Sunday, August 3, 2014

பியூரிட்டன்களும் (Puritans) பாஸ்டன் பிராமணர்களும் (Boston Brahmins)??


பதினாறாம் நூற்றாண்டு இங்கிலாந்திலே புரட்டஸ்தாந்து கிறித்தவர்கள் தமது மதக் கொள்கையை நிலைநாட்டுவதில் பிரச்சனைகளை எதிர்நோக்கினர்.
  The Puritans (Religious Refugees) in America
கத்தோலிக்கத்தை எதிர்த்து புரட்டஸ்தாந்து கொள்கைகளை இங்கிலாந்னில் அறிமுகப்படுத்திய அரசன் என ஹென்றி VIII கருதப்பட்டாலும் கூட, அவன் பாப்பாண்டவர் Clement VII எதிர்த்து இங்கிலாந்தின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகத் தன்னை நிறுவிக் கொண்டானே தவிர, கத்தோலிக்கத்தை ஒதுக்கவில்லை. அவனது ஆட்சிக் காலத்தில்  கத்தோலிக்கத்தை எதிர்ப்பது தேசத்துரோகமாக மட்டுமல்லாது அரச கட்டளையை மீறும் செயலாகவும் கருதப்பட்டது. அதனால் ஆங்கில புரட்டஸ்தாந்துகள், அதாவது கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிந்து, புரட்சியான, முற்போக்கு கொள்கைகளைக் கொண்டிருந்த பிரிவினர்,  ஹென்றி VIII யின் ஆட்சியில் அமைதியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிய அவனது மகன் எட்வர்ட் VI இன் ஆறுவருட ஆட்சியில் புரட்டஸ்தாந்துகள் பல மதப் புரட்சிகளையும் முற்போக்கு கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்தாலும், அவனுக்குப்பின்  1553 இல் அரசியாக முடிசூடிக் கொண்ட எட்வர்ட் VI இன் சகோதரி கத்தோலிக்க  Queen Mary I இன் காலத்தில் புரட்டஸ்தாந்து கிறித்தவர்கள் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது.
 Queen Mary I இன் ஆட்சியின் நோக்கம் முழுவதுமே இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையினதும் பாப்பாண்டவரினதும் ஆளுமையை மீண்டும் நிறுவுவதேயாகும். மீண்டும் கத்தோலிக்கத்துக்குள் வர மறுத்த ஆங்கில புரட்டஸ்தாந்து கிறித்தவர்களை ஊருக்கு நடுவில் கம்பங்களில் கட்டி அவர்களுக்குத் தீமூட்டிக் கொலை செய்தார் Queen Mary I. அதனாலேயே அரசி மேரிக்கு“Bloody Mary.”  என்ற பெயரேற்பட்டது. பல புரட்டஸ்தாந்து கிறித்தவர்கள்  தமது மதத்தின் பெயரால் தம்மைத் தியாகம் செய்ய முன்வந்தாலும் கூட, பலர் மத வன்முறைகளிலிருந்து தப்புவதற்காக இங்கிலாந்தை விட்டு மத அகதிகளாக (religious refugees) வெளியேறினர்.
1558 இல் Queen Mary I. இறந்ததும் புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்த எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடிக் கொண்டதும், ஆங்கிலேய அகதிகள் மீண்டும் லண்டனுக்கு வந்து இங்கிலாந்தின் ங்கிலிக்கன் திருச்சபையில் பல மாற்றங்களையும் புரட்சிகளையும் ஏறபடுத்த விரும்பினர். இங்கிலாந்தில் ங்கிலிக்கன் திருச்சபையில்  காணப்படும் கத்தோலிக்க சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் நம்பிக்கைகளையும் அகற்றி, அதன் மூலம் ஆங்கில சமுதாயத்தில் எழுத்தறிவின்மை, வறுமை, ஊழல், சீர்கேடுகள் என்பவற்றை அகற்றுவதற்கு ஏங்கினார்கள். இந்த புரட்சியாளர்களின்  இத்தகைய முற்போக்கான, புரட்சிகரமான கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாத அக்கால ஆங்கிலேய மக்களின்  அவர்களுக்குப்  Puritans என்ற கேலியான (derogatory nickname) பெயரை இட்டனர். இங்கிலாந்து  பேரரசி எலிசபெத்தின் மதம் சார்ந்த முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிறித்த மதத்தில் puritanism என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தியதுடன், இங்கிலாந்திலிருந்து வெளியேறி அமெரிக்காவுக்கு மத அகதிகளாகக் குடியேறியவர்கள்.

இன்றும் அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து (New England) பகுதிகளில் வாழும் இந்த Puritan குடும்பங்களின் பரம்பரையினர் மட்டும் தான் Boston Brahmins என்று அழைக்கத் தகுதியுடையவர்களே அல்லாமல், பாஸ்டனில் வாழும் ஒவ்வொரு மேட்டுக் குடியினருமல்ல.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு முதலில் குடியேறிய குடியேற்றவாளர்களில் முக்கியமானவர்கள்  Puritans களும் Pilgrims களும் என்பது அனேகமாக எல்லோருக்கும்  தெரிந்தவிடயம். இந்த இரண்டு மத அகதிகள்(religious refugees) குழுவினரிடமும் கொள்கையளவில் சில வேறுபாடுகள் உண்டு
( Jon Kerry is a practicing Catholic )

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் John Kerry பாஸ்டன் பிராமணரா?


1.      அமெரிக்காவில் பாஸ்ரன் பிராமின் Boston Brahmin என்றழைக்கப் 
படுவதற்கு Boston நகரில் குடியிருக்கும் பணக்காரர்களாகவும்மேட்டுககுடிகளாக இருந்தால் மட்டும் போதுமானதல்ல. 

 உண்மையான Boston Brahmin” என்றழைக்கப்படுவதற்கு:

2.      ஒருவர் WASP (White Anglo Saxon Protestant) ஆக இருக்க வேண்டும்.

3.      ஒரு கத்தோலிக்கர் Boston Brahmin ஆகத் தகுதியுடையவர் அல்ல.  அமெரிக்காவின் புகழ்பெற்ற கென்னடி குடும்பத்தையேஅவர்களின் முன்னோர்கள் ஐரிஸ்கத்தோலிக்கர்களாக இருப்பதால் Boston- Brahmins என அழைப்பது தவறு என்பது பலரின் கருத்தாகும்.

4.     இங்கிலாந்திலிருந்து தமது புரட்டஸ்தாந்து மதத்தைக் காக்கவும், Church of England உடன் ஏற்பட்ட முரண்பாட்டால் இங்கிலாந்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய முதல்  அமெரிக்க குடும்பங்களின் பரம்பரையில் வந்த பணக்காரநிலவுடைமைக் குடும்பங்களாகிய Appletons, Bacons, Cabots, Codmans, Coolidges, Forbes, Hunnewells, Lodges, Parkmans, Perkins, Russells, Shaws, Holems, Tudor, Weld, Wigglesworth, Winthrop போன்ற குடும்பங்களில் ஒன்றிலாவது பிறந்திருந்தால் மட்டும் தான் ஒருவர் Boston Brahmin ஆகத் தகுதியுடையவர் ஆவார்.  

5.      In Boston, the Brahmins fought fiercely to close immigrants out. While they may have prided themselves on being the champions of abolitionism, they did not actually want black Americans, or any other non-Brahmin group, encroaching on their power or society. 

6.      பேச்சில் கூட Boston Brahmins accent க்கும் New England accent க்கும் வேறுபாடுகள் உண்டு. பாஸ்ரன் பிராமின் ஆவதற்கு பணம் மட்டும்  போதாதுகல்வியிலும்சமூகத் தொண்டுஅறக்கட்டளைகளிலும் தொடர்பு கொண்ட Aristocracy  ஆக இருக்க வேண்டும்

7.      உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த immigrant தந்தையையும்,  யூதப் பாட்டனையும்(அவருடைய தாய்க்கு Forbes குடும்பத்துடன் தூரத்து உறவிருந்தாலும் கூட) கொண்ட மூன்றாம் தலைமுறை கத்தோலிக்கராகிய  ஜோன் கெறிபாஸ்ரன் பிராமின் என அழைக்கப்படத்  தகுதியுடையவர் அல்லஅவரை Boston Brahmin என அழைப்பது  விவாதத்துக்குரியது.

8.      As for whether John Kerry qualifies as a Brahmin, the answer is yes and no. On the yes side, consider that his middle name is Forbes. In fact, Kerry's mother was related to at least two traditional Brahmin families, the Forbeses and the Winthrops. Yet Kerry himself is a practicing Catholic, and many in Massachusetts long assumed Kerry was an Irish name. However, the senator says he learned from a Boston Globe investigation last year that his paternal grandfather was actually born Jewish in what's now the Czech Republic. Before immigrating to America in 1905, Fritz Kohn changed his name to Frederick Kerry. He also apparently converted to Catholicism.

9.      So, it's certainly fair to say that New Englander John Kerry grew up in a privileged household. But whether he's really a Brahmin depends on whether you think that term has evolved to include a Catholic with both Protestant and Jewish roots—and who went to Yale.

1 comment:

ஊமைக்கனவுகள். said...

புதிய செய்திகள் !
பயனுள்ள் தகவல்கள
பகிர்விற்கு நன்றி!