Saturday, September 20, 2014

தமிழ்நாட்டு தமிழ் அர்ச்சகமாணவர்களை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்!






சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணிலுள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் தெய்வத்தமிழில் பூசைகள் அர்ச்சனைகள் மட்டுமன்றிதிருமுழுக்குதமிழ் வேள்வி வழிபாட்டுடன் தேர்த்திருவிழா அண்மையில் நடைபெற்றது. தமிழர்களின்  சைவத்தை தமிழாக்கும் பணியில் முன்னோடியாகத் திகழ்ந்து , பேச்சில் மட்டுமல்லாதுஅதை நடைமுறைப் படுத்தியுங் காட்டிய சுவிஸ் ஞானலிங்கேச்சுரர் கோயிலின் நிர்வாகிகள் அனைவரும் உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் கோயில்களின் கருவறைக்குள் தமிழர்கள் நுழைவதற்கு சாதி ஒரு தடையாக இருக்காத நிலையேற்பட வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் அனைவரும் சாதிவேறுபாடின்றி கருவறைக்குள் நுழையும் நியாயமான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் அதேவேளையில்  இந்தியப் *பார்ப்பனர்களின் வேலை வாய்ப்பு நிலையங்களாகசாதியையும் பார்ப்பனீயத்தையும் வளர்த்து விடும் இடங்களாக மாறி வரும் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆலயங்களில் பார்ப்பனர்களுக்குப் பதிலாக அல்லது   அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் முறையாகப் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டுத் தமிழர்களையும்அர்ச்சகர்களாக  நியமிக்க வேண்டும். நிச்சயமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோயில்களின் நிர்வாகிகள் எல்லோருமே தமிழுணர்வற்ற சாதி வெறியர்களாக இருக்க முடியாது.
கருவறை நுழைவு மறுக்கப்பட்ட தமிழ் அர்ச்சகர்கள் 
ஆகவே, எல்லோருக்கும் முன்மாதிரியாக  தமிழில் வழிபாட்டை நடத்தும் சுவிஸ் ஞானலிங்கேச்சுரர் கோயில் நிர்வாகத்தினர் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட இந்த தமிழ் அர்ச்சகர்களில் ஒருவரையாவது அர்ச்சகராக நியமித்தால் என்ன



இந்த அர்ச்சக மாணவர்களை ஊக்குவிக்க வேண்டியது உலகத்தமிழர்கள் அனைவரதும் கடமையாகும் இதே நடைமுறையை சிங்கப்பூர்மலேசியாபிஜீ போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் பின் பற்றினால் , தமிழர்களின்  சிவனியமும்மாலியமும்மீண்டும் தமிழாக்கப்படும் தகுதியற்றவர்களையும் பிறப்பின் அடிப்படையில் குருமார்களாக்கும் முட்டாள்தனம் நீங்கும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் சாதாரண பார்ப்பனர்களை விட முறையாகத் தமிழிலும் சமக்கிருதத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதில் பலர் தனிப்பட்ட முறையில் அர்ச்சகர் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்,தமிழ்நாட்டு இந்துக்கள் அவர்களை அர்ச்சகர்களாக ஏற்றுக் கொண்டுஅவர்களின் தலைமையில்  சடங்கு சம்பிரதாயங்களை செய்வித்துக்  கொண்டுமிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர்களை ஊக்குவிப்பதால்  தமிழர்களின் ஆலயங்கள் மீண்டும் தமிழாக்கப்படுவதுமட்டுமல்லாமல் சைவமும் தமிழும் வளரும். இதை நடைமுறைப்படுத்துவதில்  முற்போக்குச் சிந்தனையுள்ளஅதே வேளையில் ஈழத்தமிழர்களின் சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தைக் கைவிடாத  புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இளைய சமுதாயத்தின் பங்க்களிப்பு முக்கியமானதாகும்.

சுவிசில் தமிழ்ச் சூத்திரர்கள்  தமிழில் பூசை

ஐரோப்பாவிலும்அமெரிக்காவிலும்கனடாவிலும் போன்ற தம்மைத் தமிழறிஞர்களாகஎழுத்தாளர்களாகபுலவர்களாகதமிழ் ஆர்வலர்களாக காட்டிக் கொள்ளும் எத்தனையோ  ஈழத்தமிழர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் எவருமேதமிழ்நாட்டில் முடியாது விட்டாலும்ஈழத்தமிழர்களின் கோயில்களிலாவது தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்அத்துடன் பிராமணர்களை மட்டுமன்றிஎல்லோரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டுமென்பதைப் பற்றியோ பேசுவதில்லை.அவர்கள் கோயிலுக்குப் போகும் போது அங்குள்ள ஐயர் எல்லோரையும் விட அவர்களுக்குச் சில சலுகைகளைக் காட்டினால்அதைப் பெரிய கெளரவமாக நினைத்துக் கொள்வதாலோ என்னவோஎதற்காகப் பிராமணர்கள் மட்டும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்ஏனைய தமிழர்களும் அர்ச்சர்களாகினால் என்னஅதை ஏன் நாங்கள் ஈழத்தமிழர்களின் கோயில்களில் நடைமுறைப்படுத்தக் கூடாது  என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 

பார்ப்பனர்கள் தான் பூசை செய்யலாமென ஆகமங்கள் (அது பார்ப்பனர்களால் மேற்கொள்ளப்பட்ட இடைச்செருகல் என்ற கருத்துமுண்டு) கூறுகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஈழத்தில் மிகவும் புகழ்பெற்றமிகவும் புனிதமானஅற்புதங்கள் நிறைந்த கதிர்காமம்செல்வச்சன்னதி போன்ற பல கோயில்களில் பார்ப்பனர்களுமில்லைசாதி வேறுபாடுமில்லைசமக்கிருதமும் கிடையாது.

குறிப்பு:
(*தமிழில் பிராமணர்கள் என்றல்லாமல் பார்ப்பனர்கள் என்றழைப்பது தான் முறை 
"நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்") 


1 comment:

Yarlpavanan Kasirajalingam said...

தங்கள்
சிறந்த திறனாய்வுப் பகிர்வையை
வரவேற்கிறேன்!