Thursday, September 18, 2014

“பெரியாருக்கும் பார்ப்பனர்களுக்கும் பெரிய வேறுபாடில்லை?”


 "வுளைச் சொல்லி ஏமாத்துறனுமிருக்கிறான், வுள் இல்லையென்று சொல்லி ஏமாத்துறனுமிருக்கிறான்."           - பி.ஜெய்னுலாப்தீன்




 "வுள் இல்லையென்று சொன்னாரில்லபெரியார். பெரியார் என்னதொழில் ண்ணிச்சாப்பிட்டாரு.இல்லை, வுள் இல்லையென்று சொல்வது தான் சாப்பாடு, பெரியார் என்னதொழில் ண்ணிச் சாப்பிட்டாரு? த்தை வைத்து அவங்கசாப்பிட்டமாதிரி, இவர் ஒரு வியாபாரியாகஇருந்து கொண்டு, ஒரு விவசாயியாகஇருந்துகிட்டு இவர் சாப்பிடவில்லை, இவரும் ஒரு சித்தாந்தத்தை எடுத்துக்கொண்டு அதைச் சொல்வன்மூலமாகவும் நிதி தான் திரட்டினாரு. எந்தவொரு கூட்டத்துக்கு ந்தாலும் காசில்லாமல் மாட்டாரு.ல்யாணத்துக்கு இவ்வவு காசு,ருமாதிக்கு இவ்வவு, வீட்டிலண்ணி குடுக்ககேட்டு (Gate) வைச்சிருந்தாரா இல்லையா? பெரியார் ந்து எந்தவீட்டுக்கு ர்றதா இருந்தாலும்,உன் வீட்டிலநான் சாப்பிடதா இருந்தா எனக்கு இவ்வவு ணும், உன் வீட்டிலண்ணி குடிக்கிறதா இருந்தா இவ்வவு ணும், உன் குழந்தைக்குப் பெயர் வைக்கிறதா இருந்தா இவ்வவு ணும்.என்று சொல்லி, இந்தஉஞ்சவிருத்திப் பார்ப்பான்கள் என்று குற்றம் சுமத்தினாரே, அவங்கசெய்தமாதிரி வேலையை அவர் செஞ்சாரா இல்லையான்னா, செஞ்சாரு. அதே மாதிரி தான் செஞ்சாரு.அவர் தொழில் எதுவும் ண்ணவில்லை....... த்தைச் சொல்லிக்கிட்டும் ம்பாரிக்கிறான், ம் இல்லையின்னு சொல்லிக்கிட்டும் ம்பாரிக்கிறான். மதத்தை வயிற்றுப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள், ம் இல்லை என்பதை யிற்றுப்பிழைப்புக்கு ழியாகிக் கொண்டர்களும் இருக்கிறார்கள்................"


தமிழ்நாட்டுத் தமிழர்களால் மிகவும் போற்றப்படும் தலைவராகிய ஈவேரா பெரியார் அவர்களைப் பற்றி பெரும்பான்மை ஈழத்தமிழர்களுக்கு எதுவும் தெரியாதென்று தான் கூறவேண்டும். இக்காலத்தில் கூட பலருக்கு அவர் யாரென்றே தெரியாது. அவரின் கொள்கைகள் ஈழத்தில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை அல்லது அதற்கான தேவை இலங்கையிலிருக்கவில்லை என்று கூடக் கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தில் ஒளவையார் சிலை 
உண்மையில் தமிழ்நாட்டுக்குப் போகும் வரை என்னைப்போன்ற ஈழத்தமிழர்கள் பெரியாரின் சிலையை பார்த்தது கூடக் கிடையாது ஆனால் மகாத்மா காந்தி போன்ற இந்தியர்கள், பாரதியார், ஒளவையார், வள்ளுவர் போன்ற தமிழர்களின் சிலைகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் உண்டு. அவர்களைப் பற்றி நாம் சிறுவயதிலேயே பாடசாலைகளிலும் கற்பதுண்டு. ஆகவே என்னைப் போன்ற ஈழத்தமிழர்களுக்கு உண்மையில் பெரியாரைப் பற்றி எதுவுமே தெரியாது என்றே கூறலாம். அதனால் தமிழ்நாட்டில் வாழும் 'பகுத்தறிவு' தமிழர்கள் பெரியாரைப் போற்றிப்புகழுமளவுக்கு நாங்கள் அவரைப் போற்றிப் புகழாமலிருப்பது 
வியப்புக்குரியதல்ல.

பெரியார் தீண்டாமையை ஒழிக்கப் போராடினார் என்பதை யாரும் மறுக்க முடியாது அவர் தமிழர்களுக்குச் சுயமரியாதையை ஊட்டினார் என்றெல்லாம் கூறுகிறார்கள். பெரியார் இந்துமதத்தை எதிர்த்தாலும், இஸ்லாமிய மதத்தையும் முஸ்லீம்களையும் எதிர்க்கவில்லை. உண்மையில் பெரியாரின் கொள்கைகளால், அவரது போராட்டங்களால் ஏற்பட்ட நன்மைகளை முஸ்லீம்களும் அனுபவித்தார்கள்/அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பல ‘முற்போக்கு’ இணையத் தளங்களில் திராவிடர்களுடனும், பெரியாரிஸ்டுகளுடனும், ஏன் கம்யூனிஸ்டுகளுடனும்கூட, முஸ்லீம்களும் ஓரணியில் இணைந்து கொண்டு, பெரியாரின் சீடர்களாக தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள்.  யாராவதொருவர் பெரியாரைப் பற்றி விமர்சித்தால் முஸ்லீம்களும் சேர்ந்து கொண்டு கும்பலில் கோவிந்தா போடுகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில்  மிகவும் பிரபலமான, பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட முஸ்லீம் தலைவர்களில் ஒருவரும், இஸ்லாமிய மார்க்க அறிஞருமாகிய பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் பெரியார் பற்றிய கருத்துக்கள் முற்றிலும் மாறுபட்டதாக, பெரியாரையும் அவரது கொள்கைகளையும் அவமதிக்கும் வகையில் உள்ளன. ஆனால் பெரியாரை அவமதித்தற்காக முஸ்லீம்களெவரும் அவருக்கெதிராகப் போர்க்கொடி தூக்கியதாகவோ, போராட்டங்கள் நடத்தியதாகவோ தெரியவில்லை. 

                                                     "உஞ்சவிருத்திப் பார்ப்பான்கள்"
முஸ்லீம்கள் ஒருபோதும் முஸ்லீம்களை எதிர்க்க மாட்டார்கள் அல்லது தமிழ்நாட்டு முஸ்லீம்களும், இலங்கை முஸ்லீம்களைப் போலவே இடத்துக்கும், காலத்துக்குமேற்றவாறு தொப்பியை பிரட்டிப் போடும் கலையைக் கற்றுக் கொண்டு விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.  அதாவது இந்துக்களுக்கெதிராக பெரியாரிஸ்டுக்களுடன் இணையும் போது முஸ்லீம்களும்  பெரியாரியர்களாகிறார்கள், ஆனால் இஸ்லாமிய வஹாபியர்களுடன் இணையும் போது பெரியாரையும், அவரது கடவுள் எதிர்ப்புக் கொள்கையையும் எதிர்க்கும், பெரியாரைக் கேலி செய்யும் முஸ்லீம்களாகிறார்கள் போல் தெரிகிறது. முஸ்லீம்களின் இந்த முரண்பாட்டை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.


6 comments:

தமிழ் ராஜன் said...

முஸ்லீம்களும் ஏன் பெரியாரின் சேவையை பழிக்கிறார்கள். இதை வாசித்தால் புரியும.


http://iraiyillaislam.blogspot.in/2012/05/blog-post_29.html

வருண் said...

இதுபோல் எதையாவது ஒளறி, அண்ணன் ஜெயினுல்லா, தமிழ் நாட்டில் உள்ள நாத்திக நட்புக்களையும் இஸ்லாமிய வெறுப்புக்கு உண்டாக்க முயல்கிறார் போல இருக்கு..

------------

ஆமா, உம் பெயர் வியாசனா, இல்லைனா நாரதனா?

பார்ப்பனர்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவோ தேவலை உம்மைப்போல் "சாவி போட்டு" விடும் நாரதர்களைக் காட்டிலும்!
I can clearly see your intention here! I repeat you are becoming "venomous" everyday. You better watch out! You will not have any respect if you continue doing this!

BTW, why are you not publishing my responses these days???

viyasan said...

//ஆமா, உம் பெயர் வியாசனா, இல்லைனா நாரதனா?//

நான் உண்மையைக் கூறுகிறேன், அதாவது சில இணையத்தளங்களில் பெரியாரியாரியர்களாக காட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் ஏன் பெரியாரை இழிவுபடுத்தும் பி.ஜெய்னுலாப்தீன் போன்றவர்களைக் கண்டிக்கவில்லை, என்பது தான் என்னுடைய பதிவின் சாரம். என்னுடைய கருத்தையும், சந்தேகங்களையும் வெளிப்படுத்தத் தானே நான் ஒரு வலைப்பதிவை வைத்திருக்கிறேன்.

//பார்ப்பனர்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவோ தேவலை உம்மைப்போல் "சாவி போட்டு" விடும் நாரதர்களைக் காட்டிலும்!///

அப்படி நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். :-)


//BTW, why are you not publishing my responses these days???///

உங்களின் வீட்டுக்கே வந்து நான் உங்களைத் திட்டினால் நீங்கள் என்னை வரவேற்பீர்களா? அது போல் தான் இதுவும், பொல்லுக் கொடுத்து ஏன் அடி வாங்க வேண்டும், எங்களை(ஈழத்தமிழர்களை) திட்டும் உங்களின் பின்னூட்டத்தை எதற்காக நான் எனது வலைப்பதிவில் வெளியிட வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல காரணத்தைக் கூறுங்கள் பார்ப்போம். நீங்கள் வேறு வலைப்பதிவிலும் (வலைப்பதிவுச் சண்டியரின் வலைப்பதிவு) என்னை விமர்சனம் செய்திருப்பதைப் பார்த்தேன். அதை விட உங்களுடன் எனக்கு எந்த தனிப்பட்ட கோபதாபமும் கிடையாது. :-)

வருண் said...

வியாசன்,

உங்களுக்கு தகாத பின்னூட்டங்களை மட்டுறுத்துவது உங்களுக்கு மட்டுமன்றி பின்னூட்டமிட்ட வருக்கும் நல்லதே.

சில நேரங்களில் சில பின்னூட்டங்கள் "ஸ்பாம்" பாக்ஸில் போய் உட்கார்ந்து கொள்ளும். அப்படி எதுவும் ஆச்சானு தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன். மற்றபடி உங்களை அவமானப்படுத்தும் பின்னூட்டங்களை வெளியிடாமல் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை! அது என் பின்னூட்டமாக இருந்தாலும் சரி. :)

உங்க நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதற்கு நன்றி. :)

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

viyasan said...

//உங்க நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதற்கு நன்றி. :)//

உங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி Chief.. :-)