Sunday, September 28, 2014

ஈழத்தமிழர்களுக்கு இது ஒரு துக்கநாள்!

இனவாதச் சிங்களவர்கள் குதூகலத்துடன் வரவேற்கும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எந்த விடயமும் அல்லது செய்தியும் நிச்சயமாக  ஈழத்தமிழர்களின் நலன்களுக்கு உகந்ததாக இருக்க முடியாது அப்படி ஒரு போதுமிருந்ததுமில்லை.

செல்வி. ஜெயலலிதா  நீதிமன்றத்தால்  தண்டிக்கப்பட்டதையும் இனிமேல்அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து அவர்களுக்கு ஒரு தலையிடியாக இருக்க மாட்டார் என்பதையும் சிங்களவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியுடனும், ஏளனத்துடனும் வரவேற்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது, சிலர் கூறுவது போல், சுயநல அரசியல் நோக்கங்களுக்காக செல்வி. ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்திருந்தாலும் கூட, அவர் உண்மையில் இனவாதச் சிங்களவர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக, அவர்களால், எவ்வளவுக்கு மிகவும் வெறுக்கப்பட்ட ஒருவராக இருந்தார் என்பதை உணர முடிகிறது.  சிங்களவர்கள் ஜெயலலிதாவுக்குப் பயந்த
அளவுக்கு ஏனைய தமிழ்நாட்டுத் தலைவர்களை ஒரு பொருட்டாக 
மதித்ததில்லை என்பது தான் உண்மை. 

செல்வி. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முடிவு ஏற்பட்டு விட்டதாகவும், இனிமேல் ஈழத்தமிழர்களின் விடயத்தில் தமிழ்நாட்டை ஒரு பொருட்டாகவே கருதத் தேவையில்லை போன்ற ஒரு வித அகங்காரத்தையும் சாதாரண சிங்களவர்கள் இணையத்தளங்களில் வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இலங்கை அரசின் *அமைச்சர்களால் கூட, மரியாதை நிமித்தமாவது  அவர்களின் மகிழ்ச்சியைக் வெளிக்காட்டாமல் மறைக்க முடியவில்லை என்பதைப் பார்க்கும் போது தான் அண்மைக்காலங்களில்  செல்வி. ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் சம்பந்தமான  முடிவுகள் எந்தளவுக்கு உறுதி வாய்ந்தவையாக மட்டுமல்ல, இலங்கை அரசுக்கும், இனவாதச் சிங்களவர்களுக்கும் தலையிடியாக இருந்திருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.   *Government hails ruling against Jaya

குற்றம் புரிந்தவர்கள் தண்டனையை அனுபவிக்கத் தான் வேண்டுமென்பதில் எனக்கோ அல்லது  ஈழத்தமிழர்களுக்கும் கருத்து வேறுபாடு கிடையாது அத்துடன் தீர்ப்பை விமர்சிப்பதும் நோக்கமல்ல. அதேவேளையில் இந்த தீர்ப்பைக் கேள்விப்பட்டதும் நானறிய, எவ்வளவோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கவலையையும், தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த குரல் அடக்கப்பட்டு விட்டது என்ற உணர்வையும் வெளிப்படுத்துகின்றனர்

Tamilnet இணையத்தளம் Timing of Jayalalithaa case targets Dravidian polity    என்ற தலைப்பில்வெளியிட்டுள்ள கட்டுரையும் தமிழர்களின் சிந்தனைக்குரியது.

 


சிங்களப் பத்திரிகை லக்பிம,  செல்வி.ஜெயலலிதாவை அவமதித்து  வெளியிட்ட கேவலமானஇந்தக்  கார்ட்டூன். ஈழத்தமிழர்களால் மிகவும் கண்டிக்கப்பட்டது. 

A shockingly vulgar cartoon published by a Sri Lankan newspaper featuring Tamil Nadu chief minister J Jayalalithaa and the prime minister Manmohan Singh in extremely bad taste is yet another instance of the proxy-speak of the island nation that should ideally provoke a tough reply from India.On Sunday, Lakbima, a well-circulated Sinhala language daily in Sri Lanka, published a cartoon lampooning both Jayalalithaa and Manmohan Singh, ostensibly peeved at the recent tensions between Tamil Nadu and Sri Lanka, where a school football team was sent back, and a number of Sri Lankan pilgrims in the state came under attack.The cartoon, gross and nasty, has created some ripples in Sri Lanka as well, but the government of India is yet to react. 


https://www.colombotelegraph.com/index.php/lakbimanews-cartoon-controversy-women-and-media-urges-editor-to-apologize/


"தமிழகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இலங்கையிலும் பதட்டம் நிலவுகின்றது. 
ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தபோது, நாட்டினரின் கவனத்தை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் ஈர்த்தவர். எம்.ஜி.ஆரை. மட்டுமே முதல்வராகப் பார்த்து பூரித்திருந்த அதிமுகவினருக்கு ஜெயலலிதா. அடுத்த எம்.ஜி.ஆர். போல தோன்றினார். 
Do not support Sri Lanka, 
Jayalalitha tells Indian PM. 
முதல் பெண் முதல்வர் தமிழகத்தின் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் முதல்வர், இளம் வயது முதல்வர் என்ற பெருமைகளும் ஜெயலலிதாவையே சாரும். 1991ம் ஆண்டு ஜூலை 24ம் திகதி முதல்வர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதா 1996ம் ஆண்டு மே 12ம் திகதி வரை அதில் நீடித்தார்.இந்த ஆட்சியின் ஆரம்ப காலங்கள் உண்மையிலேயே அருமையானதாக இருந்தது என்பது அவரது எதிரிகளே கூட ஒப்புக் கொள்வார்கள். 
ஈழத்தமிழர்களின் நலனிகளிலும் அக்கறை செலுத்தியுள்ளார். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தவர் ஜெயலலிதா. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச குழுவினர் இந்தியாவில் விசாரணை நடத்த விசா வழங்க வேண்டும் என்று இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார். 
மேலும் ஈழத்தமிழர்களை ஆதரித்த அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, இலங்கையின் மனித உரிமைகள் மீறல்களையும் கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் 4 தீர்மானங்களையும் நிறைவேற்றியிருந்தார். 
மத்திய அரசாங்கத்தில் அறுதிப் பெரும்பான்மையின்றி ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்திற்கு, இலங்கை தொடர்பாக ஜெயலலிதாவின் கண்டிப்புக்களும், அழுத்தங்களும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்து. இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்து.அது மட்டுமன்றி இலங்கை இராணு வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் இந்திய அரசாங்கத்திற்கு ஜெயலலிதா நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தார். இது பிராந்திய பாதுகாப்பு முறைகளை கற்றுக்கொள்ளும் இலங்கை இராணுவத்தினருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த கடுப்பில் தான் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறான புகைப்படங்கள் வெளியாகின.  
ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை இலங்கை அரசாங்கத்திற்கு குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகுந்த சந்தோசத்தினையே அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. "

2 comments:

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

THEVESH M said...

Yes it is true. Continue your observation.