Sunday, January 4, 2015

மலையாள மணிகண்டனும் தமிழர்களின் ஐயனாரும் ஒன்றல்ல - அனுராதபுரத்தில் தமிழர் கடவுள் ஐயனாரின் பழமையான சிலை!


One of the Earliest Depictions of  Aiyanar, AnuradhapuramSri Lanka. 
ஐயனார்  தமிழர்களின் கடவுள். ஆரம்ப கால பிராமண புராணங்கள் எதிலுமே ஐயனார் என்ற தெய்வமோ அல்லது வழிபாடோ கிடையாது. பார்ப்பன வைதீக கடவுள் கூட்டத்தில் (Hindu Puranic pantheon) ஐயனார் ஒருபோதும்  இருந்ததில்லை. இக்காலத்தில், முன்னாள்  சேரநாட்டார்களாகிய மலையாளிகளும் ஐயனாருக்கு சொந்தம் கொண்டாடினாலும் கூட ஐயனார் தமிழர்களின், தமிழ் மண்ணின் கடவுளே தவிர ஐயனாருக்கும் தமிழரல்லாதோருக்கும், அவர்களின் புராணக் கதைகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பது தான் உண்மை.

ஐயனும், அம்மனும் திராவிடர்களின் குறிப்பாக ஈழத்தமிழர்களினதும், தமிழ்நாட்டுத் தமிழர்களினதும் தெய்வங்கள்ஐயன் என்ற சொல்லுக்கு தமிழில் மரியாதையைக் குறிக்கும் 'அர்'  என்ற விகுதி இணைக்கப்பட்டு ஐயனார்  ஆகியது. ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் ஐயனார் கிராமங்களின் காவல் தெய்வமாக தொன்று தொட்டு விளங்கி வருகிறார். இன்றும் தமிழ்நாட்டுக் கிராமங்கள் எல்லாம் குதிரை மேலமர்ந்த ஐயனார் கிராமங்களின் காவல் தேவதையாக திகழ்வதுடன், காட்டுக்கு வேட்டையாடப் போகிறவர்கள், பாதுகாப்புடன் திரும்பி வருவதற்கும், ஆறுகளினூடாக பயணம் செய்யு முன்பும், மகப்பேற்றுக்கு முன்பும் வணங்கப்படும் தெய்வமாக இன்றும் விளங்கி வருகிறார்

ஈழத்தில் ஆறுமுகநாவலர் போன்ற ஆகம வாதிகளால் ஈழத்தமிழர்களின் மத்தியில் பாரம்பரியமாக, பரவலாகக் காணப்பட்ட கண்ணகி வழிபாட்டிலும், ஐயனார் வழிபாட்டிலும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், மீண்டும் ஐயனார் வழிபாடு, குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் தழைத்தோங்கி வருகிறது


ழந்தமிழர்களின் ஐயனார் வழிபாடு மீண்டும் தமிழர் மத்தியில் எழுச்சி பெறுவது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றாலும், தமிழுக்குப் பதிலாக கூடுதலாக மலையாள வாடையும், அத்துடன் பார்ப்பன வாடையும் கலந்து வீசுவதும் கவலைக்குரிய விடயமே.  ஈழத்தமிழ் ஐயப்பன் பக்தர்கள், ஐயப்பன் வழிபாட்டைத் தமிழாக்க வேண்டுமே தவிர, தமிழரின் வழிபாட்டில் மலையாள மேளம், கண்டவர்களின் காலிலும் விழுந்து எழுவது, காலைத் தொட்டுக் கும்பிடுவது போன்ற  மலையாளக் கலாச்சார பழக்க வழக்கங்களை ஈழத்தமிழர் மத்தியில் புகுத்தக் கூடாது. 

