Friday, October 10, 2014

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர்??


எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனேஎன்று பாடினார் பாரதிதாசன், அதன்படி பார்த்தால் தமிழர்கள் எந்தநாட்டில் பிறந்திருந்தாலும் தமிழர்களுக்கிடையே பொதுவான ஒற்றுமையிருக்க வேண்டும். அது போதாதென்று ஈழத்தமிழர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் தொப்புள்கொடி உறவு என்றெலாம் கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களை புரிந்து கொள்ளவே முடியாமலிருக்கிறதே, ஏன்?


உதாரணத்துக்கு,  தமிழரல்லாத நடிகர் ஒருவரை  தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராக்கும்  செய்தியை/கருத்தை எடுத்துக் கொள்வோம். உண்மையில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு தமிழுணர்வு இருந்தால் 
 அந்தக் கருத்தைக் கேட்டதுமே, அவர்களுக்கு கோபம் 
 பொத்துக் கொண்டு வரவேண்டும். குறைந்த பட்சம் வலைப்பதிவுகளிலாவது ஒரு சிலர் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம்.  இலங்கையில், எந்த வித அதிகாரமுமற்ற வடமாகாணசபைக்குக் கூட, தமிழரல்லாத ஒருவர் - அவர் எவ்வளவு காலம் வடக்கில் வாழ்ந்திருந்தாலும், எத்தனை படங்களில், ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்றிருந்தாலும்முதலமைச்சர் ஆகலாம் என்று ஏப்ரல் Fool  க்குக் கூட யாரும் துணிந்து கூறமாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் என்னடாவென்றால் அதை உண்மையாகவே பலரும்  கூறுவது மட்டுமல்ல, ஏழுகோடித் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு தலைமை தாங்கவும், தமிழ்நாட்டை வந்து ஆளுமாறும் அந்த தமிழரல்லாத நடிகரைப்  பலரும் கெஞ்சிக் கேட்கிறார்களாம்அவரும் என்னடாவென்றால்குரங்குப் பீயை மருந்துக்குக்  கேட்டால் கொப்புக், கொப்பாய்த் தாவுமாம்என்ற ஈழத்துப் பழமொழி மாதிரி, இன்றைக்கு, நாளைக்கு என்று மழுப்புகிறாராம், என்ற செய்தியை வாசித்ததுமே, எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை

உண்மையில்சினிமாவில் காட்டிய சில்லறைச் சேட்டைகளை விட, தமிழ்நாட்டையும், தமிழர்களையும் வந்து ஆளுமாறு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்குமளவுக்கு தமிழுக்கும், தமிழர்களுக்கும் அந்த நடிகர் என்ன செய்தார் என்று  எனக்குத் தெரியாது, யாரும் தெரிந்தவர்கள் விளக்குங்கள். இதில் பரிதாபம் என்னவென்றால் யாராவது தமிழரல்லாத நடிகர்களை விட்டால்  தமிழ்நாட்டை ஆள்வதற்கு, தமிழ்நாட்டில்  வேறொரு தமிழ்ப்பயலும் கிடையாதா என்று, எந்த தமிழ்நாட்டுத் தமிழனும் சும்மா வேடிக்கைக்காகவேனும் கேட்பதாகத் தெரியவில்லை. அதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சேர, சோழ, பாண்டியர்கள் இறுதிவரை தமக்கிடையே சண்டை பிடித்துக் கொண்டு, ஒருவரையொருவர் அழிக்க, மற்றவர்களின், தமிழரல்லாத எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்தார்களே தவிர ஒற்றுமையாக இருந்ததில்லை. அந்த சாபக்கேடு இன்றும் சாதிவடிவில் தொடர்கிறது. அதனால் தான் வந்தான் வரத்தான் எல்லாம்  தமிழ்நாட்டை ஆளத்துணிவது மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களே, ஒவ்வொருவர் மீதுமுள்ள வெறுப்பாலும், சாதிப்பற்றாலும், இன்னொரு தமிழனைத் தலைவனாக ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாகதமிழரல்லாதவர்களை தமது தலைவர்களாக தயக்கமின்றி, ஆவலோடு ஏற்றுக் கொள்கிறார்கள். அது போதாதென்று, சந்தர்ப்பத்துக்கேற்றவாறு தமிழர்களைத் திராவிடர்களாக்கி, திராவிடர்களைத் தமிழர்களாக்கி, தமிழ்நாட்டைத் திராவிடர்களனைவருக்கும் பங்குபோட்டுக் கொடுத்துக் குழப்பியடிக்கும் திராவிடவாதிகளும் இந்தப் பரிதாப நிலைக்குக் காரணமாகும் என்றால் அது மிகையாகாது.

இந்தியாவிலேயே அந்த மாநிலத்தைச்சாராத, அந்த மாநிலத்தின் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள், அந்த மாநிலத்தை ஆளக் கூடியதாக இருக்கும் ஒரேயொரு மாநிலம் தமிழ்நாடு மட்டும் தானாம். அத்தகைய இளிச்சவாய்த்தனம் நிறைந்த 'பெருந்தன்மை' ஈழத்தமிழர்களிடம் இல்லை என்பதை நினைக்கும் போது உண்மையில் பெருமையாக இருக்கிறது

இது தான் சாட்டென்று சில ஈழத்தமிழர் எதிர்ப்பு அரைவேக்காடுகள் வந்து எனது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம், ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும்தமிழர்என்ற  சொல்லால் எங்களை அடையாளப்படுத்தும் வரை, எந்த நாட்டில் வாழும் தமிழர் சம்பந்தமான விடயங்களிலும், கருத்துத் தெரிவிக்க உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுண்டு என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. தமிழ்நாட்டை  ஒரு தமிழன் தான் ஆளவேண்டுமென்பதில் உண்மையான தமிழர்களுக்கு  எப்படிக் கருத்து வேறுபாடிருக்க முடியும்??  "What is the prevailing quality of governance in Tamil Nadu? One devastating act is an index of decay. The Minister of Information in Andhra Pradesh is MSc, PhD. In TN he is 6thstandard failedWhy such a dismal selection? 
"Rajani Kanth, Tamil Nadu And BJP

3 comments:

வலிப் போக்கன் said...

“குரங்குப் பீயை மருந்துக்குக் கேட்டால் கொப்புக், கொப்பாய்த் தாவுமாம்” என்ற ஈழத்துப் பழமொழி மாதிரிதான் தமிழ்நாட்டிலுள்ள ஈனத் தமிழர்களும் இருக்கிறார்கள். திரு. வியாசன் அவர்களே!!

viyasan said...

திரு.வழிப்போக்கன்,

உங்களுக்கு இந்தப் பழமொழியின் கருத்துப் புரியாததால், அல்லது உங்களின் அபிமான நடிகரை நான் விமர்சனம் செய்ததால் ஈழத்தமிழர்களை "ஈனத்தமிழர்கள்" என்கிறீர்களா அல்லது தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஈனத்தமிழர்கள் என்கிறீர்களா, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. தயவு செய்து விளக்கவும். நன்றி. :-)

'நெல்லைத் தமிழன் said...

"தூரப்போடும் குப்பையை, வலிந்து ஒருவன் கேட்டால், அதில் ஏதோ விலை உயர்ந்தது இருக்கிறது என்றெண்ணி, பொத்திப் பொத்தி வைப்பது போல" - இதுதான் பழமொழியில் அர்த்தம் என்று நினைக்கிறேன். இல்லையெனில் விளக்கவும்.