Monday, December 28, 2015

தமிழர்களுக்கொரு நீதி, மலையாளிகளுக்கு வேறொரு நீதி - திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் படும் பாடு -தமிழர்களின் பழமை வாய்ந்த வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது, அதற்குக் காரணமாகக் கூறப்படுவதென்னவென்றால் மாடுகள் சித்திரவதைக்குள்ளாகின்றன என்பது தான். ஆனால் மலையாளிகளால் பெருமையுடன் மட்டுமன்றி, ஒற்றுமையுடனும் கொண்டாடப்படும் திருச்சூர் பூரம் திருவிழாவில் கலந்து கொள்ளும் யானைகள் படும் சித்திரவதையுடனும், பாரமான இரும்புச் சங்கிலிகளால் இணைக்கப்பட்டும், யானைப்பாகனால் குத்தப்பட்டும், நாராசமாக ஒலிக்கும் ஒலியைத் தாங்க முடியாமல், கண்களில் நீர் வடிய யானைகள் படும் வேதனையுடன் ஒப்பிடும் போது, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் இயற்கையிலேயே ஆவேசமும், வீரமும் கொண்ட  (குறிப்பிட்ட) இனத்தைச் சேர்ந்த மாடுகள் சித்திரவதைக்கு உள்ளாவதில்லை என்றே கூறலாம்.  
ஜல்லிக்கட்டுக்குத் தடை- தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை இழக்கும் தமிழ்நாடு?

ஆனால் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதைக் காரணம் காட்டி மலையாளிகளின் பூரம் விழாவைத் தடைசெய்ய யாராலும் முடியவில்லை, ஆனால் தமது இனம், மொழி, பாரம்பரியம் என்று வரும்போது கூட ஒற்றுமைப்பட முடியாமல் பிளவுண்டு கிடக்கும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதல் சத்தம் சந்தடியின்றி தடை செய்யப்பட்டு விட்டது.  இது தமிழர்கள் அனைவர்க்கும் தலைகுனிவாகும். தமிழர்களின் கலைகளும், பாரம்பரியமும் சிலரால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்பதற்கு இதுவும் நல்லதொரு உதாரணமாகும்.

THE ABHORRENT TORTURE OF KERALA’S ELEPHANTS
Elephants-Shackled
உதாரணமாக, இவ்வாண்டு 2015 இல் நடைபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதன் காரணமாக, யானைகளின் அணிவகுப்பை தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் "மிகப்பழமையான" திருவிழாவில் மாற்றங்களைச் செய்ய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியதாலும், கேரள மாநில அரசும் அதில் இடையூறு செய்ய இயலாது என்று கூறி, பூரம் விழாவுக்கும் யானைகளின் அணிவகுப்புக்கும் ஆதரவு தெரிவித்ததாலும் மலையாளிகளின் திருச்சூர் பூரம் விழா வெகு சிறப்பாக யானைகளின் (வேதனையுடன்)  அணிவகுப்புடன் சிறப்பாக நடந்தேறியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் வெறும் 200 வருடங்கள் (1790) பழமை வாய்ந்த திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் அணிவகுப்புக்கு ( அதில் நூற்றுக்கணக்காக யானைகள் சித்திரவதைக்குள்ளாகின்றன என்பது நன்கு தெரிந்தும்) தடை விதிக்க நீதிமன்றமும், கேரள அரசும் மறுத்து விட்டன, ஆனால் சங்ககாலம் தொட்டுப் பழமை வாய்ந்த தமிழர்களின் மதச்சார்பற்ற ஏறுதழுவுதல் எனப்படும் நிகழ்ச்சியில் (ஒரு சில) மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற நொண்டிக் குற்றச் சாட்டைக் காரணம் காட்டி அது தடை செய்யப்பட்டு விட்டது.  இது மலையாளிகளுடன் ஒப்பிடும் போது எந்தளவுக்கு ஒற்றுமையில்லாத இளிச்ச வாயர்களாக, கையாலாகாதவர்களாக  தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 

*சங்ககாலத்தில் ஏறுதழுவுதல் 
சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் முதன்முதலாக ஏறுதழுவுதல் நிகழ்வு குறித்துச்சுட்டப்பட்டுள்ளது. முல்லை நில ஆயர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்கின்றனர். ஏறுதழுவல் குறித்து முன்னரே பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் ஏறுதழுவல் நடைபெறுகின்றது. முல்லை நில ஆடவர்கள் தலைவியின் காதலைப்பெறும் பொருட்டு தன் வலுவினை வெளிப்படுத்தி காளையினை அடக்கி, அவளை அடைய முயற்சிப்பர். ஆதலின் முல்லை நில ஆடவர் வீரமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். முல்லை நில ஆண்கள் தம் ஆண்மையினைப் (வீரத்தினை) பரிசோதிக்கும் நிகழ்வாதலின் இது ஓர் கவுரவப்பிரச்சனையாகவும் அமைந்த ஒன்றாகும். 
Image result for ஏறுதழுவுதல்கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும்
புலலாளே
,ஆயமகள் 
அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர்துறந்து

நைவாரே ஆயமகள்”3.
 முல்லை நில மகளிர் தம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்தினர் என்பதனை மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியலாம். ஆயர்குல மகளிரை மணக்க விரும்புவோர் அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையினை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கமாகும். இதனை ஏறுதழுவுதல்என இலக்கியங்கள் கூறுகின்றன. எருதின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சி ஓடும் வீரமில்லா இளைஞனை ஆயமகளிர் இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் கூட கணவனாக அடைய விரும்பமாட்டாள். ஏனென்றால் வீரம் ஒன்றே ஆணுக்கு அழகு என்று எண்ணிய காலம் அதுவாகும்.*


சிறிய மாநிலமான கேரளாவுக்கு இந்திய மத்திய அரசிலுள்ள செல்வாக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையை தீர்மானிப்பதிலுள்ள  ஆற்றலும்   தமிழ்நாட்டுக்குக் கிடையாது என்பதை, ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் எவ்வாறு மலையாளிகள் ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவர்களுக்கு உதவினர்  என்பதிலிருந்து  உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டனர்.

உண்மையில் கோயில் யானைகளில் குறிப்பாக மலையாளிகளின் பூரம் திரு விழாவில் யானைகள் படும் துன்பமும், வேதனையும் சித்திரவதைகளும், தமிழர்களின் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு நடைபெறுவதில்லை.  ''Gods in Shackles', எனும் ஆவணப்படம்  திருச்சூர் பூரம் விழாவில் யானைகளின் நிலையைத் தெளிவாக விவரிக்கிறது. அந்த ஆவணப்படத்தினதும், அது தொடர்பான கட்டுரையினதும்   இணைப்பை இங்கே காணலாம்.

மலையாளிகளிடம் தமது கலாச்சார பாரம்பரியங்களையும், பழமையான கோயில்களையும் விழாக்களையும் காப்பதில்  சாதி, மத வேறுபாடற்ற ஒற்றுமை காணப்படுவதால், பூரம் விழாவில் யானைகளின் பங்களிப்பைத் தடை செய்ய இலகுவில் துணிய மாட்டார்கள் என்பது ஒரு மலையாள நண்பரின் கருத்தாகும். அது உண்மை என்பதை நானும் திருச்சூர் பூரம் விழாவில் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அத்தகைய ஒற்றுமையின்மைக்குக் காரணம் கூட, திராவிடமும், பெரியாரியமும் தானென  வாதாட முடியும். அது தான் உண்மையும் கூட.

elephant-bending-small
உதாரணமாக,. தமிழர்களின் பழமையையும், வீரத்தையும் உலகுக்குப் பறை சாற்றும் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என அழைக்கப்படும் வீர விளையாட்டைத் தடை செய்வதை நிறுத்த, அதற்கெதிராகப் போராட, தமிழர்கள் முழுமையாக ஒற்றுமையுடன் ஈடுபடவில்லை, ஜல்லிக்கட்டில் சாதிப்பின்னணி இருப்பதாக கூறிக் கொண்டு, அதையும் எதிர்த்த சாதியொழிப்பு வீரர்கள் நம்மிடையே உள்ளனர். 

தமிழர்களின் பரதநாட்டியத்தில் (சதிராட்டத்தில்) சாதியுண்டு, ஆகவே அதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். அதைப் பார்ப்பனர்கள் தமதாக்கிக் கொண்டாலும், பரவாயில்லை.  ராஜ ராஜ சோழன் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனருக்கு உதவினான், ஆகவே ராஜ சோழன் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக இருந்தாலும்.  அவனையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும்,  ஆகவே தமிழர்களின் பெருமையைப் பறை சாற்றும் பெரிய கோயிலும்  தமிழர்களின் கைகளை விட்டுப் போகட்டும். அது போன்றே சங்ககாலம் தொட்டு பழமை வாய்ந்த ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டிலும் சாதிப் பின்னணியிருக்கிறது, அதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும் பெரும்பாலும் இவ்வாறு கூறுகிறவர்கள் எல்லோரும் பெரியாரிய, திராவிட பின்னணி கொண்ட எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அவர்களைப் பின்பற்றும் தமிழர்களும் தான்.  

இவர்களின் கதையைக் கேட்டுத் தமிழர்கள் தமது கலை, பண்பாடு, அவர்களது முன்னோர்களின் பழமையான கோயில்கள் எல்லாவற்றையும் இழந்தது தான் மிச்சம் ஆனால்  சாதி மட்டும் இன்னும் ஒழியவில்லை. தமிழர்கள் எல்லோரும் நாம் தமிழர்களாக மட்டும், ஒன்றிணைந்து போராட வேண்டிய விடயங்களில்  எல்லாம் இவர்கள் சாதியைப் புகுத்துவதால், சாதியொழியவில்லை, மாறாக, ஒவ்வொரு தமிழனுக்கும் சாதியுணர்வும், தனது சாதியில் பிடிப்பும் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதை இணையத் தளங்களில் தினம், தினம் உருவாகும், அவரவரது சாதிப்பெருமை பேசும் காணொளிகளின் மூலம் நாம் காணக் கூடியதாக உள்ளது.

 தமிழர்கள் இவ்வாறு சாதியடிப்படையில் பிளவு பட்டால் தான், தொடர்ந்து தமிழரல்லாத திராவிடர்கள்  தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளமுடியும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆகவே அக்காலத்தில், ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நடைமுறைகளை, இக்காலச் சாதிப்பாகுபாட்டுடன்  ஒப்பிட்டு, இளிச்சவாய்த் தமிழர்களை வரலாறும், பாரம்பரியமும், கலை கலாச்சாரமும் அற்றவர்களாக ஆக்கும் வரை இவர்கள் ஓயவே மாட்டார்கள்
Pictures from Internet (various) 
*நன்றி:  'சங்ககாலத்தில் ஏறுதழுவுதல்' (கீற்று)

1 comment:

Prabhu T said...

ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, மற்றொரு கண்ணுக்கு வெண்ணை என்பது காலங்காலமாக ஆண்டான் அடிமைக்கு செய்வதுதானே. அப்பதான அவன் பொழைக்க முடியும். ஏறுதழுவுதல், ரேக்ளா பந்தயங்கள், சேவல் சண்டைகள்...அது மிகப்பெரிய பட்டியல் ஐயா. வேட்டி கட்டும் மலையாளிகளுக்கு இருக்கும் ஒற்றுமையுணர்வு, வேட்டியில் இருந்து எப்பவோ பேண்டுக்கு மாறிய so-called தமிழர்களுக்கு இல்லை. காலக்கொடுமை.