இலங்கையின் இரண்டாயிரமாண்டுகளுக்கு முந்திய தலைநகரமாகிய அனுராதபுரத்தில் காணப்படும் ஐயனார், மிகவும் பழமையான  ஐயனார் சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறதுஇலங்கையின் வரலாற்றிலேயே அதிக ஆண்டுகள் இலங்கையை ஆண்ட அரசன் எல்லாளன் காலத்திலேயே தமிழர்கள் அனுராதபுரத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழரசன் எல்லாளனுக்கும் பெளத்தத்தைத் தழுவிய நாக அரச குமாரன் துட்டகைமுனுவுக்கும் நடைபெற்ற யுத்தத்தில், கைமுனுவின் படைகள் எல்லாளனின் மாளிகையை அடையுமுன்பு, அனுராதபுரத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த முப்பத்திரண்டு தமிழ்ச் சிற்றரசர்களுடன் போரிட வேண்டிய நிலை துட்ட கைமுனுவின் படைகளுக்கு ஏற்பட்டது   என்கிறது  சிங்களவர்களின்  மகாவம்சம். இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பே அனுராதபுரத்தில் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்தனர் என்பதற்கு அது நல்லதொரு ஆதாரமாகும். 
அதே அனுராதபுரத்தில் தமிழர்களால் முனீசுரம் என அழைக்கப்பட்ட குகைக் கோயில், பெளத்தத்தின் வருகையின் பின்னர், புத்த கோயிலாக மாற்றப்பட்டு, பிக்குகளின்   தங்குமிடமாக்கப்பட்டு,  சிங்களத்தில் இன்று  ஈசுருமுனிய  (முனி ஈசுரம்) - Isuru Muniya  என்றழைக்கப்படுகிறது. அந்தக் குகைக் கோயிலிலேயே தமிழர்களின் கடவுளாகிய ஐயனாரின் மிகவும் பழமையான வடிவங்களில் ஒன்றின் சிலை இன்றும் காணப்படுகிறது

இதுவும் இரண்டாயிரமாண்டுகளுக்கு  முன்பே  அனுராதபுரத்தில் தமிழர்களின் ஆளுமைக்கு ஆதாரமாகத் திகழ்கின்றது. இன்று தமிழர்களை வெறுக்கும் சிங்கள பெளத்தர்களாக மாறி விட்ட முன்னாள் தமிழர்களால் தமிழை மறந்தாலும் அய்யனாரை மறக்க முடியவில்லை, ஆகவே ஐயனாரை, அய்யநாயக்க என்ற பெயரில், அனுராதபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்றும் கிராமதேவதையாக வணங்கி வருகின்றனர்
சாஸ்தா என்பது சாக்கியமுனி புத்தரைக் குறிக்கிறது என்பதும் பெளத்தர்களின் நம்பிக்கை. ஐயப்ப பக்தர்களின் சுவாமியே சரணம், சரணம் ஐயப்பா போன்ற சரணங்களுக்கும் பெளத்தமதத்தின் அடிப்படையாகிய "புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி", என்பதிலிருந்தே உருவாகியது என்ற கருத்துமுண்டு. தமிழர்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் பெளத்தர்களாக இருந்தனர் ஆகவே புத்தர் ஐயனாராக மாறினாரா அல்லது ஐயனார்  புத்தராக மாறி மீண்டும், தமிழர்கள் மத்தியில் புத்தமதத்தின் வீழ்ச்சியின் பின்னர் ஐயப்பனாக உருமாறினாரா என்பது விவாதத்துக்குரியது. கேரளாவிலுள்ள சில ஐயப்பன் கோயில்களின் ஐயனாரின் சிலை புத்தரின் சிலை போலவேயுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கேரளாவிலும் வாழும் மக்களால், அங்கே பதினாறாம் நூற்றாண்டளவில்  வாழ்ந்த மணிகண்டன் என்ற வீரன் அல்லது முன்னோர்களில் ஒருவரின் வழிபாடாகிய சபரிமலை ஐயப்பன் வழிபாடு   தமிழர்களின் பாரம்பரிய ஐயனார் வழிபாட்டுடன் இணைக்கப்பட்டு தமிழர்களின் ஐயனாரும், மலையாளிகளின் (மணிகண்டன்) ஐயப்பனும் ஒன்றாக்கப்பட்டு விட்டனர் என்ற கருத்துமுண்டு. ஈழத்தில் ஐயனார் மணமுடித்தவர் ஆனால் சபரிமலை ஐயப்பனுக்கு பெண்கள் என்றாலே ஆகாது. சபரிமலை ஐயப்பன் வழிபாடு ஈழத்தமிழர் மத்தியில் பரவிய பின்னர் தான், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் சிலர், வட இந்தியர்கள் போல குனிந்து பார்ப்பனர்களின் கால்களைக் கூடத் தொட்டு வணங்கும் அருவருப்பான வழக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும் இங்கே  குறிப்பிடாமலிருக்க என்னால் முடியவில்லை. 
கிழவியுருவில் கண்ணகி, வற்றாப்பளை

கண்ணகி மதுரையை எரித்த பின்னர் தமிழ்நாட்டில் வாழ விரும்பாமல், முதுமையில் (கிழவியுருவில்) ஈழத்துக்கு வந்து வாழ்ந்ததாக (இன்றும் தெய்வமாக வாழ்வதாக) ஈழத்தமிழர்கள் நம்புவதால், இன்றும் வருடா வருடம் கண்ணகியின் கோபத்தைத் தணிக்க திருக்குளிர்த்தி விழா நடத்துவது போன்றே, ஐயனார்  ஈழத்துக்கு வந்ததாக செவிவழிக் கதையுமுண்டு

'அய்' என்ற சங்கத் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து :
அய்யன், அய்யை > அய்யர்> அய்யனார் > ஐயனார் 
சங்கத் தமிழில் அய் என்பது மூத்தவர் (elder) என்பதைக் குறிக்கும், அந்தக் கருத்தில் அய் என்பது  தலைவர், பெரியவர், நாயகன், மூத்த சகோதரன், அரசன் என்ற கருத்தும் படும் பரிபாடலில் அய் என்பது திருமாலையும் குறிக்கிறது. ஆனால் சங்கத் தமிழில் அய்யன் என்பது மூத்த சகோதரனையே குறித்தது, பன்மையில் அய்யர் அல்லது ஐயர் மூத்த சகோதரர்களை (அகநானூறு, நற்றிணை)  குறித்தது ஆனால் கலித்தொகையில் ஐயன் என்பது முருகனைக் குறித்தது சிங்களவர்கள் இன்றும் மூத்த சகோதரனை அய்யா என்றழைப்பது குறிப்பிடத் தக்கதுஅய் என்ற சங்கத் தமிழ்ச் சொல்லில் உருவாகிய ஐயர் என்ற சொல் முனிவர்களையும், சந்நியாசிகளையும் குறிக்கப் பயன்பட்டதேயல்லாமல் பிராமணர்களை அல்ல. சங்கத்தமிழில் அய்யன் என்ற சொல்லின் பெண்பாலாகிய அய்யை அல்லது ஐயை உயர்குலப் பெண்களைக் குறித்தது.

In the common Tamil usage today, the words Aiyan and Aiyanaar stand for a deity who is the guardian of villages in the Tamil tradition.
The deity originally didn't belong to the Brahmanic pantheon. 
The concept of the deity as well as the meaning of the terminology went through an interesting metamorphosis over the centuries.
'Ai' is the root-word, found in the Changkam diction, from which words such as Aiyan, Aiyai, Aiyar and Aiyanaar derived.
 
'Ai' is a vowel in the Tamil alphabet (actually a diphthong: combination of two vowels 'a' as in uncle and 'i' as in ink) and is also a word. The relevant primary meaning for the word Ai in the Changkam diction is 'elder'. In this sense, the word stood for chief, leader, hero, father, elder brother and husband in the early layers of Changkam literature. In a late literature such as Paripaadal it also stood for Thirumaal or Vishnu. 
The word Aiyan in the Changkam diction specifically stood for elder brother and Aiyar as a plural word meant elder brothers (Akanaanoo'ru, Natti'nai) as well as hermits or sages (Ku'rignchippaaddu, Pathittuppaththu). However, in  Kaliththokai, which belongs to the late layers of Changkam literature, Aiyan meant god Murukan. 
The word Aiyar, which is a derivate from Ai, didn't mean Brahmins in the Changkam diction. It meant sages, hermits and celestial sages, but these shades of meaning too are found only in the late literature. Explaining the word found in Tholkaappiyam   Poru'lathikaaram, its commentator Pearaasiriyar gives the meaning 'sages' and differentiates the word fromAntha'nar (Brahmins).
Aiyai, the feminine form of Aiyan, meant a lady of reputation in the early Changkam diction (Akanaanoo'ru). It stood for a lady of leadership, goddessKaa'li and was a personal name of a daughter in the later literature (Chilappathikaaram). Equating the word Aiyan with the guardian deity of villages, whose temple is normally at the outskirts of a village, is found only in the early Tamil lexicons, dating from 8th century CE.
The lexicons Thivaakaram, Pingkalam and Choodaama'ni, equate Aiyan with elder brother, teacher, father and the guardian deity who was also known asChaaththan, Chaatha-vaakanan or Kaari; equate Aiyar with sages and Brahmins and Aiyai with Kaa'li, presiding woman and daughter. The word Chaaththan for the guardian deity Aiyan is also equated withArukan, the supreme God of the Jainas and with Buddha in the lexicons.
The origins of this guardian deity of Tamil tradition, whose cult has become popular especially at the folk level, are shrouded in mystery. The concept and iconographic representations of this deity are not found anywhere beyond the ancient Tamil country and Sri Lanka. There is no mention about this deity in the early Brahmanical literature.
 The earliest reference to the concept of the deity, under the namePu'rampa'naiyaan, comes fromChilappathikaaram. Pu'rampa'naiyaan(Purampu-a'naiyaan) means one who is at the outskirts. The temple of this deity is mentioned as Pu'rampa'naiyaan Koaddamin Chilappathikaaram. Adiyaarkku Nallaar, the commentator of Chilappathikaaram, equates the deity with Chaatha-vaakanan(one who rides an elephant). 
We have already seen that Chaatha-vaakanan is a synonym of Aiyan in the lexicons. Elephant and horse are associated with this deity (lexicons) Iconographic representations of the deity appear from Pallava times, after c. 7th century CE. The context is usually associated with the representations ofKaa'li. Note the Tamil terms Aiyan (chief) / Aiyai (presiding lady) and Kaari (the drak god) / Kaa'li (the dark goddess).
There is a strong possibility that the apsidal shrine close to the Kaa'li shrine at Maamallapuram (of the five monolithic rathas), showing an elephant rider at the back of the sanctum and with a monolithic elephant adjacent to it, was dedicated to Aiyanaar.
It later became a universal practice in the villages of the Tamil country to have shrines side by side, but facing different directions, for both Aiyanaar and Kaa'li at the outskirts. The former is the guardian of the village and the other is the guardian of the forest (Kaadu-kizhaa'l). The shrines mark the place where village and forest overlap. 
When Vaithilingkach-cheddiyaar designed the native town of Jaffna (the present shopping area, Koddadi and Va'n'naar-pa'n'nai of the city) during Dutch times, he built two temples for Aiyanaar andKaa'li at the  outskirts, beyond which were paddy fields and the cremation ground (Koampayyan Mayaanam). The locality, which still marks the boundary of the city, is called Aiyanaar Koayiladi. 
It is not difficult to deduce that the concept of the deity Aiyanaar, in the Tamil tradition originated with the rise of village life and with the need of the function of protection. The origins may go back to Neolithic and Megalithic times when villages first appeared.
Scholars like Asko Parpola, harping on the similarity of the words Aarya and Aiyan, tried to project the deity as one that had come with the first wave of Aryan migration into the Tamil country (Arguments for an Aryan Origin of the South Indian Megaliths, 1973).
 
But, as we have seen it earlier, the etymology is clearly from Ai, and there is no early linguistic authority attesting a link between Aarya and Aiyan or even Aiyar.
The fascinating aspect in the study of the concept of this deity is that it remained at the folk level for a very long time, resisted assimilation with any of the pantheon of the major religions, but had the capacity to syncretize the major deities into it. Even though easily changeable, it retained its identity.
By the various terms associated with the deity, one could see that beginning with hero or ancestor hero cult of pre and protohistoric times, it had already absorbed the Jaina God and Budhha by the time it emerged with iconography and the institution of temple. 
How to accommodate the deity into Brahmanic pantheon was a challenge to Brahmanism and to the Sanskritized traditions of the Tamil country. It was done in an interesting way as attested by the following myth found in Kantha Puraa'nam. The myth is not found beyond Tamil-Malayalam region.  
Aiyanaar was the son of Siva and Vish'nu. He was born not through copulation, but from the sperm of Siva when Siva became desirous of Vish'nu who took a female form at the time of the churning of the ocean to get nector. Aiyanaar remained obscure, but he was the only god who could able to give asylum and protection to Indrani, the queen of the Devas when all were threatened by the Asura king, Soorapadma. Note the structure, functions and persona of the myth.
The Sanskritized Aiyanaar is also known as Harihara Putra (the son of Vishnu and Siva) and is shown with two   consorts  Poora'nai and   Pushkalai in iconography. He holds either an elephant goad (Ankusam) or horsewhip (Che'ndu) in his hand.
 
The term Aiyan and the original concept of Aiyanaar as seen through the Changkam traditions, found their way into Sri Lanka probably with the Megalithic culture and got absorbed into the Sinhala traditions.
The sculpture of a seated man, shown along with the face of a horse in the background and overlooking the tank found at Isuramuniya, which was the outskirts of the ancient Anuradhapura city, is in all probability one of the earliest iconographic representations of Aiyanaar found in Sri Lanka as well as in South India.
Ayiyanaayaka or Ayyanayaka, as he is known in the Sinhala folk tradition, the deity is the protector from evil and is the guardian of the village tank and its bund. He is a popular folk deity in the dry zone Sri Lanka, which abounds with tanks. He is propitiated before and after cultivation.
Aiyanaar is a popular deity in the mainstream as well as a folk religion of Sri Lankan Tamils. There are a large number of Aiyanaar temples and folk shrines in the North and East of Sri Lanka. Many of the temples originated in the times of the kings of Jaffna or earlier. There are at least written records for the construction of two of them by the kings of Jaffna (Viyaavil Aiyaanaar, Kaarainakar and Kuthiraimalai Aiyanaar in Vilpattu). 
Until recent times the ancient community of Drummers participated actively in the rituals of the Aiyanaar temples, beating drums. An early element of Aiyanaar cult, which is retained in the Sri Lankan Tamil tradition, is the syncretism of Aiyanaar with Buddha. At one stage, when Buddhism became unpopular among the Tamils of Sri Lanka, Buddha was syncretised with Aiyanaar. Many of the old Aiyanaar temples of the Tamil areas are located at or nearby probable Buddhist archaeological sites. A convincing example is the worship of a headless torso of Buddha as Aiyanaar at Paalaavikku'lam, Poonakari. The Buddhist remains at Kurunthu Malai near Kumizhamunai, Mullaiththeevu district are still referred to as Kurunthu Malai Aiyan or Kurunthanoor Aiyan temple by the folk of Vanni.
What is interesting to note here is that some of the early shades of meaning of the term Aiyan and the original concept of the deity Aiyanaar went through drastic changes in the Tamil tradition, but they survive in their early form in the Sinhala tradition.
A primary shade of meaning, 'elder brother' for the word Aiyan is completely forgotten in modern Tamil. But, it is common usage in Sinhala that words Ayiyaa, Ayiyaalaa (plural) and Ayiya'ndimean elder brother. Aiyanaar as guardian of villages is not an important concept in the contemporary Tamil culture, especially after the synthesis with the cult of Aiyappan. But, the concept of Ayiyanaayaka as protector and guardian of village tanks and bunds is very much alive in the Sinhala folk culture.
நன்றி: Tamilnet

No comments: