Monday, March 28, 2016

மலேசியத் தமிழர் குரல் - "தமிழர் மாநிலத்தை ஆள சீமானுக்கு எல்லாத்தகுதிகளும் உண்டு"


கருணாநிதியின் திமு க, போல ஜெயலலிதாவின் அ தி முக போல, அல்லாமல் தமிழர் உணர்வோடு தமிழர் மாநிலத்தை ஆள சீமானைத்தவிர வேறு யாருக்கும் தகுதி இல்லை என துணிந்து கூறலாம். 8 கோடி தமிழர்களையும் மீதமுள்ள 2 கோடி இதர மாநல வந்தேறிகளை அரசியல் மற்றும் மனித உணர்வோடு பழகும் பண்பும் நாகரிகமும் உயர்ந்த பேராண்மை மிகுத்த போராளியாக சீமானை மலேசியத் தமிழர்கள் பார்க்கிறோம்.

தமிழர் மாநில தமிழர்களும் ஒத்துக்கொள்ள வேண்டும். மறுப்பவன் தமிழனாக இருக்க முடியாது. தமிழ் இன வெற்றிக்காக …அவரிடம் பல சண்டைகள் பல போராட்டங்கள்… தமிழர் தேசிய சிந்தனை மிகு கேள்விகள்.. உலக நடப்பில் தமிழ் இனம். தமிழக அரசியல், அரசு நிதர்சன உண்மைகளை பேசும் துணிச்சலும் வெறியும் அவரிடம் பார்க்க முடிந்தது. 2012 டில் மலேசியாவில் நடந்த தமிழர் பணிப்படை அரங்கத்தில் அவரின் தமிழர் இன உரிமை ,தமிழ் ஈழம் , தமிழ் மொழி இந்தியாவின் தமிழர் மாநலத்தின் தமிழர் ஏமாளித்தனம்.
ஏக்கம் போன்ற அரசியல் தந்திரங்களை புரிந்த ஒரு மாவீரனாக திகழும் பாங்கு மற்றும் நாம் தமிழர் இயக்கத்தை மிகக்ககட்டு கோப்பாக வழி நடத்தும் திறமைகள் அவர் ஒரு சிறந்த அரசியல் அரசு நிர்வாக திறமைகளை கொண்டுள்ளார் என்பது நமது கண்கூடு.

தமிழக அரசியலில் இதற்கு முன் இருந்த தமிழ்த் தலைவர்கள் எல்லாமே தி மு க ,,அ தி முக மாறி மாறி அரசியலில் வாட்டம் கண்டு தமிழர் இனத்துக்கு பலூன் ஊதியவர்கள்தான். கடந்த தேர்தலில் ஏன் போட்டியிட மாட்டீர்கள் என்ற கேள்விக்கு ” நாம இன்னும் தயாரகவில்லை” என்ற பதில் எங்களுக்கு சினத்தை தந்தது.. மேலும் துருவி துருவி கேட்டபோது ” நாம என்ன நாடாளுமன்றத்திலும் சட்ட சபையிலும் கிழிக்கவா போறோம்” என்றார். அது அன்றைய சூழல் அந்த ஜெயலலிதாவே இருக்கட்டும் என்றவர் இன்று நிமிர்ந்து இருக்கிறார் என்றால் அவரில் குருதி கொந்தளிப்பை உணர்த்து பாராட்டுகிறோம்.

சீமான் என்ற சாதாரண மனுஷன் அரசியல் மன்னராக வேண்டும். தன்னை திராவிடன் வட்டத்தில் இருந்து வெளிப்பட்டு “தமிழேண்டா” என்கிற சீமான் திமிர் தமிழர்கள் மத்தியில் பிடிப்பை தந்துள்ளது. வந்தேறிகள் அராஜகமான ஜெயலலிதாவையும் , தெலுங்கு மாயாவிகளான கருணாநிதியையும், விஜயகாந்தையும் வைக்கோவின் அரசியல் சேட்டைகளுக்கு கருப்பு சாட்டையடி தரும் சீமானைப்போன்ற போராளி அரசியல் தமிழனை இனி நாம் தமிழர் மாநிலத்தில் பெற முடியாது. இதுதான் நேரம் பாவித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே ! இல்லையேல் உங்கள் தமிழன் உணர்வை கொல்லுங்கள்.

உலகத் தமிழ்த்தலைவர் தமிழின தலைவர் பிரபாகரன் பாசறையில் வளர்ந்த சீமானை இந்த தமிழ் இனம் தமிழர் மாநிலத்தின் தலைமை பீடத்தில் தூக்கி நிறுத்த வேண்டும். இதுதான் காலம். இதுதான் கடமை இதுதான் உரிமை என்று தமிழர்கள் தன் மண்ணின் உரிமத்துக்கு வீர வாக்களிப்பு தந்து நாம் தமிழர், நமது தமிழர் என்ற அரசியல் ஆக்கிரமிப்பை அடைய ஒவ்வொரு தமிழ் தாய்த் தமிழனும் தன் தாய் மீது உறுதி மொழி எடுக்க வேண்டும்.

உலகத்தில் தமிழர் தேசியம் மலர வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனும் விரும்புகின்றான் ஆனால் அது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் குழப்பம். இனி குழம்பிக்கிடக்க தேவை இல்லை. நீங்கள் எந்த தமிழர் இயக்கதிலாவது இருந்து விட்டு போங்கள்… ஆனால் தமிழர் தேசியம் என்ற ஒரு உடையில் ஒரு கொடையில் இணைவோம். நாம் தமிழர், தமிழர் களம் , தமிழர் குரல்,பாட்டாளிகள் கட்சி, தமிழர் வணிகர்கள் , சிறுத்தைகள் ,புலிகள் யாராக இருந்தால் என்ன அவன் தமிழனா தமிழர் தேசியத்தில் ஒரு தேசிய இனமாக வாருங்கள். ஏன் இன்னும் அழுத்தம் வேண்டும் என்றால் “தமிழர் தேசிய சாதியம்”என்ற புதிய பரிணாம வளர்ச்சிக்கு உங்கள் மூளை அபிவிருத்தியை தமிழன் மரபணுவோடு சேருங்கள்.

தமிழர்களை பரித்தாளுகின்ற தி மு க ,,,அ தி மு க …தே மு க …இவர்களின் அதிகாரிகளை பாருங்கள் ..உங்களுக்கு இன்னுமா புத்தி வரவில்லை. சீமான் என்ற ஒரு தமிழன் இவர்களோடு நின்று போராட துணிந்து விட்டார்…. உங்களுக்கு இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா அந்த எழாம் அறிவு எட்டலையா?

மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லாப்புகழும் தரும் என்று 2500 ஆண்டுகளுக்கு வள்ளுவன் எழுதியதை இந்த தேர்தல் பயன் படுத்தி  நமது சீமானை வெற்றி பெற்ற தமிழனாக உயர்த்தி காட்டுங்கள் என்று மலேசியத் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு அன்பு வேண்டுகோளை முன் வைக்கிறோம். தமிழ் ஈழமும் தமிழர் மண்ணும் மலையாக மக்களின் சத்தியும் உலகத் தமிழர் மீட்சியும் உங்கள் இதயங்களை இறுகிபிடிக்க புற முதுகை காட்டாமல் நெஞ்சுயர்த்தி வீர தாயின் மார்பில் பால் புசித்த புலியாக இனமான சுதந்திரத்தை தட்டி எடுக்க சங்கே முழங்கு பாடுவோம்.

மாற்றானிடம் மண்ணையும் மணலையும் சொத்தையும் சுகத்தையும் இனி பறி கொடுக்க தேவை இல்லை …இனத்தை விற்று வீதிக்கு போகும் நிலை இனி வேண்டாம். சாதியும் சமயமும் உன்னை விடாது விரட்டும் அது பல்லாண்டு பல்லவி நீ வாழும் காலம் உன் குல சாம்ராஜ்யம் அதை இனமான உணர்வோடு மீட்டு எடு . சீமானுக்காக தமிழர்களாக எழுவோம். நாம் தமிழர் அரசு அமைப்போம் … வணக்கம் நன்றி

ம. அ . பொன் ரங்கன்
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
தமிழர் குரல் /தமிழர் தேசியம் மலேசியா

நன்றி: http://www.semparuthi.com/

2 comments:

Raj Kumar said...

மலேசியா தமிழர்களின் உண்மை நிலை இது .. தமிழ் நாட்டு தமிழர்கள் உணர்வார்களா ?

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு