Sunday, April 3, 2016

ராஜராஜ சோழன் தமிழனா, தெலுங்கனா? - தமிழர் வரலாற்றைத் திரிக்கும் வடுகர்கள்.


ராஜ ராஜ சோழன் மட்டுமல்ல போதிதர்மனும்   தெலுங்கன் தான், என்று தமிழர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு,  தமிழர்களின் வரலாற்றையும், யாரைத் தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்களோ அவர்களை எல்லாம் கொச்சைப் படுத்துவோம் அல்லது வரலாற்றைத் திரித்து, அவர்களையும் தெலுங்கராக்கவோம் என்று இணையத்தளங்களில் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றன தமிழ்நாட்டில் நாயக்கர்கள் விட்டுச் சென்ற  வடுக எச்சங்கள் பல. அவர்களுக்கு இணையாக பெரியாரியத்தாலும், திராவிடத்தாலும் மூளைச் சலவை செய்யப்பட்ட சில தமிழர்களும் பகுத்தறிவு என்ற பெயரிலும், அல்லது தமக்கும், சில வடுகர்களுக்குமிடையிலான தனிப்பட்ட நட்புக்காகவும், தமிழர்களின் வரலாற்றுத் திரிப்புக்குத் துணை போகின்றனர்.

முருகன் தமிழர் கடவுள் என்பதையும், அவன் தமிழர்களின் முன்னோர்களில் ஒருவன் என்ற தமிழர்களின் நம்பிக்கையையும்  கேலி செய்யும் யுவகிருஷ்ணாக்களும் , ராஜராஜ சோழனைப் பற்றி எதுவுமே தெரியாமல் தப்புத்தப்பாக உளறி வசைபாடும் மதிmoronன்களும் ஏன்,  அவ்வளவு வெறியோடு  தமிழ்த்தேசியத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்கான உண்மையான காரணம் என்னவென்று தமிழர்களுக்குத் தெரியாதென்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் என்பது தான் வேடிக்கை. வே. மதிமாறனின் உளறல்களைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டும்!


வடுகர்கள் தமிழர்களின் வரலாற்று எதிரிகள். 


சங்கப் பாடல்களிலேயே,  தமிழர்களின் வடுகர் எதிர்ப்பு தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை எமது முன்னோர்கள் எந்தளவுக்கு வடுகர்களை எதிர்த்தனர் என்பதைக் காட்டுகின்றன. "தென் பரதவர் மிடல் சாய, வட வடுகர் வாள் ஓட்டிய... ," என்கிறது புறநானூறு.  தமிழ் மண்ணின் மேல் முதன்முதலாகப்படையெடுக்கத் துணிந்த வட இந்திய (மகதநாட்டுமோரிய) அரசன் பிந்துசாரன் (கி.மு.301-273),தமிழர்களை எதிர்க்க வடுகர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு வந்தான் என்கிறார் தமிழர் வரலாறு என்ற கட்டுரையில் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர். அதாவது கி.மு  3ஆம் நூற்றாண்டிலேயே வடுகர்கள் தமிழர்களுக்கு எதிரிகளாக இருந்தனர்.

"வடுகரையும் கோசரையும் புறங்காணின்மோரியர் தாமே புறங்காட்டுவர் என்பதை அறிந்தசோழன் இளஞ்சேட் சென்னி, தன் நாட்டைக்காக்கும் கடமையை யுணர்ந்து, முன்பு "வளங்கெழுகோசர் விளங்குபடை நூறி" (அகம்.205), பின்புகொண்கானஞ் சென்று பாழியரணை யழித்து ஒரேயடியாக மோரியரைத் தமிழகத்தினின்று துரத்திச்"செருப்பாழி யெறிந்த" என்னும் விருஅடைமொழியும் பெற்றான். இதனை,

"எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி
குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டி"
(அகம்.375)

என்பதனால் அறியலாம். அவன்"வடவடுகர் வாளோட்டிய" (புறம்.378) செயல்சற்றுப் பிந்தினதா யிருக்கலாம். வடவடுகர்கலிங்க நாட்டுத் தெலுங்கர்". (மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்).  சங்கம் பாடல்கள் குல்லைக் கண்ணி வடுகர்" (குறுந். 11 : 5), "கல்லா நீண்மொழிக் கதநாய் வடுகர்", "வானிணப் புகவின் வடுகர்", "முரண்மிகு வடுகர்", "தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்", "வம்ப வடுகர் பைந்தலை சவட்டி" என்று தான் தெலுங்கர்களைக் குறிக்கின்றன.

ராஜராஜ சோழனைப் பெற்றெடுத்தவள் பச்சைத் தமிழச்சியே!


தமிழர் என்ற போர்வையில் ராஜராஜ சோழன் மீது வசை பாடுகின்ற, அந்த தமிழ் மாமன்னனை வில்லனாக்குவதையே குறியாகக் கொண்ட  சிலர் கூறுவதென்னவென்றால், ராஜராஜ சோழன் தான் முதலில் தெலுங்கர்களுக்குப் பெண்கொடுத்தானாம், ஆதியில் சேர சோழ பாண்டிய மன்னர்கள்  வேற்றினத்தாருடன்  திருமண உறவு கொள்ளவில்லையாம் . ஆனால் அது உண்மையல்ல. வங்காளத்திலிருந்து கள்ளத்தோணியில் வந்த விஜயனுக்கும் அவனது தோழர்களுக்கும், ராஜராஜ சோழனுக்கு ஆயிரமாண்டுகளுக்கு முன்பே, பெண் கொடுத்தவன்  மதுரைப் பாண்டியன் என்பதை இலங்கையின் மகாவம்சம் விரிவாகக் கூறுகிறது. அதற்காக சிங்களவர்கள் எல்லாம் தமிழர்களே என்று எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அடி விழும்.
click to enlarge
அக்கால அரச குடும்பங்களில் எதிரிகளின் இனத்திலும் திருமண உறவுகளை வைத்துக் கொள்வது தமது நாட்டையும் ஆட்சியையும் விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும் தானே தவிர, அதனால் அவர்களின் இனமோ, மொழியோ மாறுவதில்லை, அது உலகில் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது மட்டுமன்றி, பல நாட்டு அரச குடும்பங்களில் அது வழக்கமாகவே இருந்து வந்தது. எடுத்துக்காட்டாக, ரஷ்யாவின் சார் நிக்கொலசின் தாயார் டென்மார்க் இளவரசி, அதேபோல் ஜேர்மன்  சக்கரவர்த்தி வில்லியத்தின் தாயார் ஆங்கில இளவரசி, பிரித்தானியாவின் இரண்டாம் ஜோர்ஜ் அரசனின் தாயார் டேனிஸ் இளவரசி. ஆனால்  எந்த வரலாற்றாசிரியரும்   ரஷ்யாவின் சார் நிக்கொலசையும்  இரண்டாம் ஜோர்ஜையும் டேனிஸ்காரர்கள்  எனவும், ஜேர்மனியின் Kaiser வில்லியத்தை ஆங்கிலேயர் என்றும் கூறுவதில்லை. ஆனால் ராஜராஜ சோழனின் பாட்டி,   வைதும்பர்  குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம், என்பதால்  தெலுங்கன் என்று திரிப்பது, வரலாற்று ஆராய்ச்சிக்கே அபத்தம், அதிலும் ஒரு பெரியாரியப் பேயன் என்னவென்றால்,  ஒருபடி மேலே போய். ராஜராஜ சோழனின் தாய்   வானவன் மாதேவியையும் தெலுங்கச்சி என்று  தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ளான். அது  வெறும் முட்டாள்தனம் மட்டுமல்ல கோணங்கித்தனமுமாகும்.

அது போதாதென்று மாமன்னன் ராஜராஜ சோழனைப் பெற்றெடுத்தவள் 'பச்சைத் தமிழச்சியா' என்று கூட ஒரு 'பகுத்தறிவு' தனது வலைப்பதிவில் கேட்டிருக்கிறது, அது கூட அதற்குத் தெரியவில்லை. அருண்மொழி வர்மனைப் பெற்றெடுத்த பச்சைத் தமிழச்சி வானவன் மாதேவி, மலையமான் அரசகுடும்பத்தில் உதித்த தமிழ் வேளிர்குலப் பெண்ணே தவிர வடுகர் (தெலுங்குப்) குலப்பெண் அல்ல. வேளிர்கள் தான் இந்நாள் வெள்ளாளர்களின் முன்னோர்கள் எனவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். அதன் காரணமாகத் தான், ராஜராஜ சோழன் தனது தாயார் வானவன் மாதேவிக்கு நினைவுச் சின்னத்தை தனது பரந்த சோழப் பேரரசில் எங்கும் நிறுவாமல் வேளாளர்கள் நிறைந்து வாழ்ந்த இலங்கையில், சோழர்கள் கட்டிய தலைநகராகிய நிகரிலி சோழ வளநாட்டுப் புலனரி (பொலநறுவை)யில் கட்டினான் என்பது இலங்கையில் தொன்று தொட்டு நிலவும் கதை.

எடுப்பார் கைப்பிள்ளையாக இலகுவாக மாறிவிடும்  தமிழர்கள் ராஜராஜ சோழனைத்தாக்குவது போல், எந்த வடுகனும், தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து வடுகர்களை தமிழ்நாட்டுக் கிராமங்களில் நிலவுடைமைக்காரர்களாக்கி, தமிழர்களை அவர்களின் சொந்தமண்ணிலேயே தினக்கூலிகளாக்கிய   திருமலைநாயக்கனைத் தாக்குவதில்லை, அது ஏன் என்பதைத்  தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் ராஜ ராஜ சோழன் மட்டும் வேற்றினத்துடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. அதற்கு முன்பாகவே  மிகவும் நெருங்கிய திருமண,  குடும்ப உறவுகளை பாண்டியர்கள்,  சிங்கள அரச குடும்பத்துடன் வைத்திருந்தனர். இலங்கையின் புகழ்பெற்ற மாமன்னனாகிய முதலாம் பராக்கிரமபாகுவின் தந்தை ஒரு தமிழன்.  மானாபரணன் என்ற பாண்டிய இளவரசனுக்கும், சிங்கள அரசன் விஜயபாகுவின் தங்கைக்கும் பிறந்தவன் தான் சிங்களவர்களின் வரலாற்றிலேயே சிங்கள மாமன்னன் (சக்கரவர்த்தி) என்றழைக்கப்படும்  முதலாம் பராக்கிரமபாகு. ஒரு தமிழனுக்குப் பிறந்த பராக்கிரமபாகுவையே எந்த வரலாற்றாசிரியரும் தமிழன் என்று குறிப்பிடுவதில்லை, அவன் சிங்களவன் மட்டும் தான். இவ்வளவுக்கும் பராக்கிரமபாகுவின் பட்டத்தரசியும் தமிழ்ப்பெண் தான், அவனது அரசவையில் தமிழர்கள் அமைச்சராக இருந்தது மட்டுமன்றி, தமிழுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. என்பதை மகாவம்சம் தெளிவாகக் குறிப்பிட்டாலும் கூட, மாமன்னன் பராக்கிரமபாகுவை   எவனாவது தமிழன் என்று கூறினால், சிங்களவர்கள், அப்படிக் கூறுகிறவனை உயிரோடு எரித்தே விடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும், ராஜ ராஜ சோழனின் பாட்டி வைதும்ப குலத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம் என்பதை  வைத்து ராஜராஜ சோழனைத் தெலுங்கனாக்கும் அபத்தம் நடைபெறுகிறது. அதை எதிர்ப்பார் யாருமில்லை. எந்த தமிழ்நாட்டுத் தமிழனும் அப்படிக் கூறுகிறவர்களுக்கு ஓங்கி  ஒரு குட்டுக் கூட வைப்பதில்லை.
வானவன் மாதேவி நினைவுக் கோயில்  - 
வானவன் மாதேவி ஈச்சரம் -இலங்கை 
இன்று ஆந்திரா எனக் குறிப்பிடப்படும் நிலங்கள் பலவும் தமிழர்களுடையவை, தமிழர் வாழ்ந்த, ஆண்ட நிலங்கள். ஆனால் இக்காலத்தில் தெலுங்கர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டு விட்ட அந்த நிலங்களில் இன்று அவற்றில் வடுகர்கள் வாழ்கின்ற காரணத்தால் ஆயிரமாண்டுகளுக்கு முன்னரும்  அங்கு வாழ்ந்த எல்லோருமே வடுகர்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் தான் இப்படியான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. "ஆந்திராவில் ஓடும் கோதைவாரி(கோதாவரி), கண்ணாறு(கருப்பாறு)(கிருஷ்ணா), வெண்ணாறு(வெள்ளையாறு),
ஊர்களான திருமலை (திருப்பதி),வேங்கடம் (வெண் கல்மலை), நெல்லூர், மடைப்பாடி(மடப்பா), கடைப்பாடி (கடப்பா), எழூறு (ஏலூரு),காக்கை நாடு (காக்கிநாடா),குன்றூர் (குர்னூல்),ஆங்கொள்ளை (ஒங்கோல்), குளப்பாக்கம் (கொலன்பக்கி) எல்லாமே தமிழர்கள் வாழ்ந்த ஊர்களின் தூய தமிழ்ப்பெயர்கள்."

எந்த விவாதத்திலும் நடுநிலையானவர்களின் கருத்துக்கள் மட்டும் தான் பேசப்படும் கருத்துக்கு வலுச் சேர்க்கும். ராஜ ராஜ சோழனை எதிர்க்கவும், வசை பாடவும், தமிழ்த்தேசியத்தைக் கொச்சைப்படுத்தவும் பெரியாரிய, திராவிடக் கருத்துக்களில் ஊறியவர்களின் கட்டுரைகளை சிலர் ஆதாரம் காட்டுவது போன்ற கோமாளித்தனம் வேறேதுமிருக்க முடியாது.  அது எப்படியானதென்றால் கலைஞர் கருணாநிதியை எதிர்க்க, அதிமுக காரர்களின்  கட்டுரைகளை ஆதாரம் காட்டுவது போன்று அபத்தம் நிறைந்தது. .2 comments:

Raj Kumar said...

ரொம்ப நன்றி ஐயா . இதை அப்படியே மலேசிவில் உள்ள semparuthi.com .. எனும் வளை பகுதிக்கு அனுப்புங்க . உங்க சேவைக்கு நன்றி

viyasan said...

@Raj Kumar

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. என்னுடைய வலைப்பதிவிலுள்ள எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்கிற எவரும், விரும்பினால், எங்கும் மீள்பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி.