Sunday, August 31, 2014

நினைத்ததைச் சாதித்து விட்டேன்!


உண்மையில் என்னை வலைப்பதிவில் பதிலெழுதத் தூண்டியதே மக்குபால் செல்வன் அல்லது கோட()ங்கிச்செல்வன் போன்ற வலைப்பதிவர்களின் ஈழத்தமிழர்களுக்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களும், இலங்கையை, இலங்கைத் தமிழர்களை அவர்களின் வரலாற்றைப் பற்றிய அவர்களின் அறியாமையும் அதிகப்பிரசங்கித்தனமும் தான்

எடுத்துக்காட்டாக, அண்ணன் கோணங்கிச்செல்வனின் கணிசமான பதிவுகள் இலங்கைத் தமிழர்களைப் பற்றியவை மட்டுமல்ல, ஈழத்தமிழர் எதிர்ப்பும் சிங்களச் சார்பும் மிக்கவை. அவரை வெளிப்படையாக சிங்களச் 'சொம்புதூக்கி' என்றழைக்குமளவுக்கு  என்னைப் போன்ற பல ஈழத்தமிழர்களுக்கு அவரது ஈழத்தமிழர் பற்றிய பல பதிவுகள் எரிச்சலையூட்டின. அவரது ஈழத்தமிழர் பற்றிய கருத்துக்களை எதிர்த்தும் அதிலுள்ள ஓட்டைகளையும், ஈழத்தமிழர்களுக்கெதிரான பொய்ப்பிரச்சாரத்தையும் சுட்டிக் காட்டி நான் பல பதிவுகளை இட்டுள்ளேன். அவர் இலங்கையையும் ஈழத்தமிழர்கள் பற்றியும் எத்தனை பதிவுகளை இட்டுள்ளார் என்பதை நான் சொல்லத் தெரிய வேண்டியதில்லை
"குறிப்பாக இலங்கையில் இருப்பவர்கள் தமிழகத்தின் விடயங்களில் மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும். தாங்கள் தமிழ் பேசுவோராக இருக்கும் ஒரே காரணத்தால் தமிழகத்தின் செயல்பாடுகளில் தலையிடலாம் என்ற தலைக்கணத்தில் குதித்தால் அது ஆபத்து தான்."

இப்பொழுது என்னடாவென்றால், வரலாற்று ஆராய்ச்சியாளரும் அண்மையில் வெளியிடப்பட்ட Origin and Foundation of Madras என்ற நூலின் ஆசிரியருமாகிய J.B.P More என்பவர் சென்னை என்ற பெயருக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை எனப் புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என இந்தியப் பத்திரிகைகளில் வந்த செய்தியை நான் வெளியிட்டதற்கு, அண்ணன் அதிகப்பிரசங்கி என்னடாவென்றால், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டு விடயங்களில் மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டுமாம் அதிலும், "தாங்கள் தமிழ் பேசுவோராக இருக்கும் ஒரே காரணத்தால் தமிழகத்தின் செயல்பாடுகளில் தலையிடலாம் என்ற தலைக்கனத்தில் குதித்தால் அது ஆபத்து தான்.என்று பயமுறுத்தலும் விடுக்கிறார்

அதாவது உலகத் தமிழர்கள் அதிலும் குறிப்பாக "இலங்கையில் இருப்பவர்கள்" தமிழ்நாட்டைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க, தமிழ்நாட்டைப் பற்றிய விடயங்களைப் பற்றிப் பேச அண்ணன்  அதிகப்பிரசங்கியிடம் இனிமேல்  அனுமதி  பெறவேண்டுமாம். சிங்களவர்களின்  சொம்புதூக்கிகளின் பயமுறுத்தல்களுக்கெல்லாம் நானோ அல்லது ஈழத்தமிழர்கள் எவரும் பயந்து விடமாட்டார்கள். எங்களுக்கும் தமிழ்நாட்டுக்குமுள்ள தொடர்பு வரலாற்றுக்கு முந்தியது. அதை எந்த அரைவேக்காடும் அசைத்து விட முடியாது. 

ஆனால் இதில் ஏற்பட்ட நல்ல தீர்வு என்னவென்றால், அவரது கருத்தின் படி பார்த்தால் அண்ணன் கோணங்கிச் செல்வன் இனிமேல் இலங்கையைப் பற்றியோ ஈழத்தமிழர்களைப் பற்றியோ தனது வலைப்பதிவில் எதையும் உளறமாட்டார் என்பது மட்டும் தெரிகிறது. அந்த வகையில் எனக்கு வெற்றிதான், நான் நினைத்ததைச் சாதித்து விட்டேன். :-)

இனிமேல் 'மக்குபால் செல்வனின்'  ஈழத்தமிழர்கள் பற்றிய பதிவுகளுக்குப் பதிலெழுத வேண்டிய தேவையேற்படாது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே ஆனால் அவரது “சிங்கள நண்பர்கள்” இந்த முடிவை எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள் என்று தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. :-)

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படியே யாரோ எழுதிய கட்டுரைகளை காப்பியடித்து எழுதினாலும் கூட, எங்கிருந்து எடுக்கப்பட்டன என்ற இணைப்பைக் கொடுக்க மாட்டார் மக்குபால் செல்வன், அவரது எந்தப் பதிவிலும் இணைப்போ, ஆதாரங்களோ கிடையாது. இலங்கையைப் பற்றி எதுவுமே தெரியாமல் உளறும் போதும் இப்படித்தான்.  இன்றைய பதிவு கூட, திரு அருள் அவர்கள் தனது வலைப்பதிவில் 2012 இல் எழுதிய சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை! என்ற பதிவின்  அப்பட்டமான 'காப்பி' தான்.   :-)

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_6700.html


இவரது ஈழத்தமிழர் எதிர்ப்புப் பொய்ப்பிரச்சாரங்களுக்கு நானளித்த பதில்கள் சில:

தமிழ்நாட்டுச் சிங்களச் சார்புச் ‘சொம்புதூக்கி’களின் ஈழத் தமிழர் எதிர்ப்பு பொய்ப்பிரச்சாரம்!

http://viyaasan.blogspot.ca/2014/04/blog-post.html
‘வெலிகம’ அல்ல வலிகாமம்- ஈழத்தமிழர் வரலாறும் சிங்களச் சொம்புதூக்கிகள் படும்பாடும்!
ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா?

2 comments:

Pararajasingham Balakumar said...

தமிழ்நாட்டு விடயங்களில்  உலகத்தமிழர்கள்  யாரும்கருத்து சொல்லக்கூடாதென   தெரிவிப்பதற்கு கோனங்கி செல்வனுக்கு   யார் அதிகாரம் கொடுத்தார்களென  தெரியவில்லை ?

அப்படியானால் இதுவரை  ஈழத்தமிழர்கள்  விடயத்தில்   மூக்கை நுழைப்பதையே தொழிலாக  செய்து  வந்தாரே எப்படி ?

ஆதாரமில்லா அவதூறுகளை  உள்நோக்கோடு  தெரிவித்து  வந்தபோதும் வியாசன்  சரி , கோண்ங்கியின்  அவதூறு கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்த  எனைய ஈழத்தமிழர்கள் சரி  ஒருபோதும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஈழத்தமிழர்கள் விடயத்தில்   கருத்து தெரிவிக்க கூடாதென  அடாவடியாக  கருத்து தெரிவித்ததில்லை . 

கோணங்கி  பல  பதிவுகளில் தன்னை  தமிழ்நாட்டுக்காராகவே  அடையாளப்படுத்திக்கொண்டு  ஈழத்தமிழர்கள் மீது சேறு  வாரியிறைத்துள்ளார் .
ஆனால்  இது குறித்து எனக்கு பலத்த  சந்தேகமுள்ளது . இவர்  பாவிக்கும் பல  தமிழ் சொற்றொடர்கள்  இலங்கையில் தமிழர்கள் அருமையாக பாவிக்கும் சொற்றொடர்களாகும் .

உதாரணம் : " பொண்டாட்டியென்றால்  பாலு மகேந்திராவுக்கு பீப்பயம் ~

எனது கணிப்பின்படி இவர்  இலங்கையில்  பிறந்து வளர்ந்து இப்போது  தமிழ்நாட்டில் செட்டிலாகியுள்ள  முஸ்லிமாக இருக்கலாம் .
அதனால்தான் ஈழத்தமிழர்கள் என்று வரும்போது  காழ்ப்புணர்வு மிக்கவராகவும் , தமிழ் , தமிழ்நாடென  வரும்போது அதற்கு ஆதரவாக பேசுபவராகவும் உள்ளார் என்பதை நீங்கள் கவனிக்கலாம்.

எது எப்படியிருந்தாலும்  தாம் மற்றவர்கள் விடயங்களில்  தாராளமாக மூக்கை நுழைத்து  அவர்களது போராட்டத்தையும் , இனத்தையும் கொச்சைப்படுத்தி  பதிவுகள் இடலாம் , கருத்துக்கள் தெரிவிக்கலாம் . ஆனால் மற்றவர்கள்  யாரும்  அமதுநாட்டு  விடயங்களில் வரலாற்றை அடிப்படையாக வைத்துகூட  கருத்து தெரிவிக்க கூடாதென   சொல்ல முற்படுவது இவர்கள் பதிவுலகில்  உலா வரும் கருத்து  பாஸிச  வாதிகள் என்பதை  சந்தேகத்துக்கிடமின்றி  காட்டி நிற்கிறது.

viyasan said...

சகோ. பாலகுமார்,

உங்களின் கருத்துக்கு நன்றி. உண்மையில் அவர் தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதவர்களில் ஒருவராக இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கும் பலமுறை ஏற்பட்டதுண்டு. பல முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டுள்ளார். அது அவருடைய பிரச்சனை.

தமிழ்நாட்டு விடயங்களில் உலகத்தமிழர்கள் யாரும்கருத்துத் தெரிவிக்கக் கூடாது அதுவும் அப்படிக் கருத்துத் தெரிவித்தால் ஆபத்து உண்டாகுமென்று வெளிப்படையாகக் கூறுமளவுக்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று எனக்கும் தான் தெரியவில்லை.

நானோ அல்லது எந்த ஈழத்தமிழனும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களின் விடயங்களில் கருத்துத் தெரிவிக்க முடியாதென்று கூறுமளவுக்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. அத்துடன் உண்மையான எந்தத் தமிழனும் அப்படிக் கூறவும் மாட்டான். என்னதான் ஆத்திரமிருந்தாலும் அப்படி உளற அவனது தமிழுணர்வு இடமளிக்காது என்பது தான் உண்மை.