Sunday, January 10, 2016

வே. மதிமாறனின் உளறல்களைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டும்.



 ஏறுதழுவுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள்  தமிழர்களின் வீரத்தில் திளைத்த மன்னர்கள், தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்கள், , அவர்களின் இசை, கலைகள் எல்லாவற்றுக்கும்  தமிழ்நாட்டுத் தமிழர்கள் சாதியடிப்படையில் சண்டை போட்டுக் கொள்வதால் தான் வந்தேறிகள் எல்லாம் வாய் கூசாமல் தமிழர்களின் பண்பாட்டை வக்கணையுடன் கேலி பேசும் நிலை ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக வே.மதிமாறன் என்ற எழுத்தாளர் என்னடாவென்றால் “புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்ப்பெண்ணால் கேவலம் மாட்டை அடக்க முடியாதா? ஆமாம் ஜல்லிக்கட்டில் ஏன் பெண்கள் பங்கெடுப்பதில்லை” என்கிறார். இந்த நக்கலில் அவர் தமிழ்ப்பெண்களை மட்டும் கேலி செய்யவில்லை, தமிழிலக்கியங்களையும், தமிழர்களின் வீரமிகு வரலாற்றையும் கேலி செய்கிறார். இவ்வாறு தமிழிலக்கியங்களை தமிழர்களின் பண்பாட்டைக் கேலி செய்த தமிழரல்லாதோரின் தலையில் கல்சுமக்க வைத்த தமிழர்கள் அக்காலத்தில் இருந்தனர் ஆனால் அந்த தமிழ்மானம் எல்லாம் செத்துப்போய் இப்பொழுது வெறும் சோற்றுத்தமிழர்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் இருக்கின்றனர் என்பது தெரிந்ததால் தான் இவரைப் போன்றவர்களுக்குக் குளிர் விட்டுப் போய் விட்டது.

தமிழில் குரவருக்கும், குறவருக்கும் வேறுபாடு தெரியாத இந்த தமிழ் “எழுத்தாளர்” முன்பொருமுறை ராஜ ராஜ சோழனை வாய்க்கு வந்தபடி, வரலாற்றுப் பிழைகளுடன் உளறியது எனக்கு எரிச்சலையூட்டியதால் இதற்கு முன்பும் இவரைக் கண்டித்து நான் ஒரு பதிவை எழுதியுள்ளேன்.

 'நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன' என்பது போல் இப்பொழுது இவர் இக்காலத் தமிழ்ப்பெண்களை மட்டுமன்றி புறநானூற்றுத் தமிழச்சியையும் கேலி செய்கிறார். இவரைக் கண்டிக்க தமிழ்நாட்டில் யாருமே  கிடையாதா? தமிழையும் தமிழர்களின் பண்பாட்டையும் கேலி செய்யுமளவுக்கு இவர்களுக்கு இடம் கொடுத்து, இப்படியான திராவிட எச்சங்கள் பலவற்றைத் தமிழ்நாட்டில் வளர்த்து விட்ட தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தான் உலகத்தமிழர்கள் குறைகூற வேண்டும்.

புலியை முறத்தால் அடித்து விரட்டுமளவுக்கு வீரம் நிறைந்த அக்காலத் தமிழச்சிக்கு தன்னைப் போன்ற வீரமுள்ள கணவனை அவளே  தேர்ந்தெடுத்துக்  கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுப்பதற்காகத் தான் சங்ககாலத் தமிழர்கள் ஏறுதழுவும் போட்டியை நடத்தினர். சங்க  காலத்தில் ஏறுதழுவுதல் ஏன் நடத்தப்பட்டது என்றதன் பின்னணியைக் கூட அறியாத தற்குறிகள் எல்லாம் தமிழில் ‘எழுத்தாளர்’ என்ற பெயரில் இக்காலத் தமிழர்களை மட்டுமன்றி உலகம் போற்றும் சங்கத் தமிழிலக்கியங்களையும், தமிழர்களின் வீரமிகு வரலாற்றையும், துணிச்சலுடன் கேலி செய்வது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்க முடியும்.

 தமிழ்நாட்டுக்குப் பக்கத்து மாநிலமான கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவை மலையாளிகள் எவருமே சாதியடிப்படையில் சொந்தம் கொண்டாடுவதில்லை இந்துக்கடவுளர்கள் உலா வரும் அந்த விழாவில் முஸ்லீம்கள் கூட மலையாளிகள் என்ற இனவுணர்வுடன் பங்கு கொள்கிறார்கள். கேரளாவில் மலையாளிகளை அவர்களின் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட விடாமல் தடுக்கவும் அல்லது அவர்கள் மலையாளிகளாக ஒன்றுபட வேண்டிய அவர்களின் பாரம்பரிய விழாக்களிலும், பழசை நினைவுபடுத்தி, அவர்களின் சாதியுணர்வைத் தூண்டி நாரதர் வேலை செய்யவும், அங்கு பெரியாரியம் பெரிதாக வேரூன்றாதது தான் முக்கிய காரணமாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களின் கலை, கலாச்சாரம் பாரம்பரியம் அவற்றைக் காக்க வேண்டிய கடமை என்ற பேச்சு வரும் போதெல்லாம், தமிழர்களை அவர்களின் சாதிப்பாகுபாடுகளை, அவர்களிடையேயுள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்று படச் செய்ய விடாமல் தடுப்பதற்கென்றே பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு கூட்டம் அலைகிறது. அவர்களின் முழு நோக்கமும் தமிழர்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபடுவதைத் தடுப்பது தான்.

'கேப்பில கிடாவெட்டுவது போல்’ என்று தமிழ்நாட்டில் கூறுவது போல் இந்துத்துவா சக்திகள் இடையில் புகுந்து தமிழர்களின் ஏறுதழுவுதல் என்ற பல்லாயிரமாண்டுகள் பழமை வாய்ந்த தமிழர்களின் விழாவுக்கு இக்கால இந்துத்துவாக் கொள்கைகளின் அடிப்படையில் இந்துமதப் பூச்சுப் பூசுவதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். ஆபிரகாமிய மதங்கள் தமிழ்நாட்டுக்கு வருமுன்னர் தமிழர்கள் அனைவரும் இக்காலத்தில் 'இந்துக்கடவுள்களாக' கருதப்படும் தெய்வங்களை வெவ்வேறு தமிழ்ப் பெயர்களில் வழிபட்டனர். கோயில்களில் தான் தமிழ் வளர்ந்தது, தமிழர்களின் கலைகளும் அரங்கேற்றப்பட்டன. கோயில் முன்றல்கள் தான் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேரும் இடமாகவும் இருந்தன. ஆகவே தான் ஏறுதழுவுதலும் கோயில் திருவிழாக் காலங்களில் நடத்தப்பட்டனவே தவிர அதன் பின்னணியில் மத அடிப்படையோ அல்லது மத வேறுபாடுகளோ கிடையாது ஆகவே இக்காலத்தில் ஆபிரகாமிய மதங்களைக் கைக்கொள்ளும் தமிழர்களை முன்னோர்களாகக் கொண்ட கிறித்தவ, இஸ்லாமிய தமிழர்கள் அனைவரும் பங்குபற்றி ஏறுதழுவுதலை உண்மையான தமிழர் விழாவாகக் கொண்டாடும் நாள் எந்நாளோ அது தான் தமிழர்களுக்கும் தமிழுக்கும் வெற்றி நாளாகும். 

இக்கால இந்து மதவெறியர்கள் சிலர் தமிழர்களின் ஏறுதழுவுதலுக்கு இந்துமதப் பூச்சு பூசி தமிழர்களின் பாரம்பரிய விழாவை இந்து மதவிழாவாக்க முனைவதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தடுக்காது விட்டால் அது தமிழினத்தை மேலும் பிளவு படுத்தும்.


புறநானூறு


'ஒரு தமிழ்த் தாய் தனது ஒரே மகனைப் போருக்கு அனுப்பும் காட்சி'

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279) 
A Tamil Mother Sends Her Only Son into Battle 
Let these thoughts pass from her! Monstrous though it was,
her resolve was in keeping with her ancient lineage!
The day before yesterday, her father knocked down
an elephant on the battlefield and died soon after.
Yesterday, her husband foiled a thick column of warriors
before he was mowed down himself.
And today, when she heard the war drums ringing in her ears,
she was choked with longing. Shaking all over,
she put a spear in the hand of her only son,
wound a piece of cloth around him, and rubbed oil
into the topknot of his wild unkempt hair;
and though he was all she had, she told him:
Go! and sent him into battle at once.
(Okkur Macattiyar, Tamil / Purananuru 279)

இதன் பொருள்:-

இவளது சிந்தை கெடுக (வாழ்க எனப் பொருள்);  இவள் பெண்களில் சிறந்தவள், இவளது துணிவு மிகவும் கடுமையானது. வீரப் பரம்பரையில் வந்த  பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.
 

சிறப்புக் குறிப்பு:- 
“கெடுக சிந்தை, கடிது இவள் துணிவு” என்று கூறியது இகழ்வதுபோல் புகழ்வது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிபிடுகிறார். தந்தையையும், கணவனையும் போரில் இழந்தாலும், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால், தன் ஒரே மகனை – மிகவும் சிறிய வயதுடைய ஒரே மகனை – போருக்கு அனுப்புவதால் அவள் “மூதில் மகள்” என்ற அடைமொழிக்குத் தகுதியானவள்தான் என்பதைப் புலவர் நன்கு எடுத்துரைக்கிறார். 
இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்ற வீரமுள்ள தமிழ்ப் பெண்டிர், சங்க காலத்தில் மட்டுமல்லாமல் தற்காலத்திலும் இருக்கிறார்கள் என்பதற்கு, அண்மையில் ஈழத்தில் நடந்த இனப்போரில் தம் தந்தை, உடன் பிறந்தோர் ஆகியோரையும், தம் பிள்ளைகளையும், பெண்களையும் இழந்து, தாங்களே போருக்குச் சென்ற பெண்களின் வீரச்செயல்கள் சான்றாகத் திகழ்கிறது.


நன்றி: Connectgalaxy.com

13 comments:

Ant said...

சிலர் தங்கள் கருத்துகளை எப்பாடுபட்டாவது அதற்க்கொரு சாதிய வன்வம் கொடுத்து, தன்னை பகுத்தறிவுவாதியாக காட்டிக் கொள்வதாக என்னிக் கொண்டு, எழுத்துகளிலும் பேச்சுகளிலும் வெளிப்படுத்துகின்றனர். இதன் மறுவிளைவு, அவர்சார்ந்த வட்டத்தை தாண்டி, வெளியுலகத்தில் எதிர்மறையான தாக்கத்தைத் தான் ஏற்படுத்தும் என்ற சிந்தனை உணர்வு அன்றி அவை வெளிப்பட்டுவிடுகின்றன.

இத்தகைய எழுத்தாளர்களும் ஒருவகை சாதிய எழுத்தாளர்கள்தாம். தங்களது சாதிய வன்மத்தை பிறசாதிகள் மீது எழுத்து பேச்சுவழி ஏவுகின்றனர். அதற்கு இவர்கள் தங்களை சாதிய அடையாளத்தை துறந்தவர்களாக வேடமிட்டுக் கொள்கின்றனர்.

//ஒட்டுமொத்த தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகத்தில் குறிப்பட்ட பகுதியில் மட்டும் நடக்கிறது? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுக்கிறார்கள்?// வெறுப்புக்கு காரணம் கேள்விகளிலேயே உள்ளது. விளக்கம் என்பது ஏமாற்று வேலையே.

ஏறுதழுவுதல் காலம்காலமாக நடைபெற்று வந்த நிகழ்வு இதை குறிப்பிட்ட சிலபகுதி மக்கள் கைவிடாது பின்பற்றி வருவதை கூட பொறுத்துக் கொள்ள முடியாதவாறு சாதிய வெறுப்பு இத்தகையவர்களை தூண்டுகிறது. இவர் ஏறுதழுவுதலை எதிர்க்க காரணமாக எதை கூறுகிறாரோ அதுவே மாட்டுப் பொங்கலுக்கும் உழவர் தினத்திற்கும் பொருந்தும். அனைத்து தமிழர்களும் உழவர்கள் அல்ல உழவில் தான் அதிக அளவு மாடுகள் கொடுமைக்கு உள்ளாகின்றன.

தனது சாதிய வன்மைத்தை கட்டுரையில் காட்டிவிட்டு அதை மறைக்க ஏறுதழுவுதலில் மனிதர்கள் பாதிக்கப்படுவதாக ஒரு சப்பைகட்டு வேறு. இதில் இவர் வெறுக்கும் சாதியினர்தானே பாதிக்கப்பட போகின்றனர். அப்படியானால் இது மனித தன்மையுடன் கூறப்பட்டதா? என்றால் மனித தன்மையுடையவர்கள் மிருகங்களை வதைப்பதையும் எதிர்க்கவே செய்ய வேண்டும். அப்படியாயின் இவர் உழவில் மாடுகளை பயன்படுத்தவும் தடைகோரியிருக்க வேண்டும் அவ்வாறு செய்யவில்லையே ஏன்? காரணம் அங்கு சாதிய ஆதரவு!

மனிதர்கள் பாதிக்கப்படுவதற்காக ஒரு குறிப்பிட் பகுதியில் குறிப்பிட்ட பிரிவினரால் நடத்தப்படும் ஏறுதழுவுதலை தடைசெய்வது நியாயம் என்றால் ஒரு குறிப்பிட் பகுதியில் குறிப்பிட்ட பிரிவினர்தான் மனித இனமா? இவர்கள் பாதிக்கப்பட்டால் மனித இனம் பாதிக்கபட்டதாக பொருளா? வெறுப்பவர்கள் மீது கரிசனம் உள்ளதாக காட்டிக் கொள்வதால் அது உண்மையாகது.

எப்பொருள் யார்யார் வாயக் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு!
புறந்தள்ளுக இத்தகைய கருத்துகளை!!

Prasad said...

சிறப்பான பதிவு

Nachiappan Narayanan said...

super- thalai; deep think, shrp analiys; welldone

viyasan said...


திரு. Nachiappan Narayanan,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

viyasan said...

திரு.Ant,

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. சிலவேளைகளில் பொறுத்துக் கொள்ள முடியாதளவுக்கு எரிச்ச்சலையூட்டுவதால் தான் பதிலெழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.

viyasan said...

திரு.பிரசாத்,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

G Krish said...

உங்களைப்போல சிலர் உள்ளதால் தான் இன்னமும் வரலாறு வாழ்ந்து கொண்டு இருக்கிறது. தொடர வேண்டும் உங்கள் பணி

G Krish said...

உங்களைப்போல சிலர் உள்ளதால் தான் இன்னமும் வரலாறு வாழ்ந்து கொண்டு இருக்கிறது. தொடர வேண்டும் உங்கள் பணி

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

2016 தைப்பொங்கல் நாளில்
கோடி நன்மைகள் தேடி வர
என்றும் நல்லதையே செய்யும்
தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்
உங்கள் யாழ்பாவாணனின்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

Nachiappan Narayanan said...

mathi maran oru -'arai-vakkadu' -nathigavathi'

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மதிமாறனின் வலைப் பக்கம் நான் போவதே இல்லை

Veluppillai Thangavelu said...

பழங்காலத்தில் இருந்தது என்ற ஒரே காரணத்துக்காக ஏறுதழுவுவதைத் தொடருவது அறியாமை. சிறுவயதில் திருமணம், உடன்கட்டை ஏறுதல் இன்று வழக்கத்தில் இருக்கிறதா? சட்டப்படி அவை தடைசெய்யப்பட்டுவிட்டன. சல்லிக்கட்டும் அவ்வாறு தடைசெய்யப்பட வேண்டும். வாய்பேசாத மாட்டை துரத்திப் பிடித்து அடக்குவது வீரம் அல்ல. கோழைத்தனம். வேண்டும் என்றால் மல்யுத்தம் செய்யலாம்.