Tuesday, February 17, 2015

திருக்கேதீச்சரத்தில் சாதிவேறுபாடின்றி ‘போதொடு நீர் சுமந்தேத்தும்’ மகாசிவராத்திரிஇலங்கையில் மகா சிவராத்திரி  நாள் தேசிய விடுமுறை தினம். இன்று 
இலங்கையிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் குறிப்பாக ஈழத்தின் பாடல்பெற்ற தலங்களாகிய திருக்கோணேச்சரத்திலும், திருக்கேதீச்சரத்திலும் மகாசிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆலயங்கள் வரலாற்றுக்கு முற்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. 

வட இந்தியாவில் குறிப்பாக, காசியில் சாதி வேறுபாடுகள் எதுவுமின்றி எல்லோரும் சிவலிங்கத்தை திரு முழுக்காட்டுவது வழக்கம் ஆனால் அதைத் தமிழ்நாட்டில் காண்பது அரிது. ஆனால் காசியில்  போலவே திருக்கேதீச்சரத்திலும் "பத்தாகிய தொண்டர் தொழும் பாலாவியின் கரைமேல் செத்தாரெலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே" என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட பாலாவித் தீர்த்தத்தின் புனித நீரை செம்புகளில் மொண்டு  அந்தச் செம்பை தலையில் சுமந்தவாறு வரும் அடியார்கள் போத்துக்கேயரால்  திருக்கேதீச்சரம் ஆலயம் இடிக்கப்பட்ட  போது புதைந்து போய், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த, இராவணனாலும், ராஜாராஜ சோழனாலும் வணங்கப்பட்ட இலிங்கமாகக் கருதப்படும் புராதன லிங்கத்தை திருமுழுக்காட்டும் வழக்கத்தைக் காணலாம்.  

 திருவையாற்றுச் சிவாலயத்தில் பார்ப்பனர்கள் மட்டும் கருவறை புகுந்து பூசை செய்யவில்லை பார்ப்பனர்கள்       மட்டும்,    கருவறை புகுந்து  
பூசை செய்யவில்லை,  தமிழர்கள்   எல்லோரும்    பூசை செய்தனர்.   என்பதை  நாவுக்கரசரின்   தேவாரம் தெளிவாகக் கூறுகிறது.

"மாதர்ப்பிறைக் கண்ணியானை   மலையான் மகளொடும்பாடிப் 
போதொடு   நீர்சுமந்   தேத்திப் புகுவாரவர்   பின்புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது
காதன் மடப்பிடியோடுங்   களிறு வருவன கண்டேன்
 கண்டேனவர்   திருப்பாதங்கண்டறியாதன   கண்டேன்.”

தமிழன் நாவுக்கரசனின்  “போதொடு   நீர்சுமந்தேத்திப் 
புகுவாரவர்   பின் புகுவேன்” 
என்ற தேவார அடிகள்,    அக்காலத்தில் 
நேரடியாக கருவறை   சென்று வழிபடும்  
வழக்கம் 
தமிழ்நாட்டிலும்   இருந்ததைக் காட்டுகிறது.  இக்காலத்தில்   கூட   தென்னிந்தியாவில், ஆந்திராவிலுள்ள    ஸ்ரீ சைலம்   கோயிலில்   பக்தர்கள்   கருவறைக்குள்   சென்று   லிங்கத்தைத் தொட்டு   வழிபடலாம்.   அது   எதைக் காட்டுகிறதென்றால்,  தமிழ்நாட்டிலும்   சாதி   வேறுபாடின்றி   அனைவரும்   கருவறை   சென்று  வழிபடும்   வழக்கம்  வழக்கில்  இருந்திருக்கிறது   ஆனால்   தமிழரல்லாத நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில், இன்று   தில்லையில்   தமிழில் பாடுவதற்கு   தமிழர்களுக்கு அனுமதி   மறுக்கும்   தீட்சிதர்களைப்   போன்றே  சில   தமிழெதிரிகளின்   சூழ்ச்சியால்  அனைவரும் கருவறை சென்று தமிழில் இறைவனை வணங்கும்  வழக்கம் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த  வழக்கம் இன்றும் வடநாட்டுக் கோயில்களில் மட்டுமல்லஇலங்கையிலும் திருக்கேதீஸ்வரத்தில் மகாசிவராத்திரி நாளில் கடைப்பிடிக்கப்  படுகிறது. 

