் முன்னாள் முதல்வர் திரு V.S. அச்சுதானந்தன் அவர்களும் அந்த மாநிலத் தேர்தலில் நிற்கிறார். இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு நிர்ணயிக்காத வரை யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இதுதான் உண்மை நிலை.

viyasan said...

திரு.வே.நடனசபாபதி,

இது எதைக்காட்டுகிறதென்றால். ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதைத் தான். கேரளாவின் அச்சுதானந்தன் கூட நடமாட முடியாத நிலையில் தள்ளுவண்டியில் தான் அமர்ந்திருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. மாநிலத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரிகள் இருந்தால் போதும். எத்தனை வயதானாலும், நோய்வாய்ப்பட்டிருந்தாலும் பரவாயில்லை, எவரும் முதலமைச்சராக இருந்து விட்டுப் போகட்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் உள்ளது போல் தெரிகிறது. இதற்கு எதற்காக இத்தனை கோடி செலவில் தேர்தல் நடத்த வேண்டும். அரசு அதிகாரிகளே ஆட்சியை நடத்தலாமே.

viyasan said...


திரு. நம்பள்கி,

வரப்போகும் விஜயகாந்த் ஆட்சியா? அடுத்ததாக விஜயகாந்த் தான் ஆட்சி அமைப்பார். தமிழ்நாட்டுத் தமிழர்கள் உலகத் தமிழர்களின் முகத்தில் கரியைப் பூசுவார்கள் என்பதை நீங்களே முடிவு பண்ணி விட்டீர்கள் போல் தெரிகிறது. இப்ப நடக்கும் கூத்து ஒழிவதற்காக, இன்னொரு தெலுங்கு குடும்ப அரசியலை தமிழ்நாட்டில் உருவாக்கி விடுவதற்குப் பதிலாக தமிழர்களாகிய செந்திலோ, வடிவேலோ ஆள்வது எவ்வளவோ மேல்.

மானுடன் said...

வியாசன் உங்களது பகுதி நேர தமிழக தமிழர் அக்கறைக்கு வந்தனம்.இனத்தூய்மை வாதம் அதிலும் திராவிட கருத்தாக்கத்திற்கு எதிரான தனித் தமிழ் இனத் தூய்மை என்றால் உங்களுக்கு ”ஒரு கல் ரெண்டு மாங்காய்” களிப்பை தருகிறது.உங்களது அக்கறையை குளுகுளு கனடாவில் உட்கார்ந்து கொண்டு கணினியின் முன்னமர்ந்து வெளிப்படுத்துகின்ற வேளையில் உங்களது குரலை, இங்கு உங்களது நாயகன் சீமான் 109 டிகிரி மண்டையை பிளக்கும் வெயிலில் மைக்கோடு மல்லுகட்டி கொண்டிருக்கிறார்.அவர் முதல்வராகும் கனவுக்கு முடிந்தால் இங்கு வந்து ஆனதை செய்யுங்கள்.
ஈழம் மலரட்டும் என்றும் இந்தியா ஈழத்தை வென்றெடுக்க உதவ வேண்டும் என்றும் பல பத்து தம்பிகள் தங்களை தமிழன் என்று நம்பியே இங்கே தீக்குளித்தும் இன்னபிற முறையிலும் தமது இன்னுயிரை துறந்தனரே அவர்களில் எத்தனை பேர் தூய்மையான தமிழினம் என்பதை அறிந்து கொண்டீர்களா? எத்துணை தலைமுறைக்கு முன்னால் வந்தாலும் எழுச்சியுற்ற தமிழகத்தின் தமிழனாகவே தன்னை கருதிக் கொண்டிருந்த பலருக்கும் ஈழத்தமிழினம் வதைபட்ட போது அதைத் தாளாமல் தன்னை மாய்த்துக் கொண்டாவது இந்திய அரசின் அல்லது மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப முயன்றனரே அந்த தியாகமெல்லாம் உங்கள் கொழும்பு தமிழனுக்கு கூட வரவில்லையே? ஈழத் தமிழனுக்காக இன்னுயிரை ஈந்தவர்கள் ,சிறைவாசம் அனுபவித்தவர்கள் தமிழர்கள்.ராஜிவ் கொலைப்பழியில் சிக்கி 25 ஆண்டுகளாக தூக்குமர நிழலில் இருந்து மீண்டும்,இன்றும் வெளிவரும் கதியற்று இருப்பவர்களில் பாதிப் பேர் இந்திய தமிழர்கள்.அவர்கள் சாதி சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கிறதா? சாதி சான்று இல்லாமல் உங்களால் தூய்மையான தமிழினத்தை கண்டுபிடிக்க இயலாதே? நாடாரா தமிழன், நாயுடுவா தெலுங்கன்,தேவரா தமிழன், தமிழகத்து மக்களின் கழிவை சுமந்த அருந்ததிய மக்களா அவர்கள் தெலுங்கர்கள் என்று சாதி பார்த்து தமிழனை கூறு போட நீங்கள் யார்? சாதி அடிப்படையில் தமிழனை குறுக்காக பிளக்கும் வேலையை செய்வது நிம்மதியாக வாழும் தமிழனை திக்கற்றவர்களாக ஆக்குவதாகும்.
எனவே கனடிய குளுகுளு பருவ நிலையை மறந்து கூடியவரை விரைவாக இலங்கை திரும்பி நல்லதொரு அரசியல் மாற்றத்திற்கு ஆனதை செய்யுங்கள்.எல்லாம் நலமான பின்னர் நாடு திரும்பலாம் என்று சொகுசை அனுபவித்து காலத்தை கடத்தாமல் அந்த நல வாழ்வை அமைக்க நாடு திரும்பி ஆனதை செய்யுங்கள்.கொஞ்சம் தெளிவாக சொன்னால் ”உங்கள் வேலையை போய் பாருங்கள்”

viyasan said...

திரு.மானுடன்


//இங்கு உங்களது நாயகன் சீமான் 109 டிகிரி மண்டையை பிளக்கும் வெயிலில் மைக்கோடு மல்லுகட்டி கொண்டிருக்கிறார்.அவர் முதல்வராகும் கனவுக்கு முடிந்தால் இங்கு வந்து ஆனதை செய்யுங்கள்.///

அவர் முதல்வராகி, பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னால், முதன் முறையாக ஒரு உண்மையான தமிழன், தமிழ் மண்ணை ஆளுவதைக் காண விரும்பும், உலகத் தமிழர்களின் கனவை நிறைவேற்ற, அங்கு வந்து செய்வதை விட, இங்கிருந்தே செய்யலாம்.


//ஈழம் மலரட்டும் என்றும் இந்தியா ஈழத்தை வென்றெடுக்க உதவ வேண்டும் என்றும் பல பத்து தம்பிகள் தங்களை தமிழன் என்று நம்பியே இங்கே தீக்குளித்தும் இன்னபிற முறையிலும் தமது இன்னுயிரை துறந்தனரே அவர்களில் எத்தனை பேர் தூய்மையான தமிழினம் என்பதை அறிந்து கொண்டீர்களா? ///


உயிர் நீத்த அவர்களில் எத்தனை பேர் உண்மையிலேயே தமிழரல்லாத, திராவிடர்கள் என்று நீங்கள் கூறுங்கள் பார்க்கலாம். மொழிப்போரில் இறந்தவர்களிலேயே அத்தனை பெரும் தமிழர்கள் தானே, தவிர திராவிடர்கள் அல்ல. அந்த தமிழர்களின் தியாகத்தில் தான் 50 ஆண்டுகளாக, தமிழர்களைத் தமிழரல்லாத திராவிடர்கள் ஆண்டு கொண்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கர்களின் விடுதலைக்காக, எத்தனையோ வெள்ளையர்களும், இந்தியர்களும் இணைந்து போராடினர். ஆனால் போராட்டத்தில் வெற்றி கண்டதும், வெள்ளையர்களையும், இந்தியர்களையும் தம்மை ஆளுமாறு கறுப்பர்கள் அனுமதிக்கவில்லை. ஆகவே ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்கள் என்பதற்காக, தமிழரல்லாத வடுகர்களையும், கன்னடர்களையும், மலையாளிகளையும் தமிழ்நாட்டையும், தமிழர்களைத் தொடர்ந்து ஆளுவதற்கு, முதலமைச்சராக்க வேண்டிய தேவையில்லை.


//எத்துணை தலைமுறைக்கு முன்னால் வந்தாலும் எழுச்சியுற்ற தமிழகத்தின் தமிழனாகவே தன்னை கருதிக் கொண்டிருந்த பலருக்கும் ஈழத்தமிழினம் வதைபட்ட போது அதைத் தாளாமல் தன்னை மாய்த்துக் கொண்டாவது இந்திய அரசின் அல்லது மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப முயன்றனரே அந்த தியாகமெல்லாம் உங்கள் கொழும்பு தமிழனுக்கு கூட வரவில்லையே? ///

மாய்த்துக் கொண்டவர்களில் எத்தனை பேர் தமிழரல்லாதோர் என்பதைக் கூறுங்கள் பார்க்கலாம். ஈழவிடுதலைப் போராட்டத்தை தமது நலன்களுக்கு, தமது அரசியல் வாழ்வில் புகழும், பிரபலமுமடியவும். ஒரு சில தேவையற்ற உண்ணாவிரதம், போராட்டங்கள் மூலம் தமது அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்ளவும், காப்பாற்றிக் கொள்ளவும் பலர் பயன்படுத்திக் கொண்டனர் என்பது தான் உண்மை. உதாரணமாக, தமிழ்த்தேசியத்தை ஜென்மப்பகையாக எதிர்க்கின்ற, தமிழ்த்தேசியத்தை திராவிடர்கள் அனைவரும் சேர்த்து அடியோடு அழிக்க வேண்டுமெனத் திராவிடர்களைத் தமிழ்த் தேசியத்துக்கேதிராகப் படை திரட்டும் வைகோ அவர்கள் தமிழ்த்தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முழு மனதோடு, ஆதரித்திருப்பார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்பொழுது பலருக்கும் அதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பிரபாகரனையும், ஈழத்தமிழர்களின் ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்த்தும், ஆதரித்தும் பிழைப்புவாதத்தை நடத்தியவர்கள் தான் தமிழ்நாட்டில் அதிகம். ஆனால் சராசரி பெரும்பான்மைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில், தமது ஈழத்தமிழ்ச் சகோதரர்களின் பிரச்சனைகள் தீர்க்கப் படவேண்டுமென்ற ஆதங்கமிருப்பதை தமது நலன்களுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பலரும் பயன்படுத்திக் கொண்டனர். அதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படவில்லை. நந்திக்கடலில் பிணமாக மிதந்தது தான் மிச்சம். அந்த தோல்விக்கும் தமிழரல்லாத, தமிழர்களை வெறுக்கும், தமிழர்களின் கூடவிருந்தே குழிபறிக்கும் தமிழர் அல்லாத திராவிடர்களின் பங்களிப்பு அதிகம்.viyasan said...

திரு. மானுடன்,

//ஈழத் தமிழனுக்காக இன்னுயிரை ஈந்தவர்கள் ,சிறைவாசம் அனுபவித்தவர்கள் தமிழர்கள்.ராஜிவ் கொலைப்பழியில் சிக்கி 25 ஆண்டுகளாக தூக்குமர நிழலில் இருந்து மீண்டும்,இன்றும் வெளிவரும் கதியற்று இருப்பவர்களில் பாதிப் பேர் இந்திய தமிழர்கள்.அவர்கள் சாதி சான்றிதழ்கள் உங்களிடம் இருக்கிறதா? ///

உங்களிடம் இருக்கிறதா. உங்களிடம் இருந்தால் அதில் யார் தமிழர் அல்லாத, திராவிடர்கள் என்று காட்டுங்கள் பார்ப்போம். இந்தியத் தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் தான். அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.


//சாதி சான்று இல்லாமல் உங்களால் தூய்மையான தமிழினத்தை கண்டுபிடிக்க இயலாதே? நாடாரா தமிழன், நாயுடுவா தெலுங்கன்,தேவரா தமிழன், தமிழகத்து மக்களின் கழிவை சுமந்த அருந்ததிய மக்களா அவர்கள் தெலுங்கர்கள் என்று சாதி பார்த்து தமிழனை கூறு போட நீங்கள் யார்?///

அவர்களே தம்மைத் தெலுங்கர் என அடையாளப்படுத்தும் போது, எதற்கு அவர்களைத் தமிழர்கள் என்று கட்டியழ வேண்டும். தனது இன அடையாளமாக தமிழன் என்பதைத் தவிர வேறு இன அடையாளம் கொண்ட எவனுமே தமிழன் அல்ல. தமிழைப் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. தமிழன் என்பதைத் தவிர, வேறு இன, மொழி, கலாச்சார அடையாளங்களைக் கொண்டவர்கள், வீட்டில் தமது தாய் மொழியையும், வெளியில் தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. எடுத்துக் காட்டாக,தெலுங்கு மொழி பேசத் தெரிந்த தமிழர்கள் எல்லாம் தெலுங்கர்கள் அல்ல. ஆங்கிலம் பேசும் தமிழர்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் அல்ல. ஆனால் தமிழே பேசத் தெரியாத, மலேசியா, பிஜி, மொரீசியஸ், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மூன்றாவது, நான்காவது தலைமுறைத் தமிழர்கள் எல்லாமே தமிழர்கள் ஏனென்றால் அவர்களுக்கு தமிழன் என்பது தவிர்ந்த வேறு இன அடையாளம் கிடையாது.


// சாதி அடிப்படையில் தமிழனை குறுக்காக பிளக்கும் வேலையை செய்வது நிம்மதியாக வாழும் தமிழனை திக்கற்றவர்களாக ஆக்குவதாகும்.///

சாதியடிப்படையில் யாருமே இங்கு தமிழர்களைக் குறுக்க பிளக்க முயலவில்லை. மாறாக, நாம் தமிழர் கட்சியினர் மட்டுமன்றி, என்னைப் போன்ற உலகத் தமிழர்கள் அனைவருமே தமிழர்கள் அனைவரும் சாதியை மறந்து தமிழர்களாக ஒன்றுபட வேண்டுமென்பதைத் தான் விரும்புகின்றோம். ஆனால் நீங்கள் வேண்டுமென்றே பொய்ப்பிரச்சாரம் செய்ய முயல்கிறீர்கள்.

//கொஞ்சம் தெளிவாக சொன்னால் ”உங்கள் வேலையை போய் பாருங்கள்”///

நீங்கள் பேசவில்லை, தமிழன் என்ற போர்வையில் உங்களுக்குள் மறைந்திருக்கும் தமிழர் அல்லாத திராவிடன், அதாவது சீமானின் வார்த்தைகளில் சொல்வதாயிருந்தால் ஒரு ‘வந்தேறி வடுகன்’ பேசுகிறான்.

தமிழ்நாட்டைப் பற்றிப் பேச, அதில் அக்கறை கொள்ள உலகத்தமிழர்கள் யாரும் எவனிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளத் தேவையில்லை. அதே போல் தமிழீழம் பற்றி அல்லது இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேச எந்த தமிழனும் யாரிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளத் தேவையில்லை. அதனால் தான் தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஏன் தமிழரல்லாதோர் பலரும் எங்களின் போராட்டத்தை தமது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்திக் கொண்ட போது கூட, தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்காகப் பொறுத்துக் கொண்டோம். விளக்கம் குறைந்த உங்களுக்கு நான் தெளிவாகக் கூறுவதாக இருந்தால் ‘பொத்திக் கொண்டு போ’ என்பது தான். :-)

நம்பள்கி said...

[[வரப்போகும் விஜயகாந்த் ஆட்சியா? அடுத்ததாக விஜயகாந்த் தான் ஆட்சி அமைப்பார். தமிழ்நாட்டுத் தமிழர்கள் உலகத் தமிழர்களின் முகத்தில் கரியைப் பூசுவார்கள் என்பதை நீங்களே முடிவு பண்ணி விட்டீர்கள் போல் தெரிகிறது. இப்ப நடக்கும் கூத்து ஒழிவதற்காக, இன்னொரு தெலுங்கு குடும்ப அரசியலை தமிழ்நாட்டில் உருவாக்கி விடுவதற்குப் பதிலாக தமிழர்களாகிய செந்திலோ, வடிவேலோ ஆள்வது எவ்வளவோ மேல்.]]

எவன் ஆண்டாலும், தமிழர்கள் அடிமைகளே; டெல்லியிடம் இரண்டாம் தர குடிமகன்களே! இது தான் உண்மை! மேலே படியுங்கள்!

இந்தியா என்ற so-called நாட்டின் (துனைக்கண்டத்தை) சரித்திரத்தைப் பற்றி இந்தியர்கள் பலருக்கே தெரியவில்லை! ஆப்பிரிக்கா எப்படி பல நாடுகளை பல மொழி மக்களைக் கொண்ட கண்டமோ (continent), அதே மாதிரி இந்தியாவும் பல மொழி மக்களை பல அரசுகள் (சமஸ்தானங்கள்) கொண்ட உப கண்டம் (sub-continent). ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு அப்படி இருந்த சமஸ்தானங்களை அரசியல் vision முற்றிலும் இல்லாத சுய நல, அரைகுறை அரசியல் வாதி படேல் என்னும் மனிதரின் முட்டாள் தனத்தில் நாம் வட இந்தியரிடம் அடிமைப் பட்டுள்ளோம். என்ன சுதந்திரம் உள்ளது? மொழி? கலாசாரம்? ஒன்றும் இல்லை.
ஒன்றுக்கும் உதவாத தமிழக முதல் அமைச்சரைப் பற்றி ஆதங்கப் படுகிறீர்கள். நம்மை ஆள்வது பிரதம மந்திரியே! எவன் தமிழ்நாட்டை ஆண்டா என்ன? எப்ப நினைத்தாலும் தூக்கலாம் நம் தமிழக அரசை. எந்த வடக்கத்தி பிரதம மந்திரி வேண்டுமானாலும் நம் உணர்வுகளை மதிக்காமல் நாம் தேர்ந்தெடுத்த தமிழக அரசை கலைக்கலாம்! அப்படிப்பட்ட ஒரு பிச்சைக்காரன் வாந்தி மாதிரி பல இன மக்களைக் கூட்டாக கொண்ட நாட்டில் எவனோ ஒருவன் நம்மை டெல்லியில் இருந்து கொண்டு ஆளும் போது...தமிழ்நாட்டை தெலுங்கன் ஆண்டா என்ன மலையாளி ஆண்டா என்ன?
தமிழர்கள் சிந்து சமவெளியில் இருந்து அன்று வந்தோம், பிறகு ஆரியர்களும் வந்தார்கள். நேற்று தெலுங்கர்கள் வந்தார்கள். ஆக மொத்தம் எல்லோரும் வந்தேறிகள் தான். அமெரிக்கா கனடா மாதிரி...செவ்விந்தியர்களை (மண்ணின் மைந்தர்களை) முந்தா நேத்து வந்த வெள்ளைக்காரன் துரத்தி விட்டான்; அவனுக்கு பிறகு நேற்று வந்த நம்மை வந்தேறி என்று வெள்ளைக்காரன் சொல்வது மாதிரி இருக்கு. எல்லா நாட்டு சரித்திரமும் அப்படியே.
இந்தியா என்பது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லா மக்கள் கலாசாரத்தை பெவிகால் போட்டு ஒட்டிய துணைக் கண்டனம். அதை நாடு என்று நாம் கூறிக் கொண்டு இருக்கிறோம். அமெரிக்கா மாதிரி ஒவ்வொரு மாநிலமும் இருந்தால் (இங்கு ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு மாதிரி) நீங்கள் சொல்வது சரி! இங்கு எங்கள் மாநில அரசை மத்திய அரசு கலைக்க முடியாது; நினைத்தால் நாங்கள் வெளியில் போகலாம். குபெக் கனடாவை விட்டு வெளியேறலாம். இந்தியா அப்படி இல்லை. இங்கு வடக்கத்தி காரன் நம்மை ஆளும் போது, .டம்மி முதல் அமைச்சர் தமிழனா இருந்தா என்ன? தெலுங்கான இருந்தா என்ன? மலையாளியா இருந்தா என்ன. சுதந்திரம் இல்லை. தமிழர்கள் தமிழ்நாட்டில் வசிப்பது எல்லோரும் ஒவ்வொரு காலத்தில் வந்தேறிகளே!

viyasan said...

திரு. நம்பள்கி,

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. இதே நிலை தான் இலங்கையிலும். ஆனால் ஓலைக்குடிசையில் வாழ்கிற ஒருவன். பெரும் புகழுமாக நன்றாக வாழ்ந்த குடும்பம். கடைசியில் ஒரமாக ஒரு ஒலைக்குடிசையில் வாழ நேர்ந்தால் கூட, பழையதை நினைத்து விரக்தி அடையாமல். அந்த ஒலைக்குடிசையையாவது தனக்குச் சொந்தமாக்கி, அதில் தனது ஆளுமையை நிலை நாட்டாமல். பக்கத்து வீட்டுக்காரன் வந்து அதிகாரம் பண்ணவும், குடும்பம் நடத்தவும் அனுமதித்தால், அவனது குடும்பமே காணாமல் போய்விடும். அப்படியான நிலை உருவாகாமல். அந்தக் ஓலைக் குடிசையையாவது, தன்னுடையதாக்கி கொள்ள மாட்டானா என வேறு நாடுகளில் வாழும் அவனது உடன்பிறப்புகள், இரத்த உறவுகள் கலங்க மாட்டார்களா, அது போல் தான் இதுவும்.

மானுடன் said...

//.........அந்த நல வாழ்வை அமைக்க நாடு திரும்பி ஆனதை செய்யுங்கள்.கொஞ்சம் தெளிவாக சொன்னால் ”உங்கள் வேலையை போய் பாருங்கள்”?// இது நான்.

//விளக்கம் குறைந்த உங்களுக்கு நான் தெளிவாகக் கூறுவதாக இருந்தால் ‘பொத்திக் கொண்டு போ’ என்பது தான்.//

உங்களை நாடு திரும்புங்கள், அங்கு போய் ஆனதை செய்யுங்கள், அதாவது உங்களுக்கான வேலையை பாருங்கள் என்று எல்லா இடத்திலும் மரியாதையாக குறிப்பிடுகிறேன்.ஆனால் உங்கள் பதிலில் நாகரீகமும் இல்லை,மரியாதையும் இல்லை.விவாதமுறை என்பது நாகரீகமாக இல்லமலிருந்தால் விவாதிப்பதில் எந்த அர்த்தமுமில்லை.சொந்த நாடு திரும்புவது என்பதை இவ்வளவு ஆத்திரமாக எதிர் கொள்வது ஏன்?
உயிரை மாய்த்துக் கொண்ட எவரின் சாதியையும் நானறியேன்.அதற்கான தேவையும் எனக்கு எழ வில்லை.தமிழரின் சாதியை பார்த்து தூய்மையான தமிழர் என்று சான்றிதழ் தருகின்ற உங்களைப் போன்றவர்களின் கவலை அது.அதே சாதி அடிப்படையில் பார்த்தாலும் நான் வடுகனில்லை.உங்களது நெறிகளின் படியும் நான் மிகத் ”தூய்மையான தமிழன்” தான்.

அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவிருக்கிற ஒபாமாவை பிறந்த ஊர், தாய் தந்தை வம்சாவளி அடிப்படையில் பார்த்தால் அவர் அமெரிக்கரில்லை.இன்றைக்கும் கூட அமெரிக்காவில் பல மாகானங்களில் கவர்னராகவும்,உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், ஏன் அமெரிக்க அதிபராகவும் ஒரு இந்திய வம்சாவளி வந்து விட முடியும் என்பதே அங்கு யதார்த்தம்.அங்கெல்லாம் இந்த தூய்மைவாதம் இல்லை.

தமிழனை தமிழன் ஆண்டாலும் அவன் மேல் ஏதோ ஒரு மொக்கை குற்றச்சாட்டை காரணமாக காட்டி ஒரு கவர்னர் என்கிற பிற மாநிலத்தவன் பரிந்துரை செய்து மத்திய அரசாங்கம் பதவியை விட்டு துரத்தமுடியும்.அந்த கத்தி மேலே தொங்கும் ஒரு அமைப்பில் தேர்தலில் நின்று பதவிக்கு வர அலைவதே ஒரு ஏமாற்று வேலை.உங்கள் வாதத்தின்படியே எல்லா மாநிலத்திலும் அவரவர் இனத்தினரே ஆண்டாலும் ஊழலும் லஞ்ச லாவண்யமும், முறைகேடுகளும் குறைந்த மாநிலம் என்று எதுவுமில்லை.ஒப்பீட்டளவில் திரிபுராவிலும் மேவங்கத்திலும் அந்த பிரச்சினைகள் குறைந்திருந்தன.அதற்கு காரணம் இடது சாரிகள் கட்சி அமைப்பு முறையே தவிர சொந்த இன பாசமல்ல.

ஈழத்தமிழர்களை ரத்த பந்தமாக நினைத்து உருகும் என்னை போன்றவர்களிடம் மாற்று கருத்து கொண்ட ஒரே காரணத்தினால் கண்ணிய குறைவாக ஏச முற்படுகின்ற போக்கை கைவிடுங்கள்.

viyasan said...

திரு. மானுடன்,

//உங்களை நாடு திரும்புங்கள், அங்கு போய் ஆனதை செய்யுங்கள், அதாவது உங்களுக்கான வேலையை பாருங்கள் என்று எல்லா இடத்திலும் மரியாதையாக குறிப்பிடுகிறேன்.ஆனால் உங்கள் பதிலில் நாகரீகமும் இல்லை,மரியாதையும் இல்லை.///

பல ஆண்டுகளாக தமிழர்கள் மட்டுமன்றி, தமிழ்நாட்டிலுள்ள தமிழரல்லாதவர்களும் கூட ஈழத்தமிழர்களை, எங்களின் விடுதலைப் போராட்டத்தை வைத்துப் பிழைப்பு நடத்திய போது கூட நாங்கள் அவர்களைப் பார்த்து ‘உங்களின் வேலையைப் பாருங்கள்’ என்று கூறியதில்லை. ஆனால் தமிழர்கள் தாய்த்தமிழ் மண்ணில் என்ன நடைபெறுகிறது என்பதைக் கவனிப்பதையும், கருத்துத் தெரிவிப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எனது வலைப்பதிவுக்கு வந்து “வேலையைப் பாருங்கள்” என்று கூறியதை, ஒரு மரியாதைக்காக நான் வெளியிட்டதே அதிகம், இந்தியாவில் எப்படியோ எனக்குத் தெரியாது, எங்களின் நாட்டில் மரியாதையை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்.


//விவாதமுறை என்பது நாகரீகமாக இல்லமலிருந்தால் விவாதிப்பதில் எந்த அர்த்தமுமில்லை.///

விவாதம் எனக்கொன்றும் புதிதல்ல. ஆனால் நீங்கள் செய்வது விவாதம் அல்ல விதண்டாவாதம். என்னுடைய கருத்தை எதிர்கொள்ள முடியாததால், நான் கருத்துத் தெரிவிப்பதை தடுத்து நிறுத்தலாம் என்ற நப்பாசையினால் தான் நீர் “உங்களுக்கான வேலையை பாருங்கள்” என்றீர்கள். ஒருவரின் கருத்தில் மரியாதை இருக்க வேண்டும், வெறும் ‘..ங்கள்’ சேர்த்துக் கொள்வதால் மட்டும் மரியாதை ஏற்பட்டு விடுமென்பது உங்களின் கருத்தாக இருந்தால்... பொத்திக் கொண்டு போ..ங்கள். :-)


//சொந்த நாடு திரும்புவது என்பதை இவ்வளவு ஆத்திரமாக எதிர் கொள்வது ஏன்?///

ஏதோ கெட்டித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு, உளறுவதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. ஒருவர் சொந்த நாட்டுக்குத் திரும்புவது, என்பது அவரது குடும்பம், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட முடிவு. தள்ளுவண்டியில் அமர்ந்திருக்கும் 93 வயது முதியவர் பதவி ஆசையால் தள்ளாத வயதில் முதலமைச்சராக முயல்வது போல் பொது விடயம் அல்ல.


