Wednesday, August 27, 2014

பத்மஸ்ரீ அவ்டாஸ் கெளஷலின் அதிகப்பிரசங்கித்தனம் – யாழ் பல்கலை. பேராசியரின் கண்டனம்!ஈழத்தமிழர் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்த இந்தியருக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் .சூசை ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


அவ்டாஸ் கெளஷல் என்ற இந்தியரின் ஈழத்தமிழர் எதிர்ப்பையும் ராஜபக்ச ஆதரவையும் பார்க்கும் போது இன்னொரு இந்தியராகிய பொதுநலவாய நாடுகள் அமைப்பின்  செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இலங்கை ஜனாதிபதி பற்றிய ஒரு அறிக்கையை பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளிடமிருந்து மறைத்த விடயம் பற்றி **கனடா அவர்மீது தனது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தியது தான் நினைவுக்கு வருகிறது, சில இந்தியர்களுக்கு மதிப்புக்குரியவர்களாக, உயர்ந்த பதவியில் இருந்தாலும், அதற்கேற்றவாறு கண்ணியமாகவும், நடுநிலையாகவும் நடந்து கொள்ளத் தெரியாது.


இப்படியான இந்தியர்களுக்கு ஈழத்தமிழர்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை. ஈழத்தமிழர்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை, ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் மீதுள்ள வெறுப்பையும், கோபத்தையும் எங்களிடம் காட்டித் தீர்த்துக் கொள்கிறார்களா என்று தான் எண்ணத் தோன்றுகிறது. இணையத்தளங்களில் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள இந்தியர்கள் ஈழத்தமிழர்களை எதிர்த்து, சிங்களவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் காரணம், தமிழ்நாட்டுத் தமிழர்களின் மீது, ஏனைய இந்தியர்களுக்குள்ள வெறுப்புத் தான். "They cannot ask for police powers for the Northern Province" - Kaushal


ஜனாதிபதி மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் ஆணைக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான அவ்டாஸ் கெளஷல் என்ற இந்தியர் இலங்கையில் தமிழர்கள் பொலிஸ் அதிகாரம் கோரக்கூடாதுஎன அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. 
இவர் தனது சொந்தப்புத்தியில் தான் இவ்வாறு கூறினாரா அல்லது இரவல் புத்தியில் தான்; கூறினாரா என்பது பற்றி இவர் தான் பதில் கூற வேண்டும். காணாமல் போனோர் ஆணைக்குழுவினுடைய முக்கிய பணிகளை ஆற்றுவதை விடுத்து சுப்பிரமணியன் சுவாமி போல கோமாளித்தனமான அறிக்கைகளை விட்டு கைக்கூலித்தனம் பண்ணுவது சரியல்ல என பேராசிரியர் சூசை ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
99% வீதம் தமிழர்கள் வாழுகின்ற வட பகுதியில் தமிழர்கள் தமது சொந்த மொழியில் அல்லாது சிங்கள மொழியில்தான் பொலிஸ் நிலையங்ளில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதை இவர் கூறாமல் கூறுகின்றாரா? யாழ்ப்பாணத்தில் 1974 தமிழாராய்ச்சி மகாநாட்டின் போது நடைபெற்ற கோரச் சம்பவத்திற்கும் யாழ்நூல் நிலைய எரிப்பின் பின்ணணிகளுக்கும் பொறுப்பானவர்கள் யார் என்பதை இவர் உரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. 
வட பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள வேலை வாய்ப்புக்கள் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கே உரித்தானவை. அவற்றை சிங்களவர்களுக்கு வழங்கி சிங்கள மொழியிலேயே இப் பகுதியில் அலுவல்கள் மேற்கொள்வது ஒரு வகையில் அரசியல் அயோக்கியத்தனமே ஒழிய வேறொன்றுமல்ல. 
பொலிசு நிலையங்களில் தமிழர் வேண்டுமெனக் கோரினால் சிங்களப்பொலிசாருக்கு தமிழ் மொழி கற்பித்து அவர்களையே சேவையில் ஈடுபடுத்தப்படுவார்களாம். தமிழ் கற்று தமிழிலேயே சிங்கள பொலிசார் பணியாற்றினால் தமிழ் மொழி என்னவாகும் என்பது செல்லித்தெரிய வேண்டியதில்லை. 
அவ்டாஸ் கெளஷலிடம் ஒரு கேள்வி? 
வடக்கில் உள்ள பொலிசு நிலையங்களில் தமிழர்கள் முறைப்பாடு அல்லது ஏதாவது அலுவல்களுக்கு செல்லும் போது மொழிபெயர்ப்பாளராக வந்து உதவுவீர்களா? 
மேலும் நீங்கள் வாழுமிடத்தில்; பொலிசு நிலையத்தில் உங்களது தாய் மொழியில் அல்லது வேற்று மொழியில் அலுவல் பார்க்க ஒப்புக் கொள்வீர்களா? 
வந்தோமா தந்த வேலையை மட்டும் சீராக செய்தோமா தருவதை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினோமா என்றில்லாது தமிழ்தரப்பினருக்கு கடுப்பு ஏற்றும் கருத்துக்களை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை தாழ்மையுடன் தங்களை வேண்டுகின்றோம்.
 Prof.A.S.Ananthan.
University of Jaffna.

Avdhash Kaushal is a human rights activist and has been appointed by the Government of India's by the Union Ministry of Rural Development for monitoring of the rural job guarantee scheme NREGA. He is a recipient of Padmashree award.He has a NGO called RLEK.Mr. Avdhash Kaushal was nominated Man of the Year by The Week Magazine for the year 2003. Avdhash Kaushal was an Associate professor for three years in Lal Bahadur Shastri National Academy of Administration in Mussoori. Avdhash Kaushal was born in Meerut, Uttar Pradesh. He heads an NGO Rural Litigation and Entitlement Kendra (RLEK) which works, among others, to promote the cause of the Van Gujjars: an indigenous forest-dwelling nomadic tribe of the northern Himalayas. Campaigns include literacy, elementary health and veterinary care, and community forest management. 

No comments: