Sunday, October 26, 2014

மோடி அரசு சிங்கள இனவாதியின் நினைவாக முத்திரை வெளியிட்டு கெளரவம்!


இரண்டாயிரமாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழும் மக்களுக்கு மத்தியில் நிலவிய இன, மத நல்லுணர்வையும் சமாதானத்தையும் தனியொருவனாகக் கெடுத்த இனவாதியும் இலங்கையில் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பையும், இனவாதத்தையும் கக்கிய அநாகரிக தர்மபாலா என்ற சிங்களவரின் நினைவாக இன்று முத்திரை வெளியிட்டுக் கெளரவித்துள்ளது இந்திய அரசு. 

இலங்கையின் வரலாற்றில் இலங்கை மக்களின் மத்தியில் சாதிப்பிரிவுகள் இருந்தனவே தவிர இனப்பாகுபாடு இருந்ததில்லை. இலங்கையை ஆண்ட எந்தவொரு சிங்கள அரசனோ அல்லது தமிழரசனோ தன்னை ஆரியனாகவோஅல்லது திராவிடனாகவோ அல்லது இப்போதுள்ள மொழிவழி இனத்துவேச அடிப்படையில் நான் சிங்களவன் அல்லது நான் தமிழன் என்று தம்மை அடையாளப்படுத்தியது கிடையாது.  சிங்கள அரசகுடும்பத்துக்கும், தமிழ்ப்  பாண்டிய அரசகுடும்பத்துக்கும்  இரத்த உறவு எப்பொழுதும் இருந்து வந்தது  என்பது  வரலாற்று உண்மை. ஆங்கிலேயர்கள் இலங்கையை வந்தடையும் வரை அப்படியான இனவாதப் பாகுபாடுகள் இலங்கை மக்களிடம் இருக்கவில்லை. 

இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னால் அனுராதபுரத்தில்  நடைபெற்றதாகக் கூறப்படும் துட்டகைமுனு- எல்லாளன் யுத்தம் கூட பெளத்தர்களுக்கும் சைவர்களுக்கும் இடையிலான போரே தவிர தமிழர்களுக்கும்  சிங்களவர்களுக்கிடையே  நடைபெற்ற யுத்தமல்ல. ஏனென்றால் துட்டகைமுனுவின் படையில் தமிழர்களும்எல்லாளனின் படைகளில் சிங்களவர்களும் போரிட்டனர் என்பதற்கு ஆதாரங்கள் மகாவம்சத்திலேயே உண்டு.இலங்கை மக்களைப் பிரித்தாளுவதற்காக ஆங்கிலேயர் விதைத்த இனவாத நச்சு விதைக்கு நீரூற்றி வளர்த்து , இலங்கையில் இனவாதத்தைப் பரப்பிஇன மத அடிப்படையிலான இயக்கங்களை நிறுவி  இலங்கை மக்களைச் சிங்களவர்தமிழர் முஸ்லீம்கள் என்று பிரித்து விட்டுச் சென்ற பெருமைக்கு உரியவர் தான் இந்த அநகாரிக தர்மபாலா.

சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற எண்ணக் கருத்தைச் சிங்களக் கிராமங்களின் பட்டி தொட்டிகளிலெல்லாம் போய்ப் பரப்பி இலங்கையில் சிங்களவர்களுக்கு இனவெறியையூட்டிய பெருமை இவரைத் தான் சாரும்.  அமெரிக்க நாசி ஒல்கொட்அன்னிபெசண்ட் மற்றும் சில தமிழ்நாட்டின் சாதிவெறி பிடித்த  பார்ப்பனர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தியோசாபிகல் (பிரம்மஞான சபையின் ) குழுமத்தின உறுப்பினர் இவர்.

