Monday, January 5, 2015

நாய்க்கேன் போர்த்தேங்காயை?

இந்தியர்களிடம் யாழ்ப்பாணத்தமிழ் படும் பாடு! - Part 3


போர்த்தேங்காய் என்றால் என்னவென்று நாய்க்குத் தெரியாது, ஏனென்றால் நாய்க்கும், போர்த்தேங்காய்க்கும் எந்த தொடர்புமே கிடையாது, ஆனால் எதைக்கண்டாலும் கடித்துப் பார்ப்பது போலவே போர்த்தேங்காயையும் எடுத்து அங்கேயும், இங்கேயும் உருட்டிக் கடித்துப் புரளுமாம் நாய், அதாவது தனக்குத் தெரியாத, தேவையில்லாத, தனக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாதவற்றில் மூக்கை நுழைக்கும் செயலை, ஈழத்தில் நாய்க்கேன் போர்த்தேங்காயை என்ற பழமொழியால் குறிப்பார்கள்.  
நாகதீபம் என்ற வலைப்பதிவில் ஈழத்தமிழர்களைப் பற்றியும், யாழ்ப்பாணத்தமிழைப் பற்றியும் சம்பந்தமில்லாமல், தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கும்சேட்டன்நிரஞ்சன் தம்பியைப் பார்த்தவுடன்,  நாய்க்கேன் போர்த்தேங்காய் என்ற ஈழத்துப் பழமொழி தான் எனக்கு நினைவுக்கு வருகிறது
இலங்கையைப் பற்றியும் தெரியாது, ஈழத்தமிழர்களைப் பற்றியும் எதுவும் தெரியாது, அதை விட தான் வலைப்பதிவில் எழுதும் விடயத்தைப் பற்றிக் கூடச் சரியாக அறியாமல், மூக்கை நுழைத்தது போதாதென்று,  சம்பந்தமில்லாமல் உளறிக் கொண்டிருக்கும் சேட்டன்,  திடீரென்று தன்னை ஒரு யாழ்ப்பாணத்தமிழன் என்று கூறி யாழ்ப்பாணத் தமிழர்களையே ஏமாற்றலாம் என்ற நினைவில், அதாவது யாழ்ப்பாணத்துப் பனங்கொட்டைகளுக்கே, யாழ்ப்பாணத் தமிழ் கதைச்சுக் காட்டுறாராம், அந்த அலங்கோலத்தை இஞ்ச ஒருக்கா பாருங்கோ. :-)
"தமிழ்நாட்டு தமிழாட்களிட்ட இருந்து கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், சிந்தனய்கள் எல்லாம் நமக்கு வேறமாதிரித் தான் நிக்குது. நம்மர தனித்துவ அம்சங்களய் உலகுக்கு உரக்கச் சொல்லேண்டியது நம்மட கடம. இனி வரப்போற தலமுறகளாவது எம்மிட பாஸேல எழுதியும், பதிப்பிக்கவும் துவங்க வேண்டும்."

சேட்டன் நிரஞ்சன் தம்பியின், யாழ்ப்பாணத் தமிழைப் பார்த்து வெகுண்டு போன ஈழத்தமிழர் பரராஜசிங்கம் பாலகுமார் அவர்கள்:
தாங்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்எனக் குறிப்பிட்டிருந்தீர்கள்..... ஆனால் உங்களுக்கும் யாழுக்கும் எந்த தொடர்புமில்லை எனப் புலனாகிறது"  

என்று கூறி, அவரது யாழ்ப்பாணத் தமிழை அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்துப் போட்டதும், அவரது (கீழேயுள்ள) பின்னூட்டத்தை தனது வலைப்பதிவிலிருந்து அகற்றி விட்டார். ஆனால் நான் அதற்கு முன்பே Print Screen எடுத்துக் கொண்டேன்.

சேட்டன் சொல்வதெல்லாம் வெறும் பொய். அவர் ஈழத்தமிழரல்ல. ஆனால் வெவ்வேறு பெயர்களில் ஈழத்தமிழர்களுக்கெதிராக வலைப்பதிவுகளில் எழுதி ஈழத்தமிழர்களிடம் பலமுறை மூக்குடைபட்டதால், ஈழத்தமிழர்களுக்கெதிராக காழ்ப்புணர்வு மட்டும் தான் அவரிடமுண்டு. உண்மையில் இதற்கு முன்னர் என்னுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஈழத்தமிழர்களை மிகவும் கெட்ட வார்த்தைகளால் திட்டி,  தான் ஒரு இந்தியன் எனக் கூறியதுடன், இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளைக் கூட வாய்க்கு வந்தபடி திட்டியவர் அவர்
உண்மையில் இவர் தமிழன் கூட அல்ல, தான் ஒரு மலையாளி எனவும், அவரது குடும்பம் முப்பாட்டன் காலத்தில் கேரளத்து 'ஆலுவா' விலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள  *அல்வாய் என்ற ஊருக்குக் குடியேறியவர்கள் என்றார்.
பின்னர் அவரது தந்தையார் சென்னைக்குக் குடியேறினாராம். அரை நூற்றாண்டுக்கு மேல் சென்னையில் வாழ்கின்றனர் என்று என்னிடம் கூறினார்.
1.      இலங்கைக்கு பஞ்சம் பிழைக்கப் போய் சுதந்திரத்துக்குப் பின்னர் நாடு கடத்தப்பட்ட மலையாளிகள் எவருமே ஈழத் தமிழர்களும் அல்ல, தமிழர்களும் அல்ல.
2.      சகோ. பரராஜசிங்கம் பாலகுமாருக்குக் கூறியது போல் இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்திருந்தால், அத்துடன் 50 வருடங்கள் சென்னையிலும் வாழ்வதாக இருந்தால், சேட்டன், மிகவும்  வயதானவர் போல் தெரிகிறது. ஆனால் அந்த முதிர்ச்சியை அவரது எழுத்தில் காணமுடிவதில்லை. சும்மா குழந்தைப்பிள்ளைத் தனமாக உளறித் தள்ளுகிறார். அதற்கிடையில் யாராவது இளம் நடிகர்களின் படத்தையும் தனது Profile Picture ஆகப் போட்டுக்கொள்கிறார் என்பது தான் வேடிக்கை.
3.      இந்தியக் குடியுரிமையற்ற இலங்கைத் தமிழர்கள் அப்படி இலகுவாக இந்தியாவில் குடியேறி ஐம்பதாண்டுகளுக்கு மேல் வாழ இந்திய அரசு அனுமதிக்காது. அதை விட, இலங்கைக் குடியுரிமை இருந்தால், அதை விட்டு, யார் தான் இந்தியாவில் குடியேறுவார்கள், அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன்பு. (இலங்கையிலிருந்து Deport பண்ணப்பட்ட மலையாளிகளில் ஒருவராக இருக்கலாம்).
திருச்சீரலைவாய்
(*யாழ்ப்பாணத்தில் அல்வாய் என்ற ஊரின் பெயரை இலங்கையின் வரைபடத்தில் பார்த்து விட்டு, அல்வாய்க்கும், கேரளத்து ஆலுவாவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை பண்ணிக் கொண்டார். ஆனால் உண்மையில் அல்வாய் என்ற பெயர், தமிழ்நாட்டில் திருச்செந்தூருக்கு, அலையின் வாயில்(கரையில்) இருப்பதால் திருச்சீரலைவாய் என்று பழந்தமிழர்கள் பெயரிட்டது போல், யாழ்ப்பாணத்திலுள்ள அல்வாய் என்ற ஊரும், அலைவாய் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அல்வாய் என்று மருவியது என்பது சேட்டனுக்குத் தெரியவில்லை. )

கேள்வி என்னவென்றால், இந்தச் சேட்டன், இப்படி ஆளுக்காள் வெவ்வேறு பொய்களைச் சொல்லிக் கொண்டு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக எழுத வேண்டிய தேவை என்ன என்பது தான். அதைத் தமிழர்கள் அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமென்பது தான் நான் இவருக்குப் பதிலெழுதுவதன் நோக்கமாகும்.  எனக்கும் மலையாளிகளுக்கும் எந்தக் கோபதாபமும் கிடையாது. ஆனால் இணையத்தளங்களில் பல மலையாளிகள் ஈழத்தமிழர்களுக்கெதிராக இயங்குகிறார்கள். அவர்களை எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமையாகும்.


அடுத்ததாக அவரது லேட்டஸ்ட் உளறலைப் பார்ப்போம்.
முதலில்,  கல்வெட்டில்கிடக்கிறதை மட்டும் வச்சு யாரும் பாசை அங்கே உருவானதென்று கூறவில்லை. தமிழ் எங்கே உருவானது என்பதல்ல இங்குள்ள வாதம். ஈழத்துத் தமிழும்தமிழ்நாட்டுத் தமிழும் ஒரே தமிழா என்பது தான் இங்குள்ள வாதம். தன்னுடைய வாதத்துக்கு எதிராகவே வாதம் செய்கிறார் சேட்டன். நான் கூறுவதென்னவென்றால் பேச்சு வழக்கு வேறுபட்டாலும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தான் ஈழத்திலுமுண்டு. ஈழத்தமிழர்கள் எல்லோருமே தமிழ்நாட்டிலிருந்து குடியேறவில்லை. ஒரே காலகட்டத்தில்பாக்கு நீரிணையின் இரு கரையிலும்ஒரே மொழி கலாச்சாரத்துடன் ( parallel features)தொடர்ச்சியாக தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான். (உதாரணம்: திராவிடர்களாகிய நாகர்கள் இலங்கையிலும்தமிழ்நாட்டிலும், பாக்குநீரிணையின் இருபக்கமும்   வாழ்ந்தனர்)
எந்தக் காலத்தில் பிராகிருதம் இலங்கையின் பொதுமொழியாக இருந்தது என்பதற்கு சேட்டன் ஆதாரம் தருவாரா. சும்மா உளறுவதே வேலையாகப் போய்விட்டது. பாளி ஒரு போதுமே இலங்கையின் பொது மொழியாக இருக்கவில்லை. இந்தியாவிலும்இலங்கையிலும் பெளத்த நூல்கள் மட்டும் தான் பாளியில் இருந்தன. இலங்கையின் வரலாறு தொடக்கம் வாழும் தமிழர்கள் ஒரு போதும் பாளி மொழியைப் பேசவுமில்லைஅதில் எழுதவுமில்லை. இனிமேலாவது இலங்கையின் வரலாற்றை நன்கு கற்று விட்டு சேட்டன் உளறுவார் என நம்புவோம்.
இலங்கையின் பூர்வீக குடிகளாகிய இயக்கரும்நாகரும் பேசிய எலு மொழியைப் பற்றி எதுவுமே தெரியாத சேட்டன் என்னடாவென்றால், பாளிமகதிமகாராத்திதமிழ்கலிங்கம் கலந்த கலப்பு மொழியே எலு மொழி என உளறுகிறார். எலுவுக்கும் தமிழுக்கும் தான் தொடர்புண்டே தவிர, “பாளிமகதிமகாராத்திகலிங்கம் எதற்கும் தொடர்பு கிடையாது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆபிரிக்க டச்சுக் குடியேறிகளின் பேச்சுமொழியுடன் பல ஆபிரிக்க மொழிச் சொற்கள் கலந்து உருவாகிய ஆப்பிரிக்கான் (Afrikaans) மொழியை தமிழ்நாட்டுத் தமிழை விடத் தூய்மையான தமிழ் என்று அறிஞர்களால் கருதப்படும் ஈழத்தமிழை, ஒப்பிடும் முட்டாள் பயலுக்கு நான் பதிலெழுதுவதன் காரணம் சும்மா பொழுது போக்குக்காகத் தான்.

ஆபிரிக்கான் மொழிக்கும் அதன் தாய் மொழியாகிய டச்சு மொழிக்கும் பேச்சு வழக்கில்  மட்டுமன்றி,எழுத்து வழக்கிலும்உச்சரிப்புஇலக்கணம்சொற்கள் என எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. ஆனால் தமிழ்எந்த நாட்டில் எழுதப்பட்டாலும் எழுத்து வடிவத்திலும், எழுத்து வழக்கிலும் 
இலக்கணத்திலும்  கூட  வேறுபாடு கிடையாது என்பதைக் கூடப் புரிந்து 
கொள்ள முடியாதவர்களால் மட்டும் தான் அவ்வாறு உளற முடியும்.

"The Tamil spoken by Sri Lanka Tamils is a distinct regional dialect of mainland Tamil, but the two are mutually intelligible. Taught in the schools is standard literary Tamil. Sri Lanka Tamils know that their language is DIRECTLY DESCENDED from the CLASSICAL TAMIL of more than 2,000 years ago and proudly lay claim to a distinguished tradition of achievement in literature, poetry, and philosophy. "   - Professor Brian Pfaffenberger, University of Virginia, Charlottesville, USA- 

இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் கொச்சைத் தமிழும்சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளம் என்னும்  தமிழ் நடைநம்பூதிரிப் பார்ப்பனர்களின் சதியால், தமிழிலிருந்து மாறுபட்ட எழுத்து வடிவத்தை எடுத்துக் கொண்டு,  மலையாளம் என்ற பெயரில் வேறு இனமொழி அடையாளத்தை அமைத்துக் கொண்டது போல்ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும்  பிரிந்து 
கொள்ள வேண்டுமென்ற நப்பாசை, அல்லது தமிழைச் சரியாகப் புரிந்து கொள்ளாதமுட்டாள் தனமான ஒப்பீடலும் தான் என நினைக்கிறேன்.

மலையாளத்துக்கும் தமிழுக்குமுள்ள வேறுபாடு கூட ஈழத்தமிழுக்கும்தமிழ்நாட்டுத் தமிழுக்கும் கிடையாதுஏனென்றால் ஈழத்தமிழர்களின் தமிழ், அதிகளவில் கலப்பற்ற,  தூய்மையான தமிழ். ஆகவே தமிழுக்கும் தமிழர்களுக்கும் வேறொரு மொழி அடையாளம் தேவையில்லை. தமிழே போதுமானது.   

2 comments:

Pararajasingham Balakumar said...

தம்பியனின் உளறலகள் தொடர்கதையாகி வருகிறது . எனது பின்னூட்டங்களை நீக்கியது மட்டுமல்ல இப்போதுள்ள பதிவுகளில் பின்னூட்டமே இட முடியாதபடி செய்துள்ளார்.கருத்து பாசிச வாதியின் ஆக்கங்களை தமிழ் மணம் எவ்வாறு அனுமதிக்கிறதென்பதுதான் புரியவில்லை.
மேலும் யாழ் தமிழில் உரையாடல்களை அமைத்தது எமக்கு நல்ல நகைச்சுவை விருந்தாகிறது .யாழில் உள்ள பேச்சு வழக்கில் நமது ,நமக்கு போன்ற சொற்கள் இடம்பெறுவதில்லை அதற்கு பதிலாக எங்கள் , எங்களுக்கு , எஙகட போன்ற சொற்களே இடம்பெறுகின்றன . இது தெரியாத போலி யாழ்ப்பாணி தம்பியன் தனது இஷ்டத்திற்கு அடித்து விட்டுள்ளார்.

நாம் ஈழத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த போலியை யும் அதன் பின்னால் உள்ள கபடநோக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டிலுள்ளவர்கள் இந்த போலியின் பசப்புகளுக்கு எடுபட வாய்ப்பிருக்கிறது . அவரும் ஈழத்த்லுள்ளவர்களுக்காக இந்த பதிவுகளை இடவில்லை . தமிழக மக்களை குறி வைத்துதான் இந்த பதிவுகளை இடுகிறார். ஈழத்திலுள்ள மக்கள் வேற்றின மக்கள் அவர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் கலை கலாசாரத்தில் வேறுபாடுண்டு என கூறுவதன் மூலம் ஈழத்தமிழ்கர்களுக்காக தமிழ்நாட்டில் எழும் போராட்டங்களை தடுக்கலாம் என கனவு காண்கிறார் .
குறிப்பாக தற்போது தமிழ்நாட்டில் , திராவிட அரசியலை தவிர்த்து தனித்தமிழ் அரசியல் முன்னெடுக்கபட வேண்டுமென் கிற வாதம் வலுத்து வரும் வேளையில் இந்த மாதிரி ஆக்கங்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது...

'நெல்லைத் தமிழன் said...

ஒரு வருடத்துக்குப் பின்பு படிக்கிறேன். தூய தமிழ் பேசுபவர்கள் (அனேகமாக தற்போதுவரை) யாழ்தமிழர்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். பாக் நீரிணை என்பதைத் தமிழில் சொல்லி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. படித்ததும் இல்லை. பாக் ஜல சந்தி என்றுதான் படித்திருக்கிறேன். கடவுச்சீட்டு போன்று ஆங்கிலம் கலக்காத தமிழ், தமிழ்னாட்டில் நான் கேட்டதில்லை. அதுவும்தவிர, நெல்லைக்காரன் பேசும் தமிழ் (பாபனாசம் படத்தில் வந்ததுபோல்) சென்னைக்காரனுக்குத் தெரியாது. சென்னைத் தமிழ் திருனெவேலிக்காரனுக்கு புரியவே புரியாது. காரணம் வட்டார வழக்கு.