Friday, July 4, 2014

ஜூலை 4 - சாதிவெறி அரசியலின் நினைவு நாள்!







ஒரு அப்பாவித் தமிழன் சாதி என்ற எல்லையை மறந்து காதலித்த குற்றத்துக்காக தனது பிறப்பை நொந்து கொண்டு தன்னைத்தானே??? மாய்த்துக் கொண்ட நினைவு நாள் இன்று.

ஜூலை 4 என்றால் நினைவுக்கு வருவது அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆனால் தமிழர்களுக்கு இன்றைய தினம் சாதிவெறி அரசியலின் நினைவு தினம் என்பது எனது கருத்தாகும்.

தமிழ்நாட்டில் சாதிவெறிக்கு ஒவ்வொருநாளும் எத்தனை  எத்தனையோ இளவரசன்களும், இளவரசிகளும்  பலியாகிக் கொண்டு தானிருக்கிறார்கள். எத்தனையோ திவ்வியாக்கள்தமது உணர்வுகளை மறைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் தமது சொந்த சகோதர்களாலும், பெற்றோர்களாலும், உறவினர்களாலும் காணமல் போகச் செய்யப்படுகிறார்கள். அந்த நிலை எப்போது மாறுமோ  அது கடவுளுக்குத் தான் தெரியும்

அப்பாவித்தனமாக சாதிவெறியையும், சாதிவெறி அரசியலின் தீவிரத்தையும் உணராமல், எவ்வளவு காதலையும், கற்பனைகளையும் சுமந்து கொண்டு, எத்தனை எதிர்ப்புக்களின் மத்தியில் உனது காதலைக் காக்க சாதிப்பேய்களிடமிருந்து தப்பி தமிழ்நாட்டை விட்டு ஓடியும், இறுதியில் எப்படியோ அவை  உன்னைத் தேடிப் பிடித்துப்  பலி கொண்ட நாள் இன்று. அந்த நாளில் சகோதரன் இளவரசனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. 

உலகம் உனது கொலைக்குக் காரணமானவர்களுக்கு அல்லது  உண்மையிலேயே நீ  தற்கொலை செய்திருந்தால் உன்னை தற்கொலை  செய்யுமளவுக்கு தூண்டியவர்களுக்கு தண்டனை கொடுக்கத் தவறினாலும், ஏதோ ஒரு வழியில் கடவுள் அவர்கள் அனைவருக்கும் தண்டனை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

என்னைப் பொறுத்தவரையில் உனது ஒரே ஒரு தவறு நீ தமிழனாக தமிழ்நாட்டில் பிறந்தது தான்.  இப்படி சாவிலும் தன்னுடைய பிறப்பை நொந்து கொண்டு இறக்கும் கொடுமை இனிமேல் யாருக்கும் ஏற்படக் கூடாது.


................Klik hier voor meer gratis plaatjes




இளவரசன் திவ்வியாவை விட குறைந்த சாதி அல்ல.


இளவரசனின் சாவு – பெரியாரிசத்தினதும் திராவிட அரசியலினதும் தோல்வி?

http://viyaasan.blogspot.ca/2013/07/blog-post_5.html

"சாகணும்னு நினைக்கலைங்க. அம்மா அப்பா பயந்துட்டாங்க. அவங்களுக்கு பயம். எனக்கு வேதனை". – இளவரசன்

2 comments:

Jeevalingam Kasirajalingam said...

இந்த நிலை எப்ப மாறுமோ
எந்தன் தமிழ்சாதி எப்ப தேறுமோ

viyasan said...

@Jeevalingam Kasirajalingam,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்த நிலை தமிழ்நாட்டில் மாறும் போல் தெரியவில்லை. சில சாதியினர், அவர்களின் சாதியை இனம் என்றே குறிப்பிடத் தொடங்கி விட்டனர். இந்த நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் தமிழர்கள் என்ற இனத்துக்குப் பதிலாக, பல இன அடையாளங்கள் உருவாகி விடும். :-(