Thursday, August 14, 2014

சமஸ்கிருதம் இந்திய மொழியுமல்ல, இந்துக்களின் மொழியுமல்ல??







சமக்கிருத மனுவாதிகள் எல்லோரும் சமஸ்கிருதம் இந்தியாவில் உருவாகிய, இந்தியாவின் பழமையான மொழி மட்டுமல்ல, இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய் என்கிறார்கள். பழமையான மொழியாகிய தமிழ் கூட சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியது என்றும் கூட சிலர் வாதாடுகின்றனர். ஆனால் சமஸ்கிருதம் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த மொழி,  அதன் மூலம் (Source) இந்தியாவுக்கு வெளியே தான் உள்ளது என்பதை பெரும்பாலான மொழி ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர், அத்துடன், ரிக் வேதத்துக்கும் இந்திய  இந்துக்களுக்கும் எந்த தொடர்புமில்லை, ரிக் வேதத்தில் கூறப்படும் கடவுள்கள் இந்தியாவின் தெய்வங்கள் அல்ல என்கிறார் பிரிட்டிஸ் வரலாற்றாசிரியர் மைக்கல் வூட்ஸ் (Michael Woods).  ஆரியர்கள் ஹைபர் கணவாய்க்கு அப்பாலிருந்து  இந்தியாவுக்கு வந்ததாக ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது (7:08) என்கிறது இந்த ஆவணப்படம். 

"........There’s a lot of interesting stuff on the Dravidian language group as a whole which must be older than Sanskrit as the earliest hymns in the Rig Veda have borrowings from Dravidian. For a short guide Try Kamil Zvelebil’s Dravidian Linguistics (published in Pondi about 15-20 years ago)."
-Michael Woods, Historian- 
 

காணொளி:  100% Proof Rig Veda is Not Hindus Scriptures And Sanskrit is Not Hindus Language 

5 comments:

வாலிபள் said...

சமஸ்கிருதம், இந்துக்களின் மொழி அல்ல; அது இந்தியர்களின் மொழி. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே தாய்.

ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் பேசப்படும் மொழிகளுக்கும் மூலம் சமஸ்கிருதமே.

சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவியல் இல்லை; இல்லாத தத்துவங்கள் இல்லை.
சமஸ்கிருதத்தில் உள்ள நூல்களின் அருமை இந்தியர்களுக்குத் தெரியவில்லை.

பல சமஸ்கிருத நூல்களைத் திருடித்தான், வெள்ளாக்காரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்; அணுவைக் கண்டுபிடித்தார்கள்.

வாலிபள் said...
This comment has been removed by a blog administrator.
raan kanna said...

http://ajitvadakayil.blogspot.in/2014/08/the-yazidis-of-iraq-ethnic-cleansing-by.html TAMILAN ROMBA PAVAM NAMMA KOMANATHA PATHRAMA PARTHUKANUM FACT

raan kanna said...
This comment has been removed by a blog administrator.
Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த கருத்துப் பகிர்வு