Friday, August 29, 2014

கலைஞர் கருணாநிதி ஏன் ‘சென்னைக்கு’ தெலுங்குப் பெயரையிட்டார்?தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னை 375 ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சென்னை என்ற பெயருக்கும்  தமிழுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்த்தால் எதுவுமே கிடையாதாம். சென்னை என்பது வெறும் தெலுங்குச் சொல், அந்த சென்னை என்ற ஊர்ப்பெயருக்கும் தமிழுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்கிறார் பாரிசில் வாழும் வரலாற்று ஆராய்ச்சியாளரும் அண்மையில் வெளியிடப்பட்ட Origin and Foundation of Madras  என்ற நூலின் ஆசிரியருமாகிய J B P More.
அவரது கருத்துப்படி சென்னையின் முன்னைய பெயராகிய மதராஸ் (Madras) ஆங்கிலேயர்களின் அல்லது ஐரோப்பிய ஆட்சியாளர்களின் பெயர் என்பது முற்றிலும் தவறான கருத்து. அவரது ஆராய்ச்சியின் படி உண்மையில் மதராஸ் என்பது மேடு என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவாகிய மேடுராசப்பட்டினத்தின் திரிபு ன்கிறார்.

மேடு > மேடுராசபட்டணம் > மேடுராஸ் > மெட்ராஸ் > மதராஸ்- Madras

இந்தக் கருத்தைப் படிக்கும் போது சரியாக ஆராய்ந்து பார்க்காமல் திமுகவின் ஆட்சிக்காலத்தில்  தமிழ்நாட்டின் தலைநகரத்துக்கு தமிழிலிருந்து உருவாகிய பெயரை நீக்கிவிட்டு எதற்காக தமிழில், எந்தவித பொருத்தமான கருத்துமற்ற, சென்னை என்ற தெலுங்குப் பெயரை இட்டார்முத்தமிழ்க் காவலர்கலைஞர் கருணாநிதி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. 

 திரு. முத்தையா போன்ற அறிஞர்கள் சென்னை என்பது தமிழ்ச் சொல் அல்ல, அது ஒரு தெலுங்குச் சொல் என்பதை எடுத்துக்காட்டிய பின்பும் அப்பொழுது ஆட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் அதைக் கருத்தில் கொள்ளவில்லையாம்.  இது உண்மையானால், வரலாற்றாசிரியர்களுடனும், மொழியிலக்கண வல்லுனர்களுடன் (Etymologist) கலந்தாலோசித்த பின்னர்  சென்னை என்ற தெலுங்குப் பெயரை அகற்றி விட்டு, மேடுராசப்பட்டணம் அல்லது அதன் திரிபாகிய மதராஸ் என்பதையே மீண்டும் சென்னைக்கு பெயர் மாற்றம் செய்ய மாண்புமிகு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் அதைச் செய்வாரா?

ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆண்ட போது அவர்கள் ஐரோப்பிய பெயர்களை இந்திய நகரங்களுக்கு அதிலும் குறிப்பாக கரையோர நகரங்களுக்கு இட்டது மிகவும் அரிது. பதிலாக இந்தியப் பெயர்களை ஆங்கில(ஐரோப்பிய)மயப் படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, மும்பாய், பாம்பே யாகவும், கொல்கத்தா-கல்கத்தா, பாண்டிச்சேரி- பொண்டிச்சேரி, தரங்கம்பாடி- Tranquebar, கண்ணூர்- கண்ணனூர், திருவனந்தபுரம்Trivandrum etc. 

1639 ஆம் ஆண்டுக்கு முன்னாலேயே இருந்த திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர் போன்ற கிராமங்கள் மதராசின் வரலாற்றை எழுதும்போது மிகவும் முக்கியமானவை. அவை மிகவும் பழமையான தமிழ்க்கிராமங்கள். அங்கே பார்த்தசாரதி கோயில், கபாலீச்சரர் கோயில், மருத்தீச்சரர் கோயில் போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற கோயில்கள் உள்ளன. தமிழ்ப் பக்திப் பாரம்பரியத்தின் வரலாற்று நாயகர்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் இந்தக் கோயில்களைப் பற்றிப் பதிகங்கள் பாடியுள்ளனர்.

ஆனால் இந்தக் கிராமங்கள் எல்லாம் நகரங்களாகி மதராஸ் என்ற நகரம் உருவாகுவதற்குப் பதிலாக, ஆங்கிலேயர்களால் 1639 ஆம் ஆண்டில் மேடு (நரிகள் வாழ்ந்த நரிமேடுஎன்ற இடத்தில் ஏறபடுத்தப்பட்ட குடியிருப்பு, நகரமாகி வளர்ந்து சுற்று வட்டாரத்திலிருந்த பழந்தமிழ்க் கிராமங்களையும் இணைத்துக் கொண்டு மதராஸ் மாநகராமாகியது.
தமிழ்நாட்டில், தமிழர்களின் தலைநகரத்துக்கு தெலுங்குப் பெயரிருப்பது, தமிழர்கள் அனைவருக்கும் வெட்கக்கேடு. எனது கருத்தைத் தமிழ்நாட்டிலுள்ள தமிழரல்லாத திராவிடர்களும், வடுகர்களும் நிச்சயமாக எதிர்ப்பார்கள் ஆனால் உலகத்தமிழர்களுக்காக தமிழ்நாடு எப்படிக் குரல் கொடுக்கலாமோ அதே போன்று  தமிழ்நாட்டின் நலன்களில், தமிழ்நாட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க உலகத்தமிழர்களுக்கும் உரிமையுண்டு என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது, அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.  :-)JBP More, a professor at INSEEC whose recent book Origin and Foundation of Madras traces the history of the city. More, who got his PhD in History from Ecole des Hautes Etudes en Sciences Sociales, Paris, has written 15 books on various aspects of south Indian history. In this email interview from Paris, he says the notion that Madras was a European name or it had colonial connotations is completely wrong. It was always a Tamil word, popularly used by the people of Madras and Tamil Nadu, since the foundation of Madras in 1639.


மேலதிக விவரங்களுக்கு:

11 comments:

Meena Narayanan said...

viysan ;idai nanga_aa PARTHEKKEROM; srilanka v-e illaerthe; neega_ kavalaipatta_vendd_am

viyasan said...

@மீனா நாராயணன்,

நாங்கள் தமிழர்கள் என்ற முறையில் தமிழ்நாட்டில் நடப்பதில் அக்கறைப்பட எங்களுக்கு உரிமையுண்டு, நீங்கள் கலப்பினத் 'தமிழராக' இருந்தால், உங்களுக்கு இதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. :-)

viyasan said...

எனது கருத்தைத் தமிழ்நாட்டிலுள்ள தமிழரல்லாத திராவிடர்களும், வடுகர்களும் நிச்சயமாக எதிர்ப்பார்கள் ஆனால் உலகத்தமிழர்களுக்காக தமிழ்நாடு எப்படிக் குரல் கொடுக்கலாமோ அதே போன்று தமிழ்நாட்டின் நலன்களில், தமிழ்நாட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க உலகத்தமிழர்களுக்கும் உரிமையுண்டு என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது, அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. :-)

Anonymous said...

முதலில் வியாசன் என்ற சமஸ்கிருதப் பெயரை மாற்றும் ஓய் ! அப்புறம் சென்னைக்கு பெயர் சூட்டலாம்.

Anonymous said...

அரைவேற்காட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர் முட்டாள் தனமான ஆராய்ச்சிகளோடு கிளம்பியுள்ளார்கள் போலும்.

மெட்ராஸ் தமிழாம், சென்னை தெலுங்காம். கொடுமைடா..

மெட்ராஸ் என்பதற்கு மேடுராசன்பட்டினம் என்று பெயர் இருந்ததாக எவ்வித சான்றும் கிடையாது.

நரிமேடு என்ற பெயர் இருந்தத்தாக சில தகவல்கள் உண்டு.

மற்றபடி மடராசன் என்ற மீனவக் கதையும், போர்த்துகேயே பெயர், இஸ்லாமிய மதராஸா தான் மெட்ராஸ் ஆனதாக கூறியது எல்லாம் ஆதாரமற்றவை என்பதை ஏற்கனவே பலர் நிராகரித்துவிட்டனர்.

மெட்ராஸ் என ஏன் பெயர் வந்தது என பிரித்தானியோரோ, அதற்கு முன் எந்தவொரு ஆய்வாளரோ தகவல் தரவே இல்லை.

சென்னை நகரம் உருவான போது, வெள்ளையர் நகரம், கறுப்பர் நகரம் என இரண்டு உருவாகியது. வெள்ளையர் நகரம் மெட்ராஸ் என அழைக்கப்பட்டது கறுப்பர் நகரம் சென்னை என அழைக்கப்பட்டது.

நரிமேடு என்பது தான் மெட்ராசா திரிந்தது எனச் சிலர் கூறுவர். சென்னாக் குப்பம் என்பது தான் சென்னையாக மாறியது என்பர்.

மற்றபடி சென்னப்ப நாயக்கர் பெயரில் இருந்து தான் சென்னை வந்தது என்பதும் எல்லாம் கட்டுக் கதை.

சென்னை என்பதன் வேர்ச்சொல் சென்னா கேசவப் பெருமாள் என்ற திருமாலின் திருநாமத்தில் இருந்து பிறந்தது என்பதே ஏற்கப்பட்ட உண்மை.

வெள்ளையர்கள் உருவாக்கிய செண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகே சென்னா கேசவப் பெருமாள் கோயில் அமைந்திருந்தது.

இன்றளவும் அது அங்கு உள்ளது. அந்த பகுதி ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படுகின்றது.

சென்னா கேசவப் பெருமாள் வீற்றிருந்தப் பகுதி சென்னாக் குப்பம் என அழைக்கப்பட்டு பின்னர் அது சென்னாப் பட்டினம் என மாறியது.

இந்த பெருமாளின் பெயரில் உள்ள சென்னா என்ற நாமமே பின்னர் சென்னை என மாறி முழுச் சென்னைக்குமான பெயராக உருவாகியது.

சென்னா என்றால் கன்னடத்திலும், தெலுங்கிலும் நல்லது, அழகு, அருமை என்ற பொருள் இருக்கின்றது. இதன் வேர்ச்சொல் தமிழில் இருந்து வந்ததாகும்.

செம் என்றால் தூய்மை, அழகு, நல்லது என்ற பொருள் இருக்கின்றது. அதில் இருந்தே செம்மை, சென்னை என்ற பல சொற்கள் உருவாகின.

செந்தமிழ், சென்னியர் என்ற சொற்களும் இவற்றில் இருந்து பிறந்தவை.

சென்னி என்பது சோழர்களின் பெயர்களில் ஒன்றாகும். சென்னி என்றால் சிறப்பு, உயர்ந்தது என்ற பொருள் உண்டு.

பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புறநானூறு)

என புறநானூற்றில் கூட உண்டு. பெரும்பூட் சென்னி என்ற சோழ மன்னன் பற்றி சங்க இலக்கியங்களில் கூட குறிப்புகள் உண்டு.

இந்த சென்னி என்ற பெயரில் பல ஊர்கள் தமிழகத்தில் உள்ளது. சென்னி மலை என்ற ஊர் கூட உண்டு.

வட தமிழகத்திலும், தென் கருநாடகம், தென் ஆந்திரப் பகுதிகளில் பல ஊர்களில் சென்னா கேசவப் பெருமாள் என்ற பெயரில் வைவண கோயில்கள் இருக்கின்றன. இந்த சென்னா என்ற சொல் சென், சென்னி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது என்பதை தாங்கள் எந்த தமிழாசிரியரிடம் வினவி அறிந்து கொள்ளலாம்.

அத்தகைய சென்னா என்ற சொல்லில் இருந்தே சென்னாக் குப்பம், சென்னாப் பட்டினம், சென்னை என்ற பெயர் உருவாகி இருக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டு பெயரிட்டு மகிழ்ந்துள்ளோம். இன்று சென்னை என்றால் தெரியாத ஊரே இல்லை.

மெட்ராஸ் என்ற பெயர் வடக்கில் அவமானப் படுத்தப்படும் ரீதியில் மதராசி என்ற இழிச்சொல்லாக மாறிவிட்ட நிலையில், அதனை மீண்டும் ஏற்பது தேவையற்ற ஒன்று. சென்னையின் புது அடையாளம் மிகுந்த உயர்ந்த நிலைகளில் இந்த நகரத்தை கொண்டு சென்றுள்ளது.

குறிப்பாக இலங்கையில் இருப்பவர்கள் தமிழகத்தின் விடயங்களில் மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும். தாங்கள் தமிழ் பேசுவோராக இருக்கும் ஒரே காரணத்தால் தமிழகத்தின் செயல்பாடுகளில் தலையிடலாம் என்ற தலைக்கணத்தில் குதித்தால் அது ஆபத்து தான். இதை எச்சரிக்கையாகவே கூறுகின்றோம்.

அதுவும் முழுமையான தகவல்களை தெரியாமல் அரைவேற்காட்டுத் தனமாக வந்து பதிவுகள் போடுவும் சுத்த முட்டாள் தனமான விடயமாகும்.

வருண் said...

வியாசன் என்பது தமிழ்ப் பெயரா? இல்லைனா சமஸ்கிரத ஆசிரிய்ரோட பெயரா? முதலில் அதை விளக்கவும்!

நீங்களே முடிவெடுக்க முடிந்த உங்க பேரை ஒழுங்கா தமிழ்ல்ல வச்சுக்க வக்கில்லை! கோடிப்பேருகளை சமாதானப்படுத்தி வைக்க வேண்டிய ஒரு ஊரின் பெயரை எப்படி வைக்கணும்னு வந்துட்டாரு நம்ம வியாசர் அண்ணாச்சி! :)

viyasan said...

நடிகர் விஜய்யின் பெயருக்கு என்ன கருத்தென்றால் வருண் அண்ணாச்சிக்கு எப்பவோ தெரிந்திருக்கும். ஆனால் வியாசன் என்பது தமிழ்ப்பெயர் என்பது மட்டும் தெரியாது போலிருக்கிறது.

வியாசன்:

வி என்றால் தமிழில் = உயர்ந்த, மேலான, Great, highly or above

ஆசான் = குரு, ஆசிரியர்

உதாரணம்:

வி > விண் (மேல்) வீக்கம், வீழ்ச்சி (நீர்), விழுது

ஃ வி + ஆசான் = வியாசான் > வியாசன்

வி + நாயகன் = விநாயகன் (தமிழர் கடவுள்)

வியாசர் மீனவ குலத்தவர் மட்டுமல்ல அவர் ஒரு தமிழன் (திராவிடன்) என்றும் கூறுவர். ஆகவே எனது பெயர் தூய தமிழ்ப்பெயரேயன்றி சமகிருதப் பெயர் அல்ல.

இந்த தவறைத் தான் நாங்கள்- தமிழர்கள் தொடர்ந்து விட்டுக் கொண்டு வருகிறோம். தமிழிலிருந்து இரவல் வாங்கிய சொற்களே உருக்குலைந்து மீண்டும் தமிழுக்கு வந்தன. அதையுணராமல், அவற்றை தமிழ் வடமொழியிலிருந்து இரவல் வாங்கியதாக நாங்கள் நம்பினோம். அதனால் அந்த அடிப்படையில் சமக்கிருதம், தமிழை விட மூத்த மொழி மட்டுமல்ல, தமிழுக்குத் தாயே சமக்கிருதம் தான் எனச் சிலர் கூறவும் துணிகின்றனர்.

viyasan said...

@கோடங்கிச் செல்வன்,

//முதலில் வியாசன் என்ற சமஸ்கிருதப் பெயரை மாற்றும் ஓய் ! அப்புறம் சென்னைக்கு பெயர் சூட்டலாம்.///

தலைவர் வருணுக்கு அளித்திருக்கும் விளக்கத்தைப் பாரும் ஒய்! :-)

viyasan said...

@கோடங்கிச்செல்வன்

உம்மைப் போலவும் சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து தான் நான் இரண்டு செய்திகளினது இணைப்பையும் தந்தேன். அவற்றை வாசித்துக் கூடப் பார்க்கவில்லை போல் தெரிகிறது. படித்துப் பார்த்திருந்தால் அங்கேயே உங்களின் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் கிடைத்திருக்கும்.


//அரைவேற்காட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர் முட்டாள் தனமான ஆராய்ச்சிகளோடு கிளம்பியுள்ளார்கள் போலும். ///

J B P More இன் தகைமைகளைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. வரலாற்று ஆராய்ச்சியில் நீர் ஒரு அரைவேக்காடா அல்லது முழுவேக்காடா என்பதைப் பற்றி இதற்கு முன்பே நாங்கள் இருவரும் அடிக்கடி விவாதித்துள்ளோம். அதனால் இப்போது அங்கு போக வேண்டாம் என நினைக்கிறேன். :-)


//மெட்ராஸ் தமிழாம், சென்னை தெலுங்காம். கொடுமைடா.. மெட்ராஸ் என்பதற்கு மேடுராசன்பட்டினம் என்று பெயர் இருந்ததாக எவ்வித சான்றும் கிடையாது. நரிமேடு என்ற பெயர் இருந்தத்தாக சில தகவல்கள் உண்டு. ///

அதற்கு தகுந்த ஆதாரங்கள் அவரிடம் உண்டாம். தனது ஆராய்ச்சியில் கண்டதாகக் கூறுகிறார். அவரது கருத்தை கேட்டு அவருக்கும் வாய்ப்புக் கொடுத்து, அவரது சான்றுகளை ஆராய்வது தான் முறை.

“In my work on Madras, I have proved beyond any doubt that Madras was a Tamil name derived from ‘medu’ and ‘medurasapatnam’. I made this discovery only recently after an extremely patient and painstaking research. But in 1996 when the DMK changed the name of Madras to Chennai, nobody including the Tamil scholars of Tamil Nadu knew that Madras was a Tamil name.”


//மற்றபடி மடராசன் என்ற மீனவக் கதையும், போர்த்துகேயே பெயர், இஸ்லாமிய மதராஸா தான் மெட்ராஸ் ஆனதாக கூறியது எல்லாம் ஆதாரமற்றவை என்பதை ஏற்கனவே பலர் நிராகரித்துவிட்டனர். ///

பரவாயில்லையே. நீர் சொல்வதும் சரி. :-)

//மெட்ராஸ் என ஏன் பெயர் வந்தது என பிரித்தானியோரோ, அதற்கு முன் எந்தவொரு ஆய்வாளரோ தகவல் தரவே இல்லை. ///

உண்மை, அது ஏற்கனவே இருந்த பெயரின் திரிபு தான் ஏனென்றால் மெட்ராஸ் என்ற பெயரை அவர்கள் இடவில்லை. அவர்கள் பிழையாக உச்சரித்தார்கள் அவ்வளவு தான்.


//சென்னை நகரம் உருவான போது, வெள்ளையர் நகரம், கறுப்பர் நகரம் என இரண்டு உருவாகியது. வெள்ளையர் நகரம் மெட்ராஸ் என அழைக்கப்பட்டது கறுப்பர் நகரம் சென்னை என அழைக்கப்பட்டது. //

மேலதிக தகவல். :-)

///நரிமேடு என்பது தான் மெட்ராசா திரிந்தது எனச் சிலர் கூறுவர். சென்னாக் குப்பம் என்பது தான் சென்னையாக மாறியது என்பர். மற்றபடி சென்னப்ப நாயக்கர் பெயரில் இருந்து தான் சென்னை வந்தது என்பதும் எல்லாம் கட்டுக் கதை. ///

இதைத் தான் J B P More உம் கூறுகிறார். சென்னாக் குப்பம் சென்னையாக மாறவில்லை.


//சென்னை என்பதன் வேர்ச்சொல் சென்னா கேசவப் பெருமாள் என்ற திருமாலின் திருநாமத்தில் இருந்து பிறந்தது என்பதே ஏற்கப்பட்ட உண்மை. ///

அது தவறான கருத்து என்கிறார் சென்னகேசவப் பெருமாள் கோயில் கட்டப்பட முன்பே சென்னை உருவாகிவிட்டதாம்.///சென்னா என்றால் கன்னடத்திலும், தெலுங்கிலும் நல்லது, அழகு, அருமை என்ற பொருள் இருக்கின்றது. இதன் வேர்ச்சொல் தமிழில் இருந்து வந்ததாகும். செம் என்றால் தூய்மை, அழகு, நல்லது என்ற பொருள் இருக்கின்றது. அதில் இருந்தே செம்மை, சென்னை என்ற பல சொற்கள் உருவாகின. செந்தமிழ், சென்னியர் என்ற சொற்களும் இவற்றில் இருந்து பிறந்தவை. சென்னி என்பது சோழர்களின் பெயர்களில் ஒன்றாகும். சென்னி என்றால் சிறப்பு, உயர்ந்தது என்ற பொருள் உண்டு. பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புறநானூறு) என புறநானூற்றில் கூட உண்டு. பெரும்பூட் சென்னி என்ற சோழ மன்னன் பற்றி சங்க இலக்கியங்களில் கூட குறிப்புகள் உண்டு. இந்த சென்னி என்ற பெயரில் பல ஊர்கள் தமிழகத்தில் உள்ளது. சென்னி மலை என்ற ஊர் கூட உண்டு. ///

கேட்க நன்றாக இருக்கிறது, ஆனால் உண்மையில் இந்தக் காரணங்களுக்கும், சென்னை என்ற பெயருக்கும் எந்த தொடர்பும் கிடையாதாம்.//மெட்ராஸ் என்ற பெயர் வடக்கில் அவமானப் படுத்தப்படும் ரீதியில் மதராசி என்ற இழிச்சொல்லாக மாறிவிட்ட நிலையில், அதனை மீண்டும் ஏற்பது தேவையற்ற ஒன்று. சென்னையின் புது அடையாளம் மிகுந்த உயர்ந்த நிலைகளில் இந்த நகரத்தை கொண்டு சென்றுள்ளது. ///

வடவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்காக, அவர்களுக்குப் பயந்து, மேடுராசப்பட்டணம் என்ற பெயர் தான் மெட்ராஸ் என மாறியதென்ற வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்ளாமலிருக்க வேண்டுமென்கிறீரா?

viyasan said...

@கோணங்கிச்செல்வன்,

//குறிப்பாக இலங்கையில் இருப்பவர்கள் தமிழகத்தின் விடயங்களில் மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும். தாங்கள் தமிழ் பேசுவோராக இருக்கும் ஒரே காரணத்தால் தமிழகத்தின் செயல்பாடுகளில் தலையிடலாம் என்ற தலைக்கணத்தில் குதித்தால் அது ஆபத்து தான். ///

உம்மைப் போன்ற எத்தனைபேர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். நீரே சிங்களவர்களின் ‘சொம்புதூக்கி’. உம்மால், இலங்கைத் தமிழர்களுக்கெதிராகப் பேசமாலிருக்க முடியாதென்பது இணையத்தில் யாவருமறிந்த விடயம். உம்மை எல்லாம் நாங்கள், ஈழத்தமழர்கள் கணக்கிலேடுப்போமேன்று, அதிலும் நான் இன்னும் கணக்கிலெடுப்பதாக நீர் இன்னும் நினைத்துக் கொண்டிருப்பதை நினைக்கத் தான் சிரிப்பை அடக்கமுடியவில்லை. :-)

//இதை எச்சரிக்கையாகவே கூறுகின்றோம். //

பன்மையில் வந்து பயமுறுத்துகிறீரா? :-)

//அதுவும் முழுமையான தகவல்களை தெரியாமல் அரைவேற்காட்டுத் தனமாக வந்து பதிவுகள் போடுவும் சுத்த முட்டாள் தனமான விடயமாகும். ///

இலங்கையைப் பற்றியும் , ஈழத்தமிழர்களைப் பற்றியும் மட்டுமல்ல, எதிலுமே ஆதாரமில்லாமல், எந்த ஆதரங்களையும் காட்டாமல், அரை வேக்காட்டுப்பதிவுகளைப் போடுவதில் உம்மை வெல்ல யாராலும் முடியாது ஒய்! உம்முடைய பழைய பதிவுகளைப் போய்ப்பாரும். :-)

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த எண்ணப்பதிவு

தொடருங்கள்