Wednesday, December 23, 2015

தமிழன் சிம்புவுக்கு எதிராகத் திட்டமிட்ட சதி??தமிழ்த்திரையுலகில் மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து துறைகளிலும் தமிழரல்லாதோரின் ஆதிக்கம் தான்  அதிகம். தமிழ்த் திரையுலகில் கூட உண்மையான தமிழ் நடிகர், நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். நடிகர்களாவது ஒரு சிலர் உள்ளனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற உண்மையான  தமிழ் நடிகைகள் யாரும் கிடையாது என்றே கூறலாம். 

அட்டைக் கறுப்பாக இருக்கிற தமிழன் கூட வெள்ளை வெளேரென்று இருக்கிற வடநாட்டு அல்லது மலையாள, வடுக, கன்னட நடிகை நடித்தால் தான் படம் பார்ப்பேன் என்று அடம்பிடிப்பது தான் அதற்குக் காரணம். தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத் தோலாசையாலும், சினிமா மோகத்தாலும்  தமிழினத்துக்கு ஏற்பட்ட தீமைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. ஆனால் அதைப் பற்றி பேசுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம்.

நடிகர் சிலம்பரசனுக்கு ஆதரவான எனது கருத்துக்கு எதிர்ப்பு இருக்கலாம், ஆனால் எனது கருத்தை வெளியிடத் தான் நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேன். :-)

தமிழரல்லாதோரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும், விரல் விட்டு எண்ணக் கூடிய, தமிழை தாய்மொழியாகவும்,  பிறப்பினாலும் தமிழர்களாகிய நடிகர்களில் ஒருவராகிய சிம்பு என அழைக்கப்படும் சிலம்பரசனுக்கு எதிராக, யாராலோ, அவரது அனுமதியின்றி, திருட்டுத்தனமாக,  வெளியிட்ட, அவர் எழுதியதாகக் கூறப்படும் பாடலின் பின்னணியில் தூண்டி விடப்படும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் தமிழன் சிலம்பரசனுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடைபெறுகிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

“ஆத்தா ஆத்தோரமா வாறியா" என்று ஆத்தாவை ஆத்தோரமாக வரச் சொல்லிக்  கூப்பிட்ட பாடல்களும், பாலியலைத் தூண்டும், பாலியல் கருத்துக்கள்  கொண்ட  இரட்டை வசனங்கள் நிறைந்த தமிழ்ப் படங்களின் பாடல்களையும், கதை வசனங்களையும் கண்டு கொள்ளாமல் விட்ட தமிழர்கள், தனது சொந்த வீட்டில், தனது சொந்த அறையில் நடிகர் சிலம்பரசன் எழுதிய ஆனால்  அவரால் வெளியிடப்படாத, (யாரோ வெளியிட்ட) பாடலைக் காரணம் காட்டி அவருக்கெதிரான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடப்பதன் பின்னணியில் சிம்புவின் வளர்ச்சியை விரும்பாத சிலரும் இருக்கலாமென எண்ணுவதில் தவறில்லை.

தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தினர், ஆங்கில மோகம் கொண்டவர்களாக, அமெரிக்க Accent உடன் ஆங்கிலம் பேச வேண்டுமென்பதிலும், அமெரிக்க கலாச்சாரம், மேற்கத்தைய இசை, Hip-hop, RAP போன்றவற்றை மிகவும் இரசிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அக்கரைக்கு, இக்கரைப் பச்சை என்பது போல, புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களை விட, தமிழ்நாட்டு இளந்தலைமுறையினர் மேற்கத்தைய இசை, அமெரிக்க, ஐரோப்பிய கலாச்சாரம் என்பவற்றில் அதிகளவு ஈடுபாடு கொண்டவர்களாக,  Valentine’s day, Father’s day, Mother’s day, "Birdday" (birthday) எல்லாவற்றையும் மும்முரமாக, ஆடம்பரமாகக் கொண்டாடுகிறவர்களாக காணப்படுவதை என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டின் அந்த இளைய தலைமுறையினர்  தான் சிம்புவின் ரசிகர்கள், அவர்களைத் திருப்திப்படுத்துவதும் தான், மகிழ்விப்பதும் தான் சிம்புவின் நோக்கம், அது தான் அவரது தொழிலும் கூட.

உதாரணமாக, அமெரிக்க RAP இசையை எடுத்துக் கொள்வோம். RAP பாடல்களில் பாலியலை தூண்டும் வரிகளும், பச்சை பச்சையாக உடலுறைவையும், பாலியல் உறுப்புக்களையும், Penis, Vagina என்பவற்றை விவரிக்கும் பாடல் வரிகளும் இல்லாத பாடல்களே   இல்லையென்றே கூறலாம். இந்த விடயத்தில்  RAP பாடகிகளும், ஆண் பாடகர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. சிம்புவும், அமெரிக்க RAP பாடல்களையும், அந்த பாடல்களுக்கும், பாடகர்களுக்குமுள்ள மவுசையும் பார்த்து, அப்படியான  பாடலைத் தமிழில் இயற்றினால் என்னவென்று நினைத்து அந்தப் பாடலை இயற்றியிருக்கலாம். ஆனால் சிம்பு விட்ட மிகப்பெரிய தவறு என்னவென்றால் அவற்றை முற்று முழுதாக தமிழாக்கியது தான். தமிழில் மிகவும் கெட்ட வார்த்தையாகக கருதப்படும், பு... வார்த்தையைத் தவிர்த்து விட்டு, அதை ஆங்கிலத்தில் கூறியிருந்தால் தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்;. ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுவதை தமிழர்கள் பெரிது படுத்துவதில்லை, வேடிக்கை என்னவென்றால் சில தமிழர்கள் அதை Fashion அல்லது Trendy ஆகக் கூட நினைத்துக் கொள்வதுமுண்டு.

இவ்வளவுக்கும் சிம்பு,  தான் தனது சொந்தப் படுக்கை அறையிலோ அல்லது படிக்கும் அறையிலோ எழுதிய பாடலை அவராகவே வெளியிடவில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தமிழ்நாட்டில் தனது வீட்டில் தனது சொந்த அறையிலிருந்து கொண்டு தூசணம் அல்லது கெட்ட வார்த்தையை எழுதுகிறவன், பேசுகிறவன், நினைப்பவனுக்கெல்லாம் எதிராகப்  போராட்டமும் நடத்தி, தண்டனையும் அளிப்பதென்றால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை ஆண்களுக்கெதிராக மட்டுமன்றி பெண்களுக்கெதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.  

சிம்பு தனிப்பட்ட முறையில் எழுதிய பாடலை, சிம்பு எனப்படும் தமிழன் சிலம்பரசனின் வளர்ச்சியை, புகழை அவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் வெளியிட்டவரைத் தான் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டுமே தவிர சிலம்பரசனை அல்ல.5 comments:

Ant said...

சிம்பு பயன்படுத்திய வார்த்தை கெட்டவார்த்தை என்றால் அதைக் கொண்டுள்ள மொழி ...
லிங்கம் என்ற பெயரை எப்படி கூசாமல் சத்திமிட்டு அழைக்கின்றனர்...
ஆவுடை என்று பெண்களுக்கு பெயர் சூட்டி என்படி பொதுஇடத்தில் நடமாட முடிகிறது...
இஸ்லாமில் ஒரு பிரிவு ஷியா இன்னொரு பிரிவை எப்படி அழைப்பது...
ஆங்கிலத்தில் உள்ள Sunny என்பதை உச்சரித்தால் (ஓசை) அதன் பொருள் என்னவாகும்...
ஆங்கிலத்தில Jhon என்று அழைக்கிறோமே அது என்ன ...
யாரையாவது திட்ட ராஸ்கல் என்று (செல்லமாக கூட) அதன் மூல ஆங்கில வார்த்தை என்ன...
சிம்புவின் பாடல் இளைஞர்களை காதல் வியாதியில் இருந்து காப்பாற்றும் (பாஷண) சித்த மருந்து. இளைஞர்கள் சிம்புவை ஆதரிக்க வேண்டும் ...
காமம் அனுபவிக்க வேண்டிய உணர்வு ...
வாழக்கை வாழ்வதற்கே..
ஒருவர் இன்னும் நன்றாக விளக்கினால் ஆன்மீகவாதி:
https://www.youtube.com/watch?v=6D7rWLzloOI

செங்கதிரோன் said...

என்னம்மா பீல் பன்றான்யா ( சிம்புவோட மைன்ட் வாய்ஸ்)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//சிலம்பரசனின் வளர்ச்சியை, புகழை அவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன்// இது நக்கல் தானே!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நன்றாக அலசியுள்ளீர்கள்
சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
தொடருங்கள்

http://www.ypvnpubs.com/

drogba said...

https://www.facebook.com/senthoorran/posts/10153770847566054?notif_t=like