Monday, March 14, 2016

தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் தெலுங்கர்களே தவிர தமிழர்கள் அல்ல?


தமிழ்நாட்டில் 39% தமிழர்கள் 41% தெலுங்கர்கள் என்கிறது தெலுங்கு வாணி,

தெலுங்கு வாணி என்ற பெயரில் இயங்கும் தெலுங்கர்களின் இயக்கம் தமிழ்நாட்டில் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் வெறும் 39.5%  எனவும், பெரும்பான்மையினர், அதாவது 41% வீதமானோர் தெலுங்கர்கள் எனவும் கூறுகிறது. அவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக இருந்தும் பலர் இன்று தெலுங்கை எழுத வாசிக்கத் தெரியாமல் உள்ளனர் எனவும் தமிழ்நாட்டில் அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும், அவர்களின் தெலுங்குத்துவத்தையும்(Teluguness ),   மொழியையும் பாதுகாக்க, தமிழ்நாட்டில் 100 கிராமங்களில் தெலுங்கை கற்பிக்கவும், வளர்க்கவும் கிராமத்துக்குப் பத்து லட்சம் ரூபாய்  அளவில் நிதி தேவைப்படுகிறது. அதைக் கொடுத்து அந்தப் பணியை நிறைவேற்ற தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களினதும் உதவியை நாடுகின்றனர்.

சிறுதுளி பெருவெள்ளம், ஆகவே சிறியளவிலான  நிதியுதவிகளையும் தெலுங்கு வாணி ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தெலுங்கர்களுக்கு அவர்களின் தெலுங்கு மொழியை கற்பித்து தமிழ்நாட்டில் தெலுங்குத்துவத்தை வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் வேலூர், கிருஸ்ணகிரி,காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் போன்ற  பல மாவட்டங்களிலுள்ள   120 கிராமங்களில் தெலுங்கு வாணி இயக்கம் நடத்திய தெலுங்கு வகுப்புகளால் 5000 க்குமதிகமானோர் தெலுங்கைக் கற்றுக் கொண்டனர்.  அத்துடன் அவர்களின் சிறப்பான கற்பிக்கும் முறையின் மூலம்,  தமிழ்நாடு  முழுவதும் ஒரு கிராமத்துக்கு 10 லட்ச ரூபாய் செலவில்  நூறு கிராமங்களில் 'தெலுங்கு தரங்கட்டுலு' நடத்தவும்,  தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் தெலுங்கு நூலகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பத்து வருடங்களில் பத்தாயிரம் தெலுங்கு எழுதப், பேசக்  கூடிய கிராமங்களை  தமிழ்நாட்டில் (ஆந்திராவில் அல்ல) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது தெலுங்கு வாணி எனும் வடுகர் இயக்கம். அதற்கு தெலுங்கு அபிமானிகளை அவர்களுக்கு உதவுமாறு அழைக்கின்றனர்.

தமிழ்நாடும் தமிழர்களின் கைகளை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. இப்படியே போனால் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகப் பாக்குநீரிணையில் குதிக்க வேண்டியது தான்










3 comments:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

ஈழத் தமிழர் சிங்களவராலும்
தமிழ்நாட்டுத் தமிழர் தெலுங்கராலும்
ஒதுக்கப்பட்டால்
தமிழர்கள் எல்லோரும்
ஒன்றாகப் பாக்குநீரிணையில் குதிக்க வேண்டியது தான்.

TAMILS FOR JUSTICE AND PEACE said...

ALL TELUNGAR ARE TAMILS ! TELUGU IS THE MIXTURE OF SANSKRIT AND TAMIL!
SO TELUNGAR ARE TAMILS WE SHOULD RAISE FUND TO TEACH THEM TAMIL AND TO LIVE AS A TAMIL

viyasan said...

@ TAMILS FOR JUSTICE AND PEACE,

எல்லாச் சிங்களவர்களும் தமிழர்கள்! ஏனென்றால் சமஸ்கிருதம், தமிழ், பாளி மொழிக் கலப்பினால் உருவாகியது தான் சிங்களம். என்று யாராவது கூறினால்(அது உண்மையாக இருந்தாலும் கூட) சிங்களவர்கள் மூக்கையுடைத்து விடுவார்கள். தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்கள் ஏனென்றால் தமிழிலிருந்து தான் தெலுங்கு வந்ததென்று கூறினால், அது உண்மையாக இருந்தாலும் கூட தெலுங்கர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் நோக்கமெல்லாம் தமிழ்நாட்டையும், இன்னொரு ஆந்திரா அல்லது தெலுங்கானா ஆக்குவது தான் என்பதை, தெலுங்கு வாணியின் விளம்பரத்தில் காணலாம். நீங்களும் கூட வடுகர் பரம்பரையாக இருக்கலாம், ஆகவே நீங்கள் இப்படித் தமிழர்களின் காதில் பூச்சுற்ற முயல்வதைப் பார்த்து எனக்கு வியப்பேதுமேற்படவில்லை. :-)