Saturday, February 7, 2015

வே. மதிமாறனின் உளறல்களைத் தமிழர்கள் கண்டிக்க வேண்டும்!  

'தமிழர் விரோதி ராஜ ராஜ சோழன்என்ற தலைப்புடன் உள்ள  இந்தக் காணொளியில் வே. மதிமாறனின்  மதி மாறிய பேச்சுக்கு, விளம்பரமளிக்க   எனக்கு விருப்பமில்லையேயானாலும்,  தமிழ் மன்னர்களை, அதிலும்  குறிப்பாக, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக, கடல் கடந்த நாடுகளில் எல்லாம் தமிழர்களின் புலிக்கொடியைப் பறக்கவிட்ட மாமன்னன் எனப் பெருமிதத்துடன் புகழப்படும்  ராஜ ராஜ சோழனை, இவர் குறிவைத்துத் தாக்குவதும், கொச்சைப்படுத்துவதும், தமிழன் என்ற முறையில் எனக்கு எரிச்சலையூட்டுகிறது

இப்படியொரு சிறுபிள்ளைத்தனமான  பேச்சை தனது நண்பர்களிடம் மட்டும் பேசியிருந்தால் பரவாயில்லை என்று விட்டு விடலாம். ஆனால் அதைக் காணொளியாக உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் பார்க்கும் வகையில் வைத்தது, உலகத் தமிழர்களுக்குச் சவால் விடும் செயல். இந்த உளறலுக்குப்  பதிலளிக்காமல்  விட்டால் அது தமிழர்களின் முன்னோர்களுக்கே இழுக்கு என நான் நம்புகிறேன்.

அது மட்டுமன்றி, பெரியார் தான் தமிழர்களுக்கு திருக்குறளை அறிமுகப்படுத்தினார் என்ற அதிகப்பிரசங்கித் தனத்தைக் கூட தமிழ்நாட்டுத் தமிழர்கள் எவரும் கண்டிப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் எனக்கு பெரியாரிசம் பற்றி எதுவும் தெரியாது, ஆனால் தமிழர்களின் புகழ்பெற்ற வரலாற்றின் அரிச்சுவடி கூடத் தெரியாமல் உளறுவதும், தமிழர்கள் பெருமிதப்படும் அவர்களின் வீர வரலாற்றை, இக்கால சமூகப் பிரச்சனைகளுடன் ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்துவதும், தமிழர்களின் வரலாற்றைச் சிறுமைப்படுத்துவதுடன், பெரியாரால் தான் தமிழர்களுக்கு திருக்குறளைத் தெரியும் என்பது போல உளறும் மதிமாறன்கள் தான் பெரியாரிசத்தின் காலாட்படையினர் என்றால்,  அந்தப் பெரியாரிசத்துக்கு ஆதரவளிக்கும்  தமிழுணர்வுள்ள, சுயமரியாதையுள்ள தமிழர்கள் அவர்களின் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலமும், கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என்பது தான் எனது கருத்தாகும்..

 ‘குரவருக்கும் - குறவருக்கும்வேறுபாடு தெரியாதவர்கள் கூட, 'எழுத்தாளர்' என்ற பெயரில் மாமன்னன் ராஜ ராஜ சோழனைத் தூற்றுவதும், கொச்சைப்படுத்துவதும், தமிழர்களின் வரலாற்றை மட்டுமல்ல, தமிழன் என்று தன்னைப் பெருமையுடன் அடையாளப்படுத்தும் ஒவ்வொரு தமிழனையும் அவமதிக்கும் செயலாகும். வரலாற்றுச் சம்பவங்களை, வரலாறாக மட்டும் பார்க்கவேண்டுமே தவிர, இக்காலத்துடன் ஒப்பிட்டு வசை பாடக் கூடாது என்பது கூட இவரைப் போன்றவர்களுக்குத் தெரியவில்லை. இவரது முட்டாள் தனமான கருத்துக்கள் வெறும் அபத்தமானவை, தமிழர்களுக்கு எதிரானவை என்றால், அதைக் கூட கைதட்டி ரசிக்க தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் சேர்கிறது என்பது அதை விட  அபத்தம்.

