Monday, December 28, 2015

தமிழர்களுக்கொரு நீதி, மலையாளிகளுக்கு வேறொரு நீதி - திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் படும் பாடு -தமிழர்களின் பழமை வாய்ந்த வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதல் அல்லது சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது, அதற்குக் காரணமாகக் கூறப்படுவதென்னவென்றால் மாடுகள் சித்திரவதைக்குள்ளாகின்றன என்பது தான். ஆனால் மலையாளிகளால் பெருமையுடன் மட்டுமன்றி, ஒற்றுமையுடனும் கொண்டாடப்படும் திருச்சூர் பூரம் திருவிழாவில் கலந்து கொள்ளும் யானைகள் படும் சித்திரவதையுடனும், பாரமான இரும்புச் சங்கிலிகளால் இணைக்கப்பட்டும், யானைப்பாகனால் குத்தப்பட்டும், நாராசமாக ஒலிக்கும் ஒலியைத் தாங்க முடியாமல், கண்களில் நீர் வடிய யானைகள் படும் வேதனையுடன் ஒப்பிடும் போது, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் இயற்கையிலேயே ஆவேசமும், வீரமும் கொண்ட  (குறிப்பிட்ட) இனத்தைச் சேர்ந்த மாடுகள் சித்திரவதைக்கு உள்ளாவதில்லை என்றே கூறலாம்.  
ஜல்லிக்கட்டுக்குத் தடை- தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை இழக்கும் தமிழ்நாடு?

ஆனால் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதைக் காரணம் காட்டி மலையாளிகளின் பூரம் விழாவைத் தடைசெய்ய யாராலும் முடியவில்லை, ஆனால் தமது இனம், மொழி, பாரம்பரியம் என்று வரும்போது கூட ஒற்றுமைப்பட முடியாமல் பிளவுண்டு கிடக்கும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதல் சத்தம் சந்தடியின்றி தடை செய்யப்பட்டு விட்டது.  இது தமிழர்கள் அனைவர்க்கும் தலைகுனிவாகும். தமிழர்களின் கலைகளும், பாரம்பரியமும் சிலரால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன என்பதற்கு இதுவும் நல்லதொரு உதாரணமாகும்.

THE ABHORRENT TORTURE OF KERALA’S ELEPHANTS
Elephants-Shackled
உதாரணமாக, இவ்வாண்டு 2015 இல் நடைபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் சித்திரவதை செய்யப்படுவதன் காரணமாக, யானைகளின் அணிவகுப்பை தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் "மிகப்பழமையான" திருவிழாவில் மாற்றங்களைச் செய்ய நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியதாலும், கேரள மாநில அரசும் அதில் இடையூறு செய்ய இயலாது என்று கூறி, பூரம் விழாவுக்கும் யானைகளின் அணிவகுப்புக்கும் ஆதரவு தெரிவித்ததாலும் மலையாளிகளின் திருச்சூர் பூரம் விழா வெகு சிறப்பாக யானைகளின் (வேதனையுடன்)  அணிவகுப்புடன் சிறப்பாக நடந்தேறியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் வெறும் 200 வருடங்கள் (1790) பழமை வாய்ந்த திருச்சூர் பூரம் விழாவில் யானைகள் அணிவகுப்புக்கு ( அதில் நூற்றுக்கணக்காக யானைகள் சித்திரவதைக்குள்ளாகின்றன என்பது நன்கு தெரிந்தும்) தடை விதிக்க நீதிமன்றமும், கேரள அரசும் மறுத்து விட்டன, ஆனால் சங்ககாலம் தொட்டுப் பழமை வாய்ந்த தமிழர்களின் மதச்சார்பற்ற ஏறுதழுவுதல் எனப்படும் நிகழ்ச்சியில் (ஒரு சில) மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற நொண்டிக் குற்றச் சாட்டைக் காரணம் காட்டி அது தடை செய்யப்பட்டு விட்டது.  இது மலையாளிகளுடன் ஒப்பிடும் போது எந்தளவுக்கு ஒற்றுமையில்லாத இளிச்ச வாயர்களாக, கையாலாகாதவர்களாக  தமிழ்நாட்டுத் தமிழர்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. 

*சங்ககாலத்தில் ஏறுதழுவுதல் 
சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் முதன்முதலாக ஏறுதழுவுதல் நிகழ்வு குறித்துச்சுட்டப்பட்டுள்ளது. முல்லை நில ஆயர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்கின்றனர். ஏறுதழுவல் குறித்து முன்னரே பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் ஏறுதழுவல் நடைபெறுகின்றது. முல்லை நில ஆடவர்கள் தலைவியின் காதலைப்பெறும் பொருட்டு தன் வலுவினை வெளிப்படுத்தி காளையினை அடக்கி, அவளை அடைய முயற்சிப்பர். ஆதலின் முல்லை நில ஆடவர் வீரமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். முல்லை நில ஆண்கள் தம் ஆண்மையினைப் (வீரத்தினை) பரிசோதிக்கும் நிகழ்வாதலின் இது ஓர் கவுரவப்பிரச்சனையாகவும் அமைந்த ஒன்றாகும். 
Image result for ஏறுதழுவுதல்கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும்
புலலாளே
,ஆயமகள் 
அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர்துறந்து

நைவாரே ஆயமகள்”3.
 முல்லை நில மகளிர் தம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்தினர் என்பதனை மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியலாம். ஆயர்குல மகளிரை மணக்க விரும்புவோர் அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையினை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கமாகும். இதனை ஏறுதழுவுதல்என இலக்கியங்கள் கூறுகின்றன. எருதின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சி ஓடும் வீரமில்லா இளைஞனை ஆயமகளிர் இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் கூட கணவனாக அடைய விரும்பமாட்டாள். ஏனென்றால் வீரம் ஒன்றே ஆணுக்கு அழகு என்று எண்ணிய காலம் அதுவாகும்.*


சிறிய மாநிலமான கேரளாவுக்கு இந்திய மத்திய அரசிலுள்ள செல்வாக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கையை தீர்மானிப்பதிலுள்ள  ஆற்றலும்   தமிழ்நாட்டுக்குக் கிடையாது என்பதை, ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் எவ்வாறு மலையாளிகள் ஈழத்தமிழர்களை அழிப்பதில் சிங்களவர்களுக்கு உதவினர்  என்பதிலிருந்து  உலகத்தமிழர்கள் அனைவரும் அறிந்து கொண்டனர்.

உண்மையில் கோயில் யானைகளில் குறிப்பாக மலையாளிகளின் பூரம் திரு விழாவில் யானைகள் படும் துன்பமும், வேதனையும் சித்திரவதைகளும், தமிழர்களின் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு நடைபெறுவதில்லை.  ''Gods in Shackles', எனும் ஆவணப்படம்  திருச்சூர் பூரம் விழாவில் யானைகளின் நிலையைத் தெளிவாக விவரிக்கிறது. அந்த ஆவணப்படத்தினதும், அது தொடர்பான கட்டுரையினதும்   இணைப்பை இங்கே காணலாம்.

மலையாளிகளிடம் தமது கலாச்சார பாரம்பரியங்களையும், பழமையான கோயில்களையும் விழாக்களையும் காப்பதில்  சாதி, மத வேறுபாடற்ற ஒற்றுமை காணப்படுவதால், பூரம் விழாவில் யானைகளின் பங்களிப்பைத் தடை செய்ய இலகுவில் துணிய மாட்டார்கள் என்பது ஒரு மலையாள நண்பரின் கருத்தாகும். அது உண்மை என்பதை நானும் திருச்சூர் பூரம் விழாவில் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் அத்தகைய ஒற்றுமையின்மைக்குக் காரணம் கூட, திராவிடமும், பெரியாரியமும் தானென  வாதாட முடியும். அது தான் உண்மையும் கூட.

elephant-bending-small
உதாரணமாக,. தமிழர்களின் பழமையையும், வீரத்தையும் உலகுக்குப் பறை சாற்றும் ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என அழைக்கப்படும் வீர விளையாட்டைத் தடை செய்வதை நிறுத்த, அதற்கெதிராகப் போராட, தமிழர்கள் முழுமையாக ஒற்றுமையுடன் ஈடுபடவில்லை, ஜல்லிக்கட்டில் சாதிப்பின்னணி இருப்பதாக கூறிக் கொண்டு, அதையும் எதிர்த்த சாதியொழிப்பு வீரர்கள் நம்மிடையே உள்ளனர். 

தமிழர்களின் பரதநாட்டியத்தில் (சதிராட்டத்தில்) சாதியுண்டு, ஆகவே அதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். அதைப் பார்ப்பனர்கள் தமதாக்கிக் கொண்டாலும், பரவாயில்லை.  ராஜ ராஜ சோழன் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனருக்கு உதவினான், ஆகவே ராஜ சோழன் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக இருந்தாலும்.  அவனையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும்,  ஆகவே தமிழர்களின் பெருமையைப் பறை சாற்றும் பெரிய கோயிலும்  தமிழர்களின் கைகளை விட்டுப் போகட்டும். அது போன்றே சங்ககாலம் தொட்டு பழமை வாய்ந்த ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டிலும் சாதிப் பின்னணியிருக்கிறது, அதையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும் பெரும்பாலும் இவ்வாறு கூறுகிறவர்கள் எல்லோரும் பெரியாரிய, திராவிட பின்னணி கொண்ட எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் அவர்களைப் பின்பற்றும் தமிழர்களும் தான்.  

இவர்களின் கதையைக் கேட்டுத் தமிழர்கள் தமது கலை, பண்பாடு, அவர்களது முன்னோர்களின் பழமையான கோயில்கள் எல்லாவற்றையும் இழந்தது தான் மிச்சம் ஆனால்  சாதி மட்டும் இன்னும் ஒழியவில்லை. தமிழர்கள் எல்லோரும் நாம் தமிழர்களாக மட்டும், ஒன்றிணைந்து போராட வேண்டிய விடயங்களில்  எல்லாம் இவர்கள் சாதியைப் புகுத்துவதால், சாதியொழியவில்லை, மாறாக, ஒவ்வொரு தமிழனுக்கும் சாதியுணர்வும், தனது சாதியில் பிடிப்பும் அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பதை இணையத் தளங்களில் தினம், தினம் உருவாகும், அவரவரது சாதிப்பெருமை பேசும் காணொளிகளின் மூலம் நாம் காணக் கூடியதாக உள்ளது.

 தமிழர்கள் இவ்வாறு சாதியடிப்படையில் பிளவு பட்டால் தான், தொடர்ந்து தமிழரல்லாத திராவிடர்கள்  தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளமுடியும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆகவே அக்காலத்தில், ஆயிரம் வருடங்களுக்கு முந்திய நடைமுறைகளை, இக்காலச் சாதிப்பாகுபாட்டுடன்  ஒப்பிட்டு, இளிச்சவாய்த் தமிழர்களை வரலாறும், பாரம்பரியமும், கலை கலாச்சாரமும் அற்றவர்களாக ஆக்கும் வரை இவர்கள் ஓயவே மாட்டார்கள்
Pictures from Internet (various) 
*நன்றி:  'சங்ககாலத்தில் ஏறுதழுவுதல்' (கீற்று)

Saturday, December 26, 2015

ஈழத்தமிழர்கள் தம்மைத் திராவிடர்கள் என அடையாளப் படுத்துவதில்லை . மனோஜ்குமாருக்கு விளக்கம் (கீற்று).


கீற்று இணையத்தளத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவர் “நாங்களும் ஈழத்தமிழர்களும் திராவிடர்கள்... நீங்கள் எந்த வகையறா?” http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29942-2015-12-21-06-58-18என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கிறார். அவரது கருத்தை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஈழத்தமிழன் என்ற முறையில் அவருக்கு விளக்கமளிக்க வேண்டியது எனது கடமையாகும்.


திரு.மனோஜ்குமார்,
 Tamil -Sinhala War - Ca. 161 BC
ஈழத்தமிழர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக தம்மைத் தமிழர்கள் என்று மட்டும் தான் அடையாளப்படுத்தி வருகின்றனர்.  வரலாற்றுக் காலம் தொட்டு சிங்களவர்களும் ஈழத்தமிழர்களைத், தமிழர்கள் என்று மட்டும்  தான் அடையாளப்படுத்தி வந்துள்ளனர் என்பதற்கு சிங்களவர்களின் மகாவம்சம் முழுவதும் தமிழர்களைக் குறிக்கக் காணப்படும் ‘தெமழ’ அல்லது ‘தமிழ’ என்ற சொல்லே சான்றாகும். மகாவம்சத்தில் சிஹல(சிங்கள) என்ற சொல் வெறும் இரண்டு முறையும் ‘தெமழ’  என்ற சொல் முப்பது முறைக்கு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் சிஹல என்ற சொல் சிங்கள இனக்குழுவைக் குறிக்கவில்லை, மாறாக சிஹல என்ற சிங்கம் சம்பந்தமான புனைகதையைத் தொடர்பு படுத்திக் குறிப்பிடப் படுகிறது. ஆனால் தமிழர் கிராமம், தமிழர் விகாரை, தமிழர் நிலம் என இவ்வாறு தமிழர்களைக் குறிக்க தமிழ் அல்லது தெமழ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மகாவம்சத்திலோ அல்லது ஈழத்திலோ, இந்தியாவிலோ எந்தக் கல்வெட்டிலும் திராவிடர் என்ற சொல் தமிழர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் படவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஆதார பூர்வமாக, ஈழத்தமிழர்களுக்கு தமிழர் என்ற அடையாளம் மிகவும் பழமையானது.

தமிழ் மொழியிலிருந்து பிரிந்த மொழிகளைப் பேசினாலும் கூட, தமிழையும், தமிழரையும் வெறுப்பதுடன், தமிழுக்கும் அவர்களுக்குமுள்ள தொடர்பையும் மறுக்கும் கன்னடர், வடுகர், மலையாளிகளுடன் சேர்த்து  திராவிடர் எனும் ஒரே கோவணத்தைத் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிலர் தமிழர்களுக்குக்  கட்டி விடுவதற்கு முன்பே, குறைந்த பட்சம் இரண்டாயிரமாண்டுகள் பழமையானது  ஈழத்தமிழர்களின் தமிழர் என்ற அடையாளம். அந்த தமிழர் என்ற அடையாளத்தை நாங்கள் ஒரு போதும் இழக்கவில்லை, இழக்கவும் மாட்டோம். இதுவரை நாங்கள் வேறெந்த அடையாளத்தையும் ஏற்றுக் கொண்டதுமில்லை.  தமிழர் என்ற அந்த அடையாளத்தையும், எமது மொழியையும் இழந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத் தான் ஈழத்தமிழர்கள் தமதின்னுயிரை நீத்தனர். தமிழ்நாட்டில் திராவிடத் தலைவர்களின் ஆட்சியின் போது, அவர்களின் பார்வையில் ஈழத்தமிழர்கள் நந்திக்கடலில் பிணமாக மிதந்தனர். அப்படியிருக்க எங்களுக்கும் திராவிடர் என்ற கோவணத்தைக் கட்டி விட முயற்சிக்கும் உங்களின் அடாவடித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் உங்களுக்கு விளக்கம் அளிக்கலாமென முடிவு செய்தேன்.

இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பே தமிழீழம் என்ற கோரிக்கையை எழுப்பிய சேர் அருணாசலத்திடமும், அந்தக் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய தந்தை செல்வாவிடமும், அதற்கு உயிர் கொடுத்துப் போராடிய பிரபாகரனிடமும் இருந்ததும் அவர்களை உந்தியதும் தமிழ்த் தேசியமே தவிர திராவிட தேசியம்  அல்ல. 
இன்றைக்கு தமிழர்களின் தலைவர்களாக இருக்கும், சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றோரும் பேசுவதெல்லாம் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாப்பது பற்றியும், தமிழ்த்தேசிய உணர்வையும் பற்றியே தவிர திராவிடத்தைப் பற்றியல்ல. அப்படியிருக்க தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் உங்களைப் போன்றோர் ஈழத்தமிழர்களுக்கும் திராவிடர் லேபலை ஓட்ட முயல்வது எவ்வளவு அபத்தம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உண்மையில் இப்பொழுதும் கூட பெரும்பான்மை ஈழத்தமிழர்களுக்கு திராவிடம்/திராவிடர் என்றால் என்னவென்று தெரியாது. ஈழத்தில் போரினால், தமிழ்நாட்டுடனான தொடர்புகள் அதிகரித்து, உறவுகள் பலப்படுத்தப்படும் வரை திராவிடம் என்றால் என்னவென்றே பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் அலட்டிக் கொண்டதில்லை. சேர் இராமநாதன், சேர் அருணாசலம் போன்ற ஈழத் தமிழ்த் தலைவர்கள் யாரும் திராவிடம் பேசியதில்லை. தந்தை செல்வா திராவிடத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும்  கூட திராவிடக் கொள்களைகளை ஈழத்தில் நிலைநாட்டவோ அல்லது அதன் தேவையோ ஈழத்தமிழர்களிடம் இருக்கவில்லை. ஆகவே ஈழத்தமிழர்கள் தம்மைத் திராவிடர்கள் என அடையாளப்படுத்துவதாக நீங்கள் கதை விடுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் திராவிடம் என பேசப்படுகிறதா?" என்பது மொக்கை வாதம்” என்கிறீர்கள் அதற்குப் பதிலாக அங்கெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்புஉள்ளதா என்றும் கேள்வி கேட்கிறீர்கள், இதிலிருந்து பார்ப்பனீய எதிர்ப்பு உள்ள இடத்தில் தான் திராவிடத்துக்கு வேலையுண்டு என்பது தான் உங்களின் கருத்து என்பது தெளிவாகிறது. ஈழத்தமிழர்களின் மத்தியில் பார்ப்பன எதிர்ப்பு கிடையாது. அங்கு பார்ப்பன ஆதிக்கமுமில்லை. இருக்கிற ஒரு சில பார்ப்பனர்களும்  தம்மைத் தமிழர்களாகத் தான் அடையாளப்படுத்துகின்றனர். உதாரணமாக, விடுதலைப் புலிகளின் தமிழ்ச்செல்வனுடன் இறந்த அவரது மெய்க்காப்பாளன் மாவைக்குமரன் கூட ஒரு பார்ப்பான் தான். நான் இதைக் கூறுவதால் பார்ப்பனீயத்தை நான் ஆதரிப்பதாக புரளியைக் கிழப்ப மாட்டீர்களென நம்புகிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் பார்ப்பனீயமோ அல்லது பார்ப்பனீய எதிர்ப்போ ஈழத்தில் இல்லாததால், திராவிடத்தின் தேவை அங்கிருக்கவில்லை, ஆகவே உங்களின் கருத்தின் படி பார்த்தால் கூட, நாங்கள் திராவிடர்கள் அல்ல தமிழர்கள் மட்டும் தான். 
இக்காலத்தில் தமிழர் எதிரித் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் சிலரின் தொடர்பால் ஈழத்துப் பார்ப்பான்கள் சிலர் பார்ப்பனீயத்துக்கு ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் உயிர் கொடுக்க முயல்கிறார்கள் என்பதை சில இணையத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது, அதை எதிர்க்க நாம் – ஈழத்தமிழர்கள், திராவிடர்களாக  மாறத் தேவையில்லை, தமிழர்களாகவே எதிர்ப்போம். சைவத்தைத் தமிழாக்குவோம், அந்தப் பணியை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலர் ஏற்கனவே தொடங்கி விட்டனர். 

திராவிடர்  என்பது இந்தியாவில் தென்பகுதியில் வாழ்ந்த வாழும் மக்களனவைரையும்  குறிக்கச் சில வேளைகளில் பயன்படுத்தப்பட்ட சொல்லாக இருந்தாலும் கூட,  வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்களாலும், மொழி வல்லுனர்களாலும் தான் அது மிகவும்  பிரபலப்படுத்தப்பட்டது. தமிழர்களை தனித்துவமாக, அவர்களின் மொழி, இன அடிப்படையில் அடையாளப்படுத்த  தமிழர் என்ற அழகான தமிழ்ச் சொல்லிருக்கும் போது, நாம் தமிழர்கள் எதற்காக திராவிடர் என்ற அடையாளத்தைக் கட்டியழுது கொண்டு, கும்பலில் கோவிந்தா போட வேண்டுமென்ற கேள்விக்குப் பதிலை எந்த பெரியாரிஸ்டும் இதுவரை தந்ததில்லை. அத்துடன் ராஜ ராஜ சோழனைப் போற்றும், அவன் சிங்களவர்களை வென்று சிங்களாந்தகன் என்று முடிசூடியதை   எண்ணி இன்றும் பெருமிதப்படுவதுடன், எங்குமேயில்லாதவாறு அந்த திருமுறைகண்ட சோழனுக்கு கோயிலில் தனிச்சன்னதி அமைத்துப் போற்றும் ஈழத்தமிழர்கள் ஒருபோதுமே, ராஜ ராஜ சோழனைத் தூற்றும், இழிவுபடுத்தும் 'திராவிடனாக' மாற எங்களின் மனச்சாட்சி இடம் கொடுக்காது.
உதாரணமாக, தமிழர்களிடமிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தமக்கென தனியடையாளத்தை எடுத்துக் கொண்டு, தமது மொழியின் வரிவடிவத்தையும் மாற்றிக் கொண்ட மலையாளிகள் கூட தம்மைத் தமிழர்கள் என்று அழைக்கவோ அல்லது அழைக்கப்படுவதையோ மறுக்கின்றனர்/வெறுக்கின்றனர். அப்படியிருக்க லெமூரியாக் கண்டத்தின் காலத்தில், தமிழர்கள் எல்லாம் திராவிடர்கள், ஆகவே தமிழர்கள் தம்மைத் திராவிடர் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்ற வாதாட்டத்தில் ஏதோ சூதிருப்பதாகத் தான்  நினைக்கத் தோன்றுகிறது.  

பெரியார் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டில் அவர் ஏறப்டுத்திய விழிப்புணர்ச்சியை, அவரது பார்ப்பனீய எதிர்ப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் பெரியாரின் போராட்டங்களால் தமிழ்நாட்டில், உண்மையான தமிழர்களை விட, திராவிடர் என்ற போர்வையில் தமிழரல்லாதோர் அதிகளவு நலன்களை அனுபவித்தனர்/அனுபவிக்கின்றனர், தமது சொந்த மாநிலங்களில் தமக்கென ஆட்சியையும், பொருளாதாரத்தையும் தமது கைகளில் வைத்துக் கொண்டே தமிழ்நாட்டிலும் தமிழர்களின் ஆட்சியையும், பொருளாதாரத்தையும் அவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் உரிமையுடன் பங்கு போட்டுக் கொள்கின்றனர், அத்துடன் தமிழர்களை ஆளவும் அவர்களுக்கு உரிமையுள்ளதாக நினைத்துக் கொள்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் எங்களால் உணர முடிகிறது. அதனால் தான் இன்றைக்கும் தமிழ்நாட்டில்  ஒரு விஜயகாந்த் முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே தவிர ஒரு தமிழன் திருமாவளவனோ, சீமானோ வருவதற்கு வாய்ப்பில்லை. அப்படிப் பேசினால் கூட, அப்படி நினைப்பதைக் கூட உங்களைப் போன்ற சிலர் நக்கலடிக்கின்றனர். அதைப் பார்க்க எங்களுக்கு வேதனையாக இருக்கிறது.


ஈழத்தமிழர் குலதெய்வம் கண்ணகி 

நீங்கள் குறிப்பிடும் ஆதாரங்களைப் பார்ப்போம்:


புலிகளும், ஈழத்தமிழருமே தங்களை திராவிடர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டது உங்களுக்குத் தெரியமா??

வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், மொழி வல்லுனர்களும் தமிழர்கள் திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால் வெளிநாட்டவருக்கு (கியூபாவில்) விளக்குவதற்காக தமிழ், ஒரு  திராவிட இனக்குழுவைச் சேர்ந்த மொழி என்று குறிப்பிட்டதை, ஈழத் தமிழர்கள் தம்மைத் திராவிடர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது. :-)

உதாரணமாக வெள்ளையினத்தவர்கள் அனைவருமே Caucasoid இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அதைக் காரணம் காட்டி, ஜேர்மனியர்களும், டேனிஸ்காரரும், போலிஸ்காரரும் தம்மை பிரஞ்சு(French), ஜேர்மன்(German), டேன் (Dane), போலிஸ்(Polish) என்று அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக,  கோகாசொயிட் என்று அழைத்துக் கொள்ள வேண்டும், அவர்கள் எல்லோரும் கோகாசொயிட் கழகம் அல்லது கோகாசொயிட் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியின் கீழ் இணைய வேண்டுமென்றால் அவர்கள் எல்லோருமே உங்களை அடிக்க வந்து விடுவார்கள். அப்படியான கருத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லோருக்குமே தனித்துவமான, மொழியும், வரலாறும், வரலாற்றுப் பெருமைகளும், பண்பாடும் உண்டு, அவற்றை எல்லாம் மற்றவர்களுடன் பங்கு போட்டுக் கொள்ளவோ அல்லது மற்றவர்களுடன் ஒன்றாகக் கலந்து 'சாம்பார்' வைப்பதையோ யாரும் விரும்ப மாட்டார்கள். 

அக்காலத்தில் தமிழ்நாட்டில் உண்மையான, தமிழனாகப் பிறந்த தமிழ்த் தலைவர்கள் இல்லாதாதால் தமிழர்கள் திராவிடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் இப்பொழுது அந்த நிலையில்லை தமிழுணர்வுள்ள, எத்தனையோ உண்மையான தமிழர்கள் தலைமை தாங்க தயாராக உள்ளனர்.

நீங்கள் குறிப்பிடும் இரண்டாவது , மூன்றாவது  ஆதாரத்தில் திராவிடர் எனக் குறிப்பிட்டமைக்குக் காரணம்,  சிங்களவர்கள் ஆரியர் என்ற கருத்து ஐரோப்பியர்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டதால் தான். அவர்களிடமிருந்து தமிழர்களைப் பிரித்துக் காட்டுவதற்காக மட்டுமே அவ்வாறு குறிப்பிடப் பட்டது. ஆனால் இப்பொழுது சிங்களவர்களே அப்படிக் கூறிக் கொள்வதில்லை. இங்கும் The Tamils of Ceylon (Dravidians)-  என்று குறிப்பிடுவது எப்படியானதென்றால், கனடாவில் வாழும் வெள்ளையர்களை - Anglos of Australia (Caucasoid) -  என்பது போன்றது.  அவர்களைப் பார்த்து ஆங்கிலேயர்களின் பரம்பரையில் வந்த  ஆங்கிலேயர்கள் என்ற ஆங்கில மொழியின், பண்பாட்டின், கலாச்சாரத்தின்  அடிப்படையில் உருவாகிய ஆங்கிலேயர் என்ற அடையாளத்தை விடுத்து, (திராவிடர் என்பது போல்), வெறும் வெள்ளையின (Caucasoid) என்ற அடையாளத்தைக் குறிப்பிடுங்கள் என்றால் அவர்கள் உங்களை என்னவோ மாதிரிப் பார்த்துச் சிரிப்பார்கள். மாங்காயை மாங்காயுடன் தான் ஒப்பிட வேண்டுமே தவிர மண்ணாங்கட்டியுடன் ஒப்பிடக் கூடாது.   :-)

நன்றி.

Wednesday, December 23, 2015

தமிழன் சிம்புவுக்கு எதிராகத் திட்டமிட்ட சதி??தமிழ்த்திரையுலகில் மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து துறைகளிலும் தமிழரல்லாதோரின் ஆதிக்கம் தான்  அதிகம். தமிழ்த் திரையுலகில் கூட உண்மையான தமிழ் நடிகர், நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். நடிகர்களாவது ஒரு சிலர் உள்ளனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற உண்மையான  தமிழ் நடிகைகள் யாரும் கிடையாது என்றே கூறலாம். 

அட்டைக் கறுப்பாக இருக்கிற தமிழன் கூட வெள்ளை வெளேரென்று இருக்கிற வடநாட்டு அல்லது மலையாள, வடுக, கன்னட நடிகை நடித்தால் தான் படம் பார்ப்பேன் என்று அடம்பிடிப்பது தான் அதற்குக் காரணம். தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத் தோலாசையாலும், சினிமா மோகத்தாலும்  தமிழினத்துக்கு ஏற்பட்ட தீமைகளைப் பற்றிச் சொல்லி மாளாது. ஆனால் அதைப் பற்றி பேசுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம்.

நடிகர் சிலம்பரசனுக்கு ஆதரவான எனது கருத்துக்கு எதிர்ப்பு இருக்கலாம், ஆனால் எனது கருத்தை வெளியிடத் தான் நான் வலைப்பதிவு வைத்திருக்கிறேன். :-)

தமிழரல்லாதோரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும், விரல் விட்டு எண்ணக் கூடிய, தமிழை தாய்மொழியாகவும்,  பிறப்பினாலும் தமிழர்களாகிய நடிகர்களில் ஒருவராகிய சிம்பு என அழைக்கப்படும் சிலம்பரசனுக்கு எதிராக, யாராலோ, அவரது அனுமதியின்றி, திருட்டுத்தனமாக,  வெளியிட்ட, அவர் எழுதியதாகக் கூறப்படும் பாடலின் பின்னணியில் தூண்டி விடப்படும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் தமிழன் சிலம்பரசனுக்கு எதிராக திட்டமிட்ட சதி நடைபெறுகிறது என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

“ஆத்தா ஆத்தோரமா வாறியா" என்று ஆத்தாவை ஆத்தோரமாக வரச் சொல்லிக்  கூப்பிட்ட பாடல்களும், பாலியலைத் தூண்டும், பாலியல் கருத்துக்கள்  கொண்ட  இரட்டை வசனங்கள் நிறைந்த தமிழ்ப் படங்களின் பாடல்களையும், கதை வசனங்களையும் கண்டு கொள்ளாமல் விட்ட தமிழர்கள், தனது சொந்த வீட்டில், தனது சொந்த அறையில் நடிகர் சிலம்பரசன் எழுதிய ஆனால்  அவரால் வெளியிடப்படாத, (யாரோ வெளியிட்ட) பாடலைக் காரணம் காட்டி அவருக்கெதிரான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடப்பதன் பின்னணியில் சிம்புவின் வளர்ச்சியை விரும்பாத சிலரும் இருக்கலாமென எண்ணுவதில் தவறில்லை.

தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தினர், ஆங்கில மோகம் கொண்டவர்களாக, அமெரிக்க Accent உடன் ஆங்கிலம் பேச வேண்டுமென்பதிலும், அமெரிக்க கலாச்சாரம், மேற்கத்தைய இசை, Hip-hop, RAP போன்றவற்றை மிகவும் இரசிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். அக்கரைக்கு, இக்கரைப் பச்சை என்பது போல, புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களை விட, தமிழ்நாட்டு இளந்தலைமுறையினர் மேற்கத்தைய இசை, அமெரிக்க, ஐரோப்பிய கலாச்சாரம் என்பவற்றில் அதிகளவு ஈடுபாடு கொண்டவர்களாக,  Valentine’s day, Father’s day, Mother’s day, "Birdday" (birthday) எல்லாவற்றையும் மும்முரமாக, ஆடம்பரமாகக் கொண்டாடுகிறவர்களாக காணப்படுவதை என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். தமிழ் நாட்டின் அந்த இளைய தலைமுறையினர்  தான் சிம்புவின் ரசிகர்கள், அவர்களைத் திருப்திப்படுத்துவதும் தான், மகிழ்விப்பதும் தான் சிம்புவின் நோக்கம், அது தான் அவரது தொழிலும் கூட.

உதாரணமாக, அமெரிக்க RAP இசையை எடுத்துக் கொள்வோம். RAP பாடல்களில் பாலியலை தூண்டும் வரிகளும், பச்சை பச்சையாக உடலுறைவையும், பாலியல் உறுப்புக்களையும், Penis, Vagina என்பவற்றை விவரிக்கும் பாடல் வரிகளும் இல்லாத பாடல்களே   இல்லையென்றே கூறலாம். இந்த விடயத்தில்  RAP பாடகிகளும், ஆண் பாடகர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. சிம்புவும், அமெரிக்க RAP பாடல்களையும், அந்த பாடல்களுக்கும், பாடகர்களுக்குமுள்ள மவுசையும் பார்த்து, அப்படியான  பாடலைத் தமிழில் இயற்றினால் என்னவென்று நினைத்து அந்தப் பாடலை இயற்றியிருக்கலாம். ஆனால் சிம்பு விட்ட மிகப்பெரிய தவறு என்னவென்றால் அவற்றை முற்று முழுதாக தமிழாக்கியது தான். தமிழில் மிகவும் கெட்ட வார்த்தையாகக கருதப்படும், பு... வார்த்தையைத் தவிர்த்து விட்டு, அதை ஆங்கிலத்தில் கூறியிருந்தால் தமிழர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்;. ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுவதை தமிழர்கள் பெரிது படுத்துவதில்லை, வேடிக்கை என்னவென்றால் சில தமிழர்கள் அதை Fashion அல்லது Trendy ஆகக் கூட நினைத்துக் கொள்வதுமுண்டு.

இவ்வளவுக்கும் சிம்பு,  தான் தனது சொந்தப் படுக்கை அறையிலோ அல்லது படிக்கும் அறையிலோ எழுதிய பாடலை அவராகவே வெளியிடவில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தமிழ்நாட்டில் தனது வீட்டில் தனது சொந்த அறையிலிருந்து கொண்டு தூசணம் அல்லது கெட்ட வார்த்தையை எழுதுகிறவன், பேசுகிறவன், நினைப்பவனுக்கெல்லாம் எதிராகப்  போராட்டமும் நடத்தி, தண்டனையும் அளிப்பதென்றால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மை ஆண்களுக்கெதிராக மட்டுமன்றி பெண்களுக்கெதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.  

சிம்பு தனிப்பட்ட முறையில் எழுதிய பாடலை, சிம்பு எனப்படும் தமிழன் சிலம்பரசனின் வளர்ச்சியை, புகழை அவரது நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் வெளியிட்டவரைத் தான் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டுமே தவிர சிலம்பரசனை அல்ல.Saturday, September 12, 2015

யாழ். நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா - 11/09/2015

"யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே!" (திருப்புகழ்)பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
     பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
          போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்

போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
     மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
          பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல்

வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
     நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
          வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம்

மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
     வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
          வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
     கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
          யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை

ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
     நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
          யாட்டா லீசன் பக்கம துறைபவள் ...... பெறுசேயே

ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
     நீத்தார் ஞானம் பற்றிய குருபர
          யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே

ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
     வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதில்
          யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பூத் தார் சூடும் கொத்து அலர் குழலியர் ... பூவாலாகிய
மாலையைச் சூடுபவர்கள். பூங்கொத்துக்களைச் சூடும் கூந்தலை
உடையவர்கள்.

பார்த்தால் வேலும் கட்கமு(ம்) மதன் விடும் போர்க்கு ஆர்
நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் போல் தாவி ...
அவர்களது பார்வை வேல் போலவும், வாள் போலவும், மன்மதன்
செலுத்தும் போருக்கு என்றே நிறைந்த, பெருகியுள்ள தேன் கொண்ட
பூ அம்புகள் போலவும், யமன் ஏவி அனுப்பியுள்ள தூதர் போலவும்
பாய்ந்து,

நாளும் கைப் பொருள் உடையவர் மேல் தாளார் தம் பற்றிடு
ப்ரமையது பூட்டா மாயம் கற்ற மை விழியினர் ... நாள் தோறும்,
யார் கையில் பொருள் உள்ளதோ அத்தகையோரை தம் மீது அன்பு
வரும்படியான ஆசை மயக்கத்தை ஏற்றக்கூடிய மாய வித்தைகளைக்
கற்றுள்ள அஞ்சனம் பூசிய கண்ணினர்.

அமுது ஊறல் வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் ...
அமுதம் போன்ற வாயிதழ் ஊறல் வாய்ந்தவர்கள். (வந்தவரின்) மனம்
மாறுபடுதல் உண்டாகும்படி பேசும் பொய் நிறைந்த உபாயத்தினர்.

நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட வாள் தாய் வீசும்
கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம் மாப் பூண் ஆரம் கச்சு அணி
முலையினர் ... நூலிலும் தேய்ந்து மிக நுண்ணியதான சிறிய இடை
துன்பப்படும்படி ஒளி தாவி வீசுவதும், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, அகில்,
மாலை, சிறந்த ஆபரணங்கள், முத்து மாலை, கச்சு இவைகளை அணிந்த
மார்பை உடையவர்கள்.

வேட்(கை) பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய் வாக்கால்
ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ ... இத்தகைய வேசையர்
மீது ஆசை பூண்டு, உடல் நலம் கெட்ட என்னை உன்னுடைய சத்திய
வாக்கால் நான் ஞானத்தை அடைந்து இனி உன்னை வழிபடுமாறு
அருள் புரிய மாட்டாயோ?

ஆத்தாள் மால் தங்கைச்சி க(ன்)னிகை உமை கூத்தாடு
ஆநந்த சிவை திரி புரை ஆள் பேய் பூதம் சுற்றிய பயிரவி புவ
நேசை ... தாயானவள், திருமாலின் தங்கை, கன்னிகை, உமாதேவி,
நடனம் செய்யும் ஆனந்த சிவாம்பிகை, திரி புரங்களை எரித்தவள், தான்
ஆளும் பேய்களும், பூதங்களும், சுற்றியுள்ள பைரவி, புவனங்களுக்கு
ஈசுவரி,

ஆக்கா யாவும் பற்றியெ திரிபு உற நோக்கா ஏதும் செற்றவள்
திரு விளையாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு
சேயே ... எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், வேறுபாடு பொருந்தப்
பார்க்காது எதையும் அழித்தவள். திருவிளையாடலாக சிவ பெருமான்
(இடது) பக்கத்தில் உறைபவள் ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே,

ஏத்தா நாளும் தர்ப்பண செபமோடு நீத்தார் ஞானம் பற்றிய
குருபர ... நாள் தோறும் போற்றி நீர்க்கடன், ஜெபம் இவைகளைச்
செய்து, துறவோர் ஞான நிலையில் பற்றிய குருபரனே,

யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே ... யாப்பிலக்கணம்
ஆய்ந்தமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாக்களைத் தந்து அருளிய
(திருஞானசம்பந்தராக வந்த) முருகனே,

ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய்
வீசும் பொன் ப்ரபை நெடு மதிள் யாழ்ப்பாணாயன் பட்டினம்
மருவிய பெருமாளே. ...

ஏற்பவர்கள் வரும் போது (அவர்களுக்கு)
மனம் விரும்பி மகிழ்ச்சியுடன் பொருளை அள்ளித் தரும்
(கொடையாளிகள்) உள்ள, பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்த
யாழ்ப்பாணாயன் பட்டினத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.


தேரடியில் காலையிலே நானழுத வேளையிலே
நீ திரும்பிப் பார்க்கவில்லை முருகா - உன்
காலடியில் நான் இருந்து கண் சொரிந்த போதினிலே
கண்டு மனமிரங்கவில்லை முருகா
கண் திறந்து பார்க்க வில்லை முருகா - என்னை
கண்டு மனமிரங்கவில்லை முருகா

நல்லை நகர் வீதியிலே நாளும் சென்று அழுபவர்க்கு
தொல்லை அற்று போகுமென்றார் முருகா - நான்
வெள்ளை மணல் மீதுருண்டு வேலவனே என்றழுதேன்
துள்ளி வந்து சேரலையே முருகா

வேரிழந்து கண்களிலே நீர் சொரிந்த வேளையிலே
வேறிடத்தில் நீ ஒளித்தாய் முருகா - நீ
ஏறி வந்த தேர் இருக்குஇழுத்து வந்த வடம் இருக்கு
எங்கேயடா போய் ஒளித்தாய் முருகா


செந்தமிழால் வந்த குலம் நின்று களமாடுகையில்
உந்தன் அருள் வேண்டுமடா முருகா - நீ
வந்திருந்து பூச்சொரிந்தால் வாசலிலே கையசைத்தால்

வல்ல தமிழ் வெல்லுமடா முருகா

Thursday, September 3, 2015

வர்மன் – தமிழ் வேரில் உருவாகிய தமிழ்ச் சொல்லே தவிர வடமொழிச் சொல் அல்ல! வடமொழியிலும், தமிழிலும், தமிழிலிருந்து சொற்களை இரவல் வாங்கியும், தமிழிலிருந்து பிரிந்தும் உருவாகிய ஏனைய திராவிடமொழிகளிலும்-  ஒரு  பொதுவான சொல்  இருந்தால்அந்தச் சொல் சமக்கிருதச் சொல் எனவும், தமிழ் உட்பட ஏனைய திராவிட மொழிகள் அவற்றை சமக்கிருதத்திலிருந்து தான் இரவல் வாங்கியதாகவும் வாதாட சமக்கிருதவாதிகள் தான் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று நான் இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் அதை கண்மூடித்தனமாக அப்படியே நம்பி விடும் தமிழர்கள் ஒருபுறமிருக்க, சமக்கிருதவாதிகளின் அந்தப் பொய்யையும் தமக்குச் சாதகமாக்கி தமிழர்களின் மாமன்னர்கள் பலரும்  தமிழர்களே அல்ல என்று வாதாடும் பகுத்தறிவு பகலவன்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதை அண்மையில் இணையத்தளக் காணொளிகள் சிலவற்றில் பார்த்தேன்

வெறும் தன்னலத்துக்காக,  தமது கொள்கைப் பிரச்சாரங்களுக்காக, பார்ப்பன எதிர்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக, அதிலும் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனர்களை ஆதரித்தனர் என்பதற்காக,  தமிழ் மன்னர்கள் எல்லாம் தமிழர்களே அல்ல என்று வரலாற்றைத் திரிக்கும் , பெரியாரியர்களின் பேச்சுக்களும்,   காணொளிகளும்  எனக்கு மிகவும் எரிச்சலையூட்டுகின்றன. யாராவது இவர்களை எதிர்த்துப் பதிலளிக்க மாட்டார்களா என்ற ஆதங்கம் தான் ஏற்படுகிறது. அதைத் தவிர எனக்கும் அவர்களுக்கும் எந்த முரண்பாடும் கிடையாது.

உதாரணமாக, ஒரு பகுத்தறிவு, என்னடாவென்றால்,   'வர்மன்' என்ற பெயராக பல்லவ மன்னர்கள் பலரும் கொண்டிருப்பதால்,  *பல்லவர்கள் தமிழர்கள் அல்ல என்கிறார். வர்மன் என்பது சமக்கிருதச் சொல், ஒரு தமிழன் சமக்கிருதப் பெயரை வைத்துக் கொள்வானா, என்பது அவரது வாதம். அந்த அடிப்படையில் பார்த்தால், வடமொழிப் பெயர்களைக் கொண்ட தமிழர்கள்  எல்லோருமே தமிழர்கள் அல்ல என்றல்லவா  வாதாடவேண்டும்

இவர்களின் கருத்துப் படி பார்த்தால், இன்னும் ஆயிரமாண்டுகளுக்குப் பின்னால் புலிகள் தலைவர் பிரபாகரன் கூட தமிழன் அல்ல என்றும் சிலர் வாதாடலாம், ஏனென்றால் பிரபாகரன் என்பதும் சுத்தமான தமிழ்ப் பெயர் அல்ல.  உண்மை என்னவென்றால், இக்காலத்தில் எவ்வாறு பல தமிழர்கள் வடமொழிப் பெயர்களைக் கொண்டுள்ளனரோ, அவ்வாறே பல்லவர், சேர, சோழ பாண்டியர் காலத்திலும் பல தமிழர்களுக்கு வடமொழிப் பெயர்களும், பட்டங்களும் வழக்கிலிருந்தன. அந்த காரணத்தால், அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என வாதாடுவது வெறும் கோணங்கித்தனமாகும்அதிலும் பல பெயர்கள், தமிழ் வேர்ச்சொற்களில் உருவானவை, வடமொழியால் இரவல் வாங்கப்பட்டு மீண்டும் தமிழுக்கு வந்தவை.

அத்தகைய சொற்களில் ஒன்று தான், தமிழ் அரசர்களாகிய பல்லவ, சேர, சோழ பாண்டியர்களில் பலரும் பொதுவான பெயராகக் கொண்டிருந்த வர்மன் என்ற பெயராகும்.

வன்மை> வன்மம்> வருமம் > வர்மம் > வர்மன் 
Vanmai (n) – Forcefulness 
வழு இல் வன் கை மழவர் பெரும,” (புறநானூறு 90: 11) 
“Vazhu il van kai mazhavar peruma,” (Pu'ra:naanoo'ru 90: 11) 
(The lord of the blamelessly strong-handed soldiers) 
 van-mai < val strength (Kur-al., 153); skill, ability 
தமிழில் வல்>வன் - என்ற வேர்ச்சொல் (வன்மை>வன்மம் )  மன்னர்கள், படைவீரர்களை விவரிக்கப் பாவிக்கப்படும் போது - வீரமிக்க, பலம் வாய்ந்த, ‘வெற்றி வாகை சூடுகின்றஎன்ற கருத்தாகும். 
The root-word ‘Van' meaning strong, able, valorous etc., and its use in the context of soldiers

வர்மன் என்ற பெயரைக் கொண்டுள்ளதால், தன்னுயிர் போனாலும் பரவாயில்லை எனத் தமிழ் கேட்டு உயிர் நீத்த பல்லவ நரசிம்மனும் தமிழன் அல்ல, கங்கை முதல் கடாரம் வென்றஅருண்மொழி வர்மன்ராஜ ராஜ சோழனும் தமிழன் அல்ல. ஆனால் தமது தாய் மொழியை வீட்டில் பேசும், தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்கள் அனைவரும் தமிழர்கள் எனத், தமிழர்களனைவரும்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிலரின் வாதம்

வர்மன் - என்ற சொல் தமிழ் வேர்ச்சொல்லிருந்து உருவாகிய தமிழ்ச் சொல் தான் என்ற உண்மை தெரியாமலிருக்கலாம், அல்லது தமிழர்கள் யாரைப் பற்றிப் பெருமையாக நினைக்கிறார்களோ, எவற்றை தமது பாரம்பரியமாக நினைக்கிறார்களோ, அதற்கும் பார்ப்பனர்களுக்கும், இந்து மதத்துக்கும் எதாவது தொடர்பிருந்தால், அந்த தொடர்பு ஆயிரமாண்டுகளுக்கு முந்தியதாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களைத் தூற்ற வேண்டும், இளந்தமிழர் இதயங்களில், சிந்தனையில் அவர்களைப் பற்றிய பெருமையும், நல்லெண்ணமும் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இது தான் இணையத் தளங்களில் பிரச்சாரக் காணொளி வெளியிடும் மதிகெட்ட சிலரின் நோக்கம்

அந்த கோணங்கித்தனத்தை  தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமன்றி, உலகத்தமிழர்கள் அனைவரும் இனங்கண்டு கொள்ள வேண்டும். இக்கால தன்னல, குறுகிய  சாதி, மதம்  சம்பந்தமான கருத்து வேறுபாடுகளுக்காக, தமிழர்களின் வரலாற்றைத் திரிப்பதையும், தமிழர்களின்புகழ் பெற்ற முன்னோர்களை, யாரைத் தமிழர்கள் தமிழர்கள் என நினைத்து பெருமைப்படுகிறார்களோ, அவர்களையும், தமிழ் வளர்த்த கோயில்களையும்  இழிவு படுத்துகிறவர்களை தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்


"மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குங்கைத 
தண்ணுலாம் மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டில் 
பெண்இலா ஊரில் பிறந்தாரைப் போலவரும் 
வெண்ணிலா வேஇந்த வேகம்உனக்(கு) ஆகாதே.". 
- நந்திக்கலம்பகம்-