Thursday, March 20, 2014

திண்டுக்கல்லில் வாழ்ந்ததால் மட்டும் யாரும் தமிழராக முடியாது. திப்பு சுல்தான் தமிழன் அல்ல!இது தமிழர்களின் பெருந்தன்மையோ அல்லது ஒற்றுமையின்மையோ எனக்குத் தெரியாது. தமிழர்களின் முன்னோர்களை இழிவு படுத்தும் தமிழரல்லாதவர்களுக்குப் பக்கவாத்தியம் வாசிக்க  அல்லது அவர்களுக்கு ஆதரவாக விதண்டாவாதம் செய்ய  எப்பொழுதும் சில தமிழர்கள் தயாராகவிருப்பார்கள் என்பதை நான் பல முறை, பல இணையத்தளங்களில் அவதானித்திருக்கிறேன்.  அதனால், நான் எந்த பதிவைச் செய்யும் போதும் அப்படியானவர்களின்  வருகையை, கேள்விகளை  எதிர்பார்த்து, அதற்கான ஆதாரங்களைத் தேடி வைத்துக் கொண்டு தான் பதிவைச் செய்வது வழக்கம்.

ஒரு வலைப்பதிவர், இங்கு அவரிட்ட பின்னூட்டத்தில்சொல்லப்போனால் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐதர் அலியும் அவன் புதல்வன் திப்பு சுல்தான் கூட ஒரு வகையில் தமிழர்கள் தான். என்றார்  ஆனால் அது எந்த வகையில் என்பதை அவர் விளக்கவில்லை.

திப்பு சுல்தானின் வரலாற்றைக் கூறும் A History of Tippu Sultan என்ற நூலை எழுதிய Mohibbul Hasan அவர்கள் திப்பு சுல்தானின் முன்னோர்கள் மெக்காவின் அரபிய குரேஷி குடிகளைச் சேர்ந்தவர்கள்,  அவர்கள் 16ம் நூறாண்டின் கடைசிப்பகுதியில் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்கிறார். இஸ்லாமியராகிய மொஹிபுல் ஹசான் பல இஸ்லாமிய வரலாற்று நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
The history of Tippu Sultan’s family, until it was raised to prominence by his grandfather, Fata Muhammad, is for the most part obscure. But one thing is certain, that Tippu was descended from the Qureshi of Mecca; and it was probably at the end of the sixteenth century that his ancestors arrived in India by sea instead of following the usual land route from the north-west. Beyond these facts nothing is known regarding them before their emigration to India.
 திப்பு சுல்தானின் முன்னோர்கள் பற்றிய இந்த உண்மையின் அடிப்படையில்இந்த உண்மையை எப்படித் தான் இழுத்துவளைத்துக் கற்பனை செய்தாலும்அரேபியாவிலிருந்து வந்த  முன்னோர்களைக் கொண்ட திப்பு சுல்தான் தமிழனாக முடியாதுஅதை விட திப்பு சுல்தானின் தாயும் தமிழ்ப்பெண்ணல்ல என்பதும் குறிப்பிடத்தக்கதுஅதனால் எப்படி வரலாற்றைத் திரித்தாலும்கற்பனை செய்தாலும் திப்பு சுல்தான் தமிழன் அல்லஅத்துடன் வெளிநாடுகளிலிருந்து வந்து திண்டுக்கல்லில் வாழ்ந்தவர்கள்,வாழ்கிறவர்கள்  எல்லாம் தமிழர்கள் அல்ல.


உண்மையில் திப்பு சுல்தானின் ஆட்சியில் நடைபெற்ற கட்டாய இஸ்லாமிய மதமாற்றங்கள், கட்டாய மதமாற்றங்களுக்காக வலுக்கட்டாயமாக நடத்தப்பட்ட சுன்னத்து அதாவது ஆண்குறியின் முனையை வெட்டி எறியும் சடங்குகள், ஆயிரக்கணக்கான இந்துக்களின் படுகொலைகள் எல்லாவற்றையும் மறைத்து அவனை இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய, மத வெறியற்ற மாமனிதனாக சிலர் காட்ட முனைவதும், அதில் அவர்கள் வெற்றியுமடைந்திருப்பதையுமிட்டு எனக்கு எந்தக்  கவலையும் கிடையாது. அத்துடன் திப்பு சுல்தான் தமிழனுமல்ல, நான் இந்தியனுமல்ல, அதனால்  எனக்கும் திப்பு சுல்தானுக்கும் எந்த தொடர்பும் கிடையாதும் கூட. நான் எதிர்ப்பதெல்லாம், திப்பு சுல்தானை அளவுக்கதிகமாகப் போற்றுகிறவர்கள், அவனது தவறுகளை காணாது விட்டு விடுகிறவர்கள், ராஜ ராஜ சோழனை மட்டும் வசை பாடுவதை மட்டும் தான்.   

இலங்கையில் தமிழைப் பேசினாலும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தாத இலங்கை முஸ்லீம்கள், அவர்கள் தமிழர்களல்ல என்பதற்கு கூறும், காரணம் அவர்களின் முன்னோர்கள், சில வரலாற்றாசிரியர்கள் கூறுவது போல், தமிழ்நாட்டில் இராமநாதபுரம், காயல்பட்டணம், மலபார்க்கரை போன்ற இடங்களிலிருந்து வரவில்லை,  அரேபியாவில், ஏமனில் இருந்து வந்தவர்களாம். அப்படி என்றால் அவர்கள் ஏன் அரபு மொழியில் பேசுவதில்லை என்று கேட்டு, நாங்கள் ஈழத் தமிழர்கள் எவரும் அவர்களைக் குழப்புவதில்லை. அரேபியாவிலிருந்து அவர்கள் முன்னோர்கள் இலங்கைக்குக் குடியேறியதால் அவர்கள் தமிழைப் பேசினாலும் கூட,  தமிழர்கள் அல்ல என்றால்அரேபியாவிலிருந்து வந்த முன்னோர்களைக் கொண்ட திப்பு சுல்தான் மட்டும் எந்த வகையில் தமிழன் ஆனான் என்று எனக்கு விளங்கவில்லை