Wednesday, March 30, 2016

தமிழ்நாட்டில் தொடரும் விஜயநகர் (நாயக்கர்) ஆட்சி??



தமிழ்நாட்டுத் தேர்தலைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும்  விஜயநகர (நாயக்கர்) ஆட்சி தொடர்கிறது போன்றதொரு உணர்வே உலகத்தமிழர்களுக்கு ஏற்படுகிறது.

நடைபெறும் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி வெற்றியடைந்தால் துணை முதல்வர் பதவி கூட ஒரு தமிழனுக்குக் கிடையாது என்று அறிவித்திருக்கிறார். வருங்கால முதல்வரும், எதிர்காலத் "தமிழினத்தலைவருமாகிய" மாண்புமிகு விஜயகாந் அவர்களின் மைத்துனர் சுதீஷ்.  இதில் கொடுமை என்னவென்றால், யார் தமிழ்நாட்டையும், தமிழர்களையும்  ஆள்வது என்பதைத்  தீர்மானிப்பது எதிர்காலத் "தமிழினத்தலைவர்" கூட இல்லை, அவரது மைத்துனர் தான் தீர்மானிக்கிறார்.  

எட்டுக்கோடித் தமிழர்களில் ஒருவனுக்குக் கூட முதலமைச்சராகும் தகுதி கிடையாதா??? "விதியே , விதியே தமிழச்சாதியை என்செயக் கருதி இருக்கின்றாயடா?"

பிந்திய செய்திகளின் படி கோவில்பட்டி: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை முதலமைச்சராக செயல்படுவார் என்று தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் கூறியுள்ளார். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற பிரசார கூட்டம் கோவில்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முதல்வர் -விஜயகாந்த்
துணை.முதல்வர் ; வைகோ
நிதி; ஜி.ராமகிருஷ்ணன்
கல்வி; திருமாவளவன்
உள்ளாட்சி; முத்துராசன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

நன்றி: Thatstamil.com

“when Tamils in Andhra are quiet, why do you, a Telugu speaker, have leadership ambition? Eat and stay quiet”.
நன்றி: http://swarajyamag.com

No comments: