Wednesday, July 30, 2014

முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் இன்றும் நேசிக்கும் அவர்களின் தமிழ் முன்னோர்களின் தெய்வங்கள்!முத்தாரம்மன் -குலசேகரப்பட்டணம்
தமிழ் முஸ்லீம்களும் தமிழ்க்கிறித்தவர்களும் காலத்தின் கோலத்தாலோ அல்லது வந்தார் வரத்தார்களின் சொல் கேட்டோ அல்லது வேறு எந்தக் காரணங்களுக்காகவோ தமது முன்னோர்களின் தெய்வங்களை விட்டு வேறு நாட்டு மதங்களை ஏற்றுக்கொண்டு அவர்களின் தெய்வங்களை இன்று வழிபட்டாலும் கூட அவர்களின் தமிழ் முன்னோர்களின் தெய்வங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் மண்ணின் தாய்த் தெய்வங்கள் இன்றும் அவர்களை தனது குழந்தைகளாக, தமிழ் மண்ணின் மைந்தர்களாக, நேசிப்பதை அவர்களை ஆபத்தில் அரவணைப்பதை மட்டும் நிறுத்தவில்லை.  

இது என்னுடைய கண்டுபிடிப்பல்ல,  இதை கிறித்தவராகிய எழுத்தாளர் ஜோ டி குரூசும், தமிழ்நாட்டு முஸ்லீம்களின் தமிழ்வேர்களை, தமிழ்மண்ணில் அவர்களின் உரிமைகளை, தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையில் 'யாதும்' என்ற ஆவணப்படத்தையும் வெளியிட்டு அதே பெயரில் இணையத்தளத்தையும் நடத்தும் இஸ்லாமியராகிய கோம்பை எஸ். அன்வரும் தான் கூறுகிறார்கள்.

"The history that I learned at school, did not give me the answers I was seeking, especially when it came to my roots. I realised our history has been written top down, with many local histories being ignored. This is my attempt to set right the wrong "- Kombai S.Anwar

'யாதும்' இணையத்தளம் தமிழ்நாட்டில்  கம்பூர் என்ற கிராமத்தில் முத்துப்பிடாரி அம்மன் என்ற தமிழ் மண்ணின் பாரம்பரிய தாய்த்தெய்வம் எவ்வாறு ஒரு தமிழ் முஸ்லீம், தன்னை வணங்காது விட்டாலும் கூட, அவரைத் தனது குழந்தைகளில் ஒன்றாக நினைத்து அருள்பாலித்த உண்மைக் கதையை தமிழ் மண்ணுக்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்குமுள்ள தொடர்புக்கு எடுத்துக் காட்டாகக் கூறுகிறது.  அந்தக் கதையை முழுமையாக ஆங்கிலத்தில் இந்த இணைப்பில் காணலாம்.


ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் கம்பூர் என்ற தமிழ்நாட்டுக் கிராமத்தில் கரகமெடுப்பு என்ற விழா நடைபெறும். அந்தப் பத்து நாள் திருவிழாவில், பொழுது விடியும் வேளை, அந்தக் கிராமத்திலுள்ள ஆண் அல்லது பெண் ஒருவரின் உடலில்  அந்த கிராம தேவதை பத்திரகாளி அல்லது முத்துப்பிடாரி அம்மன், நுழைந்து கொள்வதால் அந்த ஆண் அல்லது பெண் தன்நினைவிழந்த நிலையில், அம்மன் கூற விரும்புவதை அவர்கள் மூலமாக கூறுவார் (அல்லது கூறுவதாக ஊர்மக்களின் நம்பிக்கை). அந்த ஊரை விட்டு  வெளியேறவிருந்த ஒரேயொரு முஸ்லீம் குடும்பத்தை எவ்வாறு அந்த ஊர் அம்மன் வெளியேறாமல் தடுத்தாள் என்பதை மட்டுமன்றி, நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று அன்போடு கூறியதையும் விளக்குகிறது அந்த உண்மைக் கதை.


இலங்கையில் தமிழ் முஸ்லீம்கள் தமது தமிழ்த் தொடர்பை முற்றாக மறுத்து, தமிழைப் பேசினாலும் அவர்கள் தமிழர்களல்ல என்று வாதாடும் போது, தமிழ்நாட்டில் தமிழ்முஸ்லீம்கள் துரித கதியில் அரபு மயமாக்கப்படும் இக்காலத்தில், உமறுப்புலவரினதும், வள்ளல் சீதக்காதியினதும்  தமிழ் இஸ்லாம் இன்று தீவிரவாத வஹாபியமாக்கப் பட்டு வரும் வேளையில், முஸ்லீம்களின் தமிழ் வேர்களைப் பற்றிய உண்மைகளை மட்டுமன்றி, தமிழ் மண்ணின் தாய்த் தெய்வங்கள் மதவேறுபாடின்றி தனது குழந்தைகளை அரவணைக்கும் அன்பையும் கூட எந்தவித தயக்கமுமின்றி,  பெருமையுடன் பேசும் திரு கோம்பை எஸ் அன்வர் அவர்களின் 'யாதும்' என்ற ஆவணப் படத்துக்கு  தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டுமென்பது எனது கருத்தாகும்.

குமரியாத்தா 
இந்தக் கதையை வாசித்த போது இன்று கத்தோலிக்கர்களாக மாறிவிட்ட தமிழ்ப்பரதவர்கள் இன்றும் கடலுக்குப் போகும் போதும், அவர்களின் படகுகளுக்கும் அவர்களுக்கும்  கடலில் பெரிய மீன்களால் அல்லது திமிங்கலங்களால்  ஆபத்து நேரும் போதும் திமிங்கிலத்தின் நெற்றியில் கைவைத்து 'குமரியாத்தா' மீது ஆணையிட்டு வேண்டிக் கொள்வதாகவும் (காணொளி 12:00), எவ்வாறு  சப்பரத்தில் வைக்க முயன்ற போது அசைய மறுத்த முத்தாரம்மனின் சிலை, ஒரு பரதவரின் பரிசம் பட்டதும், அதாவது காலம் காலமாக தன்னை வழிபட்ட அந்த சமூகத்தின் மைந்தன் ஒருவன் தன்னைத் தொட்டதும், அசைந்து கொடுத்ததைப்  பற்றிய உண்மைக் கதையையும் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் கூறியது தான் எனது நினைவுக்கு வருகிறது. 


5 comments:

Paramasivam said...

மிகவும் அருமையான பதிவு. You tubeல் ஜோ டி குரூசின் பேச்சும் அருமை.

நந்தவனத்தான் said...

தமிழன்தான் அப்படின்னா தமிழ்கடவுள்களும் இளிச்சவாய்த்தனமாகத்தான் இருக்க வேண்டுமா?

"நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என அல்லா முஸ்லீம்களை நோக்கி சொல்லி பீதியை கிளப்புகிறான்.

" உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,...அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால், நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்" என கர்த்தர் சொல்லி கிலியூட்டுகிறார்.

ஆனால் தமிழ் தெய்வங்கள் இப்படி லூசுத்தனமாக இருக்கின்றன? இந்த மனோநிலைதான் நமது கேடான நிலமைக்கு காரணமோ என்னவே?

viyasan said...

@நந்தவனத்தான்,

உங்களின் கேள்வியும் ஒருவகையில் நியாயமானது தான். ஆனால் பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது போல், தீவிரவாத முஸ்லீம்களும், கிறித்தவர்களும் எப்படித் தான் தான் தமிழர்களின் தெய்வங்களைத் தூற்றினாலும், தமிழ்மண்ணின் தெய்வங்களோ தம்மை விட்டு விலகிய தமிழர்களையும் தம்முடைய மக்களாக, அந்த மக்களின் வாரிசுகளாக கருதுகின்றனர் என்பதைத் தான் ‘யாதும்’ தளத்திலுள்ள இஸ்லாமியருக்கு முத்துப்பிடாரி அம்மன் அருளிய கதையும், திரு. ஜோ டி குரூஸ் அவர்கள் குறிப்பிடும் பரதவர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களும், குமரியாத்தா அவர்களைக் காக்கும் சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

viyasan said...

//மிகவும் அருமையான பதிவு. You tubeல் ஜோ டி குரூசின் பேச்சும் அருமை.//

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Yarlpavanan Kasirajalingam said...

பயனுள்ள பதிவு
தொடருங்கள்