Thursday, September 18, 2014

சென்னையில் ஆர்னோல்ட் ஸ்வார்ற்சேநேகர் மேடையை விட்டு ஓட்டம்??
 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்னைக்கு வருகை தந்த கலிபோர்னியாவின் முன்னாள் முதல்வர் Arnold Schwarzenegger 
பாடலை வெளியிடாமல் பாதியிலேயே மேடையை விட்டு இறங்கி ஓடி விட்டாராம்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவில் மட்டுமல்லமேலைநாட்டுக் கலாச்சாரத்திலேயே ஒரு ஆண் இன்னொரு ஆணின் கைகளை முத்தமிடும் வழக்கம் கிடையாது அதிலும் அப்படி முத்தமிடுவதை ஓரினச் சேர்க்கையாளர்களின் அடையாளமாகக் கருதி அருவருப்பாகப் பார்ப்பார்கள்  என்பதை அறியாத தமிழ்நாட்டு பாடி பில்டர்கள் எல்லாம் ஆர்னோல்டின் காலில் விழுந்தது மட்டுமல்லாமல்அவரது கையையும் பிடித்து முத்தமிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.  தமிழ்நாட்டில் வேண்டுமானால் இத்தகைய Sycophancy  பணிவின் அல்லது அன்பின் அடையாளமாக இருக்கலாம். ஆனால் மேலைநாடுகளில் அப்படியல்ல,  குறிப்பாக அமெரிக்காவில் அது Sooooo Gay :-)

பாப்பாண்டவரின் மோதிரத்தையும் பெண்களின் கையையும் தான் ஆண்கள் முத்தமிடலாமே தவிர இன்னொரு ஆணின் கையை அல்ல.  அதுவும்   அமெரிக்காவின் பழமைவாதக் கட்சி (Republican)அரசியல் வாதியும்,  கலிபோர்னியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு உரிமைகள் கொடுப்பதையும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளுவதற்கான சட்டத்தையும் எதிர்த்த 'Homophobe' ஆகிய ஆர்னோல்டினால் நிச்சயமாக அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அதிலும் கறுத்த பாடி பில்டர்கள் எல்லாம் ஆர்னோல்டின் கைகளைக் கொஞ்சுவது ஏதாவது அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் கையில் கிடைத்தால் அவர்கள் அதை வைத்தே காலத்தைத் தள்ளுவது மட்டுமல்லவெறுவாயை மெல்லுகின்ற அமெரிக்க காமெடியன்களுக்கெல்லாம் அவல் கிடைத்தது மாதிரியாகி விடுமென்பது சென்னை பாடி பில்டர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ நிச்சயமாக ஆர்னோல்ட் ஸ்வார்ற்சேநேகருக்குத் தெரியும் 

ஆர்னோல்ட் Schwarzenegger வந்த வேலையை முடிக்காமல்விழா முடியுமுன்பு  பாதியில் கிழம்பிப் போனதற்கு இது தான் காரணமோ என்னவோ நிச்சயமாகத் தெரியாதுஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். :-) 

ரஷ்ய அதிபர் புட்டினின் கையை ரஷ்ய திருச்சபையின் மதகுரு ஒருவர் மதசம்பிரதாயத்தின் படி  முத்தமிட்டதற்கே அவர் எவ்வாறு அதிர்ச்சியும், அருவருப்புமடைந்தார் என்பதைக் காணொளியில் காணலாம். 

தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் காலில் விழுவதுகாலைத் தொடுவதுகாலில் விழுவதாக பாசாங்கு பண்ணுவதை எல்லாம் ஏன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்தக் காலில்  விழும் கலாச்சாரத்தை குழந்தைகளுக்குக் கூடக் கற்பிப்பது தான் கொடுமை.

உண்மையில் பாடி பில்டர்கள் அவரின் கையிலிட்ட முத்தம் தான் காரணமாக இருக்குமென்று நான் ஊகித்தது சரி தான்.  ;-) 

Arnold Schwarzenegger Unhappy With That Kiss

Hollywood Superstar Arnold Schwarzenegger came down to Chennai as a chief guest for Shankar's 'I' audio event. It was a grand function but everyone started to think that why Arnold left the function abruptly. Well, the function was supposed to start at 5.30 pm but it was started at around 6.30 pm. Arnold was very happy with the crowd's reception and he was overwhelmed by their love. He felt suffocated after some time due to AC problems, but still he managed to sit in the function and enjoy the programs. He was really impressed with the body builder’s act and has specially congratulated each of them individually. However, one of those body-builders grabbed Arnold's hand and kissed it. It's not a new thing for us but Arnold felt very uncomfortable with that kiss. So, he finished his speech very early and made a sudden exit from the function. It took some time for the organizers to understand why Arnold left the event abruptly. 

நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த பாடி பில்டர்களின் ஷோ நடந்தது. அதில் ஷங்கர் படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கேற்ப உடம்பை ஆட்டியும், குதித்தும், வளைத்து நெளித்தும் ஷோ காட்டினர். தானும் ஒரு பாடி பில்டர் என்பதால் இதை அர்னால்ட் வெகுவாக ரசித்தார். அத்தோடு நிற்கவில்லை அந்த பாடி பில்டர்கள். மேடையிலிருந்து வரிசையாக இறங்கியவர்கள், அர்னால்ட் அமர்ந்திருந்த இடத்துக்கு வெகு அருகில் வந்து ஒருவன் பின் ஒருவராக குனிந்து, உட்கார்ந்தபடி அர்னால்டுக்கு மரியாதை செய்தனர். அதைப் புரிந்து கொண்டு, இருக்கையிலிருந்து எழுந்து வந்த அர்னால்ட், ஒவ்வொரு பாடி பில்டர் தலையையும் தொட்டு வாழ்த்தினார். இத்தோடு விடவில்லை... ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு பாடி பில்டரும் அர்னால்டை நெருங்கி, அவர் கையைப் பிடித்து முத்தமிட்டும் காலில் விழுந்தும் தங்கள் அன்பை கொஞ்சம் ஓவராகக் காட்டினர்……
 சரி, அர்னால்ட் ஏன் கோபித்துக் கொண்டு போனார்? இதற்கு ஒரு விளக்கம் சொல்ல வேண்டுமே. அதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சார்பில் ஒரு விளக்கம் வெளியாகியுள்ளது. எண்ணைய் தடவிய உடம்பில் வேர்வை வழிய வந்த பாடி பில்டர்கள் அர்னால்டை கட்டிப் பிடித்தும், கையில் முத்தமிட்டும் ஆர்வக் கோளாறு பண்ணியதால், அவரது உடை அழுக்காகி, அவர் கைகளிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டது. அதனால்தான் அர்னால்ட் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது. தனக்கு மரியாதை செலுத்திய பாடி பில்டர்களை மேடைக்கு கூட்டிப் போய், ஒழுங்காக அவர்களை நிற்கை வைத்து அவர்களின் தோளில் கைபோட்டு போட்டோ எடுத்துக் கொண்டவர் அர்னால்ட். அவர் போய் இந்த அற்ப காரணத்துக்காக பாதியில் வெளியேறுவாரா?
“I think that gay marriage is something that should be between a man and a woman.”Arnold Schwarzenegger, August 27, 2003, in an interview on The Sean Hannity Show shortly after he announced he would run in the California gubernatorial recall race.


1 comment:

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்