Thursday, September 3, 2015

வர்மன் – தமிழ் வேரில் உருவாகிய தமிழ்ச் சொல்லே தவிர வடமொழிச் சொல் அல்ல! வடமொழியிலும், தமிழிலும், தமிழிலிருந்து சொற்களை இரவல் வாங்கியும், தமிழிலிருந்து பிரிந்தும் உருவாகிய ஏனைய திராவிடமொழிகளிலும்-  ஒரு  பொதுவான சொல்  இருந்தால்அந்தச் சொல் சமக்கிருதச் சொல் எனவும், தமிழ் உட்பட ஏனைய திராவிட மொழிகள் அவற்றை சமக்கிருதத்திலிருந்து தான் இரவல் வாங்கியதாகவும் வாதாட சமக்கிருதவாதிகள் தான் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று நான் இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் அதை கண்மூடித்தனமாக அப்படியே நம்பி விடும் தமிழர்கள் ஒருபுறமிருக்க, சமக்கிருதவாதிகளின் அந்தப் பொய்யையும் தமக்குச் சாதகமாக்கி தமிழர்களின் மாமன்னர்கள் பலரும்  தமிழர்களே அல்ல என்று வாதாடும் பகுத்தறிவு பகலவன்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதை அண்மையில் இணையத்தளக் காணொளிகள் சிலவற்றில் பார்த்தேன்

வெறும் தன்னலத்துக்காக,  தமது கொள்கைப் பிரச்சாரங்களுக்காக, பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக, அதிலும் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனர்களை ஆதரித்தனர் என்பதற்காக,  தமிழ் மன்னர்கள் எல்லாம் தமிழர்களே அல்ல என்று வரலாற்றைத் திரிக்கும் , பெரியாரியர்களின் பேச்சுக்களும்,   காணொளிகளும்  எனக்கு மிகவும் எரிச்சலையூட்டுகின்றன. யாராவது இவர்களை எதிர்த்துப் பதிலளிக்க மாட்டார்களா என்ற ஆதங்கம் தான் ஏற்படுகிறது. அதைத் தவிர எனக்கும் அவர்களுக்கும் எந்த முரண்பாடும் கிடையாது.

உதாரணமாக, ஒரு பகுத்தறிவு, என்னடாவென்றால்,   'வர்மன்' என்ற பெயராக பல்லவ மன்னர்கள் பலரும் கொண்டிருப்பதால்,  *பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார். வர்மன் என்பது சமக்கிருதச் சொல், ஒரு தமிழன் சமக்கிருதப் பெயரை வைத்துக் கொள்வானா, என்பது அவரது வாதம். அந்த அடிப்படையில் பார்த்தால், வடமொழிப் பெயர்களைக் கொண்ட தமிழர்கள்  எல்லோருமே தமிழர்கள் அல்ல என்றல்லவா  வாதாடவேண்டும்

இவர்களின் கருத்துப் படி பார்த்தால், இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னால் புலிகள் தலைவர் பிரபாகரன் கூட தமிழன் அல்ல என்றும் சிலர் வாதாடலாம், ஏனென்றால் பிரபாகரன் என்பதும் சுத்தமான தமிழ்ப் பெயர் அல்ல.  உண்மை என்னவென்றால், இக்காலத்தில் எவ்வாறு பல தமிழர்கள் வடமொழிப் பெயர்களைக் கொண்டுள்ளனரோ, அவ்வாறே பல்லவர், சேர, சோழ பாண்டியர் காலத்திலும் பல தமிழர்களுக்கு வடமொழிப் பெயர்களும், பட்டங்களும் வழக்கிலிருந்தன. அந்த காரணத்தால், அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என வாதாடுவது வெறும் கோணங்கித்தனமாகும்அதிலும் பல பெயர்கள், தமிழ் வேர்ச்சொற்களில் உருவானவை, வடமொழியால் இரவல் வாங்கப்பட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவை.

அத்தகைய சொற்களில் ஒன்று தான், தமிழ் அரசர்களாகிய பல்லவ, சேர, சோழ பாண்டியர்களில் பலரும் பொதுவான பெயராகக் கொண்டிருந்த வர்மன் என்ற பெயராகும்.

வன்மை> வன்மம்> வருமம் > வர்மம் > வர்மன் 
Vanmai (n) – Forcefulness 
வழு இல் வன் கை மழவர் பெரும,” (புறநானூறு 90: 11) 
“Vazhu il van kai mazhavar peruma,” (Pu'ra:naanoo'ru 90: 11) 
(The lord of the blamelessly strong-handed soldiers) 
 van-mai < val strength (Kur-al., 153); skill, ability 
தமிழில் வல்>வன் - என்ற வேர்ச்சொல் (வன்மை>வன்மம் )  மன்னர்கள், படைவீரர்களை விவரிக்கப் பாவிக்கப்படும் போது - வீரமிக்க, பலம் வாய்ந்த, ‘வெற்றி வாகை சூடுகின்றஎன்ற கருத்தாகும். 
The root-word ‘Van' meaning strong, able, valorous etc., and its use in the context of soldiers

வர்மன் என்ற பெயரைக் கொண்டுள்ளதால், தன்னுயிர் போனாலும் பரவாயில்லை எனத் தமிழ் கேட்டு உயிர் நீத்த பல்லவ நரசிம்மனும் தமிழன் அல்ல, கங்கை முதல் கடாரம் வென்றஅருண்மொழி வர்மன்ராஜ ராஜ சோழனும் தமிழன் அல்ல. ஆனால் தமது தாய் மொழியை வீட்டில் பேசும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்கள் அனைவரும் தமிழர்கள் எனத், தமிழர்களனைவரும்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிலரின் வாதம்

வர்மன் - என்ற சொல் தமிழ் வேர்ச்சொல்லிருந்து உருவாகிய தமிழ்ச் சொல் தான் என்ற உண்மை தெரியாமலிருக்கலாம், அல்லது தமிழர்கள் யாரைப் பற்றிப் பெருமையாக நினைக்கிறார்களோ, எவற்றை தமது பாரம்பரியமாக நினைக்கிறார்களோ, அதற்கும் பார்ப்பனர்களுக்கும், இந்து மதத்துக்கும் எதாவது தொடர்பிருந்தால், அந்த தொடர்பு ஆயிரமாண்டுகளுக்கு முந்தியதாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களைத் தூற்ற வேண்டும், இளந்தமிழர் இதயங்களில், சிந்தனையில் அவர்களைப் பற்றிய பெருமையும், நல்லெண்ணமும் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இது தான் இணையத் தளங்களில் பிரச்சாரக் காணொளி வெளியிடும் மதிகெட்ட சிலரின் நோக்கம்

அந்த கோணங்கித்தனத்தை  தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமன்றி, உலகத்தமிழர்கள் அனைவரும் இனங்கண்டு கொள்ள வேண்டும். இக்கால தன்னல, குறுகிய  சாதி, மதம்  சம்பந்தமான கருத்து வேறுபாடுகளுக்காக, தமிழர்களின் வரலாற்றைத் திரிப்பதையும், தமிழர்களின்புகழ் பெற்ற முன்னோர்களை, யாரைத் தமிழர்கள் தமிழர்கள் என நினைத்து பெருமைப்படுகிறார்களோ, அவர்களையும், தமிழ் வளர்த்த கோயில்களையும்  இழிவு படுத்துகிறவர்களை தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்


"மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குங்கைத 
தண்ணுலாம் மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டில் 
பெண்இலா ஊரில் பிறந்தாரைப் போலவரும் 
வெண்ணிலா வேஇந்த வேகம்உனக்(கு) ஆகாதே.". 
- நந்திக்கலம்பகம்- 


No comments: