Monday, August 4, 2014

தமிழா அல்லது சமக்கிருதச் சொற்களா? பழனி. கந்தசாமிக்குப் பதில்!தமிழர்களின் கலைகளை, இலக்கியங்களை, கட்டிட, சிற்பக் கலைகளை  இரவல் வாங்கி விட்டு இன்று அவையெல்லாம் தம்முடையவை என வாதாடுவோர் ஏராளம்.  சிங்களவர்கள் இந்த விடயத்தில் சமக்கிருதவாதிகளை  வென்றவர்கள், இன்று தமிழர்களின் கோயில்களே தமிழர்களுடையதல்ல என்றாகி விட்டது. தமிழர்களின் கைகளில் ஆட்சியும் அதிகாரமும் இல்லாத காலத்தில், தமிழர்களில் பெரும்பாலானோருக்கு சாதியடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டிருந்த காலத்தில், தமிழ்மண்ணை ஆக்கிரமித்திருந்த அன்னியர்கள் தமிழிலிருந்த கலை, விஞ்ஞானம், மருத்துவம், நாட்டியம் சம்பந்தமான நூல்களை சமக்கிருதத்தில் மொழி பெயர்த்து விட்டு, தமிழிலிருந்த மூல நூல்களை அழித்து விட்டனர். இதனால் கூலி வேலை தவிர்ந்த அறிவு சம்பந்தமான தொழில்கள் அனைத்தும் பார்ப்பனர்களினதும், தமிழரல்லாதவர்களினதும்  ஆளுமைக்குள் உட்பட்டிருக்க வழி செய்யப்பட்டது.

நாளடைவில் தமிழ்மண்ணில் தமிழர்களிடமிருந்து இரவல் வாங்கப்பட்டவையே தமிழர்களுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழர்களே அவற்றை வடவர்களிடமிருந்து இரவல் வாங்கியதாக கதை பரப்பி விடப்பட்டது, அதையும் வேறு வழியின்றி தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர்இதே நிலை தான் தமிழ் மொழிக்கும் ஏற்பட்டது. இயற்கையான மொழியாகிய தமிழில் பல்லாயிரமாண்டுகளாக உருவாகிய தமிழ்ச் சொற்களை இரவல் வாங்கிய, செயற்கையாக உருவாக்கப்பட்ட சமக்கிருதமும், ஏனைய இந்திய மொழிகளும். தமிழிலிருந்து இரவல் வாங்கிய வேர்ச்சொற்களிலிருந்து சொற்களை உருவாக்கி விட்டு. அவற்றை தமிழ் மொழி சமக்கிருதத்திலிருந்து இரவல் வாங்கியதாகக் கதை கட்டி விட்டனர்

சமக்கிருதம் தமிழை விட மூத்தது என்கிறார் கருத்து (பழனி) கந்தசாமி?


இது போதாதென்று தமிழை விடச் சமஸ்கிருதம் மூத்தது என்று வேறு  கூறுகிறார். அதில் வேடிக்கை என்னவென்றால்  அதை எல்லோரும் ஒத்துக் கொண்டும் விட்டார்களாம். தமிழா சமக்கிருதமா மூத்த மொழி என்ற விவாதம் நடந்து கொண்டு தானிருக்கிறதுஇரண்டு மொழிகளுமே பழமையானவை என்று கூறினால் கூட ஏற்றுக் கொள்ளலாம்  ஆனால் " வடமொழியான சம்ஸ்கிருதம் தமிழ் மொழியை விட மூத்தது என்பது எல்லோரும் ஒத்துக் கொள்ளப்பட்டது" என்று கூறுகிறவர்கள்  உண்மையில் தமிழர்களா அல்லது தமிழ்நாட்டில் வாழும் திராவிட எச்சங்களா என்பது கடவுளுக்குத் தான் தெரியும். இந்தப் பதிவர் முன்புமொருமுறை ஈழத்தமிழர்களைப் பற்றி நளினம் விட்டு வாங்கிக்கட்டிக் கொண்டவர்  என்பதும்  குறிப்பிடத் தக்கது.    :-)

அண்மையில், சமக்கிருதவாதியான சோ ராமசாமியே "ஸம்ஸ்க்ருதம் என்றால் நன்றாகச் செய்யப்பட்டது, தூய்மையானதுஎன்றுதான் அதற்கு அர்த்தம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரே சமஸ்கிருதம் ஒரு செயற்கையான (artificial language) மொழி என ஒப்புக் கொள்கிறார். நன்றாகச் செய்யப்பட்ட, refined language சமஸ்கிருதம் என்றால் அது எந்த மொழியிலிருந்து செய்யப்பட்டது அல்லது எந்தெந்த மொழிகளிலிருந்து இரவல் வாங்கிச் செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இந்த நன்றாகச் செய்யப்பட்ட, தூய்மையான மொழி உருவாக்கப்பட முன்னர் பூமியில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் ஊமையாக இருந்தார்களா அல்லது Sign language மூலம் பேசிக் கொண்டார்களா?  

பல தமிழ்ப்பண்டிதர்களே தமிழில் உருவாகிய வேர்ச் சொற்களை வடமொழிச் சொற்கள் என தவறிழைக்கும் போது திரு. பழனி கந்தசாமியின் வடமொழிப்பயிற்சிப் புத்தகம் மட்டும் சரியானது என்று நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அவர் தந்த சொற்களில் பெரும்பாலான (அல்லது முழுவதுமே) தமிழிலிருந்து இரவல் வாங்கிய  தமிழ்ச் சொற்கள் என நான் நம்புகிறேன்.  தமிழ் ஹிந்து இணையத்தளத்திலும் ஒருவர் சமக்கிருதத்தில் உள்ள தமிழ்வேர்ச்சொற்களை எல்லாம் தமிழ் மொழி சமக்கிருதத்திலிருந்து இரவல் வாங்கியதாகவும், வடமொழி இல்லாமல் தமிழால் தனித்தியங்க முடியாதெனவும் பிதற்றுகிறார். அவருக்காகவும் சில சொற்கள் இங்கே இடம்பெறுகின்றன. 

அதனால் Tamilvu.org இணையத்தளத்திலிருந்து மட்டுமன்றி, செல்வி. சிவமாலா, FSG வாண்டையார் போன்ற தமிழில் புலமையுள்ள தமிழுணர்வாளர்களின் பதிவுகளிலிருந்தும்  ஆதாரம் கண்டுபிடிக்கக் கூடியதாகவிருந்த சமக்கிருதச் சொற்கள் என்று கூறப்படும் பல தமிழ்ச் சொற்களின் தமிழ் வேர்களைப் பார்ப்போம்.
பூசை

பூசு  > பூசை > பூஜா >பூஜை

பூசெய் > பூசை > பூஜா > பூஜை

மிகவும் முக்கியமான சொல்லாகிய பூசையைக் கூட சமக்கிருதம் தமிழிடமிருந்து இரவல் வாங்கியது.இதற்கான விளக்கமான ஆதாரங்கள் அடுத்த பதிவில்.

Tamil Roots of Puja or Pujai: 
பூசு - Poosu in Tamil Nadu
Mayrhofer **suggests the derivation of pUjA from Tamil (Dravidian). 'pUcu' (to smear).

"If puujaa originally refers to worship, the Dravidian etymology from the root puucu 'to smear' is quite acceptable. We must remember that among the oldest objects of worship in South Asia are the sacred trees, and smearing the tree trunks with red-coloured powders and oils was an integral part of  the early tree cult (cf. e.g. J. Auboyer, Daily life in ancient India, 1961, page 154).

(** Manfred Mayrhofr (26 September 1926 – 31 October 2011) was an Austrian Indo-Europeanist who specialized in Indo-Iranian languages. Mayrhofer served as professor emeritus at the University of Vienna. He is noted for his etymological dictionary of Sanskrit.)1.      ஆகாயம்

  + காயம்

விண்ணென வரூஉங் காயப் பெயர் எழுத்து... (தொல்-305)

என்கிறது தொல்காப்பியம்.

தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.

காயம் என்பது விண்ணைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.

என்றால் அறிய முடியாதது/ அறியாதது அதனால் மதிப்பில் உயர்ந்தது என்பதைக் குறிக்கும். (Hidden/ Not here/ Unknown/Immeasurable/ Highly valuable)

உள்ள சில சொற்களைப் பார்ப்போம்:

ஆதி > Hidden/Unknown
ஆண் > who goes unknown/faraway places
 ஆடு> moves out faraway and comes back
   ஆடல் > making unknown movements
    ஆமை > Hidden(in the shell)  
    ஆசிரியர் > who clears unknown/hidden things Etc.


காய் என்னும் தென்சொல்லின் காச் என்னும் (ஒளிவீசு) வடசொல்லோடு என்னும் முன்னொட்டுச் சேர்த்து, ஆகாச- என்றமைத்து விளங்குவது, தெரிவது, வெற்றிடமாயிருப்பது என்று பொருட்காரணங் கூறி வானத்தைக் குறிப்பர். வடவர் முன்னோட்டுக்குப் பொருளேயில்லை.”குணம் - குண

     கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல்.

     கொள் > கொள்கை = இயல்பு.

"கொம்பினின்று நுடங்குறு கொள்கையார்"
(கம்பரா. கிளை. 10)

     கொள் - கோள் = தன்மை.

"யாக்கைக்கோ ளெண்ணார்"
(நாலடி.18)

     கொள் > (கொண்) > (கொணம்) > குணம் = கொண்ட தன்மை, தன்மை.

    வடமொழியிற் கிரஹ் (பற்று) என்னுஞ் சொல்லை மூலமாகக்
காட்டுவர். கிரஹ் என்னும் சொல்லினும் கொள் என்னும் சொல்லே
வடிவிலும் பொருளிலும் பொருத்தமா யிருத்தலையும், கொள் என்பதும்
பற்று என்று பொருள்படுதலையும் நோக்குக.
காளி-காலீ

காளி (கொற்றவை) தமிழர்களின் தெய்வம். காளி என்ற சொல்லையும் சமக்கிருதம் தமிழிலிருந்து இரவல் வாங்கியது.

    கள்> காள் > காளி = கரியவள், பேய்த்தலைவி, பாலைநிலத் தெய்வம்.

   கருப்பி, கருப்பாய், மாரி என்னும் உலக வழக்கையும் மாயோள்
என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக.

     மால் > (மார்) > மாரி = கருமுகில், மழை, கரியவள் (காளி).

 மரணத்தை உண்டாக்குபவள் என்று பொருள் கூறி மாரி என்பதை
வடசொல்லாகக் காட்டுவது பொருந்தாது.

     மா = கருமை. மா-மாயோள் = கரியவள் (காளி).

  பண்டைத் தமிழகத்திற் போர் பெரும்பாலும் பாலைநிலத்தில்
நிகழ்ந்தமையால், காளி போர்த் தெய்வமும் வெற்றித் தெய்வமும்
(
கொற்றவை) ஆனாள். பின்பு தாயாகக் கருதப் பெற்றதனால்
அம்மையெனப் பெயர் பெற்றாள்.

வேனிற்காலத்திற்குரிய கொப்புளநோய் காளியால் வருவதாகக்
கருதப்பட்டதினால். அது அம்மை யெனப்பட்டது. போர் வெற்றி
நோக்கியும் அம்மைநோய்பற்றியுங் காளி நாளடைவில் ஐந்திணைக்கும்
பொதுத் தெய்வமானாள்.

  ஆரியர் வருமுன்பு தமிழர் பனிமலைவரை சென்று
பரவியிருந்ததினால், வங்கத்திற் காளிக்கோட்டம் ஏற்பட்டது.

  காளி ஆரியத் தெய்வ மன்மையின் வேதத்தில் இடம்பெறவில்லை. 

ஆரியர் சிந்துவெளியினின்று கிழக்கு நோக்கிச் சென்று
வங்கத்தையடைந்த பின்னரே, காளிவணக்கத்தை மேற்கொண்டனர்.
   குமரிக்கண்டத்தில் தோன்றிய, குமரி, கன்னி என்னும் மலைப்
பெயரும் ஆற்றுப் பெயரும் காளியின் பெயர்களே.
   கயற்கண்ணியை அங்கயற்கண்ணி என்றதுபோல், காளியை யும்
பிற்காலத்தில் அங்காளி, அங்காளம்மை என்றழைத்தனர். அங்கம்மா
என்பது அங்காளம்மை என்பதன் சிதைவாகும்.2.    வீரம்

வீறு +அம் (விகுதி) = வீரம் 

விறு என்ற தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிய சொல் தான் வீரம்
 விறு என்றால் துரிதகதியில் போர் புரியும் தன்மை  e.g. விறு விறு

விறு> வீறு> வீரம்

விறல் - பெருமை, வீரம், வெற்றி, மிகுதி, வலி.

விருது – போர் வீரர்களுக்கு அளிக்கும் பரிசு3. புத்தகம்

புத்தகம் என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லாகிய புத்தம்புதிய அதாவது புதிய விடயங்கள் அல்லது New Ideas என்ற கருத்தைக் கொண்டதாகும்.

புத்தம் + அகம் = புத்தகம் (Container of New Ideas)


இந்தச் சொல்லையும் சமக்கிருதம் தமிழிடமிருந்து இரவல் வாங்கி ஸ் ஐச் சேர்த்து புஸ்தக் ஆக்கியது. அந்த புஸ்தக் என்ற சொல்லை தமிழில் புஸ்தகம் என்று புகுத்தி அதையே பயன்படுத்தினார்கள் சமக்கிருதவாதிப் பார்ப்பனர்கள். அதனால் இன்றும் சிலர் புத்தகம் என்பது சமக்கிருதச் சொல் என வாதாடுகின்றனர். மேலதிக விவரங்களுக்கு இந்தக் காணொளியில் 2:33 இலிருந்து பார்க்கவும்.


4. பக்தி

பற்று > பற்றி என்ற தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து உருவாகியது தான் பக்தி. 

பற்றி > பத்தி > பக்தி

முற்றி >முத்தி > முக்தி

சிவபெருமானைச் சிக்கெனப் பற்றிக் கொள்வதைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறார் மாணிக்கவாசகர். தமிழர்களின் அத்தகைய  பற்றிக் கொள்ளும் பற்று அதாவது அன்பிலிருந்து பத்தி என்ற சொல் உருவாகியது அந்தப் பத்தியை இரவல் வாங்கி பக்தியாக்கிக் கொண்டது சமக்கிருதம்.


5. சபை

இதுவும் அவை என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவாகியது. வடவர்கள் தமிழிலிருந்து இரவல் வாங்கி சபா ஆக்கிக் கொண்டனர்.

அமை > அவை > சபை> சபா

அமைதல் = நெருங்குதல், கூடுதல். அமை = கூட்டம்

E.g.:    அமை >அவை
          அம்மை > அவ்வை
           குமி > குவி

அவையடக்கியல், அவையல்கிழவி என்பன, தொல்காப்பியர்க்கு முன்பே தொன்நூல்களில் வழங்கி வந்த இலக்கணக் குறியீடுகளாம்.

“வாயுற வாழ்த்தே அவையடக்கியலே
செவியறி வுறூஉவென அவையும் அன்ன”       (தொல் 1367)

அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்”       (தொல் 925)

அவை – அவையம்

தந்தை மகற்காற்று நன்றி யவையத்து
முந்தியிருப்பச் செயல்                           (குறள் 67)

அவை > சவை
இளை >சிளை
உதை > சுதைசவை > சபா (வடமொழி)

வடசொல் வடிவிற்குப் பின்வருமாறு மூவேறு வகையில் மூலங்காட்டுவர்.
     (1). ஸ = ஸஹ (கூட). ஸ - சபா = கூட்டம்.
     (2). பா (bha) = விளங்கு (to shine). ஸபா = விளக்கத்தோடு
        (
பிரகாசத்தோடு) கூடியது, அறிஞரவை.
     இப் பொருளிற் பா என்னும் வடசொல் பால் என்னும்
தென்சொல்லொடு தொடர்புடையதா யிருக்கலாம்.
     பால்=வெண்மை. "பாற்றிரு நீற்றெம் பரமனை" (திருவாச.446)
     (3) ஸிப்.
     இது உடன்பிறப்பைக் குறிக்கும் மேலையாரியத் தியூத்தானியச்
சொல். ஆக்கசுப் போர்டு சிற்றகர முதலியில் (C.O.D.) பின்வருமாறு
குறிக்கப்பெற்றுள்ளது :
     sib = a brother or sister. sibship = the group of children
from the same two parents.
     OE.sib (b), MDu. sib (be), OHG, sippi, Goth. sibjis.


     இம் மூவகை மூலத்தினும் தமிழ்மூலமே பொருத்தமாயிருத்தல்
காண்க.
     

6.  உபாயம்

இதுவும் ஒரு தமிழ் வேர்ச்சொல் தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்டது.

உ என்பது முன் நிற்பது என்ற பொருளுடையது.


உ + பு + ஆ + அம்.

இதில் பு - விகுதி. ஆ (வினைச்சொல்). அம் = விகுதி.

உத்தி என்பது உ +தி (விகுதி) என்று ஏற்பட்டதுபோல.

இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்க வேண்டும். உ + பு என்பதைச் சேர்க்கும்போது ஏன் உப்பு என்று வராமல் உபு (உபாயம்) என்று வந்தது? என்று!. இதறகு மரபு, ஒழிபு, என்ற சொல்லமைப்புகளைக் கண்டு தெளிவுபெறவேண்டும்.

ஆயம் என்ற இறுதிச்சொல் ஆ+ ய்+ அம் என்று புனைவுற்று, அமைந்தது. "ய்" என்பது உடம்படுமெய். (ஆகா! உடன்+படு+மெய் என்பது ஏன் உடன்படுமெய் என்றில்லாமலும், உடற்படுமெய் என்றில்லாமலும் "ம்" வந்தது என்று கேட்கலாம். சொல்லாக்கத்தில் புணரியல் இலக்கணம் ஓரளவுக்கே பயன்படுகிறது. முழுவதும் பின்பற்றப்படுவதில்லை. அதனால்தான் மக+கள் என்பது மகக்கள் என்று வராமல் மக்கள் என்றுதான் வரும், சொல்லாக்கத்திலே! மே + படு என்பது மேம்படு என்று வரும், மெலித்தலாக. மே + படியான் = மேப்படியான் என்று வரும், பேச்சில்.

·தன்றியும், தொல்பழங்காலத்தில் உடன் என்பதன் மறுவடிவமாக உடம் என்பது இருந்திருக்கலாம். அறம் - அறன் போல!! உடம் என்று செய்யுளில் வந்தவழிக் கண்டுகொள்ளவும். )
தர்மம்

தர்மம் என்ற சொல் தமிழ் வேர்ச்சொல்லாகிய தரு விலிருந்து உருவாகியது. இதுவும் வடமொழி தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொற்களில் ஒன்று.

தரு > கற்பகதரு > பனைமரம்எல்லாப்பகுதிகளும் மனிதர்களுக்குப் பயன் தருபவை.

தரு என்ற வேரிலிருந்து வந்த சொல்கள் சில:

தருவாய் (வருவாய்) – கிடைக்க வேண்டிய பணம் அல்லது பொருள்
தருணி இளம்பெண் ( இன்பம் தருபவள் - young woman who gives pleasure)
தரணிஇயற்கை வளங்களை அள்ளித் தரும் மண் (பூமி)
தாராளம்இல்லையென்று கூறாமல் அள்ளித் தருவது
தார்வாழைத் தார். (பழங்கள் நிறைந்த வாழைக் குலை)

தமிழ்ச் சொல்லாகிய தருமம்/தருமை வடமொழியில்தர்மாவாக மாறியது. ( மறுமை/மருமம் > மர்மம்)அரசன் - ராஜன்


அரசன் அல்லது ராஜன் என்ற சொல்லும் சமக்கிருத்திலிருந்து இரவல் வாங்கிய சொல்லென சமக்கிருதவாதிகள் வாதிடுவதைக் காணலாம். உண்மையில் அரசு என்ற தமிழ்ச் சொல்லைச் சமக்கிருதம் இரவல் வாங்கி ராஜாவாக்கிக் கொண்டது.

அரவு > அரசு> அரசன்> ராசன்> ராஜன் > ராஜா

     ம. அரசன், க. அரச, து. அரசு.

     L. regis, rex, Kelt, rig, OG. rik, Goth, reiks, AS. rice, E. rich.

     அரவணைத்தல் என்பது தழுவுதலையன்றிச் தழுவிக்
காத்தலையே குறித்தலால், அரவணை என்னும் கூட்டுச் சொல்லின்
முதலுறுப்பு, பாம்பைக் குறியாது காக்கும் வலிமையுள்ள உயர்திணையான்
ஒருவனையே குறித்தல் வேண்டும். அகரம் பல சொன்முதலில் உகரத்தின்
திரிபாயிருத்தலால், அரவு என்பது உரவு என்பதன் திரிபென்று
கொள்ளுதல் தக்கதாம். உரவு வலிமை. வலி என்பது பண்பாகுபெயராய்
வலிமையுள்ளவனையுங் குறிக்கும்.

"காய மனவசி வலிகள்"
(மேருமந். 1097)

     Authority என்னும் ஆங்கிலச் சொல்லையும் நோக்குக.
     உலகில் வலிமை மிக்கவன் அரசனாதலின், உரவோன் என்னும்
சொல் அரசனையே சிறப்பாகக் குறிக்கும்.     

"முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன்ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
யொருதா மாகிய வுரவோ ரும்பல்"              (புறம். 18)

என்று பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது காண்க.
வுகரவீறு சில சொற்களில் சுகர வீறாகத் திரிகின்றது.

     எ-டு: ஏவு - ஏசு, பரவு - பரசு, விரவு - விரசு, துளவு - துளசு
          -
துளசி.

     இம் முறையில் அரவு என்பது அரசு என்றாயிற்று.

     அரசு - அரசன். இச் சொல் குமரிக்கண்டத்தில் தலைக்கழகக்
காலத்திலேயே தோன்றியதாகும். அகப்பொருளிலக்கணத்திற்
குறிக் கப்பெறும் நால்வகை வகுப்பாருள் இரண்டாமவர் அரசர். அரசன்
என்பது கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன் என்னும் ஐவகைத்
தலைவர்க்கும் பொதுப்பெயராம்.

"ஐவகை மரபின் அரசர் பக்கமும்"
(தொல்.1021)

என்னுமிடத்து , வேறு பெயர் பொருந்தாமை காண்க.
     அரசன் - அரைசன் - அரையன். அரசு - அரைசு.

     தெ. ராயலு, க.ராயரு, E.roy.இஸ்டம், கஷ்டம், குஸ்டம், நஷ்டம்  எல்லாமே தமிழிலிருந்து இரவல் வாங்கப்பட்ட சொற்கள்.

இஸ்டம் = இடு + அம் > oneway drop,oneway thinking,persons own view

கஷ்டம் >கட்டம் = கடு + அம் > கடு means show restriction, disapproval, angry- like in a square -restricted border, an unrelieved pain

நஷ்டம் > நட்டம்நட்டு > means once you pierce it,it should not be taken out - once you do it you cannot get return.

குஸ்டம் > குட்டம் >குடு >குட்டை > short - when body elements are short kushtam happens

குட்டம் - குஷ்ட

     குள் - குட்டு - குட்டம் = குட்டை, குட்டி.
     குட்டம் = 1. சீர் குறைந்து குறுகிய அடி.

"குட்டமும் நேரடிக் கொட்டின என்ப"
(தொல். 1372)


     2. விரல்களும் மூக்கும் அழுகிக் குட்டையாகும் நோய்.

"குட்டநோய்"
(சீவக. 253)

     வடவர் கு + ஸ்த என்று பிரித்து, குறைந்து நிற்பது என்று
பொருட் காரணங் கூறுவர். அதிலும் கு என்பது தென்சொல்லே. குள்-கு. 
     .நோ: நல் - , அல் - .
     குட்டை = வெண்குட்டநோய்.
தொடரும்........ :-)


Ref:  
http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=79
http://sivamaalaa.blogspot.ca/

6 comments:

Rama K said...

நல்ல விளக்கம் தந்துள்ளேர்கள். சமஸ்கிருதத்தை ஏற்றிப் பிடிப்பவர்கள் தன்னுடைய மொழியையும் அறிந்து கொள்வது நல்லது.

www.revmuthal.com

gdvasan said...

first we should know meaning of terminology, "samaskirutham" sama + kirutham; so sama means - equal, kirutham means -language; therefore, sanskirt is equal language for what?; Always things has to be compare with the things which has same potential, so language to be compare with language;
now samaskirtuham is equal for which language, at the ancient time tamil only exit, they want to compare samaskirutham is equal for tamil.In this point itself say, newly originated language of sanskit is equal for ancient language of Tamil. itself its proved that based on tamil only samaskirtuham was originated. Tamil is mother of all the language. Tamil exist in the period of siva and also tamil is mother tongue for god siva. evidence is two poet is written by god siva in sanga illakiyam

gdvasan said...

first we should know meaning of terminology, "samaskirutham" sama + kirutham; so sama means - equal, kirutham means -language; therefore, sanskirt is equal language for what?; Always things has to be compare with the things which has same potential, so language to be compare with language;
now samaskirtuham is equal for which language, at the ancient time tamil only exit, they want to compare samaskirutham is equal for tamil.In this point itself say, newly originated language of sanskit is equal for ancient language of Tamil. itself its proved that based on tamil only samaskirtuham was originated. Tamil is mother of all the language. Tamil exist in the period of siva and also tamil is mother tongue for god siva. evidence is two poet is written by god siva in sanga illakiyam

Srinivasan Ramakrishnan said...

தொல்காப்பியர் தன்னுடைய நூலில் வடசொல் கொண்டு செய்யுள் அமைக்கலாம் என்று சொல்லி உள்ளாரே. அப்படியானால் அவர் காலத்தில் வடமொழி இங்கே புழக்கத்தில் இருந்ததாகதானே அர்த்தம்.

அரசன் ராஜாவாக மாறியது என்றீர்கள். ராஜா தான் ராசா - ராசன்- அரசன் என்று மாறியது. தமிழில் தான் ய, ர, ல கொண்டு சொல் தொடங்ககூடாது என்று விதி உள்ளது.
லோக - லோகம் - உலகம்
யந்த்ர - யந்த்ரம் - இயந்திரம்

viyasan said...

@Srinivasan Ramakrishnan,

தொல்காப்பியருக்கே பூணூல் அணிவித்து பார்ப்பானாக்கிய பார்ப்பான்கள் தொல்காப்பியத்தை விட்டு வைத்திருப்பார்களா? அதெல்லாம் இடைச் செருகல்கள். பார்ப்பான்கள் தமிழுக்கும், தமிழர்க்கும் செய்த அநீதிகள் அதிகம். ஒரு சாமிநாதையர், ஒரு பாரதிக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான பார்ப்பன வடமொழி வெறியர்களைப் பார்ப்பனர்கள் தமிழர்களுக்கெதிராக உருவாக்கினர்/உருவாக்கின்றனர். வடமொழி சிலப்பதிகார காலத்தில் வந்து விட்டதாகக் கூறலாமே தவிர, தொல்காப்பியர் காலத்தில் அல்ல.

தமிழ்ச்சொற்களை இரவல் வாங்கி அதை வடமொழியாக்கி விட்டு, அதை மீண்டும் தமிழ் இரவல் வாங்கியதாகக் கதைவிடும் தமிழெதிரிப் பார்ப்பான்கள் பல இணையத்தளங்களில் உலவுகின்றனர். நீங்களும் அவர்களில் ஒருவர் என நான் நம்புகிறேன். :-)

Perambalur DPO said...

100% real