Monday, September 1, 2014

தமிழரின் அழிக்கப்பட்டநெறி ஆசீவகத்தில் பிள்ளையார் வழிபாடு!


இன்று அழிந்து அல்லது அழிக்கப்பட்டுப் போன தமிழர்களின் ஆசீவக
நெறியில் தான் பிள்ளையார் வழிபாடு உருவாகியது பிள்ளையார் வழிபாடு தமிழர்களுடையது என்ற கருத்திலும், அதற்குக் காட்டப்படும் ஆதாரங்களிலும் உண்மையிருப்பதாக எனக்குப் படுகிறது. 


ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி


இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம்(Basham, A. L.) ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலிபாகத மொழிகளில் உள்ள பௌத்தசைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகிதமிழ் இலக்கியங்களான மணிமேகலைநீலகேசிசிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார்.

ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்(Ajivikism: a vanished Indian religion)’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம்ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலை கொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்து விட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள்தமிழ் இலக்கியங்களிலோ கி.பி.14ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆசீவகம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினர். அதற்கான கல்வெட்டுஇலக்கியச் சான்றுகளை நிறையவே எடுத்துக் காட்டினார் ஏ.எல். பாசம்.கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ் இலக்கியங்கள் ஆசீவகம் பற்றிக் குறிப்பிட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம் வடநாட்டுக்கு உரியதாகவே பாசம் உள்ளிட்ட அனைத்து அறிஞர்களும் நம்பினர். ஆசீவகம் பற்றிய செய்திகளை தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறிய பின்னரும் கூட ஆசீவகம் பற்றிய ஆய்வுகள் தமிழில் தொடங்கப் பெறவில்லை.

ஆசீவகம் என்றால் என்ன?

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு,இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவைமுறையே முதலிவகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு. ஆகஎந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணைதுறைபல்தொழில்மூவிடம்ஐம்பாலிலும்நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதிசமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும்அவனது உடலியல்மருத்துவம்உழவுதொழில்வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோபட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும்மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல்இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும்இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வுஅகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.


ஆசீவக நெறியின் வேறு பெயர்கள் யாவை?

1.    அமணம்
அம்மண்ணம்(அம்+அண்ணம்)>அம்மணம்>அமணம்>ஸமணம்(ஸ்+அமணம்சமணம்)>ஸ்ரமணம்>ஸ்ரமணா(Sramana)
சமணம்>ஸ்ரமணம் என்றத் திரிபுக்கு

அம்மண்ணம் = அம்+அண்ணம் = அம்+ம்+அண்ணம்(தன்னொற்று மிகல்)
அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.

அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்
அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கப் பயிற்சி.

ஆசீவக நெறி – பின்னாளில் வடஇந்தியாவில் ஆஜீவிகா என்று மருவியது.
ஆசீவகம்>ஆஜீவகம்>ஆஜீவகா>ஆஜீவிகா(Ajivika)

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.


இதன்மூலம்,
அமணம் – ஆசீவக நெறியைக் குறித்தது
 அருகம் – ஜைன நெறியைக் குறித்தது
என்பது நமக்குப் புலப்படும்.

பிற்கால சொல்லான சமணம் எனும் கொடுந்தமிழ்ச் சொல் தமிழகத்தின் வடக்கில் ஸ்ரமணா(Sramana) எனத் திரிந்தது(கோட்பாடுகளும் சேர்த்துதான் திரிந்தன). இந்த ஸ்ரமணத்திலிருந்து தான் பின்னாளில்,ஜைனம் மற்றும் புத்தம் பிரிந்தன. ஜைனமும் புத்தமும் பிரிந்த பிறகுஒரு காலக்கட்டத்தில் சமணம் என்ற சொல் ஆசீவகம்ஜைனம்புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறிக்கப் பயன்பட்டது. தற்காலத்தில் தான் ஆய்வாளர்கள் ஆசீவகம் ஜைனத்தின் ஒரு பிரிவாகவும்ஜைனம் என்பதற்கு சமணம் என்றும் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்.

ஆசீவகச் சித்தர்களின் வேறு பெயர்கள் யாவை?

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை யீந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் போதி சத்துவர்’ முதலிய பெயர் பெற்றனர்.போதித்தலில் சத்துவ குணமுடையவர்அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர் மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையாக ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் தொல்லை தீர்த்தலும் செய்த காரணம் பற்றித் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த திரிபுச் சொற்களாலும் (தீர்த்தங்கரர்) வழங்கப் பெற்றனர்.


அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்ட இச்சொல்அம்மணம் எனும் ஆடையின்மைக் குறிக்கும் சொல்லின் திரிவாக அம்மணர் எனச் சுட்டப் பட்டதும் வழுவே.

(அழகிய சிறந்த அண்ணத்தில் ஊழ்கப் பயிற்சி உடையவர் எனும் பொருள்படும் அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலைஅண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலைஅண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)

1.
    ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்
2.
    ஐயன்ஐயனார்நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்
3.
    அண்ணர் (அ) அண்ணல்
ஒப்புநோக்குக:
சித்தன்னவாசல் - அண்ணல் வாயில்
திருவண்ணாமலை - திரு அண்ணர் மலை
அண்ணமங்கலம் - அண்ணல் மங்கலம்

1.    போதி சத்துவர்
2.
    மாதங்கர்மாதங்கி - ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்பவர்
3.
    அந்தணர்(அந்தம்+அணர்) - சிவ நெறி தனியாக தமிழகத்தில் இல்லாத காலத்தில்(எந்தெந்த காலத்தில் என்று பின்பு பார்ப்போம்)
4.
    பார்ப்பார்(பார்ப்பு+ஆர்) - சிவ நெறி தனியாக தமிழகத்தில் இல்லாத காலத்தில்


ஆசீவகச் சித்தர்களின் படிநிலைகள் யாவை?

ஆசீவகச் சித்தர்களின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.

துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர். இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும்துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை. ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும்ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடடைய முடியும் என்பது வரைவு.

ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல்.

ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனைசெயல்தகுதிஅறிவுநிலைஊழ்கப் பயிற்சிமெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன:

கருமை சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்
நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு இருக்கும் நிறம்
செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்
இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை:
துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.
இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.
கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்.

கரும்பிறப்பில்
கருமை முதல் படி
கருமை இரண்டாம் படி
சாம்பல் மூன்றாம் படி

நீலப் பிறப்பில்
கருநீலம் முதல் படி
நீலம் இரண்டாம் படி
வான்நிறம் மூன்றாம் படி

பசும் பிறப்பில்
அடர்பச்சை முதல் படி
பச்சை இரண்டாம் படி
வெளிர்பச்சை மூன்றாம் படி

செம்பிறப்பில்
செம்மை முதல் படி
இளம்சிவப்பு இரண்டாம் படி
காவி மூன்றாம் படி

மஞ்சள் பிறப்பில்
அடர் மஞ்சள் முதல் படி
இளமஞ்சள் இரண்டாம் படி

பொன்மை மூன்றாம் படி
வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்.

இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும்.

படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு. சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் தொழப்படுகிறார். ஐயப்பன் பெயரால் செய்யும் ஐயனார் வழிபாட்டில் தற்போது சரியான குருமார்களின் வழிகாட்டல் இன்மையால்பிறழ நடத்தும் குளறுபடிகள் ஏராளம்.

இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும்அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும்அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும்அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது.

நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும்.

கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம். இந்த அறிவு மரபில் வந்த அறிவர்களுள் ஒருவரான வள்ளல் பெருமான் கூட ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே.

மேலும்புத்த நெறியிலும் ஜைன நெறியிலும் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாட்டின் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர். ஆனால்ஜைன நெறியின் கொடியில் ஆசீவகத்தின் நீல நிறத்தைத் தவிற மற்ற நிறங்கள் முறை மாற்றி இருக்கும். அவர்கள் நீல நிறத்த்துடன் கருப்பு நிறத்தையும் சேர்த்து கருப்பு நிறமாக அவர்கள் கொடியில் கூறுகின்றனர். ஆனால்இந்நிறங்களுக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடுகளின் பொருளாக இருந்தாலும் அவர்கள் வெண்மை நிற உடையை மட்டுமே படிநிலை பேதமின்றி அனைவரும் அணிவர்.

இங்கு ஆய்தற்குரிய மற்றொரு ஒரு விடயம் என்னவென்றால்கிறித்துவ நெறியில் உள்ள “Bracelet of Christianity” எனும் கோட்பாடும் இதே நிறங்களைக் கொண்டவை. அங்கும்இறுதியில் மோட்சம் எனும் வீடுபேறு கோட்பாடு தான் உள்ளது.

ஆனை(யானை) ஏன் ஆசீவக நெறியின் அடையாளமாக உள்ளதுவிநாயகர் எப்படி ஆசீவக நெறியின் கடவுள்?


ஆனை(யானை)தான் பிறக்கும் பொழுது கருப்பு நிறமாக இருக்கும்(முதல் நிலை). பிறகு அது வளர வளர அதன் நிறம் கருப்பு நிறத்திலிருந்து சாம்பல்(Grey) நிறத்திற்கு சிறிது சிறிதாக மாறும். ஆனைதான் குட்டியாக(கருப்பு நிறம்) இருக்கும் பொழுதுதன் தாயை (சாம்பல் நிறம்) ஒழுக்கத்துடன் பணிவாகப் பின்பற்றிச் சென்று தன் சிறுவயதிலேயே தன் வாழ்விற்கான பாடங்களையும் ஆதாரங்களையும் தன் தாயிடமிருந்துக் கற்றுக்கொள்ளும் அறிவைக் கொண்டது. தாய் ஆனையும் தன் குட்டியானைக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்தும் தவறு செய்யும் பொழுது திருத்தவும் குட்டிக்கு உதவியாகவும் பரிவுடனும் இருக்கும். அந்தக் குட்டியானைதான் வளரும்பொழுது அது தன் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும். மேலும்தான் கற்றுக்கொண்டதைப் பிற்காலத்தில் தன் குட்டிக்கும் கற்றுக்கொடுக்கும். மேலும்ஆனை பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருக்கும்.

       இதே போலஆறு படிநிலைகளில் கீழ் நிறப் படிநிலையில் உள்ள ஆசீவகர்கள்தனக்கு மேல் நிறப் படிநிலையில் உள்ளவர்களிடமிருந்து தன் பாடங்களைக் கற்றுக்கொள்வர். பிறகு அடுத்தப் படிநிலைக்குச் செல்வர். தான் கற்றப் பாடங்களை தனக்குக் கீழ் உள்ள படிநிலைகளில் உள்ள ஆசீவகர்களுக்குச் சொல்லிக்கொடுப்பர். ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது. வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. ஆசீவகர்கள் பிற உயிரினங்களிடம் பரிவுடன் இருப்பர்.

ஆனையின் இந்தப் பண்புகளை(மனப்பாங்கை – Attitude) ஒரு ஆசீவகர் பெற்றால்தான் வாழ்வில் மேன்மை அடைந்து நிறமிலி எனும் தெய்வத் தன்மையை அடையமுடியுமென்பதால்ஒவ்வொரு ஆசீவகருக்கும் இப்பண்புகள் முக்கியம். அதனால்ஆனையின் தலையையும் மாந்தரின் உடலையும் சேர்த்து ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் உருவாக்கப்பட்டார். ஒவ்வொரு ஆசீவகருக்கும் விநாயகர் உருவம் ஒரு கடவுளாகவும்(உள்ளே கடப்பது) வாழ்வில் மேன்மை அடைந்து தெய்வத் தன்மையை அடைய தேவையானவற்றிற்கு ஒரு பற்றுகோலாகவும்(Inspiration) இருக்கிறது. ஆசீவக நெறியின் நிறக் கோட்பாடும் இதிலிருந்தே தோன்றி வளர்ச்சியடைந்திருக்கலாம்.

ஆசீவக சித்தர்கள் மூச்சுப்பயிற்சி செய்பவர்கள். இதற்கு முதன்மையான தேவையாக இருப்பது மூக்கும் மூச்சுக்குழாயும் தான். ஆனையின் மூச்சுக்குழாய் நீளமாக இருப்பதால் அது மூச்சுப்பயிற்சியின் முதன்மைத்துவத்தைக் குறிப்பதாகவும் உள்ளது.

மேலும்ஆசீவக நெறியிலிருந்து(அமணம்) பிரிந்த ஜைன புத்த நெறிகளிலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவக நெறியை அழிக்க முற்பட்ட சிவ நெறியிலும் விநாயகர் வழிபாடு பொதுவாக உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவ நெறி ஆசீவக நெறியை அழிக்க முற்பட்டது என்றால்பின்பு எப்படி ஆசீவக நெறியின் கடவுளான விநாயகர் சிவ நெறியில் வந்தார் என நீங்கள் கேட்கலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆசீவகர்களை(சமணர்களை) சிவ நெறியினர் தங்கள் நெறிக்கு மாற்ற முயன்றனர். சில ஆசீவகர்கள் மாறினர். பலர் மாறவில்லை. அதனால்எண்ணாயிரம்(8000) ஆசீவகர்களை கழுவேற்றம் செய்து கொல்லப்பட்டனர். இப்படி சிவ நெறியில் சேர்ந்த ஆசீவகர்களால் தான் விநாயகர் வழிபாடுபிள்ளையார் சுழிஊன் உண்ணாமைஉண்ணா நோன்புஐயன்/ஐயர்/அந்தணர்/பார்ப்பார் என்றழைக்கும் வழக்கம்பல அறிவியல் கோட்பாடுகள் முதலிய ஆசீவக நெறிக் கோட்பாடுகள் சிவ நெறியில் நுழைந்தன. அதனால் தான்கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பட்ட(ஏதேனும் இயற்றப்பட்டிருந்தால்) சிவ நெறியாளர்கள் இயற்றிய நூல்களில்விநாயகர் பற்றிய குறிப்புகள் இருந்திருக்காது. 

மேலும்பிள்ளையார்பட்டி(காரைக்குடி) கற்பக விநாயகர் கோயில் சிலை அதன் மேல் உள்ள பழங்கால எழுத்தை வைத்து கி.மு. 400ஆம் ஆண்டின் காலத்தியது எனலாம். விநாயகர் வழிபாடு இவ்வளவு பழமையானதாக இருந்தும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை(1200 ஆண்டுகள்) விநாயகர் பற்றி சிவ நெறியாளர்கள் இயற்றிய இலக்கியங்களில் ஒரு பாடல் கூட இல்லையென்றால்விநாயகர் சிவ நெறியைச் சார்ந்த கடவுள் இல்லை என்றே பொருள்.

மேலும்ஜைன புத்த சிவ நெறிகளில் விநாயகர் வழிபாடு ஏன் செய்கிறோம் என்ற விளக்கமும் சரியாக இல்லை. ஆனால்ஆசீவக நெறியில் இருப்பதைப் போல விநாயகர் அந்நெறிகளிலும் கடவுளாகவோ அல்லது முழுமுதற் கடவுளாக இருக்கிறார். மேலும்விநாயகரைக் குறிக்கும் அனைத்து பெயர்களும் தமிழ்ச் சொற்களே.

விநாயகர் = வி + நாயகர் = உயர்ந்த தலைவன்
பிள்ளையார் = பிள்ளை + ஆர் = உயர்ந்தவன்
கணேசன் = கணம் + ஈசன் = கூட்டத்தின் கடவுள்/மக்களின் கடவுள்
கணபதி = கணம் + பதி = கூட்டத்தின் தலைவன்/மக்களின் தலைவன்

விநாயகக் கடவுள்களுக்கு பூசை சமஸ்கிருதத்தில் செய்யும் பொழுது சுக்லாம் பரதரம்’ என்றுக் கூறுவர். அப்படியென்றால்என்றால் வெள்ளை நிற உடை அணிந்தவனே’ என்று பொருள். சமணத்தில்(ஆசீவகத்தில்) கடை நிலையில் உள்ளவர்கள் மட்டும் தான் வெள்ளை நிற உடை அணிவர். வெள்ளை நிறத்திற்கு அப்படி ஒரு சிறப்பு.

மேற்கூறியவற்றை வைத்துவிநாயகர் ஆசீவக நெறியைச் சார்ந்த கடவுள் என்று நாம் ஆணித்தரமாகக் கூறலாம்.

விநாயகரை முழுமுதற்கடவுள்வினை(கட்டம்) தீர்த்தான் என நாம் அழைக்கிறோம். அதனால் தான்எந்தப் பெரிய கோயில்களுக்கும் சென்றால் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு தான் பின் மற்ற தெய்வங்களை வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும்எந்தச் செயலை தொடங்கும் முன்பும் திருமணத்திற்கு முன்பும் விநாயகரை வழிபடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது.

       விநாயகர் ஆசீவக நெறியின் முழுமுதற் கடவுள் எனப் பார்த்தோம். ஏன் ஒரு ஆசீவக நெறியின் கடவுளை முருகன்சிவன்முதலிய தெய்வங்களை வணங்கும் முன்பு வணங்க வேண்டும் என நெறிகளை வகுக்கவேண்டும்?. ஏனென்றால்விநாயகர் ஆசீவக நெறியின் கடவுள். முருகன்சிவன்முதலியவர்கள் தெய்வ நிலையை அடைந்த ஆசீவக சித்தர்கள்.

அதற்காகசிவன் என்ற தெய்வம் இல்லை என்பதில்லை. அவரும் தெய்வ நிலையை அடைந்த ஒரு ஆசீவக சித்தர்தான். அவரைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். மேலும்ஆசீவக நெறியின் பிற அடையாளங்களான பிள்ளையார் சுழிசுழற்றியம்(ஸ்வஸ்திகா – சத்தியகம் எனும் தமிழ்ச்சொல்லிலிருந்து திரிந்திருக்கலாம்)தாமரை – செந்தாமரைவெண்தாமரைமுதலியவற்றைப் பற்றி பின்பு பார்க்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு:

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்முனைவர் க. நெடுஞ்செழியன் அணிந்துரை

ஆசீவகம்

ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)

தொடரும்.....

2 comments:

Maasianna said...

very good and very intresting,keep it up

viyasan said...

@Maasianna

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.