Saturday, November 15, 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே!



தமிழரல்லாத பெரியார் ஈவேராவின் அடியாட்களும், தமிழ்நாட்டில் வாழும், பிறப்பால் தமிழரல்லாத, (வெளியில் மட்டும் தமிழ்பேசும்) திராவிட எச்சங்களும் திட்டமிட்டு, தமிழர்களின் முன்னோர்களைப் பழிக்கிறார்கள், தமிழர்களின் வரலாற்றைத் திரித்து இழிவு படுத்துகிறார்கள். ராஜ ராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் மட்டுமல்ல, பெரியாரின் முன்னோர்களின் இனத்தவர்களாகிய விஜயநகர அரசர்கள் கூடத் தான் பார்ப்பனர்களை ஆதரித்தனர். தமிழ்நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தனர், சோழர்கள் ஆண்டு பல நூற்றாண்டுகளின் பின்னர் தமிழகத்தை ஆண்ட அவர்கள் தமிழரல்லாத கன்னடர்களையும், தெலுங்கர்களையும் தமிழ் மண்ணில் குடியேற்றி, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமிழர்களை சாதியடிப்படையில் பிரித்து, தமிழர்களின் சொந்த மண்ணிலேயே தமிழர்களை நாதியற்றவர்களாக்கினர்.  

கன்னட, தெலுங்கு விஜய நகர ஆட்சியின் கீழ் தமது சொந்த நிலத்தையிழந்து, சாதியடிப்படையில் இழிவு படுத்தப்பட்டு, தமது சொந்தக் கிராமங்களிலேயே தமது நிலங்களை ரெட்டிகளிடமும், நாயக்கர்களிடமும், நாயுடுக்களிடமும் வேறு பல தமிழரல்லாத கன்னட, தெலுங்கர்களிடம் இழந்த தமிழர்களின் பரம்பரையினர் தான் சொந்த மண்ணில் வாழ வழியின்றி, ஆங்கிலேயர் காலத்தில் கூலிகளாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறினர். இன்று கூட தமிழ்நாட்டுக் கிராமங்களில் தமிழர்களை விட உயர்சாதித்  தெலுங்கு, கன்னட வம்சாவளியினர் நிலவுடைமைக்காரர்களாக இருப்பதற்கு அது தான் காரணம்

தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் இக்காலத்தில் காணப்படும் சாதிப்பாகுப்பாடுகளையும், நிலமற்ற ஏழைகளாகக் கோடிக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்வதையும் பார்த்து, பெரியாரிஸ்டுக்களுக்கும், திராவிடவாதிகளுக்கும்  உண்மையில் உள்ளம் பதைபதைத்தால், அதனால் அவர்களுக்குக் கோபமேற்பட்டால்,  அவர்களால் தூற்றப்பட வேண்டியவர்கள் விஜயநகர ஆட்சியாளர்களும் அவர்களின் பின்னர் தமிழ்மண்ணை ஆண்ட தெலுங்கு நாயக்கர்களும் தானே தவிர சோழர்கள் அல்ல.  ஆனால் அவர்கள் எவருமே விஜயநகர ஆட்சியாளர்களையோ அல்லது நாயக்கர்களையோ  வசைபாடுவதில்லை. அப்படி எதையும்  இணையத்தளங்களில் எங்குமே கண்டதில்லை. ஆனால் சோழர்களை, அதிலும் குறிப்பாக ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற தமிழ் மாமன்னர்களை மட்டும் தான் வசைபாடுகிறார்கள். ஏனென்றால் உலகம் முழவதும் வாழும் தமிழர்கள் ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் போற்றுகின்றனர், தமிழர்கள் அவர்களின் வீரத்தை எண்ணிப் பெருமைப் படுகின்றனர்.  மாமன்னன் ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தூற்றுகிறவர்களின் நோக்கம் என்னவென்று உண்மையான தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க  வேண்டும்.

ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தூற்றுகிறவர்களின்  பின்னணியைப் பார்த்தால் , இத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் இன்றும் தமது மொழி, கலாச்சாரத்தை மறக்காமல், தமது முன்னோர்களின் தாய்மொழியை வீட்டில் பேசிக்கொண்டே,, வெளியில் மட்டும் தமிழைப் பேசும் திராவிடத்தமிழர்கள்முன்னணியில் இருப்பதை தமிழர்கள் ஆராய்ந்து பார்த்தால் அறியலாம்.  நான் என்னுடைய அனுபவத்தில் அறிந்து கொண்ட உண்மை அது. ஏனென்றால் எந்த உண்மையான தமிழனுக்குப் பிறந்த எவனும்  தனது முன்னோர்களை, அவர்கள் எவ்வளவு தான் கொடியவர்களாக இருந்தாலும் தூற்ற  மாட்டான் என்பது தான் உண்மை.
Gangaikonda Cholapuram (1025)
தமிழ்நாட்டில் மட்டுமன்றி, அக்கால வழக்கப்படி இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும்,  இலங்கையிலும் கூடத் தான் சாதிப்பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருந்தன. அரசர்கள் சாதிப்பாகுபாட்டை நீக்கவில்லை, அதை ஒழிக்கவும் முயலவுமில்லை . 
  சாதாரண ஏழைகளையும், விவசாயிகளைத் துன்புறுத்தியும், வரிவிதித்தும், அந்த வருமானத்தில், மதநம்பிக்கையின் காரணமாக  பிராமணர்களையும், பிக்குகளையும் ஆதரித்தனர். பெருமளவு பணத்தை அவர்களுக்காகச் செலவழித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெரிய கோயில்களையும், விகாரைகளையும் கட்டினர். அவர்களுக்குப் பல கிராமங்களைத் தானமாக அளித்தனர். ஆனால் எந்த ஒரு சிங்களவனும் இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்களைத் தூற்றுவதில்லை. சிங்களவர்கள் தமது முன்னோர்களின்  வரலாற்றை, அவர்களின்  அரசர்களின் வீரச் செயல்களை எண்ணிப் பெருமைப் படுகிறார்கள். அது மட்டுமன்றி இலங்கையை ஆண்ட தமிழ், கலிங்க மன்னர்களின் பெயர்களை,வரலாற்றைத் திரித்து அவர்களைக் கூடச் சிங்களவர்களாக்குகின்றனர்

ஐரோப்பாவிலும்  அரசர்களின் ஆட்சியிலும் பிரபுக்களும்,  கத்தோலிக்க, கிறித்தவ குருமார்களும் அளவு கடந்த செல்வத்தையும், செல்வாக்கையும் அனுபவிக்க சாதாரண மக்கள் ஏழ்மையில் உழன்றனர். ஆனால் எந்த ஐரோப்பியனும், தமிழ்நாட்டில் பெரியாரிஸ்டுகளும், திராவிட வீரர்களும் செய்வதைப் போன்று வரலாற்றைக் காரணம் காட்டி தமது முன்னோர்களைத் தூற்றுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும்  தமது வரலாற்றுச் சின்னங்களை, தேவாலயங்களைப் பாதுகாக்கின்றனர். அவற்றை எண்ணிப் பெருமைப்படுகின்றனர்.  சில நூறு வருடங்கள் பழமை வாய்ந்த வெறும் மரத்தினாலான தேவாலயங்களைக் கூடப் பெரிதாக வியந்து  பெருமைப் படுகிறார்கள். முன்னாள் கம்யூனிஸ்டுக்களான ரஷ்யர்கள் கூட அவர்களின் வரலாற்றுச் சின்னங்களை, தேவாலயங்களைக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து திருத்தம் செய்கின்றனர். அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அவற்றை பற்றிப் பீற்றிக் கொள்ளவும் அவர்கள் தவறுவதில்லை
St. Peters Basilica (1506)
ஆனால் ஐரோப்பிய தேவாலயங்களுடன் ஒப்பிடும் போது, அவர்களின் வரலாற்றுக் கட்டிடங்களை அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, பழமையும், கட்டிட, தொழில்நுட்ப, சிற்பக் கலைகளும் நிறைந்த தமிழர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை,  அந்த மாபெரும் கோயில்களை அவற்றின் பெருமையையும், அவை சாதி மத வேறுபாடின்றித் தமிழர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர்களின் சொத்துக்கள் என்ற கருத்தையும் எதிர்க்கும்பகுத்தறிவுவாதிகளும்தமிழ்நாட்டில் உண்டு.  இன்று சிலை வழிபாட்டை வெறுக்கும் முஸ்லீம்களாக மாறியுள்ள இந்தோனேசியர்கள் கூட, தமது முன்னோர்களின் இந்து -பெளத்த கோயில்களை தமது வரலாற்றுச் சின்னங்களாகப் பெருமையுடன் பாதுகாக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள சிலமுற்போக்குகளுக்கு’  இந்தோனேசிய முஸ்லீம்களுக்கு உள்ள புரிந்துணர்வு அல்லது பகுத்தறிவு  கூடக் கிடையாதோ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

ஏன், இக்காலத்திலும் ஐரோப்பிய அரச குடும்பங்கள் என்ன தான் தவறுகள் செய்தாலும் உரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களை தமது பெருமை மிகுந்த வரலாற்றின்  அடிப்படையாகப் பார்க்கின்றனரே தவிர அவர்களைத் தூற்றுவதில்லை.  ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான், வந்தான், வரத்தான்களும், தமிழ்நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கவும், கழுவித் துடைத்து வயிற்றைக் கழுவ வந்தவர்களின் வாரிசுகளும்(அவர்களின் தமிழ் வாலாயங்களும்) கூடத்  திராவிடர்கள் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, தமிழர்களின் முன்னோர்களை அதுவும், தமிழ் வீரத்தின் அடையாளமாக, கங்கை முதல் கடாரம் கொண்ட மாமன்னன் ராஜேந்திர சோழனை, அவனது 1000 ஆவது  நினவு ஆண்டில் கூடத் தூற்றுகின்றனர். அதையும் கூட, வழக்கம் போல, 'ஞே' என்று பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பார்த்து நெஞ்சு பொறுக்குதில்லையே!




No comments: