Monday, November 10, 2014

வீரத்தமிழன் இராஜேந்திர சோழனைப் போற்றுவோம்!
முதன்முதலாக இலங்கை முழுவதையும் கைப்பற்றியது மட்டுமன்றி கங்கையும் கடாரமும் வென்று, சிங்களவர்களின் கொட்டத்தையும்  அடக்கிய  வீரவேங்கை இராஜேந்திர சோழனின்  ஆயிரமாண்டு நினைவு விழாவைத்  தமிழர்கள் மட்டுமன்றி இந்திய அரசும், தமிழரல்லாதோரும், பிற இயக்கங்களும்  (அவர்களின் உள்நோக்கம் என்னவாக இருந்தாலும் கூட) கொண்டாடுவது தமிழர்களுக்குப் பெருமையே.

யானை தன் தலையிலேயே மண்ணையள்ளிப் போடுவது போல், தமிழர்களின் முன்னோர்களை, அவர்களின் வரலாற்றை,  இக்காலப் பெரியாரிய, கம்யூனிச சித்தாத்தங்களின் அடிப்படையில் ஒப்பிட்டு, அவர்களையும் அவர்களின் வீரத்தையும், சாதனைகளையும் கொச்சைப்படுத்தி, திரித்து, அவமானப்படுத்தி, தமிழர்களை எந்தவித வரலாற்றுப் பாரம்பரியமுமற்ற காட்டுமிராண்டிகளாக்க முனையும் தீயசக்திகள் வேண்டுமானால் ராஜேந்திர சோழனைத் தூற்றட்டும் ஆனால் இலங்கையில்  ராஜேந்திர சோழனின் வீரவரலாற்றுடன் ஈழத்தமிழர்களின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளதால் என்னைப் போன்ற ஈழத் தமிழர்கள், முதன்முதலாக இலங்கை முழுவதையும் கைப்பற்றிய சோழ வேங்கை வீரத்தமிழன் ராஜேந்திர சோழனை எண்ணிப் பெருமைப்படுவதுடன் அந்த மாமன்னனை என்றும் போற்றுவோம்.

ராஜேந்திர சோழனை தூற்றுகிறவர்களின் பின்னணியில் தமிழர் எதிர்ப்புச் சக்திகளும்,
தமிழ்த்தேசியத்துக்கு எதிரான சதியுமுண்டோ என்றே எண்ணத் தோன்றுகிறது.  உண்மையில் பார்க்கப் போனால், சோழர்களின் வீழ்ச்சியின் பின்னால் தமிழரல்லாத,   கன்னட/தெலுங்கர்களாகிய  விஜயநகர ஆட்சியின் கீழ் தான்  தமிழர்களின் கோயில்கள் முற்று முழுவதுமாக சமக்கிருத மயமாக்கப்பட்டு தமிழ் வீதிக்கு வந்தது. சோழர் காலக் கல்வெட்டுகளில் எல்லாம் இக்காலத்தில் கோயில்களில் சாதாரணமாக பேசப்படும் வடமொழிச் சொற்களுக்குப் பதிலாகக் கூட *தூய தமிழ்ச்சொற்கள் தான் உள்ளன. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், தமிழர்களின் கோயில்களை சமக்கிருதமயமாக்கியவர்கள் ராஜ ராஜ சோழனோ அல்லது ராஜேந்திர சோழனோ அல்ல, அவர்களுக்குப் பின்னால் ஆண்ட தமிழரல்லாத திராவிடர்கள் தான்.

 சோழர் கல்வெட்டுகள்: 

சோழர் காலத் தமிழை அறியக் கல்வெட்டுகள் பேருதவி செய்கின்றன.முதலாம் இராசேந்திரனின் மால்பாடிக் கல்வெட்டுகள், தஞ்சைப் பெரிய கோயில் மதிற்சுவர்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள், வீர ராசேந்திரனின் திருமுக்கூடல் கல்வெட்டுகள், மூன்றாம் இராசேந்திரனின் திருவேதிபுரம்  கல்வெட்டுகள் என்று ஆயிரக்கணக்கில் கல்வெட்டுகள் கிடைக்கின்றனவடசொற்களை எழுதினால்வடமொழி எழுத்துகளை அகற்றிவிட்டுதமிழ் எழுத்துகளால் தமிழ் மொழி மரபுப்படி எழுத வேண்டும்’ என்ற இலக்கண வரையறையை நன்னூலில் காணலாம்பதவியல்’ என்று ஓர் இயலே அந்நூலில் உள்ளதுசோழர் காலக் கல்வெட்டுகளில் வடமொழிச் சொற்கள் தமிழாக்கம் செய்யப் பட்டிருத்தலைக் காணலாம். 

·        வடசொற்கள்       - சோழர் கல்வெட்டுச் சொற்கள்  
ஏகபோகம்  - ஒரு பூ  
தாம்பூலம் - சுருளமுது  
கர்ப்பக்கிரகம்        - உட்கோயில்அகநாழிகை 
         பரிவர்த்தனை       - தலைமாறு
    பரிவட்டம்  - சாத்துக்கூறை
    நைவேத்யம்          - அமுதுபடி
    அவிர்பலி   - தீயெறிசோறு
     கும்பாபிஷேகம்   - கலசமாட்டுதல்

விஜயநகர ஆட்சியாளர்களால் ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட ரெட்டிகளுக்கும், நாயுடுகளுக்கும், நாயக்கர்களுக்கும் தமிழர்களின் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதால் தமிழர்கள் நிலங்களை இழந்ததுடன், தமது முன்னோர்களின் ஆலயங்களில் தமது ஆளுமையையும் தெலுங்கு பேசும் பார்ப்பனர்களிடம் இழந்தனர். அப்படியிருக்க, இக்காலத்தில் தமிழ்நாட்டில் காணப்படும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும், சாதிப்பாகுபாடுகளுக்கும் இராஜேந்திர சோழனைத் தூற்றுவதன் பின்னணியில் தமிழர்களை எந்த வித வீரவரலாற்றுப் பாரம்பரியமற்றவர்களாக்கும் உள்நோக்கமும், தமிழர்கள் தமது தனித்துவமான, புகழ் மிக்க வரலாற்றின் அடிப்படையில் தமிழர்களாக ஒன்றிணைவதை விரும்பாத, தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத, “வெளியில் மட்டும் தமிழ்பேசும் தமிழர்களும்”  இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாதது.


 தொடரும்.... 1 comment:

Maasianna said...

N'alla pathivu thodarnthu ezhuthungal