Sunday, November 23, 2014

புதுடில்லி இந்து மாநாட்டை ஆரம்­பித்து வைத்தார் விக்னேஸ்வரன்!





வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், அவரும் ஒரு ஈழத்துச் சைவர் என்ற முறையில்  இந்த மாநாட்டில் கலந்து கொண்டதில் தவறேதுமில்லை. ஆனால்  இலங்கையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்கள் எவருமே இந்துக்களாகவோ, கிறித்தவர்களாகவோ இறக்கவில்லை, தமிழர்களாகத் தான் இறந்தார்கள் என்பதையும் அவர் மறந்து விடக் கூடாது. அதே வேளையில் தவிர்க்க முடியாத காரணங்களால், விரும்பியோ விரும்பாமலோ, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகள்  தமிழ்நாட்டுத் திராவிட அரசியல்வாதிகளின் சால்வைத் தலைப்பில் தொங்கியதால், சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று மட்டுமல்ல பிரியக் கூடாதவை  என்று நம்பும், பெரும்பான்மைச் சைவர்களைக் கொண்ட ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் பார்ப்பன எதிர்ப்பு, பெரியாரிய, திராவிடப் போராட்டத்தின் தொடர்ச்சி என்ற எண்ணம் தமிழ்நாட்டுக்கு வெளியே இன்றும் நிலவி வருகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் இந்திய மக்களின் ஆதரவைப் பெற ஈழத்தமிழ்த் தலைவர்கள் தவறி விட்டனர். அந்த தவறை முதலமைச்சர்  விக்னேஸ்வரன் திருத்திக் கொள்ள முயல்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
                                                                
இந்தியாவில், ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு வேண்டுமானால் பெளத்தம் இந்துமதத்தின் குழந்தையாக இருக்கலாம், ஆனால் சிங்களவர்களிடம் அந்தக் கதையெல்லாம் எடுபடாது.   இலங்கையில் இந்துக் கோயில்களை அழிப்பதும், கோயில்களை ஆக்கிரமிப்பதும், இந்துக் கோயில்களின் வரலாற்றைத் திரித்து, இராணுவ துணையுடன்  புத்தர் சிலைகளைப் புதைத்து, பின்னர் அவற்றைத் தோண்டியெடுத்துஅகழ்வாராய்ச்சி என்ற பெயரில் இந்துக் கோயில்களை புத்தர் கோயில்களாக்குவதும், சிங்கள பெளத்தர்களும், பெளத்த பிக்குகளும் தானே தவிர, கிறித்தவர்களோ அல்லது முஸ்லீம்களோ  அல்ல.  

இலங்கையில் இந்துமதத்துக்கெதிராக போர் தொடுப்பது பெளத்தம் தான். அந்தப் பெளத்தத்தை இந்துமதத்தின் குழந்தை என்று சில ஆர் எஸ் எஸ் காரர்கள் வர்ணிப்பதைப் பார்த்து, நான் மட்டுமல்ல சிங்களவர்களும் கூட சிரிப்பாய் சிரிக்கிறார்கள் என்பது தான் உண்மை.  அதை விட சிங்கள பெளத்தத்தின் படி, இந்துக் கடவுளர்கள் அனைவருமே புத்தருக்கு வேலைக்காரர்கள் தான். புத்தர் இந்துக்கடவுள்களின் அவதாரமென சிங்களவர்கள் கருதுவதில்லை.

இலங்­கையில் இந்­துக்கள் கடு­மை­யான நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­வ­தாக புது­டில்­லியில் நடை­பெறும் அனைத்­து­லக இந்து மாநாட்டில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரிவித்துள்ளார்.உலக இந்து காங்­கி­ரஸின், மூன்று நாள் அனைத்­து­லக இந்து மாநாடு நேற்­று ­முன்­தினம் புது­டில்­லியில் ஆரம்­ப­மா­னது.
இந்த மாநாட்டை திபெத் ஆன்­மீகத் தலைவர் தலாய்­லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஆகியோர் இணைந்து மங்­கள விளக்­கேற்றி ஆரம்­பித்து வைத்­துள்­ளனர். 
இந்­தி­ய­ ஆளும் பார­தீய ஜனதா கட்­சியின் மீது செல்­வாக்குச் செலுத்தும், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத் உள்­ளிட்ட அமைப்­பு­களின் தலை­வர்கள் பங்­கு­பற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மற்றும் வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் சத்­தி­ய­லிங்கம் ஆகியோர் உரை­யாற்­றினர். 
நேற்­று ­முன்­தினம் நடந்த அர­சியல் அமர்வு ஒன்­றுக்குத் தலை­மை­யேற்று உரை­யாற்­றிய வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், இலங்­கையில் 2009ம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்த பின்­னரும் கூட, அங்­குள்ள இந்துக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments: