Sunday, October 12, 2014

கலைஞர் கருணாநிதியை ஊழல் விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய ஈழத்தமிழர்!இலங்கைத் தமிழர்களின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், புகழ்பெற்ற குற்றவியல் வழக்குரைஞராகவும் திகழ்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை காங்கேயர் பொன்னம்பலம் அவர்களின் வாதத் திறமையால் தான் கோதுமை இறக்குமதி சம்பந்தமான ஊழல்களை விசாரிக்கவென இந்திய அரசு கலைஞர் கருணாநிதிக் கெதிராக நிறுவிய சர்க்காரியா ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து காப்பாற்றப்பட்டார் என இலங்கையிலிருந்து வெளிவரும் Ceylon Today எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது, அத்துடன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரை ஊழல் விசாரணைகளிலிருந்து விடுவிக்க ஈழத்தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் செயல்பட்டது போன்று செல்வி. ஜெயலலிதாவைப் பாதுகாக்க இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தவறி விட்டதாகவும் அது கருத்து வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியை இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. இதைப் பற்றி மேலும்  ஆராய்ந்து பார்க்கும் போது, கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாதாடியது மட்டுமன்றி, ஒரு காலத்தில் இலங்கைத் தமிழர் தலைவர்களும், ஈழத்தமிழர்களும் எந்தளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும்  கலைஞர் கருணாநிதி மீதும், நெருங்கிய தொடர்பும், பரிவும் பாசமும் வைத்திருந்தார்கள் என்பதை உணர முடிகிறது

ஈழத்தமிழர் தலைவரும் சிறந்த குற்றவியல் வழக்குரைஞருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம், சர்க்காரியா ஆணைக்குழுவை தனது வாதத்திறமையால் அசர வைத்ததற்கு நன்றி தெரிவிக்குமுகமாக சென்னை மரீனா கடற்கரையில்  கலைஞர் கருணாநிதி நடத்திய கூட்டத்தில் அவருக்கும், தனக்குமிடையேயிருந்த நட்பை கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்குமிருந்த நட்புடன் ஒப்பிட்டு நன்றி செலுத்தினாராம் கலைஞர்.  

அதே ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை தான், சிங்களவர்களின் திட்டமிட்ட சதியையும்,  உண்மை நிலையையுமறியாமல் இலங்கையில் *மலையகத் 
தமிழர்களின் குடியுரிமையைப் பறிக்க காரணமாக இருந்தாரென அபாண்டமாகக்
 குற்றஞ்சாட்டுகின்றனர் தமிழ்நாட்டிலுள்ள  சில சிங்களச் சார்பு ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதிகள்.( *ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா?)

“தமிழ் நாட்டு மண்ணில் பிறந்த பலருக்கு புகலிடம் அளித்த புண்ணிய பூமி எமது இலங்கை  மண். பாக்குநீரிணையைக் கடந்து வந்த பலர் செல்வச் செழிப்பை தேடும் வாய்ப்பினை எமது நாட்டில் தான் பெற்றுக் கொண்டனர். 

காயல்பட்டினம்கீழக்கரை முதல் தொண்டிவேதாளைநெல்லை தஞ்சைமதுரைசென்னைநீண்டுசெல்லும் பரந்துவிரிந்த இந்த புவியியல் நிலத் தொடரிலிருந்து அன்று செல்வபுரியாகத் திகழ்ந்த லங்காபுரிக்கு திறந்த கைகளோட வந்தவர்கள்நிறைந்த கைகளோடு தாய்நாடு திரும்பியவர்கள் என்பது மறக்கவியலாத - மறைக்கவியலாத வரலாற்று உண்மையாகும்.

எமக்கு ஆரம்ப காலத்தில் சோறுபோட்ட ஊரப்பா ஸ்ரீலங்கா என்று நாம் காயல்கீழக்கரை ஏகும்போதெல்லாம் அங்குள்ளவர்கள் எம்மை ஆசையோடு வரவேற்பது மனம் நெகிழும் நிகழ்வாகும்கொழும்புக்காரக வந்திருக்காஹ சிலோன்காரஹ வந்திருக்காஹஅவகள நன்றா கவனியுங்க’ என்று காலை நாஷ்டா வழங்குவதற்கு முண்டியடித்துக்கொள்வோர் பலர்இவைகளை கேட்கும் போது எம்மனம் மகிழ்ச்சியாய்த் துள்ளும்இந்தியாவிலிருந்து வந்தவர்களில் சிலர் அரசியல் களத்தில் இறங்கினர்வெற்றியும் கண்டனர்வேறு சிலர் கலைகலாசாரப் பின்னணியோடு இணைந்து புகழ்பெற்றனர்.
தந்தை செல்வா உடன் மணவைத் தம்பி 

அவ்வாறு இலங்கைக்கு வாழ்வு தேடி வந்த தமிழ்நாட்டவர்களில் ஒருவராகிய மணவைத்தம்பி என்பவர் கலைஞர் கருணாநிதியின் சார்பாக இலங்கை சென்று இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் புகழ்பெற்ற வழக்குரைஞராகவும், மகாராணியின் வழக்குரைஞராகவும் (Queen’s Counsel)  தகுதி பெற்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களை சர்க்காரியா கமிசன் விசாரணையில் கலைஞர் கருணாநிதிக்காக வாதாடுமாறு கேட்டுக் கொண்டாராம். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னைக்குச் சென்றார் திரு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள்.

சர்க்காரியார் ஆணைக்குழு முன் தோன்றி சாதுரியமாக வாதாடினார் ஜீ. ஜீ. ஆங்கிலேயருக்கும் ஆங்கிலம் கற்றுத் தரக்கூடிய அபார திறமை மிக்கவர் ஜீ. ஜீ. ‘Silver Tongue’ (வெள்ளிக் குரலோன்) என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்டவர்தான் ஜீ. ஜீ. அவருடைய அற்புதமான வாதத் திறமையினால் கலைஞர் கருணாநிதிக்கு விடுதலை கிடைத்தது." என்கிறது திரு.மணவைத்தம்பி அவர்களைப் பற்றிய நினைவுக் கட்டுரையொன்று.
அவர் சர்க்காரியா ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி வாதாடுவதை பார்வையிடுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சட்டத்தரணிகள் வந்திருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலங்களாக ஆணைக்குழுவின் முன்னால் வாதாடிய ஜீ.ஜீ.பொன்னம்பலம், கருணாநிதிக்கு எதிரான வழக்கை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வழி செய்தார். அதன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த வழக்கு நீர்த்துப் போனது.

திரு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் உதவிக்கு, வழக்குரைஞர் கட்டணமாக பெருமளவு பணத்தை அவர் விரும்பும், எந்த  நாட்டுப் பணத்திலும்  அளிக்க கலைஞர் கருணாநிதி தயாராக இருந்த போதும், கலைஞரிடமிருந்து ஒரு சதத்தைக்  கூடப் பெற்றுக் கொள்ள மறுத்தது மட்டுமன்றி , பயணச்  செலவுகளையும் கூட தனது செலவில் ஏற்றுக் கொண்டாராம் ஈழத் தமிழர் தலைவர் கணபதி காங்கேயர் பொன்னம்பலம். 
2 comments:

வலிப் போக்கன் said...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படாமலா போய்விடுவான்.

Pararajasingham Balakumar said...

அகப்பட்டாலும் உயர்நீதி மன்றம் , உச்சநீதி மன்றம் என  ஜாமீன் வாங்கி வெளியில் வந்து விடலாமே !