இந்தக் காணொளியில் திரு. மதிமாறனின் கருத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


 • மன்னராட்சிக் காலத்தில் உலகில் எந்த நாடாக, எந்த இனமாக இருந்தாலும், தமது நாட்டை விரிவுபடுத்தப் போர் செய்யும் போது இனம், மதம் எல்லாம் பார்க்கும் வழக்கம் கிடையாது. வேறுபல உலக நாடுகளில் தமது சொந்தச் சகோதரர்களையும், பெற்ற தந்தையையும் கூடக்  கொலை செய்து  ஆட்சியைக் கைப்பற்றிய அரசர்களைக் கூட இப்படித் தூற்றுவதில்லை. அவர்களின் வீரச்செயல்களைப் பாராட்டி, தமது வரலாற்றுப் புகழைப் பீற்றிக் கொள்ளும்  போது இவர் என்னடாவென்றால், பிளவு பட்டுக் கிடந்த தமிழ்மண்ணை ஒருங்கிணைப்பதற்காக, சேரர்களுடனும்,  பாண்டியர்களுடனும்
 •  போரிட்டு, தமிழர் தேசத்தை மும்முடிச் சோழ மண்டலமாக்கிய, ராஜ ராஜ சோழனின் வீரத்தைக் கொச்சைப்படுத்தும் முட்டாள்தனமான இந்தப் பேச்சை ஞே என்று எருமை மாதிரிப் பார்த்துக் கொண்டிருப்பது, மட்டுமன்றிக் கைகளையும் தட்டுகிறார்கள்  சில தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பதைப் பார்க்கும் போது எங்கே போகிறது தமிழ்நாடு என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

 • உதாரணமாகத், துருக்கியின் புகழ்பெற்ற ஓடோமன்(Ottoman Empire)  அரச குடும்பத்தில் தமது சொந்த சகோதரர்களைக் கொலை செய்து ஆட்சியைப் பிடிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக இருந்து வந்துள்ளது. உலகில் அரசகுடும்பங்களின் வரலாற்றில் இவ்வாறு, எவ்வளவோ உதாரணங்கள் உண்டு. இந்தியாவிலும், இலங்கையிலும் தனது சொந்தத் தந்தையைச் சிறையிலிட்டும், உயிரோடு புதைத்தும் மட்டுமன்றி ஏனைய சிற்றரசர்களையும், தமது மொழி, இன அரசர்களுடனும் போரிட்டு நாடு பிடித்தும்,  ஆட்சியைக் கைப்பற்றியுமுள்ளனர். அவர்களை ஏனைய இந்தியர்களும், சிங்களவர்களும் தூற்றுவதில்லை, இன விரோதிகள் என்று வசைபாடுவதில்லை.அதற்குப் பதிலாக அப்படி ஆட்சியைக் கைப்பற்றிய அரசர்களை, அவர்களின் வீரத்தைப் பெரிதாகப் பேசுகிறார்கள். ஆனால் ராஜ ராஜ சோழன் சேர, பாண்டியர்களுடன் போரிட்டு, தமிழ்மண்ணை ஒருங்கிணைத்து மும்முடிச் சோழன் என்று பட்டம் சூடியதால் அவன் தமிழர்களின் விரோதி என்று கூறி,  உலகில் அரசர்களின்,  அரச குடும்பங்களின் வரலாற்றில் அரிச்சுவடி கூடத் தனக்குத் தெரியாது என்பதைக் காட்டுகிறார் இந்தஎழுத்தாளர்”. தமிழர்களின் பரம விரோதிகளான சிங்களவர்களை வென்று சிங்களாந்தகன் என்ற ராஜ ராஜ சோழன் பட்டம் சூடிக் கொண்டதும் தவறு, அதுவும் அவன் தமிழர்களின் விரோதி என்பதைக் காட்டும் செயல்  என்றும் உளறுவார் போலிருக்கிறது.

