Saturday, August 2, 2014

நல்லூர்க் கட்டியத்தில் இராஜேந்திரசோழனின் பெயரையும் ஈழத்தமிழர்கள் இணைக்க வேண்டும்!

இராஜேந்திர சோழனின் ஆயிரமாண்டு 2014


யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசர்கள் முடிசூடும் அரச கோயிலாகத் (Royal Temple)திகழ்ந்த நல்லூர் முருகன் கோயில் போத்துக்கேயரால் இடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இன்று ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த  நல்லூர் முருகன் கோயிலின் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 


நல்லூர் திருவிழாவுக்காக ஒவ்வொரு சந்தியிலும் அலங்கரிக்கப்பட்ட தண்ணீர்ப்பந்தல்களும், இளைப்பாறுமிடங்களுடன், யாழ்ப்பாண நகரமே விழாக் கோலம் பூணத் தொடங்கி விடும். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் யாழ்ப்பாணத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி விடுவர்.  ஈழத்தமிழர்களின் இலங்கையில்  தாயகக் (Homeland) கோரிக்கைக்கு  எவராலும் மறுக்க முடியாத சான்றாக அமைவது தமிழர்கள் தமக்கென தனியான யாழ்ப்பாண அரசை வைத்திருந்தது மட்டுமன்றி அதை போத்துக்கேயர்களுக்குப் பயந்து அவர்களின் காலடியில் போடாமல், கடைசிவரை  போரிட்டு  இழந்ததும் தான். அந்த உண்மையைக் கூட திரித்து யாழ்ப்பாண அரசர்கள் சிங்களவர்களின் கீழிருந்த சிற்றரசர்கள் என்றும் எழுதத் தொடங்கி விட்டார்கள் சிங்களவர்கள். அதற்கு அவர்கள் ஆதாரம் காட்டுவது நல்லூர்க் கோயிலில் இன்றும் கூறப்படும் கட்டியமாகும்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கட்டியம்:

தமிழில் கட்டியம் என்பது அரசர்கள் அரசவைக்கு  வரும்போது அவர்களைப் புகழ்ந்து வாழ்த்துவதாகும். யாழ்ப்பாண இராசதானிக்கு அரசன் நல்லூர் முருகனாகக் கருதப்பட்டதால் நல்லூர் முருகன் கோயிலில் முருகன் வீதிவலம் புறப்படுமுன்பாக கட்டியம் கூறப்படுகிறது. அதில்  நல்லூர் கோயிலுக்கு திருப்பணி செய்த கோட்டை அரசன் புவனேகபாகு VII (செண்பகப்பெருமாள் அல்லது சிங்களத்தில் சப்புமல் குமாரய) இன் பெயர் இன்றும் குறிக்கப்படுகிறது. தமிழர்களுக்கு வரலாற்றைத் திரிக்கும் சின்னப்புத்தி கிடையாது.  செண்பகப்பெருமாள், சிங்கள அரசன் பராக்கிரமபாகு VI இனால் தத்தெடுக்கப்பட்ட (தமிழ்நாடு அல்லது கேரளத்திலிருந்து வந்த) ஒரு யானைப்பாகனின் மகன்.  யாழ்ப்பாண அரசின் வரலாற்றில் ஒரே ஒருமுறை தான் யாழ்ப்பாணம் சிங்கள ஆட்சிக்குட்பட்டது அதுவும் சிங்களவர்களின் சார்பின் செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினான். ஆனால் சில ஆண்டுகளின் பின்னர் தமிழர்கள் யாழ்ப்பாண அரசை  அவனிடமிருந்து மீட்டுக் கொண்டனர். ஆனால் புவனேகபாகு  நல்லூர்க் கோயிலுக்குச் செய்த திருப்பணிக்காக, நல்லூரில் சமஸ்கிருதத்தில் கூறப்படும்  கட்டியத்தில் இன்றும் அவனது பெயரும் கூறப்படுகிறது.  அதைக் காரணம் கொண்டு நல்லூர் கந்தசுவாமி  கோயிலைக் கட்டியது செண்பகப் பெருமாள் என்று வாதாடுகின்றனர் சிங்களவர்கள்.
 கஜவல்லி, மகாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூத சோடச மகாதான சூரியவம்சோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு......

தமிழர்களின் பாரம்பரியத்தில் நல்லூர் என்றால் கோயில்களால் சூழப்பட்ட ஊர் என்பதாகும். அவ்வாறே யாழ்ப்பாண நல்லூரும் கோயில்களால் சூழப்பட்டுள்ளது.  நல்லூர் முருகன் கோயிலைச் சுற்றி, சட்டநாதர் சிவன் கோயில் வடக்கிலும். வெய்யில் உகந்த பிள்ளையார் கிழக்கிலும் வீரமாகாளியம்மன் கோயில் மேற்கிலும் கைலாய பிள்ளையார் கோயில் தெற்கிலும் அமைந்துள்ளன. நல்லூருக்குப் பக்கத்திலுள்ள நாயன்மார்கட்டு என்ற இடத்திலுள்ள பிள்ளையார் கோயில் குளத்துக்குள் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு நல்லூர் அரசனின் அரண்மனை இந்த நான்கு கோயில்களுக்கும் நடுவில் அமர்ந்துள்ளதாக கூறுகிறது.( Archaeology and the cultural antiquity of the Tamils of JaffnaBy Prof. Krishnarajah)

சோழர் காலத்தில் நல்லூர் முருகன் கோயில்


சோழர் காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் கோயில் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. போத்துகேயரால் 1620 ம் ஆண்டில் நல்லூர் முருகன் கோயில் இடிக்கப்படும் முன்பே நல்லூர் முருகன் கோயிலும், கோட்டையும் நல்லூரில் இருந்ததாகவும், கோட்டையையும் கோயிலையும் கட்டிய கற்களைக் கொண்டே யாழ்ப்பாணக் கோட்டையையும், யாழ்ப்பாணம் பறங்கித் தெருவிலுள்ள சில வீடுகளும் கட்டப்பட்டன என்ற செவிவழிக் கதைகளின் பாரம்பரியம் யாழ்ப்பாணத்தில் உண்டு என்பதை அறிஞர் மூத்ததம்பி பிள்ளை 1915 இல் வெளியிட்ட தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

1969 இல் யாழ்ப்பாணத்தில் கல்வெட்டுகளைக் தேடும் முயற்சியில் ஈடுபட்ட வரலாற்றுப் பேராசிரியர் K. இந்திரபாலா, யாழ்ப்பாணத்தில் Main Street (பெரியகடை) இல் இருந்த Central Café யில் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த சுண்ணாம்புக் கல்லாலான கல்வெட்டில் இருந்து நல்லூர்க் கோயிலின் வரலாற்றை அறியக் கூடியதாக இருந்தது.
அதிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களுடன், யாழ்ப்பாணக் கோட்டையில் மதில்களையும், அகழிகளையும் கல்வெட்டுக்களுக்காக அலசிய பேராசிரியர் இந்திரபாலா முதலாம் இராஜேந்திர சோழனின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுத் தூணும் கண்டு பிடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார். 

 “ .. and DISCOVERED A PILLAR INSCRIPTION OF THE TIME OF RAJENDRA COLA I and another record. The latter is inscribed on a stone brick which is built into the outer rampart of the fort and could only be partially seen. It appears to be written in Grantha characters of about the tenth century.” (Indrapala, op. cit., p 30)

Having examined the text, Indrapala says :
“Although the inscription on the face B is badly preserved, the few words that could be deciphered indicate that the purport of the inscription was to register the grant of some livestock , probably to a temple. 
The portion of the inscription giving the name of the institution receiving the gift and its location is very illegible, partly because of the lime plaster covering it. The final part of the name of a village, evidently the place of the receiving institution, can be seen faintly in line 12 of Face B. It is possible to read this part as – Nallur. If this reading were correct, we may find here the earliest reference to the medieval city of Nallur.  This record was in all probability set up in a Hindu temple”. (Indrapala, op. cit., p.53)
CORONATION OF RAJENDRA CHOLA BY LORD SIVA
கங்கை கொண்ட சோழபுரம்  

போத்துக்கேய வரலாற்றாசிரியர் பாதிரியார் Fr. de Queyroz அவருடைய The Temporal and Spiritual Conquest of Ceylon என்ற நூலில் 2 February 1620 இல் போத்துக்கேய தளபதி Philipe de Oliveyra தனது படைகளுடன் நல்லூர்க் கோயிலுக்குச் சென்று அதனை தரை மட்டமாக்கியதைக் குறிப்பிடுகிறார்.

When the Jaffna Fort was destroyed during the war this particular inscription was retrieved and cleaned and the place name Nallur was clearly identified in line 12 of Face B of the inscription. Prof. S. Krishnarajah has published this cleaned up inscription in his book “Archaeology and the cultural antiquity of the Tamils of Jaffna” at p 110, which is given below.

The Tamil version of the inscription  
The text of the Jaffna Fort inscription (Face B) runs thus – (transliteration)-The illustrious Lord Rajendra Cola Tevar ……..I…an Cattan, …of…(granted) ten{?}….,that neither die nor age , for (obtaining)…. Ghee….,….till the sun and moon last, …..for …. Lamp….set up….(at)…nallur,……(in) Ilam alias mum….”


 நல்லூர்க் கோயிலை இடித்து அதன் கற்களைப் பாவித்துக் கட்டப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட  இராஜேந்திர சோழனது கல்வெட்டு 1018 க்கும்  1022ம் ஆண்டுக்கும் இடைப்பட்டது. அதனால் புவனேகபாகுவுக்கு முன்பாகவே சோழர் காலத்திலேயே நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்தது தெளிவாகிறது. அதனால் கோட்டை அரசன் புவனேகபாகு திருப்பணி செய்திருக்கலாமே தவிர சிங்களவர்கள் கூறுவது போல் அதனைக் கட்டவில்லை.

The inscription found in the Jaffna Fort was caused to be indited by the Chola King Rajendra I. His reign was in the eleventh century and this inscription is dated between 1018 and 1022 by Indrapala. It is also clear that during their expedition into Ceylon, the Cholas brought the Tamil Kingdom also under their suzerainty. It is further very clear the huge temple of Nallur Kanthaswamy existed with magnificent glory in the eleventh century and was probably built by the Arya Cakkaravartis of Jaffna. Nallur temple was not built by Senpaka Perumal alias Buvaneka Bahu VII though he patronised the temple.
http://www.sangam.org/2010/12/Nallur_Temple.php?uid=4170&print=true

நல்லூரில் காணப்படும் தேவியர்  சிலைகள் சோழ அரசி செம்பியன் மாதேவியால் நல்லூர் கோயிலுக்கு  வழங்கப்பட்டதாகக் கூறுவர். யாழ்ப்பாணத்தில் சோழர்களின் ஆட்சியின் அடையாளமாக செம்பியன்பற்று என்ற ஊரும் உண்டு.

நல்லூர்க் கட்டியத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்


நல்லூர் கோயிலின் கட்டியம் தமிழாக்கப்பட்டு புவனேகபாகுவின் பெயருடன் நல்லூர் முருகன் கோயிலுக்குத் திருப்பணி செய்த இராஜேந்திர சோழனின் பெயரும் இணைக்கப்பட்டு அந்த தமிழ் மன்னனின் திருப்பணியும் நினைவு கூரப்பட வேண்டும். தமிழ் தமிழ் என்று பீற்றிக் கொண்டு உலகமெல்லாம் கோயில் கட்டும் ஈழத் தமிழர்கள் தமது சொந்த மண்ணில், யாழ்ப்பாணத்திலேயே தமது முன்னோர்களை நினைவு கூர முடியாது விட்டால், எமது வரலாறு திரிக்கப்படுவதை அனுமதித்தால் அதை விட இழிவு வேறெதுவுமிருக்க முடியாது.  

இந்தக் காணொளியில் 07.00 இல் கட்டியம் கூறப்படுகிறது.
 தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடியினர் என்பதற்கான சரித்திர பூர்வமான ஆதாரங்கள் எல்லாம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன.  இலங்கையில் அரச ஆதரவுடன் தகுதியற்ற பெரும்பான்மை சிங்கள பேராசிரியர்களும், அகழ்வாராய்ச்சி என்ற பேரில், இலங்கைத் தமிழர்களின் தாயகம் (Homeland) கோரிக்கைக்கு வரலாற்றில் ஆதாரம் எதுவும் கிடையாது  வேண்டுமென்றால் தமிழ்நாட்டுக்குப்  போய் தமது தாயகத்தை  அமைத்துக் கொள்ளட்டும் எனக் கூறிக்கொண்டு   சிங்கள இனவாதிளும், புத்த பிக்குகளும்  அரசாங்கத்துடன் துணையுடன் தமிழர்களின் வரலாற்றைத் திரித்து, ஆதாரங்களை அழிக்கின்றனர். ஆனால்  அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத ஒரு தமிழ்மணத்திலுள்ள  ஒருவர், வட இந்தியாவில்  மதவாதிகளால், இடிக்கப்பட்ட பாபர் மசூதியை உதாரணம் காட்டி எனக்கு விளக்க முனைந்தாராம் ஆனால் நான் அதை புரிந்து கொள்ளவில்லையாம்.  அது தான் வேடிக்கை.  :))


Re: Nallur Kanthaswamy Temple   by A. Theva Rajan,
“Later, the Portuguese destroyed the Nallur Fort as well and with those stones (from the fort) they built several houses and mansions on Paranki Street (modern Main Street). Of these stones from the fort, some stone inscriptions have been built in as steps in some of the old houses on Paranki street and some have been built into the rampart of the (Jaffna) Fort. Of these, the one at Pajananantar’s house is notable.” (Epigraphia Tamilica, K. Indrapala, June 1971, p.30)


நன்றி: கல்வெட்டுகள்: http://pathmam2.blogspot.ca/

1 comment:

Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html