//உயிரை மாய்த்துக் கொண்ட எவரின் சாதியையும் நானறியேன்.அதற்கான தேவையும் எனக்கு எழ வில்லை.///

நானும் சாதியைக் கேட்கவில்லை. ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் உயிர் நீத்தவர்களில் எவராவது தமிழரல்லாத திராவிடர்கள் இருந்தால் கூறுங்கள் என்கிறேன். நீங்கள் தான் இனத்தையும், சாதியையும் ஒன்று சேர்த்துக் குழப்பிக் கொள்கிறீர்கள். என்ன சாதியாக இருந்தாலும், தமிழன் என்ற இன அடையாளம் தவிர வேறு இன, மொழி அடையாளம் இல்லாதவர்கள் அனைவரும் தமிழர்களே.//அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகவிருக்கிற ஒபாமாவை பிறந்த ஊர், தாய் தந்தை வம்சாவளி அடிப்படையில் பார்த்தால் அவர் அமெரிக்கரில்லை.///

குடியேற்ற நாடாகிய அமெரிக்காவையும், பல்லாயிரமாண்டுகள் பாரம்பரியமும் வரலாறும் கொண்ட தமிழர்களையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது வெறும் அபத்தம். நாங்கள் தமிழர்கள் அமெரிக்கர்கள் அளவுக்குக் கலப்பினம் அல்ல. பல நாடுகளிலிருந்து குடியேறிய குடியேறிகளின் கூட்டமைப்பு தான் அமெரிக்கா.//தமிழனை தமிழன் ஆண்டாலும் அவன் மேல் ஏதோ ஒரு மொக்கை குற்றச்சாட்டை காரணமாக காட்டி ஒரு கவர்னர் என்கிற பிற மாநிலத்தவன் பரிந்துரை செய்து மத்திய அரசாங்கம் பதவியை விட்டு துரத்தமுடியும்.///

அதற்காக தமிழ்நாட்டை தமிழரல்லாத எவனும், குறிப்பாக வடுகர்களைத் தொடர்ந்து ஆளுமாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் விட்டுக் கொடுத்து விட்டு, அவர்கள் ஆளுவதை ஞே என்று எருமை மாதிரிப் பாத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கிறீர்களா. ஏனைய மாநில மக்கள் அப்படி நினைத்து எந்த தமிழனையாவது அவர்களை ஆளுவதற்கு அனுமதிக்கிறார்களா?


//அந்த கத்தி மேலே தொங்கும் ஒரு அமைப்பில் தேர்தலில் நின்று பதவிக்கு வர அலைவதே ஒரு ஏமாற்று வேலை.//

இப்படித் தமிழனுக்கு கதை சொல்லியே, ஐம்பது வருடங்களாக, தமிழ்நாட்டை தமிழரல்லாத திராவிடர்கள் ஆண்டு விட்டனர். நீங்களும் அது தொடர வேண்டுமென முயற்சிக்கிறீர்கள். ஆனால் சீமான் தலைமையில் பல இளந்தமிழர்கள் விழித்துக் கொண்டனர். அது என்னைப் போன்ற உலகத் தமிழர்களுக்கு ஆறுதலை அளிக்கிறது.

viyasan said...

திருவாளர் மானுடன்,

உங்களின் உளறல்களை இனிமேலும் என்னுடைய வலைப்பதிவில் வெளியிடப் போவதில்லை, எனது கருத்துக்களைப் பதிவு செய்யத் தான் நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேன். உங்களின் வலைப்பதிவில் எழுதிக் கொள்ளுங்கள். :-)

தனிமரம் said...

தில் அதிகம் தான் மு.காவுக்கு))