Tuesday, December 2, 2014

இந்திய ஜிகாதியை கழிப்பறையைக் கழுவச் சொன்னதாம் இஸ்லாமிய படை (Islamic Caliphate - ISIS?


இந்தச் செய்தியை வைத்து இலங்கை இணையத்தளமொன்றில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் சிங்களவர்கள்.  இதிலுள்ள நகைச்சுவையை எல்லோராலும்  புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இலங்கையர்களுக்கு  இந்தச் செய்தியைப் பார்த்ததும் உண்மையில் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது, ஆனால் ஏனென்று எனக்குத் தெரியாது. . இருந்தாலும் இந்தச் செய்தி அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்துடன் இங்கு பதிவு செய்கிறேன்.

உலகம் முழுவதிலுமிருந்து குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற பல நாடுகளிலிருந்து இஸ்லாமிய கிலாபத் அல்லது கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராடுவதற்காக  வீடுகளில் சொல்லிக் கொள்ளாமல் பல இளைஞர்களும், பெண்களும் வெளியேறியுள்ளனர் என மேலைநாடுகளின் தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் கூறுகின்றன. ஆனால் அவர்களில் எவருமே என்னைப் போராட வரச் சொல்லி விட்டுப் போராட விடாமல் கக்கூஸ் கழுவச் சொன்னார்கள், குப்பை பொறுக்கச் சொன்னார்கள் என்று இதுவரை யாரும் திரும்பவில்லையாம்

ஆனால் இந்தியாவிலிருந்து இஸ்லாமிய கிலாபத்துக்காக போராடச் சென்ற மஜீத் என்ற இந்திய ஜிகாதியை (மாணவனை), வீரத்தோடு போராட விடாமல் ஏனைய அரபு ஜிகாதிகள் கக்கூஸ் கழுவவும், அவர்களால் தரம் குறைந்ததாகக் கருதப்படும் வேலைகளை மட்டும் செய்ய வைத்தார்களாம். அதனால் மனமுடைந்து போன மஜீத் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாராம். ஆனால் அவரை மும்பையில் உரிய மரியாதைகளுடன் வரவேற்றார்களாம் இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் (National Investigation Agency-NIA).


Indian IS recruit 'goes home after having 
to clean toilets'

An Indian student who travelled to Iraq to join the Islamic State group has returned home disillusioned after jihadists made him clean toilets and do other menial jobs, according to media reports. 
Areeb Majeed, 23, left for Iraq with three friends in late May amid fears by authorities that IS militants were attempting to recruit from India's large pool of young Muslim men. 
The engineering student flew home Friday to Mumbai where he was arrested and charged by India's elite National Investigation Agency (NIA) with terror-related offences. 
Majeed told NIA officers he was sidelined by the jihadists for whom he fetched water and performed other lowly tasks such as cleaning toilets, instead of taking part in the deadly offensive like he wanted, the Press Trust of India news agency reported. 
He phoned his family to say he wanted to come home after suffering an unexplained bullet wound for which he did not get proper medical attention, the agency said late Sunday. 
"Only after I begged them, I was taken to a hospital," he was quoted as saying by NIA officers. "There was neither a holy war nor any of the preachings in the holy book were followed." 
India's moderate population of 150 million Muslims have traditionally not been drawn into sectarian conflicts in the Middle East and elsewhere, but the case of the four raised concerns about online recruitment. 
Al-Qaeda announced in September a new chapter of its extremist movement charged with waging jihad in South Asia, prompting several Indian states to be placed on high alert. Tanvir Sheikh, the father of one of Majeed's friends who was still missing in Iraq, said he felt betrayed by his son. Sheikh said his son Fahad was offered a job in Kuwait but instead decided to travel to Iraq to join the extremists.
"He had got a job offer from Kuwait with a salary of three lakh rupees ($4,800) but he ignored that and instead took up arms. Now what happens to his future?" Sheikh told the Indian Express newspaper on Monday. 
"I feel let down by my son. He had a bright career ahead of him but he took advantage of our love and betrayed us." Radicalised foreigners have been drawn to the IS group, which has conducted a series of mass executions and other atrocities since launching its offensive in Iraq and Syria in June.

No comments: