Monday, January 11, 2016

புத்தமதத்தில் சாதியில்லை என்பது வெறும் பம்மாத்து!

தமிழர்களிடையே அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே புத்தமதத்தில் சாதிப்பாகுபாடுகள் எதுவும் கிடையாது அங்கு எல்லோரும் சமமானவர்கள் என்ற கருத்து திட்டமிட்டுப் பரப்பபட்டிருக்கிறது. அதிலும் அண்ணல் அம்பேத்கார் தனது இறுதிக் காலத்தில்அதாவது இறப்பதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்துமதத்தை விட்டு விலகி புத்த மதத்தில் சேர்ந்ததும் மக்களிடம், குறிப்பாக தலித் மக்களிடையே அந்த நம்பிக்கைக்கு  வலுவூட்டியுள்ளதைக் காணலாம்.
'The Buddhavamsa, a Pali language scripture part of the Theravada or Hinayana tradition, indicates that Gautama, the Buddha was born into the Kshatriya caste. The future Buddha, Maitreya will be born into the Brahmana caste. The three Buddhas prior to Gautama were Kakusanda, Konagamana and Kassapa, all of whom belonged to the Brahmana casteThe Lalitavistara, a 3rd century Buddhist scripture, explicitly mentions that a Buddha can only be born a Brahmana or Kshatriya and can never come from any of the “lower castes”. There was little room for those of humble birth, low origin and without lineage to be a Buddha.'
Image result for AMBEDKAR BUDDHIST
ஹம்மலாவ சாததிஸ்ஸா (Hammalawa Saddhatissa) என்ற சிங்கள பெளத்த பிக்குவைச் சந்தித்து அவரது போதனையைக் கேட்ட பின்னர் தான் அம்பேத்கார் நாக்பூரில் 1956 இல் தனது தொண்டர்களுடன் புத்த மதத்தைத் தழுவினார். இலங்கையில் சாதாரண பெளத்த மக்களிடையே மட்டுமன்றி, புத்த பிக்குகளிடையேயும், புத்த சங்கங்கள் மத்தியிலும்  காணப்படும் சாதிப்பாகுபாடுகளைப் பற்றியும், இலங்கையில் புத்தமதம் சாதியில் ஊறிக் கிடக்கும் உண்மையையும் அந்த சிங்களபிக்கு கூறியிருந்தாரேயானால், அம்பேத்கார் புத்த மதத்தை தழுவியிருப்பாரா என்பது சந்தேகமே.

இலங்கையில் நடைமுறையிலுள்ள புத்தமதத்தை 'Gaudi Caste Carnival' என்று சைவமயத்தவர்களாகிய ஈழத்தமிழர்களே நக்கலடிக்கும் அளவுக்கு சாதியடிப்படையில் பிளவுபட்டுக் கிடக்கிறது புத்தமதம். உண்மையில் இலங்கையின் சிங்கள பிக்குவைச் சந்தித்த பின்னர் அம்பேத்கார் சாதியை ஒழிப்பதற்காக புத்த மதத்தைத் தழுவினார் என்பது வியப்புக்குரியதே. அதாவது இலங்கையில் புத்தமதத்தில் எவ்வளவுக்கு  சாதி வேரோடியிருக்கிறது என்பதை அம்பேத்காருக்கு விளக்கிக் கூற அந்தச்  சிங்கள பிக்கு மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

உண்மையில் சாதி என்பது இந்தியாவில் உருவாகிய மதங்களில் மட்டுமன்றி ஆபிரகாமிய மதங்களிலும் உண்டு. அதன் அளவும் தாக்கமும் வேறுபடலாமே தவிர, பாகுபாடுகள் இல்லாத மதம் என்ற ஒன்றே கிடையாதென்றே கூறலாம்.

கெளதம புத்தர் ஒருவரின் பிறப்பின் மூலம் பாகுபாடுகள் காட்டாத சமத்துவம் மிக்க ஒரு மார்க்கத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தில் சங்கத்தை நிறுவியிருந்தாலும், அவர் அதனைத் தனது போதனைகளிலும் வலியுறுத்தியிருந்தாலும் கூட, அவரால்  நிறுவப்பட்ட Order அல்லது சங்கம் அவர் எதிர்பார்த்ததை  அல்லது அவரது நோக்கத்தை நிறைவேற்றுவதாக உருவாக்கமடையவில்லை என்பது தான் உண்மை.

தமிழர்கள் ஏனைய நாடுகளிலுள்ள புத்த மதத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன்னர் இலங்கையின் புத்த மதத்தைப் பார்ப்பது தான் முறையானது, ஏனென்றால் அம்பேத்கார் கூட சிங்கள புத்த பிக்குகளில் போதனையினால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமன்றி பெளத்தர்களாக மாறும் தமிழ்த் தலித்துக்கள் பலருக்கும் கூட அவர்கள் தான் பிக்குகளாகின்றனர் அல்லது தமிழ்நாட்டுத் தமிழ்ப் பிக்குகளுக்கு அவர்கள் போதிக்கின்றனர்.
There are no exhortations to laypeople to treat everyone as a social equal in early Buddhist texts,* but monks and nuns are expected to do so. The Ambattha Sutta states that anyone who makes snobbish distinctions of rank is far from wisdom. Thus monks and nuns are supposed to accept food from everyone, irrespective of caste. In short, caste was accepted in society, but it was rejected in the Sangha. So the first answer to the question, “How did caste get into Buddhism?” is clear–from society.

உண்மையில் ஆரம்பகால பெளத்த போதனைகளில் சாதாரண மக்கள் அனைவரையும் சமமானவர்களாகப் பாவிக்க வேண்டும் என்ற கட்டளை காணப்படவில்லை. ஆனால் புத்த பிக்குகளாக, பிக்குணிகளாக பெளத்த சங்கத்தில் இணையும் பிக்குகளும், பிக்குணிகளும், அவர்கள் என்ன சாதியாக இருந்தாலும்,  உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ சமமாக நடத்தப்பட வேண்டும், அத்துடன் பிக்குகளும், பிக்குணிகளும் சாதி வேறுபாடின்றி எல்லோரிடமும் தானம் பெற்றுக் கொள்ளலாம். அதாவது சமூகத்தில் காணப்பட்ட சாதியமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் சங்கத்தில் சாதியிருப்பதை  பெளத்தம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கட்டளையைக் கூட மீறிச் சாதியில் ஊறிக் கிடப்பது தான் இலங்கையிலுள்ள புத்தமதம். அதாவது இலங்கையில் பெளத்தர்களாகிய சிங்கள மக்களிடம் மட்டுமன்றி, புத்தபிக்கு, பிக்குணிகளின் மத்தியிலும் கூட பிறப்பின் அடிப்படையிலும் அவர்களின் குடும்பத்தின் பரம்பரைத் தொழிலின் அடிப்படையிலும்  சாதிப்பாகுபாடுகள் உண்டு. இலங்கை புத்தமதத்தின் மிகவும் முக்கியமான நாடுகளில் ஒன்று என்பதை இங்கே  நாம் மறந்து விடக் கூடாது.

                                                            High Caste Govigama (Vellala) Monks
இலங்கையில் பெளத்த சங்கம்  முப்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு
டுள்ளன. அவை மஹா நிக்காயா அல்லது சியாம் நிக்காயா, அமரபுர நிக்காயா, ரமண்ணா நிக்காயா என்ற மூன்று முக்கிய பெளத்த பீடங்களின் கீழ் வருகின்றன. இந்த முப்பது பெளத்த பிரிவுகளின் அங்கத்துவமும் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பிக்குகளுக்கும், பிறப்பினால் ஏற்பட்ட சாதியின் அடிப்படையிலேயே உள்ளனவே அல்லாமல் புத்தர் போதித்ததாகக் கூறப்படும் சமத்துவத்தின் அடிப்படையில் அல்ல. 
சாதியடிப்படையிலான நிக்காயாக்களின் கீழேயுள்ள புத்த கோயில்களுக்கு அந்தந்த சாதி மக்கள் செல்கின்றனர். இது இந்துக் கோயில்களில் உள்ளதை விட மோசமானது ஏனென்றால் இலங்கையில் எந்த இந்துக் கோயிலும் சாதியடிப்படையில் யாரையும் அனுமதிப்பதுமில்லை/அனுமதி மறுப்பதுமில்லை. ஒவ்வொரு நிக்காயாவிலும் புத்த பிக்குவாக வருவதற்கு குறிப்பட்ட சாதியில் பிறந்திருக்க வேண்டும்.

உதாரணமாக, மகா நிக்காயா அல்லது சியாம் நிக்காயாவில் சிங்களவர்களில் உயர்ந்த சாதியாகக் கருதப்படும்,  அதாவது வேளாண்மை செய்யும் கொவிகம (வேளாளர் அல்லது வெள்ளாளர்) சாதியைச் சேர்ந்தவர் மட்டுமே பிக்குவாக முடியும். புத்தரின் பல் என சிங்களவர்களால் கருதப்படும் (அது புத்தரின் பல் அல்ல, அது மனிதப் பல்லே அல்ல என்பது வேறு கதை) புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள கண்டியிலுள்ள தலதா மாளிகை சியாம் நிக்காயாவின் கீழ் வருகிறது. அதில் சிங்கள வெள்ளாளர்கள் மட்டுமே பிக்குகளாகவும்  பீடாதிபதிகளாகவும் வர முடியும். அமரபுர நிக்காயாவிலும் ரமண்ணா நிக்காயாவிலும் கடலோரச் சிங்களவர்களாகிய சிங்களக் கரையார்களும், ஏனைய சாதிகளாகிய சலாகம எனப்படும் கறுவாப்பட்டை உரிக்கிறவர்களும், துரவா எனப்படும் பனை, தென்னையிலிருந்து கள்ளிறக்கிறவர்களும் ஏனைய கீழ்மட்டத்திலுள்ள சாதிகளும் பிக்குகளாக முடியும்.இப்பொழுது கூட வருடாந்தம் கண்டியில் நடைபெறும் தலதா மாளிகையில் புத்தரின் புனித தந்த ஊர்வலத்தில் கரையோரச் சிங்களக் கரையார் நடனம் ஆடுவதற்குத் தடையுண்டு, ஆனால் ஜப்பானியர்கள் விரும்பினால்  ஆடுவதற்குத் தடையில்லை. 

இதில் வேடிக்கை என்னவென்றால்  தமிழ்நாட்டிலிருந்து கூப்பிடு தூரத்திலுள்ள இலங்கையில் புத்த மதமும், புத்த சங்கமும் சாதியடிப்படையில் பிரிந்து நாறிக் கிடக்கும் போது சாதியை ஒழிப்பதற்காகவும் சமத்துவம் வேண்டியும் புத்தமதத்தில் சேர்கிறார்களாம் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.
Karava (Karaiyar) Monks
இலங்கையின் பழமையான பெளத்த நூல்களாகிய பூஜாவலிய, சத்தர்மரட்னாவலிய, நிதிநிகண்டுவ போன்றவை சாதிப்பாகுபாடுகளையும், விதிக்கப்பட வேண்டிய சாதிக்கட்டுப்பாடுகளையும்  விளக்கமாக, விரிவாக விளக்குகின்றன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட மன்னன் துட்டகைமுனுவின் மகனாகிய  'சாலிய', தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணாகிய அசோகமாலாவை மணந்ததால், பெளத்தத்தைக் காப்பதற்காக தமிழர்களுக்கெதிராகப் போர் தொடுத்த பெளத்த மன்னனாகிய அவனது தந்தை  துட்ட கைமுனுவால் ஊரை விட்டே விலக்கி வைக்கப்பட்டதாகக் கூறுகிறது பூஜாவலிய என்ற நூல். பதினோராம் நூற்றாண்டில் ஆண்டசிங்கள அரசன் விஜயபாகு சிவனொளிபாதமலை எனத் தமிழர்களாலும் ஸ்ரீ பாத என்று சிங்களவர்களாலும் அழைக்கப்படும் மலையிலுள்ள பாதத்தை வணங்குவதற்கு தாழ்த்தப்பட்ட சிங்களச் சாதியினருக்கு தடை விதித்தான்.

இவ்வாறு இலங்கையில் புத்தமதம் சாதிச்சீழ் பிடித்துக் கிடக்கிறது, இந்த லட்சணத்தில் சாதியொழிப்புக்காக புத்தமதத்துக்கு மாறுகின்றனராம் தமிழர்கள். வெறும் அக்கரைக்கு இக்கரைப் பச்சை அவ்வளவு தான். 

-தொடரும்-- 

6 comments:

drogba said...

என்னோட மச்சாள் கல்யாணம் எனக்கு facebookல பாத்துதான் எனக்குத் தெரியும். இத்தனைக்கும் கல்யாணம் கட்டினவன் என்னோட batch. 'Hi bye' friend எண்டுகூட சொல்லலாம். தமிழன்ட சாதி வெறிக்கு முன்னால பௌத்த மதம் பரவாயில்லை. சும்மா ஜோக் அடிக்காதிங்கோ பாஸ்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சாதிகள் உள்ளதடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொலல் சகஜம்

இப்படித்தான் பாடவேண்டும் போலிருக்கிறது

thiyagarajah kandiah said...

//புத்தமதத்தில் சாதியில்லை என்பது வெறும் பம்மாத்து!//-ஆனாலும் இலங்கைத் தமிழராகிய நம் சாதித் திமிரை விஞ்சயாரும் உலகிலில்லை. உண்மைதானே!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

Veluppillai Thangavelu said...

புத்தர் சாதி பாராட்டவில்லை. பிறப்பால் யாரும் பிராமணன் ஆக முடியாது, குணத்தால் நடத்தையால்தான் ஒருவன் பிராமணன் ஆகமுடியும் என்பது புத்தரின் போதனை. புத்தரது பல சீடர்களில் இந்து மதத்தில் கீழ்சாதி எனத் தள்ளிவைக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். சிங்கள பவுத்தத்தில் சாதி பாகுபாடு இருப்பது உண்மை. அதற்குக் காரணம் இந்து மதத்தின் தாக்கமே. இன்றைய சிங்களவர்களின் முன்னோர்கள் நாகர், இயக்கர், இராட்சதர், பவுத்த தமிழர் ஆவர். அவர்கள் இந்துக்கள் அல்லது வேத மதத்தினர். பின்னர் மதம் மாறினார்கள். எனவே அவர்களது முன்னோர்கள் கடைப்பிடித்த சாதிப் பாகுபாட்டை சிங்கள பவுத்தர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், இந்துக்களான தமிழர்களிடம் காணப்படும் சாதிப்பாகுபாடும் சிங்கள பவுத்தர்களிடையே காணப்படும் சாதிப்பாகுபாடும் ஒன்றல்ல. சிங்கள பவுத்தத்தில் ஒரு நெகிழ்ச்சித்தன்மை காணப்படுகிறது. குறைந்த சாதியினருக்கு பள்ளிக்கூடக் கதவுகளோ பவுத்த கோயில்களின் கதவுகளோ சாத்தப்படவில்லை. அதாவது பள்ளி கோவில் நுழைவு மறுக்கப்படவில்லை. முன்னாள் சனாதிபதி இரணசிங்க பிரேமதாச துணி துவைக்கும் வகுப்பை சேர்ந்தவர்.

Mathavan Krishnamoorithi said...

நான் பெளத்தம் மாறலாம் என்றிருந்தேன் இந்த கட்டுரை என்னை யோசிக்க வைக்கிறது?