Saturday, January 3, 2015

இந்தியர்களிடம் யாழ்ப்பாணத்தமிழ் படும் பாடு- Part 2

தமிழிலக்கியமும்  ஈழத்தமிழர்களின் பங்களிப்பும்


தமிழ் மொழிதமிழிலக்கியம், தமிழ் உரிமை, தமிழினம் என்று வரும்போது, தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் மிகவும் குறைவான ஈழத்தமிழர்கள்கடுகு சிறிதானாலும் காரம் பெரிதுஎன்பது போல் தமது எண்ணிக்கைக்கு  அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்பதை யாவரும் அறிவர், இருந்தாலும் சிலர் அந்த  உண்மையைத்   திட்டமிட்டு  மறைக்க  முயல்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக, அழிந்து போய்க் கொண்டிருந்த ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து அவற்றை அச்சு வாகனமேற்றி சங்கப்பாடல்களையும், தமிழ்க் காப்பியங்களையும் காத்த பெருமைக்குரியவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த .வே. சாமிநாதையரைக் குறிப்பிடும் தமிழ்நாட்டு ஊடகங்களோ அல்லது தமிழ்நாட்டு மக்களோ அவருக்கு முன்பே அந்தப் பணிக்கு அத்திவாரமிட்டு, அவற்றை அச்சுவாகனமேற்றி, ஓலைச்சுவடிகளிலிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைக் பாதுகாக்கும் பணியை ஆரம்பித்த யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரையும், சி. வை. தாமோதரம்பிள்ளையையும் நினைவு கூர்வதில்லை.

நான் சுவாமிநாதையரின் தமிழ்த்தொண்டைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் பார்ப்பனர்களின் கைகளில் இருந்ததால், சுவாமிநாதையருக்கு முன்பே, பழமையான ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து அச்சுவாகனத்திலேற்றி பாதுகாத்த, ஈழத்தமிழர்களாகிய ஆறுமுகநாவலரும், சி.வை தாமோதரம்பிள்ளையும் செய்த தமிழ்த்தொண்டு மறைக்கப்பட்டு, புகழனைத்தும் .வே சுவாமிநாதையருக்கு அளிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் பல எழுத்தாளர்கள் சுவாமிநாதையரைக் குறிப்பிட்டுக் கொண்டாடுமளவுக்கு, அவருக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த யாழ்ப்பாணத் தமிழர்களைக் குறிப்பிடுவதேயில்லை.

 ஓலைச்சுவடிகளில் அழிந்து போய்க் கொண்டிருந்த பழந்தமிழ் இலக்கியங்களையும், ஐம்பெருங்காப்பியங்களாகிய சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்றவற்றையும் அச்சுவாகனமேற்றும் பணியெனும், வீட்டைக் கட்டி முடித்த பெருமைக்கு  .வே. சாமிநாதையரைக் குறித்தாலும், அவருக்கு முன்பே  அந்த வீட்டுக்கு அத்திவாரமிட்டவர் யாழ்ப்பாணத் தமிழன் ஆறுமுகநாவலர், அந்த வீட்டின் சுவர்களை கட்டியெழுப்பியவர் இன்னொரு யாழ்ப்பாணத் தமிழன் சி. வை. தாமோதரம்பிள்ளை என்ற உண்மையை பெரும்பாலான தமிழ்நாட்டார்கள் அப்படியே இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். 

ஆனால் அந்த உண்மையை திரு. வி. . அவர்கள் இவ்வாறு கூறினார்.  

 Tiru Vi Ka wrote: "The credit for editing and publishing much of Sangam literature and the five great epics — Sivagachinthamani, Silappathikaram, Manimekalai, Valayaapathi and Kundalakesi — goes to U.V. Swaminatha Aiyar. In this endeavour, it has been rightly observed that Arumuga Navalar laid the foundation. Thamotharampillai raised the walls and Swaminatha Aiyar built the superstructure."

ஆனால் அந்த உண்மையை திருவிஅவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார். 
(இந்த உண்மையை பார்ப்பன ஊடகமாகிய The  Hindu கூட  ஒப்புக் கொள்கிறது).      From the first two to tomorrow's

இன்று சிலரின் 'வாதம்' என்னவென்றால் யாழ்ப்பாண அரசு நிறுவப்படும் வரை ஈழத்தில் தமிழிலக்கியங்கள் அல்லது தமிழில் நூல்கள் உருவாகவில்லை. ஆகவே ஈழத்தமிழர்கள் யாழ்ப்பாண அரசின் காலத்தில் தான் ஈழத்தில் குடியேறியிருக்கலாம் என்பதாகும். ஆனால் அவர்களில் பலருக்கு  வரலாற்றுத் தொடக்கத்தின் முன்பே, தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தெரியாதுசிலர் அதிலும் ஒருபடி மேலே போய் சிங்கள இலக்கியங்கள் இலங்கையில் வரலாற்றுக் காலம் தொட்டு இருப்பதாகவும் அதே போல் தமிழிலக்கியங்கள் இலங்கையில் இல்லை என்றும் உளறுகிறார்கள். உண்மை என்னவென்றால் சிங்களத்தில் மிகவும் பழமையானது என்று குறிப்பிடப்படும் நூல் ஒன்பதாம் நூற்றாண்டில்  தம்மபாத அத்தகதா என்ற பாளி நூலுக்கு சிங்களத்தில் அரசன் காசியப்பனால் தொகுக்கப்பட்ட  Dhampiya Atuva Getapadaya என்ற அகராதி அல்லது விளக்க நூல் ஒன்று தான். அதற்குப் பின்னர் இயற்றப்பட்ட சிங்கள நூல்கள் பல தமிழ் நூல்களின் தழுவலும், தமிழ் இலக்கிய வடிவங்களின் அமைப்பில் அமைந்தவையே. 

இலங்கையின்,  அதிலும் குறிப்பாக சிங்களவர்களின் வரலாற்றைக் கூறுவதாகக் கருதப்படும் கற்பனைகள் நிறைந்த மகாவம்சம் கூட ஆறாம் நூற்றாண்டில், அதுவும் பாளி மொழியில் தான் எழுதப்பட்டதே தவிர சிங்களத்தில் அல்ல. தமிழ் மொழி, சிங்களத்தை விட பழமையான மொழி,  அவ்வாறிருந்தும், அக்காலத்து  தமிழ் நூல்கள் மட்டுமல்ல, சிங்கள நூல்களும் கூட இலங்கையில் கிடைக்கவில்லை. இலங்கையில் பழமையான தமிழ் இலக்கியங்கள் காணப்படவில்லை, அதனால் தமிழர்கள் பிற்காலத்தில்  தான் இலங்கையில் குடியேறியிருக்க வேண்டுமென்று பிதற்றுபவர்கள், ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்திய  சிங்கள நூல்களும் இலங்கையில் காணப்படவில்லை. ஆகவே சிங்களவர்களும் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் குடியேறியிருக்கலாம் என்றும் வாதாடலாம், ஆனால் அப்படி யாரும் உளறுவதில்லை. ஆகவே இலக்கியங்களை மட்டும்  வைத்து ஒரு நாட்டின் இனமக்களின் இருப்பைக், காலத்தை, தீர்மானிக்க  முயல்வது முட்டாள் தனமென்பதை சிலர் உணர்வதில்லை போலிருக்கிறது.  
அபயகிரி வளாகத்து தமிழ்க்கல்வெட்டு 8ம் நூற்றாண்டு 
ஈழத்தில் எமது முன்னோர்கள் தமது வரலாற்றை எழுதி வைக்கவில்லை. பிரச்சனை என்னவென்றால் இக்காலத்தில் கூட தமிழர்களுக்கு வரலாற்றுணர்வு கிடையாது. அல்லது இத்தனை கோயில்களையும் கல்வெட்டுகளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அழிய விட்டிருப்பார்களா? தமிழ்நாட்டில் கூட  (ராஜ ராஜ சோழனுக்கு முன்பு) யாரும் தமிழர்களின் வரலாற்றை அப்படியே எழுதி வைத்ததாகத் தெரியவில்லை. எழுதிவைக்கப்பட்ட சில நூல்களும், காலத்தினாலும், கடல்கோள்களாலும் அழிந்து விட்டன. அதை விட தமிழரல்லாத சிலரின் திட்டமிட்ட சதியினாலும், மத அடிப்படையிலான மூட நம்பிக்கைகளினாலும் பல ஓலைச் சுவடிகள் எரிக்கப்பட்டு (சிதையில் வைத்து) விட்டன. அதே நிலை இலங்கையிலும் பழந் தமிழ் இலக்கியங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். 19ஆம் நூற்றாண்டில் யாழ்பாணத்தில் வெளிவந்த நூல்களில் பலவற்றைக் கூட அழிய விட்டு விட்டோம், அவை எமக்கு இன்று கிடைப்பதில்லை, ஆகவே பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் வெளிவந்த பழைய நூல்கள் காணப்படாமை வியப்பானதல்ல. இலங்கைத் தமிழர்களின் முன்னோர்கள் மட்டுமன்றி, சிங்களவர்களின் முன்னோர்களும் பழமையான சிங்கள நூல்களை எழுத்து வடிவில் பாதுகாக்கத் தவறி விட்டனர் என்பது தான் உண்மை. அல்லது தொடர்ச்சியான படையெடுப்புகள், தலைநகர இடமாற்றங்கள், மற்றும் குடிகளின் இடம்பெயர்தல் போன்றவற்றால் அவை அழிந்து விட்டன. 

ஈழத்தில் பத்தாம் நூற்றாண்டில் சோழர்களின் படையெடுப்பின் முன்பு தமிழர்- சிங்களவர் என்ற இனவேறுபாடு தோன்றவில்லை. அதற்கு முன்பு நடந்த யுத்தங்கள் அனைத்தும் அரச குடும்பங்களுக்கிடையேயும், பெளத்தத்துக்கும்  சைவத்துக்குமிடையேயான யுத்தமே தவிர தமிழர்சிங்களவர் யுத்தம் அல்ல.  புத்த சமயத்தின் வருகையின் பின்னரும், தமிழர்களில் பெரும்பான்மையினர் சைவ சமயிகளாக இருந்ததால் பெளத்த பிக்குகள் தமிழர்களை எதிர்த்தனரே தவிர, தமிழ்-சிங்கள இனவாதம் அக்காலத்தில் காணப்படவில்லைதமிழ்நாட்டில் சைவத்தின் எழுச்சியால்இலங்கைக்கு தப்பியோடிய தமிழ்ப் பெளத்தர்களும், தமிழ்ப்  பிக்குகளும் சிங்கள பிக்குகளை விட மோசமான வெறி பிடித்த சைவ சமய எதிர்ப்பாளர்களாக இருந்தனர். அந்தக் காரணத்தால் தமிழ்ப் பெளத்த பிக்குகளால் கூட தமிழ் ஓலைச் சுவடிகள் அழிக்கப்பட்டிருக்கலாம். பெளத்த விகாரைகளில் இருந்த பாளி ஓலைச்சுவடிகள் சிலவற்றைத் தவிர ஏனைய ஓலைச்சுவடிகள் (சிங்களம் உட்பட) அழிந்து விட்டன.

 அதே வேளையில் பெரும்பாலான இலங்கை மன்னர்கள் பெளத்தர்களாக இருந்ததும், தமிழ் அரசர்கள் கூட பெரும்பான்மை மக்கள் புத்தசமயத்தைக் சேர்ந்தவர்களாகவும், புத்த பிக்குகளின் ஆதரவின்றி ஆட்சி நடத்த முடியாதென்பதை உணர்ந்ததாலும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரியளவு ஆதரவு கிடைத்திருக்குமென்று கூற முடியாது. சிங்களவர்களுக்கு  விகாரை சார்ந்த, மதத்தையும்,  மொழியையும் வளர்க்கும்பிரிவேனாக்கள்காணப்பட்டது போன்றுகோயில் சார்ந்த (Temple based system of Education) கல்வி அல்லது மொழி வளர்க்கும் ஆதரவுக் கட்டமைப்பு ஈழத்தமிழர்களின்  அக்கால சமூகக் கட்டமைப்பில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதனால் தான் தமிழ் நாட்டைத் தமிழரல்லாதோர் ஆண்ட காலங்களில் கூட தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆதீனங்கள்  மூலமாக தமிழ் இலக்கியங்கள் (குறைந்த பட்சம் பக்தி இலக்கியங்களாவது)  அழியாமல், வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆனால் இலங்கைத் தமிழ்ப் புலவர்களுக்கும், இலக்கியங்களுக்கும் யாழ்ப்பாண அரசு நிறுவப்படும் வரை அத்தகைய ஆதரவு இருக்கவில்லை.  யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னர்  தமிழ் நூல்கள் அதிகளவில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்தமைக்கு அது தான் முக்கிய காரணமாகும். 

தொடரும்.. 

2 comments:

THEVESH M said...

Most of the so called educaters in
Tamil Nadu do not know the history
of their own country.Commen sense
approch is nill in India and specialy in Tamil Nadu. As such how
could you expect that they know the
history of Jaffna Tamils.They are all frog in the well.

viyasan said...

@THEVESH M

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் எங்களின் வரலாற்று உண்மைகளை நாங்கள் எடுத்துரைக்காது விட்டால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழரல்லாதோரும், சிலரின் ஈழத்தமிழர்களுக்கெதிரான விசமத்தனமான பொய்ப்பிரச்சாரங்கள் தான் உண்மை என்று நம்பி விடுவார்கள். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.