இராவணனாலும்சோழ அரசர்களாலும் , படைத்தளபதிகளாலும், ஈழத் தமிழர்களின் முன்னோர்களாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபட்டு வந்த இலிங்கம் என்று போற்றப்படும், புராதன லிங்கத்துக்கு (அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட) , மகாசிவராத்திரி முழுவதும், சாதிவேறு பாடின்றி, நாயன்மார்களால் பாடப்பட்ட புண்ணிய தீர்த்தமாகிய பாலாவியில் நீரை மொண்டு கொண்டு வந்து நாவுக்கரசர் கூறியது போன்றே தமிழர்கள் அனைவரும் இறைவனைத் திருமுழுக்காட்டும் வழக்கம் இன்றுமுண்டு, இதைத் தான் "போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்" என்றார் நாவுக்கரசர்.

மேலதிக விவரங்களுக்கு:

திருக்கேதீச்ச‌ர‌த்தில் சிங்க‌ள‌ பெள‌த்த‌ ஆக்கிர‌மிப்பை எதிர்த்து இந்துக்க‌ள்ம‌ட்டும‌ல்ல‌ உல‌க‌த்த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் குர‌ல் கொடுக்க‌ வேண்டும். 


http://viyaasan.blogspot.ca/2013/03/blog-post_10.html


திருமுறைகண்ட சோழன் சன்னதி 
தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் ராஜ   ராஜசோழனுக்கும் சன்னதி 
அமைக்கப்பட்டு, திருமுறை கண்ட சோழனுக்கு உரிய மரியாதை 
அளிக்கப்படுவதை நான் காணவில்லை. 
ஆனால் ஈழத்தின் தேவாரப் 
பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகிய  திருக்கேதீச்சரத்தில் தமிழ்த்திரு முறைகளை தீட்சிதர்களிடமிருந்தும். கறையான்களிடமிருந்தும் மீட்ட மாமன்னன்  ராஜ ராஜ சோழனுக்கும்   நம்பியாண்டார்   நம்பிக்கும்  தனிச் சன்னதி அமைக்கப்பட்டு, நித்திய பூசைகளுடன் நினைவு கூரப்படுவதைக் காணலாம். -இலங்கை ஜனாதிபதியின் மகாசிவராத்திரி வாழ்த்து-
Spirit of Maha Shivarathri will add more strength in quest for unityz_p03-Spirit.jpg 
The Hindus of Sri Lanka, who have a long tradition of friendship and harmony with all other communities in Sri Lanka will gain more strength in their search for unity through reconciliation and understanding with the spirit of Maha Shivarathri festival, President Maithripala Sirisena issuing a message to mark the festival said.
The message: I am pleased to send this message of greetings to all Sri Lankan Hindus, as they join their fellow worshipers the world over in celebrating Maha Shivarathri.
This festival is of special significance as it is believed to be when Lord Shiva performed the Tandava or the cosmic dance of Shiva, that marks both primordial creation and preservation of the universe. The celebrations on this day are marked by fasting and night long vigils at temples, the lighting of lamps and making a special offering to Lord Shiva together with the chanting of prayers and hymns in his honour, by devotees.
The most visible aspect of this festival, the lighting of lamps, symbolises the constant efforts by humans to dispel the darkness of ignorance with the light of knowledge and understanding. It also signifies the search for unity and harmony among people that transcends all differences in society.
I wish all Sri Lankan Hindus the blessings of Maha Shivarathri to realise their hope for a better tomorrow.
- See more at: http://www.dailynews.lk/?q=local/maha-shivarathri-day-messages#sthash.kxRJojkB.dpuf

1 comment:

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்