 • இவர் ஒரு சரியான லூசுத்தனமாக உளறுகிறார்  ஏனென்றால் ராஜ ராஜ சோழன் பாண்டியர்களுடனும் , கொங்கு நாட்டு மன்னர்களுடனும் சண்டையிட்டதால், இக்கால கோவைத்தமிழனும், மதுரைத் தமிழனும் ராஜ ராஜ சோழனை எதிர்க்க வேண்டுமென்கிறார். அப்படியானால் தமிழ்நாட்டைக் கைப்பற்றி தமிழர்கள் அனைவருடனும் சண்டையிட்டு வென்ற வடுகர்(தெலுங்கர்) களையும், ஏனைய தமிழரல்லாதவர்களையும் கூட  தமிழர்கள்   வெறுக்க வேண்டும் அல்லவா. ஆனால் திராவிட வீரர்களும் பெரியாரிஸ்டுகளும் திராவிடர்கள்(வடுகர், கன்னடர், மலையாளிகள் ) எல்லாம் சகோதரர்கள் என்கிறார்கள். எல்லாமே தமிழரல்லாதோரின் ஆதிக்கத்தை தமிழநாட்டில் நிலை நிறுத்துவதற்காகத் தான்.

 • அதென்ன Gaaந்தளூர்?  காந்தளூரை Gaaந்தளூர் என்று உச்சரிப்பதே தமிழில் தவறு. தமிழில் Gaa கிடையாது.  இவரது தமிழ் உச்சரிப்பில் தமிழரல்லாத, திராவிட வாடை அடிக்கிறது. :-)

 • தமிழ் மன்னர்களுக்கிடையில் நடந்த பங்காளிச் சண்டையை ஆதாரம் காட்டி இக்காலத் தமிழர்களைப் பிரிக்கவும், தமிழர்களை தமது முன்னோர்களுக்கெதிராகவும், அவர்களை இழிவுபடுத்தச் செய்யவும்  முயலும், மதிமாறனின் சதியை அறிந்து கொள்ள முடியாதளவுக்கு தமிழர்கள் முட்டாள்கள் என்று அவர்  நினைத்துக் கொள்கிறார் போல் தெரிகிறது. :-)

 • திரு.மதிமாறன் யாரிடம் அல்லது எந்தப் புத்தகத்திலிருந்து இலங்கைக்குச் சோழர் படையெடுப்பு பற்றிய வரலாற்றைப் படித்தாரோ எனக்குத் தெரியாது. எல்லாவற்றிலும் பிழையும், குழப்பமுமான கருத்தைத் தெரிவிக்கிறார். இனிமேலாவது தனது பேச்சிலுள்ள வரலாறு சம்பந்தமான பிழைகளைத் திருத்துவார் என நம்புகிறேன். மகிந்த V பாண்டியர்களுக்கு உதவவில்லை. சிங்கள அரசன் ஐந்தாவது மகிந்தன் ஒரு பலமற்ற அரசன். ஆனால் பாண்டிய அரசன் இரண்டாம் ராஜசிங்கனுடனும், இலங்கை அரசன் காசியப்பனின் மகன் நான்காம் தப்புலா IV (பாண்டியனுக்குப் படையுதவி) உடனும் போரிட்டது, ராஜ ராஜ சோழனின் தந்தை  பராந்தகன் II (சுந்தரசோழன்) தானே தவிர,  ராஜ ராஜ சோழன் அல்ல. பாண்டிய மன்னன்  தனது மணிமுடியையும், அரச நகைகளையும்  அனுராதபுரத்தில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு, சேரநாட்டுக்கு ஓடி விட்டான். 

 • மதுரையில் ராஜ ராஜ சோழனின் படைகள் பெண்களைக் கற்பழித்தனர் கொள்ளையடித்தனர் என்று  நேரிலிருந்து பார்த்தவர் போல அலறும் இவர், இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் மதுரையைப் பலமுறை  சூறையாடியதை இவ்வளவு கேவலமாக, கொச்சைத்தமிழில் பேசுவாரா என்றால், பேசமாட்டார் ஏனென்றால் முஸ்லீம்கள் ஓட்ட அறுத்து விடுவார்கள்.

 • இவர் இக்காலத்திலும் தமிழர்களை சேரர், சோழர், பாண்டியர் என்று பிரிக்க முயல்வதுடன், வரலாற்றையும், இக்கால நடைமுறைகளையும், சாதிவேறுபாடுகளையும் ஒப்பிட்டுத் தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்ப முனையும், இந்த உளறலை தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏன் கண்டிக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 • சோழ மண்டலத்துடன் ஈழநாட்டை இணைத்து, ஈழமண்டலத்தையும், மும்முடிச்சோழமண்டலத்தின் அங்கமாக்கத்  தான் ராஜ ராஜ சோழன் ஈழத்தின் மீது படைஎடுத்தான், அது கூடத் தவறா? ஒரு மன்னன் தனது ஆட்சியை, தனது நாட்டின் எல்லையை விரிவாக்கம் செய்ததை, தனது இனத்தின் எதிரி என்பது போன்று பேசும் முட்டாள்தனத்தை எப்படி அழைப்பதென்று எனக்குத் தெரியவில்லை.

 • அந்தக்கால, அரசியல் உறவுகள், திருமணங்கள், போர்கள் எல்லாமே  தனது நாட்டையும், ஆட்சியையும்,  விரிவுபடுத்துவதற்காகத் தான் என்பது கூட இந்த அரைவேக்காட்டு 'எழுத்தாளருக்குத்' தெரியவில்லை. இதுவரை எந்த வரலாற்றாசிரியரும் ராஜ ராஜ சோழன் தமிழன் அல்ல என்று கூறவில்லை.ஆகவே அந்த விடயத்தைப் பின்பு பார்ப்போம்.

 • வானவன் மாதேவி, ஒரு தமிழ் வேளிர்குலப் பெண், சுந்தரசோழனின் மனைவியாகிய அவர்  ராஜ ராஜ சோழனுடைய மனைவி  அல்ல, அவனது தாய். இதற்கு ஆதாரமாக, ராஜ ராஜ சோழன் தனது தாய் வானவன் மாதேவியின் நினைவாக ஈழத்தில் கட்டிய வானவன் மாதேவி ஈச்சரமுடையார் சிவன் கோயில் இன்றும் காணப்படுகிறது. அவசரத்தில் ராஜ ராஜ சோழனின் தாய்க்கும், தாரத்துக்கும் கூட இந்தஎழுத்தாளருக்குவேறுபாடு தெரியவில்லை போல் தெரிகிறது. அதுவானமான்தேவிஅல்ல வானவன் மாதேவி, தமிழில் பெயரும் உச்சரிப்பும் மிகவும் முக்கியம் ஐயா.

 • ராஜ ராஜ சோழனின் மனைவியும், ராஜேந்திர சோழனின் தாயுமாகிய கொடும்பாளூர் இளவரசியின் பெயர்  வானதி அல்லது திரிபுவன மாதேவியாரே தவிர, வானவன் மாதேவி அல்ல. 

 • உண்மையில் இவருக்கு தமிழும் தெரியாது,  தமிழர்களின்  வரலாறும் புரியாது போல் தெரிகிறது. இவர் ராஜேந்திர சோழனின் கங்கைச் சமவெளிப் படையெடுப்பை, முட்டாள்தனமாகக்,  கொச்சைப்படுத்துவதைக்  கூடச்  சிரித்து, ஆதரிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருப்பதைப் பார்க்கும் போது, தமிழினத்தின் எதிர்காலத்தை நினைக்கப் பயமாக இருக்கிறது.

 • தமிழில்கொண்டஎன்றால் 'வென்ற' என்ற கருத்தும் உண்டு என்பது இந்த எழுத்தாளருக்குத் தெரியவில்லைப் போலிருக்கிறது. கங்கை வரை படையெடுத்து, தமிழரல்லாத அரசர்களை ராஜேந்திர சோழன் வென்றது ஏனோ இவருக்குப் பிடிக்கவில்லை. (இவரது முன்னோர்கள் தமிழர்களா என்று எனக்குத் தெரியாது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்கிறதோ யாருக்குத் தெரியும்.) அதனால் தான் ராஜேந்திர சோழன் கங்கையை வென்றதன் நினைவாக தனது தலைநகருக்குக் கங்கைகொண்டசோழபுரம் என்று பெயரிட்டதை கங்கைகண்ட’  சோழபுரம் என்று கொச்சைப் படுத்துகிறார். சோழ அரசர்களின் வீரத்தையும், அவர்களின் வரலாற்றை மறுத்து, இணையத் தளங்களில் சிங்களவர்களும், தமிழர்களை வெறுக்கும் இனவாத சிங்களப் பிக்குகளும் பிரச்சாரம் செய்வதையும்,  கொச்சைப் படுத்துவதையும், திரிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன், தமிழ் எழுத்தாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தும் ஒருவர், இப்படித் தமிழர்களின் வரலாற்றைத் திரிப்பதும்,  தூற்றுவதும், உண்மையில் எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது.


DEMALA MAHASEYA - தமிழர் மகாதூபி (விகாரை) பொலநறுவை - சோழர் தலைநகரம். நிகரிலி சோழ வளநாட்டுப் புலநரி - பொலநறுவை


திருக்குறள், மறைமலையடிகள், வி.க, Vs. ராமசாமி நாயக்கர்


ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக கடைசியில் திருக்குறளிலும் கை வைத்து விட்டார் மதிமாறன். திருவள்ளுவர் பிறந்து இரண்டாயிரமாண்டுகளில் எந்த தமிழ்மன்னனும் திருக்குறளை ஆதரிக்கவில்லையாம். திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரை ஆதரித்த மன்னர்கள் திருக்குறளையும் தான் ஆதரித்திருப்பார்கள். ஆதரிக்காதிருந்திருந்தால் திருக்குறள் இரண்டாயிராமாண்டுகளுக்குப் பின்னர் தமிழர்களுக்குக் கிடைத்திருக்காது, அல்லவா? திருக்குறள் சமண நூல் என்றதால் ஆதரிக்கவில்லையாம். தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களும் கூட, பெளத்த, சமண நூல்களே தவிர சைவசமய நூல்கள் அல்ல  என்பது கூட இவருக்குத் தெரியாது போலிருக்கிறது.

இதில் அபத்தத்திலும் அபத்தம் எதுவென்றால்இரண்டாயிரம்  ஆண்டுகளுக்குப் பின்னர், முதன்முதலாக திருக்குறளைத் தமிழர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் பெரியார்  என்பது தான். சங்க இலக்கியங்களை அழிவிலிருந்து காத்து, அவற்றை அச்சுவாகனமேற்றித், தமிழிலக்கியங்களைக் காத்த தமிழறிஞர்களாகிய ஆறுமுகநாவலருக்கும்,  யாழ்ப்பாணம் தாமோதரம்பிள்ளைக்கும், .வே, சாமிநாதையருக்கும் கூட  பெரியார் தான் திருக்குறளை அறிமுகப்படுத்தினார் என்று கூறாமல் விட்டதே பெரிய விடயம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மறைமலையடிகளிடம் ஒரு தமிழறிஞர் சென்று,  “ராமசாமி நாயக்கரு திருக்குறளைத் தான் விட்டுவைச்சான் என்று பார்த்தால் அவன் அதையும்  காலி பண்ணிட்டானுங்கஎன்று கூறினாராம். அதனால் கோபமடைந்த மறைமலையடிகள் திரு. வி. விடம் அதைப் பற்றிக் கேட்டாராம். திருக்குறள் மாநாட்டில் ராமசாமி நாயக்கரின் திருக்குறள் பற்றிய மோசமான பேச்சை சகித்துக் கொண்டு எப்படி உட்கார்ந்திருந்தீர்கள் என்று மறை மலையடிகள் திரு. வி. , அவர்களிடம் கேட்டதற்கு, அவர்அந்த மட்டில விட்டாரே திருக்குறளை, அது வரைக்கும் சந்தோசப்படுங்கஎன்றாராம் வி..  அத்துடன் திருக்குறளை தமிழர்களிடம் கொண்டு சேர்த்தது பெரியார் தான் என்றும் அவர் கூறினாராம்.  இதற்கு உண்மையில் ஆதாரமுண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகத் தான் எனக்குப் படுகிறது. தமிழையே காட்டுமிராண்டிப் பாசை என்ற அதிகப்பிரசங்கியாகிய பெரியார், திருக்குறளை அந்த மட்டில விட்டாரே, என்ற கருத்துப்பட  "அந்த மட்டில விட்டாரே   திருக்குறளை"   என்று, திரு. வி.. அவர்கள் மறைமலையடிகளிடம் கூறியதை, அவர் பெரியாரை வியந்து பாராட்டியதாக கதை விடுவதாகத் தான் எனக்குப் படுகிறது. 

"முதன் முதலாக, தமிழர்களின்  வரலாற்றில் திருக்குறளைப் பெரியார் தான் பேசினார்" என்று சவால் விடுகிறார் 'எழுத்தாளர்' மதிமாறன், அப்படியானால் பெரியாரின் முன்னோர்கள்  கர்நாடாகாவிலிருந்து  தமிழ்நாட்டுக்கு வந்து அவர் பிறந்து, வளர்ந்து கட்சி ஆரம்பிக்கும் வரை, தமிழர்களுக்கு திருக்குறள் என்ற ஒரு நூல் இருப்பதே தெரியாது என்று கருத்துப்படுகிறது. ஆனால் பெரியார் பிறப்பதற்கு 67 ஆண்டுகளுக்கு முன்பே 1812 இல், ஒலைச் சுவடிகளிலிருந்த திருக்குறள் புத்தகமாக வெளிவந்து விட்டது. 

'மிகப்பெரிய' சிந்தனையாளரும், எழுத்தாளரும், பேச்சாளருமாகிய வே.மதிமாறன் அவர்களின் பேச்சுகள் உள்ள காணொளிகளில், தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்தும் விடயங்கள் மட்டுமல்ல, அசட்டுத்தனமான சவால்களும், வெறும் வாய்ச்சவடால்களும்  கூட உள்ளன என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். அவற்றைப் பின்பு பார்ப்போம்.   :-) 


8 comments:

Kumaran said...

பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்று ஒரு கும்பல் வாய்க்கு வந்தததை எல்லாம் உளறிக்கொண்டிருக்கிறது, சங்ககாலத்துக்கும் நிகழ்காலத்திற்கும் வேற்றுமை தெரியாத இந்த உளறல்களை கண்டித்தே ஆகவேண்டும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு சிலர் இணையத்தில் ஒரு இனத்தின் மீதான வன்மத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

viyasan said...

திரு.குமரன்,

முற்றிலும் உண்மை. பார்ப்பனர்களை எதிர்க்கிறோம் என்ற போர்வையில், ஏற்கனவே பிளவுண்டு கிடக்கும் தமிழினத்தை மேலும் பிளவுபடுத்தும் வேலைகளைச் சிலர் திட்டமிட்டுச் செய்கின்றனர். அவற்றைத் தமிழர்கள் இனங்கண்டு கண்டிக்க வேண்டும். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

viyasan said...

திரு. டி.என்.முரளிதரன்,

உண்மை, அதன் பின்னணியில் தமிழர்களுக்கெதிரான சதியும், தமிழர்களை ஒன்றுபட விடாத திட்டமும் உண்டு. வேறு சில காணொளிகளில் மிகவும் அப்பட்டமான முறையில் தமிழர்களை, தமிழர்கள் தமிழைப் புனிதமாக, தாயாக நினைப்பதைக் கூட நக்கலடிக்கிறார் இந்த மதிகெட்ட பேர்வழி. நன்றி.

rajan said...
This comment has been removed by a blog administrator.
'நெல்லைத் தமிழன் said...

இந்த வெட்டிகளுக்கெல்லாம் பதில் போடுவது வீண். துட்டனைக் கண்டால் தூர விலகவேண்டும். இருந்தாலும் அவன் பொருட்டு, நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டோம்.

vivek kayamozhi said...

வரலாற்றை அந்த காலகட்ட யதார்த்த நிலையில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த மதிகெட்ட மாறன்,
பாபர் மசூதி பிரச்சினை யில் எவ்வாறு கருத்து சொல்லுவார்?,
தமிழன் பண்பாட்டு, கலை செல்வங்களை அழிப்போம் என திட்டமிட்டு எழுதும் இந்த அரைவேக்காடுகள் திராவிட போர்வையில் ஒளிந்து கொண்டு குரைக்கின்றன...
நம் வரலாறு, பண்பாடு முதலியனவற்றின் மேல் உண்டான நம் பெருமிதத்தை அழித்து நம்மை தாழ்வுனர்ச்சி அடையவைத்து வெள்ளைகாரனுக்கும்,அரேபியனுக்கும் கூட்டிக்கொடுப்பதே இந்த திராவிட பிச்சைகளின் பிழைப்பு..இதையெல்லாம் திராவிட ஓட்டு பொறுக்கி கட்சிகள் கண்டிக்க மாட்டா...இவனுகளே நம்மை நாம் தமிழர் பக்கமா தள்ளி விட்ருவானுக போலயே...!!!???

sundar moorthy said...

மதியற்ற மதிமாறன்,இவன் உண்மையான பச்சதமிழன் இல்லையென்றே நினைக்கிறேன்