அக்காலத்தில் ஆரியக் கொள்கையின் அடிப்படையில்  *ஹிட்லரையும் ஆதரித்தவர்கள் இவர்கள். இந்த ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் தான் இலங்கையில் "பெளத்தத்தின் மறுமலர்ச்சிக்கு அடிகோலியவர்" எனச் சிங்களவர்களால் போற்றப்படுபவர் . அவர்களுடன் கூட்டுச் சேர்ந்த சிங்களவராகிய தர்மபாலா சிங்களவர்களும் ஆரியர்களே, சிங்கள மொழி ஆரியமொழியைச் சார்ந்தது, அதாவது இந்தோ- ஐரோப்பிய மொழி, அதனால் அது தமிழை விட உயர்ந்தது. சிங்களவர்கள் இனத்தால் ஆரியர்கள் ஆகவே அவர்கள் திராவிடர்களாகிய தமிழர்களை விட உயர்ந்தவர்கள் என்ற  இனவாதக் கருத்தை சிங்களவர்கள் மனதில் பரப்பி தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் வெறுப்பையும் வேற்றுமையையும் வளர்த்தவர் தான் இந்த தர்மபாலா. 

அது மட்டுமன்றி, அவர் தமிழர்களை விட முகம்மதியர்களைக் கூடுதலாக வெறுத்தார். முஸ்லீம்கள் இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் அல்ல, அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் சிங்களவர்களுக்கு மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் அன்னியர்கள். சிங்களவர்கள் உயர்ந்த ஆரிய இனத்திலிருந்து வந்தவர்கள் , ஆனால் முகம்மதியர்கள் அரேபியாவில் தான் தமது முன்னோர்களைத் தேடுவார்கள். பிரித்தானியர்கள் எவ்வாறு ஜெர்மானியர்களுக்கு எதிரிகளோ அவ்வாறே சிங்களவர்களுக்கு முகம்மதியர்கள் எதிரிகள். இஸ்லாம் என்ற இந்த அழிவு வந்திராது விட்டால் 
 இன்று ஆப்கானிஸ்தானில் கந்தகாரிலும், காபூல் பள்ளத்தாக்கிலும் புத்தமதம் தான் கோலோச்சிக் கொண்டிருக்கும் என்று முகம்மதியர் மீது வெறுப்பை வளர்த்த அநகாரிக தர்மபாலா தான் இன்றும் சிங்களவர்களால் போற்றிப் புகழப்படும் தேசியத் தலைவர்களில் ஒருவர். அத்தகைய இனவெறி பிடித்த சிங்கள பெளத்த இனவாதிக்கு இன்று முத்திரை வெளியிட்டுக் கெளரவித்துள்ளது இந்தியா.

இலங்கைக் கரையில் எது ஒதுங்கினாலும் அதனுடன் உறவு கொள்ள சிங்களவர்கள் தயங்குவதில்லை  என்று வேடிக்கையாக அதாவது சிங்களவர்களுடன் ஒப்பிடும் போது தமிழர்கள் பழமைவாதிகள் என்பதைச் சுட்டிக் காட்டக் குறிப்பிடுவதுண்டுஅத்துடன் ஏனைய ஐரோப்பியர்களை விட  போத்துக்கேயர்கள் இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் தமது படைவீரர்களும்மாலுமிகளும் உள்ளூர் மக்களுடன் கலப்பதை ஊக்குவித்தனர்.  அத்துடன் கத்தோலிக்க மதமும் இனக்கலப்பை  ஊக்குவித்ததாலும் சிங்களவர்களில் சிலர்  கொஞ்சம் மாநிறமாக  இருப்பதுண்டு.  அதனால் அதை உதாரணமாகக் காட்டி, சிங்களவர்கள் ஆரியர்கள், வெள்ளை நிறமானவர்கள். ஆனால் தமிழர்கள் திராவிடர்கள், கருப்பு நிறமானவர்கள் என இலங்கை வெளிநாட்டமைச்சு பல வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பல ஆண்டுகளாகக் கூறி வந்தார்களாம். எல்லா வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கும் இந்தச் செய்தி மறக்காமல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் தமிழராகிய கதிர்காமர் வெளிநாட்டமைச்சராகவும், சந்திரிகா பண்டாரநாயக்கா சனாதிபதியானதும் அந்தப் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்தி விட்டார்களாம், ஏனென்றால் இரண்டுபேருமே நிறத்தில் அண்ணன் தங்கை போலிருப்பார்கள். 

அந்தக் காலகட்டத்தில், வெள்ளைக்காரர்களோடும், தமிழ்நாட்டில் தியோசோபிகல் சொசைற்றி என்ற பெயரில் இயங்கி வந்த நாசி அபிமானிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆரியராக ஆசைப்பட்டவர்களில் ஒருவர் தான் கண்டிச் சிங்களவர்களால், தம்மை விடச் சாதியில் குறைந்தவர்களாகக் கருதப்படும் கரையோரச் சிங்களக் குடும்பத்தில் பிறந்த டொன் டேவிட் ஹேவவித்தரான தர்மபாலா. இவரைப் போலவே சமுதாயத்தின் அடிமட்டத்திலுள்ள சாதியினர் அல்லதுகுழுவினர் தம்மை மேல்சாதியினராக அல்லது மேல்மட்டத்தினராகக் காட்டுவதற்காகதம்மை உயர்த்துவதற்காகஉயர்ந்த சாதியினரின் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடைப்பிடிப்பதும் அல்லது தமது சாதியை ஏதாவது புராணக் கதைகளுடன் தொடர்பு படுத்தி தமது மூதாதையர் அந்தப் புராண காலக் கடவுளின் பரம்பரையினர் எனவும், சட்டியிலிருந்து வந்தோம், பெட்டியிலிருந்து வந்தோமென அனேகமாக எல்லாத் தமிழ்ச் சூத்திரர்களும் புருடா விடுவதை நாம் இன்றும் தமிழ்நாட்டில் காணலாம்.

அனகாரிக தர்மபால வெள்ளையர்களுடனும் ஆரியப்பிராமணர்களுடனும் தனது நட்பைத் தொடரவும்புத்தமதத்தைப் பரப்பவும் சிங்களவர்களும் ஆரியர்களே என்று வாதாடினார் அதே காரணத்துக்காகத் தான் ஜே ஆர் ஜெயவர்த்தனா போன்ற சிங்களத் தலைவர்களும் இந்தியாவின் தலைவர்களுக்கு சிங்களவர்கள் ஆரியர்கள் என்று படம் காட்டினார்கள்பல வட இந்தியர்களும் இணையத்தளங்களில் அவ்வாறே பிரச்சாரங்களும்  செய்கின்றனர்.  சில தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும் சிங்களவர்கள் ஆரியர்கள், எனவும்  'அவாள்'களின் ஆட்களென நம்புகிறார்கள் போலிருக்கிறது. அதனால் தான் பிறப்பில் கிறித்தவரான சிங்களவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு பொன்னாடை போர்த்தி சரியாசனம் கொடுத்து வரவேற்ற காஞ்சி சங்கராச்சாரி ஒரு தமிழ்நாட்டுத் தமிழனை அதுவும்  அவர் ஒரு மந்திரியாக இருந்தும் கூட தனக்கு கீழே கைகட்டி நிலத்தில் இருக்க வைத்து வேடிக்கை பார்த்தாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.  

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பெரியாரின் பார்ப்பனர்களுக்கெதிரான திராவிடர்களின் போராட்டத்தின் தொடர்ச்சியென நினைத்த இந்தியாவில் அரசியல், ஊடக, பொருளாதார பலம் வாய்ந்த ஆரியப் பார்ப்பனர்களும், சிங்களவர்களும் தம்மைப் போல் ஆரியர்களென நம்பி, ஈழத்தமிழர்களுக்கெதிராக சிங்களவர்களுக்கு ஆதரவளித்து தமிழ்நாட்டுத் திராவிட வீரர்கள் மீது அவர்களுக்குள்ள ஆத்திரத்தை, பெரியாரிசம் என்றால் என்னவென்றே தெரியாத ஈழத்தமிழர்களைப் பழிவாங்கித் தீர்த்துக் கொண்டார்கள். அதிலும் சிலர் அந்தப் பழிவாங்கலை இன்னும் தொடர்கிறார்கள். 

அது ஒருபுறமிருக்க, உண்மை என்னவென்றால் சிங்களவர்கள் ஆரியர்களல்ல. அவர்கள் பல்லினக் கலப்புக் கொண்ட கலப்பினத்தவர்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் திராவிடக் கலப்பினத்தவர். ஆனால் இன்று அவர்கள்  து மிழ் அல்லது திராவிட அடையாளத்தை மட்டுமல்ல, தமிழர்களையே வெறுக்கிறார்கள்.

தமிழர்களிடமிருந்து  கலைகலாச்சாரம்தமிழ்ச்சொற்கள்இலக்கணம். ஆடைஅணிகலன்கள்உணவுப்பழக்க வழக்கங்கள் என்ப‌வ‌ற்றை இர‌வ‌ல் வாங்கியிருந்தாலும் அவ‌ற்றில் சில‌ மாறுபாடுக‌ளைச் செய்து கொண்டு த‌மிழ‌ர்க‌ள் தான் அவ‌ற்றையெல்லாம் சிங்களவர்க‌ளிட‌மிருந்து இர‌வ‌ல் வாங்கிய‌தாக‌ த‌ம்ப‌ட்ட‌ம் அடித்துக் கொண்டு  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமுள்ள  பார‌ம்ப‌ரிய‌ தொட‌ர்பை திட்ட‌மிட்டு ம‌றுக்கிறார்க‌ள். சிங்கள‌ பெள‌த்த‌ பிக்குக‌ள் த‌மிழ்க்க‌லாச்சார‌ப் பாரம்பரியங்களை வரலாற்று விழுமியங்களை அழிக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களின் வரலாற்றை அரச உதவியுடன் திரிக்கிறார்கள். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இவ்வளவு பாரம்பரிய வரலாற்றுத் தொடர்புகளிலிருந்தும் சிங்களவர்கள் இன்று தமிழினத்தை இலங்கையில் அழித்தொழிக்க முயல்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் தொடக்கி வைத்த பெருமை இனவாதத்தை இலங்கையில் சிங்களக் கிராமங்களில் எல்லாம் சென்று பரப்பி வளர்த்து விட்ட அநகாரிக தர்மபாலாவுக்குத் தான் சேரும். அவருக்குத் தான் இந்தியாவின் மோடி அரசு நினைவு முத்திரை வெளியிட்டுக் கெளரவித்துள்ளது. 

ANAGARIKA DHARMAPALA ON OTHER RELIGIONS: 

"The Bhikkhu Sangha became a universal brotherhood, and the refuge of the high and the low. All Asia heard the law of compassion, the religion of wisdom was preached to all, and the Dhamma of Karuna and Pragna was accepted by men and Gods. Jehovah, Allah, Vishnu, Shiva, Kali, Durga, Jesus were names not yet heard in the civilized world. The European races with the exception of Romans and Greeks were then in a state of Barbaric paganism. The ancestors of the British were then living naked in the forest. The Nordic races were still savages........ 
The destructive hordes of Islam had then not been born. Buddhism was then flourishing in Gandahar, Afghanistan, Kabul Valley and Turkistan. Two centuries later a new factor came into existence in India which helped to destroy the individuality of the Buddha Dharma. Kumarila began to preach his new doctrine which weakened the power of the Bhikkus. His successor was the Malabar Brahmin Sankara. Driven out from his native land, young Sankara came to Jubbulpore and was admitted to a monastery where he learnt Buddhism. Having studied the Upanishads, he gave a new interpretation to the latter. He poured new wine into old bottles. 
 "The Muhammadans, an alien people who in the early part of the nineteenth century were common traders, by Shylockian methods became prosperous like the Jews. The Sinhalese, sons of the soil, whose ancestors for 2,358 years had shed rivers of blood to keep the country from alien invaders, . . . today . . . are in the eyes of the British only vagabonds.... The alien South Indian Muhammadan comes to Ceylon, sees the neglected, illiterate villagers, without any experience in trade, without any knowledge of any kind of technical industry, and isolated from the whole of Asia on account of his language, religion, and race, and the result is that the Muhammadan thrives and the sons of the soil go to the wall." (Guruge. ed., Return to Righteousness p 540) "
Dhamapala was duly interned in Calcutta in 1915 for his political efforts and his previous activities in Ceylon."


3 comments:

தமிழானவன் said...

இதற்குத்தான் அவர்களை ஆதரிக்க வேண்டாமென்று கத்திக் கொண்டிருக்கிறோம்

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

viyasan said...

@ தமிழானவன் & Yarlpavanan Kasirajalingam,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.